டிசம்பர் 27, 2011

வயிற்று பூச்சிகள் தொந்தந்தரவு ஏன் ? .
        இப்போது பலர் வயிற்று பூச்சி தொந்தரவோடு வருகிறார்கள் . இது எப்படி வருகிறது ஏன் வருகிறது எப்படி தீர்ப்பது என மிகப் பெரிய வினாக்குறியோடு வருகிறார்கள் . இது மிகப் பெரிய தீர்க்க இயலாத சிக்கலோ அல்லது மிகப் பெரிய நோயோ அல்ல .இந்த சிக்கலுக்கு ஆளாகாத வர்களே இல்லை எனலாம் இதற்க்கு பல விதமான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் . இதனால் வயிற்றில் நன்மை செய்யும் பாக்ட்டீரீயாக்களும் மரித்துப் போகிறது என்பது அனைவரு அறிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும் .

இன்றய நுகர்வு பண்பாடு எப்படி வேண்டுமானாலும் பொருளீட்டலாம் எதைவேண்டுமானாலும் தின்று தீர்க்கலாம் என வந்தாகிவிட்டது . இதனால் முறையில்லாத சில கேடுகள் மனிதனுக்கு வந்து சேருகிறது .உணவு பழக்கம் என்பது உடலை வளர்ப்பதற்கும் நோயின்றி வாழ்வதற்கும் என இருந்த காலம் போய் நாவை அடக்கமால் கண்டபடி தின்று நோவை பெற்றுக் கொள்கிறார்கள் . உணவு எல்லா சுவைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் .கசப்பு, துவர்ப்பு, காரம் , இனிப்பு ,உப்பு ,புளிப்பு என அனைத்தையும் முறையாக எடுத்துக் கொண்டால பொரும்பாலும் நோய் கொஞ்சம் தள்ளியே நிற்கும் . அப்படி இல்லமால் வெறுமனே இனிப்பையும் புளிப்பையும் காரத்தையும் எடுக்கும் பலர்கசப்பையும் , துவர்ப்பையும் தள்ளிவிடு கிறார்கள் இதுதான் நோய்க்கு அடிப்படை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . இந்த முறையில்லாத இனிப்பும் சில சுவைகள் மட்டுமே வயிற்றில் பூச்சிகள் வளர காரணமாகி விடுகிறது . 

இந்த வயிற்று பூச்சிகள் சிலசுவைகளுக்கு அச்சப்பட்டு தள்ளியே நிற்கும் அதுதான் கசப்பு இதை நேரடியாக இல்லாமலும் சில காய்கள் மூலம் பெறலாம் .பாகல், சுண்டை , வேப்பம் பூ , வாழைப்பூ , தேங்காய் போன்றவை இந்த வயிற்று பூச்சிகளை நீக்க கூடியது நாளும் தேங்காயை வெறும் வயிற்றில் உண்டுவர பூச்சி தொந்தரவு நீங்கும் . எனவே மேற்கண்ட இந்த சுவைகளை முறையாக எடுத்துவர வயிற்று பூச்சிகள் இல்லாமல் நீடுவழ முடியும் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் 

        எதிர் வரும்  தமிழர்  புத்தாண்டு  மட்டும்  பொங்கல்  திருநாள்  முன்னிட்டு  எங்களின் ஊர் பகுதிகளில்  

தமிழறிஞ்சர்கள் 
தமிழ  கலைகள் 
தமிழ  விளையாட்டுகள்
பேச்சு போட்டிகள் 
பா வரங்கம் 
கட்டுரைபோட்டி 
 என  நடத்துகிறோம்  வெளிநாட்டு தமிழர்கள் இதே வடிவத்தை  தங்களின் இருப்பிடங்களில்  செய்யலாம் தமிழ  நாட்டிலும்  எல்லா இடங்களிலும்  இப்படி  பண்பாடு  விழாக்களை  நடத்தலாமே  ?

More than a Blog Aggregator

டிசம்பர் 19, 2011

நமக்குத்தேவை வலி நீக்கும் மருந்தா வலி நிவாரண மருந்தா ?
நமது உண்மையான நோக்கம் நோயில்லாத குமுகத்தை படைப்பது என்பதால் அதற்க்கான கருத்தாக்கத்தை உண்டாக்குவது முறைஎன்பதால் அது குறித்து கொஞ்சம் சிந்திப்போம் .இப்போது உடலில் அல்லது தலைவலி , அல்லது மூட்டுவலி என வைத்துக் கொள்வோம் இதற்க்கு நேரான மருந்து என்ன ? வலி நிவாரண மருந்தா அல்லது வலியை நீக்கும் மருந்தா இதை நாம் கண்டு பிடித்து விட்டால் எது சரியான மருந்து, முறையான மருந்து என கண்டறிந்துவிடுவோம் . இதில் தானே சிக்கல் நமக்கு . மூட்டு வலி என வைத்துக் கொள்வோம் , இந்த மூட்டுவலி அல்லது தலைவலி இதற்க்கு குறிப்பிட்ட பகுதிகளில் உண்டாகும் வலியை நீக்க ( குறிப்பிட்ட பகுதில் உள்ள நரம்பு மண்டலத்தை போதையூட்டி நோய் நீக்குவது மருந்து வீரியம் குறைந்ததும் நோய் மீண்டும் வரும் ) மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கப் படுகிறது இது தற்காலிக நிவாரணத்தை கொடுக்கிறது . இந்த மருந்துகள் முற்றாக குறிப்பிட்ட வலியை நீக்குவதில்லை. தற்காலிக தீர்வை தருகிறது இந்த மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது நோய் கண்டவர் நோயிலிருந்து விடுதலை அடைவார் ஆனால் மருந்தை நிறுத்தியதும் முன்பைவிட நோயினால் மிகையாக துன்பப் படுவார் . ஹோமியோபதி மருத்துவத்தை கண்ட சமுவேல் ஆனிமன் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்திற்கு வருவதற்கு முன்பாக சிறந்த ஆங்கில மருத்துவராவார் இவர் நீண்ட காலமாக ஆங்கில முறை மருத்துவம் செய்தவர் இவரிடம் வரும் நோயாளிகள் தொடர்ந்து ஒரே நோய்க்கு மீண்டும் மீண்டும் வந்தனர் தான் மருந்து முறையாக வழங்க வில்லையோ என எண்ணி தான் அளித்த மருந்துகளை சரிபார்த்தார் மருந்துகள் சரி. தான் சரியில்லையோ என எண்ணினார் தானும் மிகவும் சரியாக இருப்பத உணர்ந்தார் ஆக இந்த முத்துவ முறை தான் சரியில்லை இது மீண்டும் மீண்டும் நோய் கண்டவரை வரவழைக்க்றது என கண்டு அந்த மருத்துவ முறைக்கு முழுக்கு போட்டார் . இதை விட்டு ஹோமியோபதி மருத்துவத்தை தன்னுடைய வாழ்நாளில் தொண்ணுற்று ஒன்பது மருந்துகளை தன்னையே ஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்தார் . நீரிழிவு , இதயநோய், மூட்டுவலி, இப்படி பலநோய்களுக்கு ஆண்டு கணக்கில் மருந்து எடுத்து கொள்கிறவர்களும் மருந்து கொடுக்கிறவர்களும் இங்கு உண்டு . நீண்ட நாளுக்கு எடுக்கப் படும் இரசாயணம் கலந்த மருந்துகள் பின் விளைவை உண்டாக்குகிறது என இன்றைய பட்ட மேற்ப்படிப்பு படித்த ஆங்கில முறை மருத்துவர்களே கூறத் தொடங்கி விட்டனர் . வலி நீக்கும் மருந்துகளை விட்டு அதற்கு மாறாக தூய தமிழ மருத்துவத்தை முறையான மருத்துவர்களிடம் எடுக்கத் தொடங்கினால் முதலில் கக்கல் , கழிச்சல் மருந்துகளை கொடுத்து உடலையும் குடலையும் தூய்மையாக்கி வள்ளுவரின் குறள் போல நோய் கண்டவரின் அகவை, நோயின் நிலை ,அவரின் உணவுமுறை வழக்கம் , காலம் , போன்ற எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு முறையான மருந்துகளை வழங்குவார். இதனால் நோயில் இருந்து விடுபட்டு நோய் நீங்கி நீடுவாழ்வார் . சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

டிசம்பர் 12, 2011

மூலிகை மருந்துகள் எல்லா நோய்களையும் நீக்குமா ?சோற்று கற்றாழை

மனித உடல் கோடான கோடி நூண்ணியசெல்களின் தொகுப்பு என்பதை நாமறிவோம் . இந்த கோடானுகோடி நுண்ணிய செல் அமைப்புகள் தன்னைத்தானே சிதைத்துக் கொண்டு பல செல்களாக மாற்றம்பெற்று மனிதத் தொழிற்சாலை தான் அச்சில் அதற்கான முழுமையான ஆற்றல்களை பெற்று அது நீடித்துவாழ்நாள் முழுவதும் நோய் இல்லாத வாழ்வு வாழ்வதற்கான கட்டமைப்பை உண்டாக்குகிறது
.
"மறுப்பது சாவை மருந்தென லாமே " என திருமூலர் பதிவு செய்கிறார் , அதாவது மனிதத்தை சாவில் இருந்து மீட்பதற்கான மருந்துகள்தமிழ மண்ணில் கொட்டி கிடப்பதாக இந்த உலகிற்கு அறிவிக்கிறார் , இப்படி பட்ட உயரிய அதே சமயம் அரிய மருத்துவமுறை உலக நாகரீகம் எல்லாம் தோற்றம் கொள்ளுவதற்கு முன்பாகவே சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் இன்றும் சித்தமருத்துவத்தில் பயன் படுத்தும் மருந்துப் பொருட்களை பயன் படுட்த்தியமைக் காண குறிப்புகள் காண கிடைகிறது ,

இப்படி பட உயரிய மருத்துவ முறை இருந்தும் தமிழன் நோயில் வீழ்ந்து கிடக்கிறான் என என்னும் போதுதான் வேதனை கொள்ள நேரிடுகிறது தமிழை, அதன் சிறப்பை , அதில் பொதிந்துள்ள அறிவியலை இன்னும் தமிழன் அதன் முழுமையான கோணத்தில் உணரவே இல்லை . தமிழல் ஒன்று படாத ஒரு இனமாக இன்று கிடக்கிறான் .இப்படிப்பட்டவனை தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடவா முடியும் .அதுதான் இவ்வளவு சிறப்புகள் இருந்தும் தமிழர்கள் பயன் படுத்திக் கொள்ள வில்லை என்பதால் வேதனை பட வைக்கிறது.

ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொள்வோம் இந்த மருத்துவ முறை தமிழ மருத்துவத்தில் இருந்து கடன் பெற்று கிபி நான்காம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டவையாகும் இந்த மருத்துவம் இயற்கையாக அல்லாமல் இதளியங்களை (இரசாயணம் ) முதன்மையாக கொண்டு அவற்றையே மருந்தாக்கி இயற்கையோடு இணைந்த மனித உடலுக்கு நோய் நீங்க மருந்தாக அளிக்கப்படுகிறது.இது மனிதனை மனிதனாக அல்லாமல் பொறியாக ( இயந்திரமாக ) பார்த்தமையின் காரணமெனலாம் .

மேலை நாட்டு சூழல் ஆண் ,பெண் ,குழந்தைகள் என எல்லோரும் குடித்து கூத்தடிக்கும் சூழல் காரணம் ஆண்டு முழுவதும் பனிபொழிவும் கடுமையான மழையும் இருக்கிற சூழல் உடலை சூடேற்றி கொள்ள அவன் அதை நாட வேண்டியிருந்தத்து அதேபோல தனது மருத்துவத்தையும் இரசாயன மூலத்தை கொண்டான் தமிழ முந்தைய அறிவர்கள் பற்றிய முழுமையான புரிதலை பெறாமை அதனால் தான் அவன் ரெய்ன் ரெய்ன் கோ அவே என அவன் குழந்தைக்கு சொல்ல சொல்லி கொடுக்கிறான் தமிழ அறிவர்கள் இங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு அதாவது ஆண்டு முழுவதும் கடுமையான வெப்பத்தினால் வாடுகிறோம் எனவே மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என தன்னுடைய குழந்தைகளுக்கு சொல்லித்தந்தனர்

உறவுகளே இங்குதான் நாம் உங்களை சிந்திக்க வேண்டுகிறேன் அதாவது இப்படிப்பட்ட அரிய கலைகள் நம்தமிழமண்ணில் விளைந்து கிடக்கிறது இதை தமிழன் பயன் படுத்திக் கொள்ள வில்லையே என்ற எண்ணம் நம்மை தமிழர்களை பழிக்க செய்கிறது. உலகே வியந்து பார்க்கும் அறிவியலும் மெய்மமும் நமக்கானது இதை விடுத்து வரட்டுத்தனத்தில் வீழ்கிறானே என சலிப்படைய வைக்கிறது.இயற்கையான வளர் சிதை மாற்றங்கள் metabolism மூலம் மனித உடல் தன்னைத்தனே புதுபித்துக் கொள்ளுகிறது செயற்கையான இதளியம் (இரசாயணம் )உடலில் வந்து சேருவதை எதிர்த்துப்போராடுகிறது . தொடர் வருகையால் அதையும் எதிர்த்துப் போராடுகிறது .

மூலிகை மருத்துவம் என்பது எளிமையான மென்மையான (mild ) அணுகுமுறை கொண்டது மனித உடலில் தேங்கியுள்ள முறையில்லாத கிழிவுப்பொருளை நீக்கி கோடிக்கணக்கான செல்களுக்கு புத்துயிரூட்டி குறிப்பிட்ட நோவில் இருந்து விடுவிக்கிறது அதுமட்டும் அல்லாமல் மற்ற நோயில் இருந்தும் விடுவிக்கிறது .பின்னர் வெளியேறுகிறது .

சித்தர்கள் மெய்மங்கள் (தத்துவங்கள் ) உடலியங்கியலை (physiology ) . நூட்பமாக ஆய்வு செய்து மருத்துவனுக்கு(phsician ) உள்ள கடமையை கடுமையாக பட்டியலிடுகிறது .அதாவது

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

நோயை முழுமையாக ஆய்வு செய்து நோய் வந்த வழியையும் ஆய்ந்துவந்த நோயை முறையான மருந்துகள் மூலம் நீக்கும் வழியை ஆய்வு செய்து, கொடுக்கும் மருந்து நோய்கண்டவனுக்கு எந்த பின் விளைவையும் உண்டாக்க கூடாது என குறளாசான் கூறுகிறார்
அடுத்து

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

என்கிறது வள்ளுவம் அதாவது மருத்துவ நூலை கற்றவன் நோய்கண்டவனின் அகவை,நோயின் அளவு நோய் வந்துள்ள கலாம் என நோயின் முழுமையான நோய்க்கான காரணங்களை ஆய்ந்து மருத்துவம் அளிக்க வேண்டும் என பதிவு செய்கிறது.

பன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிவியலில் மருத்துவத்தில் உயர்ந்தும் சிறந்தும் இருந்தனர் என்பதை

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பபால்நாற் கூற்றே மருந்து .

என நோய்கண்டவன் , நோய் தீர்க்கும் மருத்துவன் , செவிலி , மருந்து என தனித்தனி துறைகள் தமிழ மருத்துவத்தில் இருந்துள்ளமை இதன்வழி அறியலாகிறது ஆக தமிழ மருத்துவம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சிறந்தும் உயர்ந்தும் இந்த உலகிற்கு வழிகாட்டியாக இருந்தமை தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா ஆக தமிழ மருத்துவம் எல்லா நோய்களையும் நீக்கும் மனிதனை நோயில் இருந்து விடுவிக்கும் என்பது நூறு விழுக்காடு உண்மைதானே

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்

நாங்கள் மீண்டும் காட்டு வாழ்வுக்கு ஆயத்தமாகி விட்டோம் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாதது போலவே எமது இடுகையும் ....More than a Blog Aggregator

நவம்பர் 28, 2011

சித்த மருத்துவ கோட்பாடுகள் வரிசை 3
தூய தமிழ அறிவர்களின் (சித்தர்கள் )கோட்பாடுகளை எழுத நினைத்தால் கோடிகணக்கான பக்கங் களில் எழுதிக் கொண்டே போகலாம் அனால் தமிழர்கள்தான் வழமைபோல படிக்கவும் கடைபிடிக்கவும் செய்ய மாட்டார்கள் . அந்த அளவிற்கு மெய்மங்களையும் மருத்துவக் கோட்பாடுகளையும் இந்த பேரண்டத்திற்கே கொடையாக வழங்கியுள்ளனர் நமது அறிவர்கள் . இதற்காகவே உலகத் தமிழர் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம் .

நோய்களுக்கு காரணம் கிருமிகளின் தொற்று என இன்றைய மேலைநாட்டு ஆங்கில மருத்துவம் பசப்புகிறது .கைக்குழந்தையான இந்த மருத்துவம் கீழை நாடு மக்களை எலிகளாகவும், முயல் களாகவும் பாவிக்கிறது தன்னுடைய உயரிய கலைகளைகளை முறையாக காக்காத / பின்பற்றாத தமிழன் தன்னையும் ஆய்வுகூடத்தில் உட்படுத்த துடிக்கிறான் . ஒருபக்கம் காட்டிக் கொடுக்கும் கீழை எண்ணமுடையோர் கூலிக்காக பாவம் இதையும் கட்டிக் கொடுக்கிறனர் . இதை கண்டு விழி பிதுங்கி நிற்க்கவேண்டியவர்கள் ஆகிறோம் .

மேனாட்டார் கிருமிகளை நோய்க்கு காரணமென்கிறனர்.ஆனால் தமிழ அறிவர்கள் வளி , அழல், ஐ என்ற உயிர்தாத்துக் களின் பணியே மனிதத்தை ஆக்குகிற அல்லது அழிக்கிற வேலையை செவ்வனே செய்கிறது என முன் பதிவில் எழுதி இருந்தேன் . அதற்கும் முன்பாக சித்த மருத்துவ கண்ணோட்டத்தில் இருந்துதான் மனித ஆய்வுகளை தொடங்க வேண்டும் என பதிவு செய்து இருந்தேன் .காரணம் வளி , அழல் , ஐ ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களினால்தான் நோய் தோற்றங் கொள்ளுகிறது என சித்தர்கள் பருண்மையாக பதிவு செய்கின்றனர் .

இப்போது கொடிய நோயாக கருதப் படுகிற புற்று நோய் (இது பற்றி பின்னர் விரிவாக எழுதப்படும் ) வளி , அழல் ஆகியவை பழுதடைந்த நிலையில் உள் மாறுபட்டால் தோற்றங் கொள்ளுகிறது. ஆக்கம் தரும் ( anablic force ) வளி பழுதடைந்து தன்னளவில் செயல்படும் வேகம் (Activity ) உடல் முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட உடற்கட்டிலோ Tissue பரவுவதால் அது செயல்படும் தாத்துக்களும் உறுப்புகளும் பாதிக்கப் படுகின்றன . வளியின் வளர்ச்சி இப்பகுதியில் மிகுந்து இயங்க்குவதால் பாதிப்படைந்த உடற்கட்டுகள் கட்டுப் பாடு இல்லமால் வளருகிறது .

இப்படி கட்டுப் பாடட்று வளரும் உடற்கூடுகளின் மீது ஐயின் தாக்கமான அழிக்கும் ஆற்றலை இயங்கி நல்ல கட்டுகளை அழித்தும் பதிக்கப் பட்ட கட்டுகள் வளர்வதற்கும் துணை செய்கிறது . இவற்றால் நன்னிலையில் உள்ள தாதுக்கள் அழிக்கப் படுகிறன . இங்ஙனம் வளியின் கூறும் ஐ யின் கூறும் புற்று நோயின் வளர்ச்சிக்கு விடுதளையளிக்கிறது . மேனாட்டு மருத்துவம் குறிப்பிடும் புற்று நோயின் பின் வளர்ச்சிக்கும் anaplasiya விடுதலைக்கும் Autonomy of the tumour பிறழ் நிலைப் பட்ட வளியும் ஐ யும் காரணங் களாகிறது.

இந்நிலையி தேர்ந்த தமிழ மருத்துவர் வளி , அழல் , ஐ ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களை துல்லியமாக கணித்து வள்ளுவரின் குறள் நெறி வழிகாட்டலின் படி

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று .

என்ற நாடிகளைமனிதனின் உயிர்த்தாதுக் கலையும் ஏழு உடல் தத்துக் களையும் இனம் கண்டு மாந்தனுக்கு வரும் நோய்களை விடுவித்து நலமடைய வைக்கிறார் .

நோய் வெல்வோம் சித்த மருத்துவங் காப்போம்More than a Blog Aggregator

நவம்பர் 21, 2011

சில சித்த மருத்துவ கோட்பாடுகள் வரிசை 2
        மனிதஉடல்    ஏற்றுக்    கொள்ளாத         உணவினால்லும் அரை  வேக்கடுள்ள  உண்வுகளினாலும் மாவுப் பொருள்களினாலும்  அளவுக்கு  மீறிய எண்ணெய்  வேக்கடுகளினாலும் , செரிக்காத  நிலையியல்      மீண்டும்  மீண்டும்  உண்பதாலும்  மந்தம்
 

உண்டாகிறது என்பது  சித்தர்களின்  கோட்பாடு . மந்தம்  என்பது  செரிமானக்குறைவு
மட்டும்  அல்ல  நோய்வளர்ந்த  நிலை   எனலாம் இதைத்தான்  மந்தம்  இலாதுசுரமும்  வராது என்பார்கள்  சித்தர்கள் .  மந்தம்  தோன்றினால்  அதோடு  பலநோய்கள்   தோற்றம்  கொள்ளுகிறது .இவற்றில்  இருந்து  வாய்வு  உண்டாகிறது . ஒன்றில்  இருந்து  மற்றொன்றுமாக நோய்  தோன்றுகிறது .
             உயிர்கள்  பல்வேறு  வகையில் தோன்றுவதுபோல  நோய்களும்  பல்வேறு வகையில்     தோன்றுகிறது . மந்தம் , வாய்வு  இரண்டின்  சேர்க்கையால்  கடுமையான
 சுரம்  தோன்றுகிறது . மந்தம் , வாய்வு , சுரம்  இந்த மூன்றின்  காரணமாக  திரிதோடம்
தோன்றுகிறது .  அதனாலதான்    மருத்துவர்கள்  கடுமையான  உணவுக்  கட்டுப்  பாட்டை
சொல்வார்கள் . சுரம் கண்டபின்  அதன்பின்  வாய்வும் மந்தமும்  பாதித்துவிடுகிறது  .நோய்  கண்டவர்  சுரத்தை  மட்டும்  காண்கிறார் . சிறிது காய்ச்சல்  குறைந்ததும் நல்ல
பசி  உண்டாகி உணவு அதிகம்  உண்ணும்  வேட்கை  உண்டாகிறது .
   மனிதன் அருந்தும்  நீர்  சுவாசிக்கும்  காற்று சுற்றுப்புற  சூழல் தட்பவெப்ப  நிலை  போன்றவறில்  இருந்து  ஐ  என்ற கபம்  தோன்றுகிறது . உணவில்  இருந்தும்  மன  இயல்பு  களில்  இருந்தும்  பித்தம்  தோன்றுகிறது . இங்கனம்  பித்தத்தில்  கபம்  சேர்ந்தால்   இந்த   இரண்டின்  சேர்க்கைதான்  வாய்வு .  இந்த அழல்   குற்றம் ,ஐ குற்றம் , வளி  இன்  குற்றம்   எல்லாம்  சேர்ந்து  உடலில்  சூட்டினை உண்டாக்குகிறது .  இதை மனிதனால்   நேரடியாக  உணர்ந்து  கொள்ள  முடியம் .
        உள்புறம்  தோன்றும்  சுரம் , வெளிப்புறத்தில் கன்னத்தில்  கட்டியாக  கூட  வெடிக்கிறது
. வெளிப்புறத்தில்  தோன்றும்  சூடு மற்றும்   கட்டிகளை  அறிந்து  கொள்ளுகிறான் . உள் புறத்தில்  தோன்றும்  பல்வேறு நோய்களை  அறிந்து கொள்வதில்லை . இவைகளை தான்  சித்தமருத்துவர்கள்  அறிந்து  உணவுக்கட்டுப்  பாட்டை  போதிகிறனர் .  வலி (ளி) இன்   மிகுதியால்  உடலில்  கழிவுகள்  தடை  தோன்றுகிறது . அழலின்  அதிகரிப்பால் ,
 உடல் சூடு     அடைகிறது . ஐ  அதிகரிப்பால்  உடல்பருக்கிறது .  உள்ளுறுப்பு  களில்
அதிகவளர்சி  தோன்றுகிறது. வளி.ஐ , இரண்டும்  சேரும் போது  மாரடைப்பை  உண்டாக்குகிறது . இதைத்தான்  சித்தர்கள்
             ரோகம்  காப்பதில்  நுழைந் தேறி  வாயுதான்
              வாகுற்ற  நெஞ்சில்  வலித்தே  மயக்கிடும்
                போகுற்ற  பித்தத்தை  போகாமல்  றம்பித்து
               பகுற்று  பேசையில்  பதையாமல்கொள்ளுமே .
என்றனர் ஆக  நோய்களை  முறைப்படி  கண்டறிந்து  முறையான  சித்த  மருத்துவம்  மேற்கொண்டு  நோய்  நீங்கி  நீடு  வாழ்வோம் .More than a Blog Aggregator

நவம்பர் 14, 2011

சில சித்த மருத்துவ கோட்பாடுகள்
சித்த மருத்துவ கோட்பாடுகளை கொஞ்சமேனும் உள் வாங்கிக் கொண்டால்தான் அதனுடைய சிறப்புகள் புரியவரும் ஏனெனில் படித்தவர்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் வருவதில்லை முறையான பழமையையும் நமது பண்பாட்டையும் பேணிக் காப்பது படிக்காத வர்களினாலே செய்யப் பட்டு வருகிறது பெரும்பாலும் படிக்காதவர்கள் வறட்டுத்தனமான கோட்பாடுகளை வெறித்தனமாக பின்பற்றுவதில்லை

கோட்பாடுகள்

சித்தமருத்துவத்தில் வாதம் Anabolic forle ஆக்கும் ஆற்றல். ,பித்தம் காக்கும் ஆற்றல் Metablolic force ,கபம் அழிக்கும் ஆற்றல் Catabolic force . என்பவை முப்பெரும் உயிர்தாத்துக்கள் ஆகும் .
இந்த மூன்றும் உடலில் வளர் , சிதை மாற்றங்களை உண்டாக்குபவை . இவை முறையே (4 : 2 : 1 ) என்ற விகிதத்தில் இருக்கும் இவற்றின் இயக்கம் மனித உடலுக்கு மிகவும் தேவையானது .

மனித உடலுக்கு மிகவும் தேவையான ஏழு தாதுக்களின் கண்ணரைகளிலும் (cells ) தொழிற்படும் . மூன்று தாத்துக்களும் அளவோடு தொழிற்படும் போது கண்ணறைகளும் பிற தாதுக் களும் முறையாக பிழையின்றி இயங்கும் . அங்ஙனம் பழுதின்றி இயங்கும் போதுதான் உடல் நன்னிலையில் இயங்கும் . மாறாக மூன்று தாதுக்கள் தம்மளவில் மாறி செயல்படும் போது பிற தாதுக்களின் செயல்களும் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கண்னறைகளின் இயக்கமும் உட் சூழலும் internal environment மாறுபடுகிறது இவைகள் பழுதடைந்த சூழலே நோய் எனப்படுகிறது . இவற்றை சமநிலைக்கு கொண்டு வருதலே மருந்து எனப்படுகிறது . இந்த மூன்று தாதுக்களின் மாற்றமே நோய் என்பதை வள்ளுவமே ஈராயிரம் ஆண்டு களுக்கு முன் பதிவு செய்கிறது
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று திருக்குறள் .
சித்த மருத்துவத்தின் பின்னணியைக் கொண்டுதான் மேலை நட்டு மருத்துவ முறைகள் கடன் பெற்று இன்று மருத்துவத்தில் கொடி கட்டி பறக்கிறது ஆனால் இதை உணராத தமிழன் நோயில் வீழ்ந்து கிடக்கிறான் . நோயில் இருந்து விடுவிப்போம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator

நவம்பர் 06, 2011

குளிர்கால நோய்கள் வரிசை தலைப் பொடுகு .
குளிர்காலம் என்றாலே சில நோய்களுக்கு கொண்டாட்டம் என முன் இடுகையில் எழுதி இருந்தேன் இப்போது பல இளசுகள் பதின் பருவத்தினர் (டீன் ஏஜ் ) இந்த பொடுகு தொந்தரவோடு வருகிறார்கள் . இந்த நோய்க்கு காரணம் முதலில் முறையில்லாத உணவுப் பழக்கம்தான் என நாம் அறிந்து கொள்ள வேண்டும் பழங்காலங் களில் முறையான உணவுகளை எடுத்தனர் அல்லது இந்த இதளிய(இரசாயன ) உணவுகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை இந்த தலைப் போடுகுதான் பின்னாளில் சொரியாசிசு என்ற நோயை உண்டாக்கு கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அதுமட்டும் அல்லாமல் தலையில் இருந்து வரும் செதில் போன்றவை கண்ணில் பட்டால் கண்ணை அது பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

கடுமையான உள சிக்கலில் இருப்பவர்களுக்கு முதலில் தலையில் இருக்கும் மயிரை வறட்சியடைய செய்கிறது இது மட்டும் அல்லாமால் முறையில்லாத உணவுகள் எண்ணையில் பொறிக்கப் பட்ட உணவுகள் இரத்தத்தில் கடுமையான நச்சு கலப்பினை உண்டாக்குகிறது இவர்கள் முதலில் ஈற்றுணவு (மலம் )கழிப்பில் சிக்கலுக்கு உரியவர்களாக இருப்பார்கள் இது தலைபோடுகை மிகையாக்கும் என்பதில் மற்று கருத்து இருக்காது . எப்போதும் பதற்றமாக இருப்பார்கள் தலையை நாளும் கழுவ மாட்டார்கள் .

அப்படி கழுவினாலும் அவர்கள் பயன்படுத்தும் இதளியம் (இரசாயணம் ) மயிரை உத்திர செய்கிறது எல்லாவற்றிக்கும் முதன்மையாக இரும்பு சத்து பற்றாக்குறை இருக்கும் . இந்த இரும்பு சத்து கீரைகள் , காய்கள் , உலர் பழங்கள் குறிப்பாக பேரிட்சை போன்றவைகள் இரும்பு சத்தை அளிக்க கூடியன இவற்றை நாளும் எடுக்க இரும்பு சத்து கூடும்.

இந்த தலைப் பொடுகிற்கு தூய்மையான உணவுப் பழக்கம் வேண்டும் இயற்க்கை உணவுகள் சிறந்ததது இரசாயணம் கலந்த வழலைக்கட்டிகள் (சோப்பு ) சாம்புகள் சீயக்கய்கள் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது இதனால் நோய் தீவிரம் அடையும் எனவே இவற்றை நீக்குக . தூய்மையான எள்நெய் எடுத்து கொஞ்சம் சூடாக்கி வெதுவெதுப்பாக மயிர்க்கால்களில் தேய்க்கலாம் இதற்க்கு பொடுதலை என்ற மூலிகை நல்ல பலனைத் தரும் இதை அரைத்து பூசலாம் .இயற்க்கை உணவுகள் எடுக்கலாம் நல்ல குணத்தை எதிர்பார்க்கலாம் .

நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம்

அடுத்த இடுகையில் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்போம் அதுவரை விடைபெறுவோம் .More than a Blog Aggregator

நவம்பர் 01, 2011

மழைக்கால நோய்கள்
மழைகாலம் என்றாலே சிலநோய்களுக்கு கொண்டாட்டம் தான் அந்த வகையில் கண் நோயையைப் பற்றி குறிப்பிடலாம் குறிப்பாக இந்தகாலத்தில் கொஞ்சம் மழையும் சேர்ந்து கொண்டால இந்த நோய் பரவத் தொடங்கும் .கண்நோய் அழகாக ஒட்டிக் கொள்ளும் இதற்க்கு முன்னமே நாம் எச்சரிக்கையுடன் இருந்துவிட்டால் இது நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் இதற்க்கு பெரிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை .

தூய்மையான விளக்கெண்ணை இரண்டு சொட்டு கண்ணில் விட்டுக் கொண்டு இறவில் தூங்கப் போகலாம் .
தூய்மையான தண்ணீரில் கண்களைக் கழுவலாம் .
நாட்டு மருந்து கடைகளில் விற்கப் படும் இளநீர்க் குழம்பு என்ற மருந்தை நாளும் பயன் படுத்தலாம் (இது இளநீரும் தேத்தான் கோட்டை என்ற மருந்துப் பொருளும் சேர்ந்த்தது )

மூச்சிறைப்பு (ஆஸ்த்துமா )

இந்த நோய் எல்லாகாலத்திலும் சிரமத்தை தரும் என்றாலும் மாரிக்காலம்,பனிக்காலம் என்றாலும் கூடுதல் வேதனை தரும் இந்நோய் குறித்து பின்னர் விரிவாக எழுதப்படும் இந்த நோய் கண்டவர்கள் குளிர்ச்சியைத் தரும் உணவுகளை நீக்கவேண்டும் .தக்காளி . சில குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை கண்டிப்பாக நீக்கவேண்டும் இவர்கள் நாட்டு கத்தரி ,சுண்டைக்காய் , அவரைகாய்,முருங்கை காய் போன்ற நாட்டுவகை காய்களை எடுக்கலாம்
தூதுவலை , கண்டங் கத்தரி , நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகள் இவர்களுக்கு நல்ல விடிவைத் தரும் .
இனிப்பும் ,புளிப்பும், உப்பும் கபத்தை வளர்க்கும் ஆகையால் இந்த உணவுகளை நீக்கவேண்டும் .

குளிர்கால காய்ச்சல்

இப்போது காய்ச்சல் எல்லோரையும் ஒய்வு எடுக்கவைக்கும் கொஞ்சம் அச்சப்பட்டால் ஆளையே படுக்கவைத்துவிடும் காய்ச்சல் வந்த உடனே உணவு திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது உணவு மறுத்தல் செய்யலாம் .இந்நேரங்களில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டிய நீரையே பயன்படுத்த வேண்டும் உணவுப் பிரியர்கள் எனின் காரம் இல்லாமல் மிளகு பொட்டு காய்ச்சிய அரிசி கஞ்சி எடுக்கலாம் அப்படி இரண்டு நாளைக்கு எடுக்க காய்ச்சல் போயே போச்சு
இந்த காய்ச்சலுக்கு பின் எளிமையான உணவுத் திட்டம் தேவை காரத்தையும் புளியையும் குறைக்க வேண்டும் .

அடுத்த பதிவில் புதிய செய்திகளுடன் சிந்திப்போம்

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator

அக்டோபர் 24, 2011

நோய் இல்லாத உலகு சிந்திப்போமே
இன்றைய நிலையில் நோயில்லாத உலகம் என்பதுவெறுங் கனவாகி போகிறது ஆனால் நாம் தொடர்ந்து நோயில்லாத உலகம் பற்றி எழுதுகிறோம் . இது இயலுமா? சாத்தியமா? என்ற வினாவும் தொடுக்கவில்லை எப்படி என கேட்கவும் இல்லை . இப்படி கேள்வியில்லை எனின் எங்கோ பிழை என பொருள் கொள்ளவேண்டி இருக்கிறது. தமிழர்கள் எங்கும் கேள்வி கேட்கும் உள ஆற்றலை பெறவேண்டும் என்பதே எமது பேரவா.

கடந்த இடுகைகளில் நாம் குழந்தை களுக்கு உரை மருந்து பற்றி எழுதி இருந்தேன் . அவைகளில் மூகமையான மருந்து பற்றி எழுத வில்லை இது தற்செயலாக நேர்ந்துவிட்டது இப்போதெல்லாம் நாம் குறிப்பெடுத்துக் கொண்டு வலைபூ எழுதுவதில்லை காரணம் புரியவில்லை .சுக்கு . சித்தரத்தை . கடுக்காய் , மாசிக்காய் ,குலக்காய் (ஜாதிக்காய் )இந்த வரிசையில் மூகமையான மருந்துப் பொருள் அதாவது தமிழரின் பண்பாட்டில் சிறந்த இடத்தை வகிக்க கூடிய மருந்து எனின் அது வசம்பு . இதன் பெயரையே ஊர்ப்புறங்களில் குறிப்பிட மாட்டார்கள் காரணம் இதற்க்குதரும் மதிப்பு அப்படி இதை ஊர்ப்புறங்களில் பிள்ளை வளர்த்தி என குறிப்பிடுவார்கள் . அந்த அளவிற்கு குழந்தை வளர்ப்பில் சிறந்த பங்காற்ற கூடியது .

இன்று குழந்தை வளர்ப்பில் பல்வேறு நோய்களுக்கு காரணம் இந்த வசம்பை முறைப்படி பயன் படுத்தாமைதான் இதன் பயனை நாய்பெற்ற தெங்கம் பழம்போல தமிழர்கள் விட்டுவிட்டார்களோ என எண்ணத்தூண்டுகிறது .செரிக்காமை, வயறு உப்புசம் மலசிக்கல் காற்று பிரியாமை இப்படி பல நோய்களை நீக்கி குழந்தைகளை வளர்த்து உடல் பலத்திலும் ஆள்பலத்திலும் அறிவு பலத்திலும் உயர்ந்தோங்க செய்ததது இந்த மருந்து இன்று பலகுழந்தைகள் சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருப்பதற்கு இந்த மருந்தை முறைப்படி குழந்தை களுக்கு வழங்காமைதான் எனநான் அடித்து கூறுவேன் .

இந்த மருந்து அறிவை செழுமைப்படுத்து வதில் சிறந்த பங்காற்றுகிறது என்பதில் எள் முனையளவும் ஐயம் வேண்டாம் . அது மட்டும் அல்லாமல் பினார் உண்டாகும் கைகால் வலிப்பு நோய் களும் இந்த மருந்தை முறைப்படி எடுக்கும் குழந்தை களுக்கு வருவதில்லை . ஆக நோயை நீக்கும் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைகளை பின்பற்றி நோய் வென்று நீடு வாழ்வோம் .

இப்போது புரிகிறதா நோயில்லா குமுகத்தை உண்டாக்க முடியும் என்பதை ....
சிந்திப்போம் .....More than a Blog Aggregator

அக்டோபர் 18, 2011

நோயில்லா குழந்தை ......


கடந்த இடுகைகளில் குழந்தைபேறு அதன் முதன்மையான குறிக்கோள் இன்றைய சமூகம் சித்த்ம்ருத்துவ்த்தை முறையாக பயன் படுத்திக் கொள்ளாமைஅதைபற்றிய நமது விமர்சன கண்ணோட்டம் போன்றவை மற்றவர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கலாம் காரணம் உண்மைகள் முறையான விமர்சனங்கள் பலரை எரிச்சல் அடையவே செய்யும் . இந்த உலகமே நோயின்றி வாழுகிற சிறந்த ஒரு முறை அதாவது தமிழ கலைகள் இருக்கிறது அவற்ற்றை பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றால் இன்று அந்த சித்தர்களே என்றாலும் எரிச்சல் அடைவார்கள் அவர்கள் (சித்தர்கள் )உண்மையில் இந்த உலகம் முழுமையும் நோயின்றி வாழ்வதற்கான அரிய கலை தங்களின் கூரிய மதி நுட்பத்தால் பறந்து பட்ட மக்களுக்கு வழங்கு கிறார்கள் அதையோ பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றால் சினம் உண்டகும்தனே .

இன்றய குழந்தைப் பேற்றிற்கு முன்னதாக நாம் சிந்திக்க வேண்டியது தாய்மையின் கருப்பையைதான் இதை கண்ணேபோல காக்கவேண்டும் பருவ அகவையில் கண்மூடித்தனமாக பெண்மையை இழந்து இளமையிலேயே உடலை நாசப்படுத்திக் கொள்ளுகிறார்கள் இதனால் கருவை தாங்கி நிற்கும் கருப் பையில் பல்வேறு நோய்கள் தாக்கி குழந்தைப் பெற்றிக்கு ஆயத்தமகா நிலையில் இருக்கிறனர் அல்லது நோயாளியாகி விடுகிறனர் . இளமையில் திருமணத்திற்கு முன்னதாக கரு உண்டாகமால் தடுக்கும் கருத்ததடை மத்த்ரைகள் பயன்படுத்துவது கண்டிப்பாக எல்லோரையும் நோயாளியாக்கும் என்பது உண்மை . இதுபற்றி தனியாக ஒரு இடுகை வரும்.முதல் குழந்தையை கருக்கலைப்பு செய்து கொள்வது முற்றிலும் பிழையானது பின்னர் குழந்தைபேறு உண்டாகமால் போக வாய்ப்புமுண்டு .

முந்தய இடுகையில் குழந்தைப் பெற்றிக்கு பிறகு உரைமருந்துகள் பற்றி எழுதிஇருந்தேன் கடுக்காய் , மாசிக்காய், குலக்காய் (ஜாதிக்காய் )சுக்கு ,சித்தரத்தை ,போன்ற மருந்துப் பொருட்களை நெல்லாவியில் வேகவைத்து தூய்மையாக்கி கொண்டு மருந்துகளை அரைக்க தூய்மையான கல்லை ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் இந்த உரைமருந்துகளை நோய்க்கு தக்கபடி பயன் படுத்தி குழந்தைக்கு வரும் எல்லா நோய்களில் இருந்தும் விடுவிக்கலாம். அதுமட்டும் அல்லாமல் தாய் முறையான மருந்துகளை எடுப்பதன் மூலம் தாயையும் சேயையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும் இந்த கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கு பதிவு செய்கிறோம் .இந்த காலத்தில் தாய்க்கு தாய்பால் இல்லாமை அல்லதுவேலைக்கு போகிறவர்கள் தாய்ப்பாலை வலுக்கட்டாயமாக நிறுத்த முயலுதல் போன்ற செயல்களில் ஈடு படுகிறனர் இதற்க்கு முறையான சித்த மருந்துகள் எடுக்க நாம் விரும்பும் எல்லாவற்றையும் பெறாலாம் . குழந்தைக்கு ஓராண்டு வரையில் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் பிறந்த ஆறுமாதத்திற்கு பின்னர் இணை உணவு கொடுக்க பழக வேண்டும் இந்த சூழலில் டப்பாவில் அடைக்கப் பட்ட உணவுகள் கண்டிப்பாக கூடாது இது குழந்தையின் பசியை அடக்கிவிடும் குழந்தையின் எதிர்கால வாழ்வை முடமாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் தரமான பருப்பு வகைகள் கீரைக்ச்ல் நெய் சேர்த்து கொடுக்க பழக வேண்டும்

அடுத்த இடுகையில் வரிவாக சிந்திப்போம் .....

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

அக்டோபர் 10, 2011

எளிமையான குழந்தைப் பேறு நோயில்லா இன்ப வாழ்வு


இப்போது எல்லாம் குழந்தை பருவத்திலேயே நோயாளி ஆக்கிகிவிடுவது பழக்கமாக இருக்கிறது இதற்க்கு அடிப்படியில் காரணம் என்ன வென்றால் நம்மிடையே கொட்டி கிடக்கும் சித்த மருத்துவ முறையை பற்றி அறியாமல் இருத்தல் எனலாம் நாம் கடந்த நானூறு , நானூற்றைம்பது ஆண்டுகளாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்தில் இருந்தமையால் நமது கலைகளை மறந்தோம் அல்லது மறக்க அடிக்கப் பட்டோம் ஆக இன்று பெரும்பான்மையான மக்களுக்கு நமது மிகப் பெரிய கலையான சித்தமருத்துவத்தைப் பற்றி நாம் விளக்கி சொல்ல வேண்டி இருக்கிறது நமது கலைகளை நம் மக்களிடமே தொடக்கத்தில் இருந்தே கற்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது ஆங்கில வருகையை இன்னும் சிறப்பித்துக் கூறும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது இந்த அடிவருடிகள்தான் நமது கலைகளுக்கு அடிப்படியில் பகைவர்களாக இருக்கிறார்கள் .

தண்டாமைறையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்..... என்பதைப்போல தாமரையின் மலரில் உள்ள சுவையை அறியாத தவளையைப் போல நமது சிறந்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளை அறியாமல் அதன் பயனையும் அறியாமல் அவற்றில் உள்ள சிறப்புகளை அறியாமல் கேலி பேசி நம்மை நோக செய்வர் பாவம் இவர்களை விட்டு நமது இலக்கை தொடருவது தான் சிறப்பாக இருக்கயியலும் ஆக இந்த அறியாமையில் உழலும் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல வேண்டி இருக்கிறது சித்தமருத்துவம் ஆலமரமாக வளர்ந்து இருக்கிற மருத்துவமுறை உலகினுக்கே வழிகட்டியகவும் நோய்களை நீக்க கூடிய நல்ல வாய்ப்பினை பெற்று இருந்தும் நமது மக்கள் நோயில் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனை பட வைக்கிறது .

சிலமாதங் களுக்கு முன் தமிழகத்தின் நாளிதழான தினமணியில் ஒரு செய்தி பழநியருகே மலைவாழ் மக்கள் மகப்பேறுக்காக முதல் முறையாக மருத்துவ மனைக்கு செல்ல அங்கு குழந்தைபேறு சிக்கலாகியுள்ளது பெரிய மருத்துவ மனைக்கு செல்லுங்கள் அங்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பார்கள் எனகூறி பெரிய மருத்துவ மனைக்கு அனுப்ப அவர்களில் பட்டறிவு நிறைந்த ஒருவர் இதுக்கெல்லாம் அறுவை சிகிச்சையா என கேட்டு எளிமையாக குழந்தையை திருப்பி குழந்தைப் பேற்றை உண்டாக்கி இருக்கிறார் அங்கிருந்த பெரிய மருத்துவர்களே வியந்து போயிருக்கிறார்கள் ஆக நமது பழமையான கலைகள் முறையாக பயன் படுத்தும் போது இந்த மண்ணில் மிகப் பெரிய மருத்துவ மாற்றத்தை உண்டாக்க இயலும் .

குழந்தைப்பேறு என்பது இயற்க்கை இந்த உலக உயிரினங்களுக்கு வழங்கிய மிகப் பெரிய கொடை இது எளிமையாகவும் சிக்கலின்றியும் மிகவும் நேர்த்தியாகவும் நடைபெறக் கூடியது அனால் இன்று இது அச்சப்பட கூடிய அளவிற்கு மாறியுள்ளது முன்பு குழந்தை களுக்கு பிறந்தது முதல் முறையாக சித்த மருந்துகள் வழங்கி நோயில் இருந்து வென்று எடுப்பார்கள் அதை உரைமருந்துகள் என வழங்குவர் இந்த மருந்துகள் சுக்கு, சித்தரத்தை . கடுக்காய் , மாசிக்காய் , குலக்காய்(ஜாதிக்காய் ) போன்ற மருந்துப் பொருட்களை முறைப்படி தூய்மைப் படுத்தி வைத்துக் கொண்டு நோய் நிலைக்கு ஏற்ப மருந்துப் பொருட்களை பயன்படுத்தி எல்லாவித நோயில் இருந்தும் வென்று நலமுடன் வாழுவர் . அதேபோல தாயையும் பாதுகாப்பதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர் இந்த மருந்துகளை முறைப்படி எடுத்துவர தாய்மையை வலிமையுடன் போற்றி வளர்த்து வந்தார்கள் அந்த குழந்தைகளும் வலிமையுயடன் இருந்தார்கள் ..

குழந்தைகளும் முறையான சித்த மருந்துகளும் அடுத்த பதிவில் சிந்திப்போம் ...

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் நோவில் இருந்து இந்த உலகத்தை காப்போம்.More than a Blog Aggregator

அக்டோபர் 03, 2011

நல்லதோர் தாய்மை நல்லதெரு குழந்தைப்பேறுநல்லதோர் தாய்மை நல்லதெரு குழந்தைப்பேறு


இன்று பலர் குழந்தைபேறு என்றாலே அச்சப்படுகின்றனர் கரணம் எதற்கு எடுத்தாலும் அறுவை சிகிச்சை தான்தீர்வு அதாவது தாய் அல்லது சேய் இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற இயலும் அல்லது அறுவைசிகிச்சைதான் தீர்வு என கூறுவார்கள் ஒரு சின்ன அறுவைசிகிச்சை தானே செய்து விட்டு போகட்டுமே என எண்ணம் கொள்ளலாம் தவறில்லை . ஆனால் இந்த அறுவை சிகிச்சையால் எதிர் காலத்தில் என்ன சிக்கல் நேரும் என பெரும்பாலும் நம் மக்கள் அறிந்து இருக்கவில்லை .

அப்படி என்னதான் சிக்கல் நேரும்?

குழந்தைபேறு என்பது நம் நாட்டில் மிகவும் எளிமையாக சிக்கலின்றி பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது முன்பெல்லாம் பத்துக்கு
மேற்பட்ட குழந்தைகள் மிகவும் எளிமையாக பெற்றுக்கொண்டார்கள் இந்த சூழலில் அடுத்த குழந்தைக்கு ஆயத்தமாகி விடுவார்கள் எப்படி அவர்களால் முடிந்ததது? எதாவது கண் கட்டி வித்தை கற்றிருந்தார்களா என்ன? அது எல்லாம் இல்லை அவர்களின் வாழ்க்கை முறை இயற்கையை ஒட்டிய முறையில் இருந்தாது . சீரான வாழ்க்கைமுறை நல்ல உணவுத்திட்டம் கடுமையான உழைப்பு எதையும் பதற்றமின்றி செய்யும் உளவாற்றல் என பழைய வாழ்க்கைமுறை இயற்கையும் எளிமையையும் ஒட்டியதாக இருந்தது . இன்று வாழ்வே சிக்கலாகி நாற்றமெடுக்க தொடங்கி விட்டது இதனால் நோய்கள் வானாளாவ வளரத்தொடங்கி விட்டது . இந்த சிக்கலான வாழ்க்கை முறையால் குழந்தைப்பேறு சிக்கலாகிறது
சிக்கலாகும் குழந்தைப் பேறினால் பலநோய்கள் தோற்றம் கொள்ளுகிறது அளவுக்கதிகமாக முக்கி முக்கி உந்தித்தள்ளி குழந்தைபெற்றிக்கு ஆயத்தமாகும் போது கருப்பை சார்ந்த நோய்கள் பல அதாவது கருப்பை இறக்கம் முதல் பல்வேறு நோய்கள் ... அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சையால் அல்லது வலுக்கட்டாயமாக குழந்தையை இழுக்கப்படும் போது பல நோய்கள் தொடருகிறது கொஞ்சம் இருமினால் ,அல்லது சிரித்தால் , அல்லது தும்மினால் தம்மையும் அறியாமல் சிறுநீர் வெளியேறிஆடையை மாற்றும் அளவிற்கு சூழ்நிலை உண்டாகிறது இப்படி உளவியல் ரீதியான சிக்கலை உண்டாக்கி தொடர் நோயாளியாக்குகிறது .

இதற்க்கு எல்லாம் காரணம் முறையில்லாத வாழ்க்கைமுறை என நாம் கூறத் தேவையில்லை முறையில்லாத உணவுத்திட்டம் . இந்த காரணங்களினால் சிக்கலான குழந்தைப் பேறு உண்டாகிறது அவைமட்டுமின்றி உணவுத்திட்டம் மிகையான கொழுப்பு உணவுகள் மிகையான இனிப்பு வகைகள் இந்த இனிப்பு உணவுகள் குழந்தையை சற்று மிகையான எடையுள்ளதாக ஆக்கும் இப்படி உழைப்பு இல்லமால் மிகையான உணவு எடுத்துக் கொள்ளும் பொது குழந்தை மிகையான எடையுடன் பிறக்கிறது அதற்க்கு ஏற்றபடி தமது உடலை ஆயத்தப் படுத்திக் கொள்ளுவதில்லை ஆறாவது ஏழாவது மாதத்தில் இருந்து குழந்தைப் பேற்றிற்கு தமது உடலை ஆயத்தப் படுத்தும் சிலவகை இதற்க்கெனசித்த மருத்துவத்தில் சிறப்பாக தயாரிக்கப் படும் எண்ணெய் வகைகளை பிறப்பு உறுப்பு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் நாளும் பூசிவர உடல் குழந்தப் பேற்றிக்கு ஆயத்தமாகி எளிமையான குழந்தைப் பேறு கிடைக்கிறது .

அடுத்தப் பதிவிலும் விரிவாக தொடர்வோம்....
தாய்ப்பால் சீராக கிடக்க .....
தாய்ப்பால் பெருக .....
நோயில்லா குழந்தை வளர்ப்பு.... .
குழந்தை பேற்றிற்கு பின் .....மற்றும் உங்களின் வினாக்களுடன் ......

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator

செப்டம்பர் 26, 2011

எளிமையான குழந்தைப்பேறும் நோயில்லா வாழ்க்கைமுறையும் ...
எமது முந்தைய இடுகையில் திருமணத்திற்கு முன் ஒரு ஆற்றுபடுத்துதல் அதாவது வழிகாட்டல் என குறிப்பிட்டு இருந்தேன் . இன்றய சூழல் குழந்தைப் பெறில் இருந்தே நோய்களை உண்டாக்கி மனிதனை முற்றாக நோயாளியாக்கு கிறது இந்த சூழலை மாற்றி முற்றாக ஒரு புதிய உலகை தோற்றங் கொள்ளசெய்ய இயலுமா? என நாமே வினா கேட்டு நமே விடைதேடினோம் அதற்க்கான விடைதான் இந்த இடுகை . உண்மையில் அப்படி ஒரு உலகத்தை கானவியலுமா? முடியும் ....அதற்க்கு நீங்கள் சிரமப் படாமல் இருக்க வேண்டுமானால் சிரமப் பட்டே யாகவேண்டும்

இன்று குழந்தைப்பேறு என எடுத்துகொண்டாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கு வந்துவிட்டது அதாவது குழந்தைப்பேறு எளிமையாக நடைபெறுமா? அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா? இந்த அறுவை சிகிச்சை நமது முறையில்லாத நட வடிக்கையினால்தான் வருகிறது என நமக்கு புரிவதில்லை . சித்த மருத்துவம் திருமணத்திற்கு முன்பிருந்தே முறையாக குழந்தைப் பேற்றிற்கு தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறது இருந்தாலும் நாம் அதை எப்போதும் பொருட் படுத்துவதில்லை . தாய்மை பேறு என்பது உண்மையில் ஒரு புனிதமான இடம் அது இன்று வேதனையோடு எதிர் கொள்ளகூடிய ஒன்றகாகிவிட்டது .

வீட்டு விலக்கு முடிந்து முதல் பத்து நாட்கள் மற்றும் கடைசி பத்து நாட்கள் பாதுகாப்பான் நாட்கள் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது அதாவது இந்த நாட்களில் பெரும்பாலும் குழந்த்ப்பேறு உண்டாவதில்லை அதாவது இடைப்பட்ட பத்து நாட்கள் தாய்மை பேற்றிக்கு உகந்த நாள்கள் என மருத்துவ உலகம் குறிப்பிடுவத நாம் அனைவரும் அறிந்ததுதான் இந்த காலத்தில் பாலுறவை முறைப்படி வைத்து கொள்ள தாய் கருவுருவாள் என குறிப்பிடு கிறார்கள் .

இப்படி தாய்மை அடைந்து விட்டால் குழந்தைபேறு உண்டாகும் வரை எல்லா மாதங்களும் முறைப்படி சிச்த்த மருத்துவம் குறிப்பிடும் மருந்துகளையும் வழிகாட்டல் களையும் கடைபிடித்தால் குழந்தைப்பேறு எளிதாகும் பிறந்த குழந்தை பின்னாளில் நோய் இல்லாமல் நீடு வாழ முடியும்
சிலருக்கு தாய்மைக் காலத்தில் குழந்தையை தாங்கி பிடித்து வாளர்க்க கருப்பையில் வேண்டிய சக்தி இன்மையால் கரு கலைந்து விடுகிறது இதற்க்கு சித்த மருத்துவத்தில் கருவளர்க்கும் எண்ணெய் ஒன்று இருக்கிறது இதை முறைப்படி கருக்கலத்தில் அருந்திவார இப்படி உண்டாவதில்லை இதை பதிவு செய்யக்காரணம் இப்படி ஒரு தீர்வு இங்கு சித்த மருத்துவத்தில் இருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் பத்தாவது மதம் வரை மருத்துவர்கள் குறிப்பிடும் மருந்துகளை முறைப்படி எடுத்துவர தாய்க்கும் சேய்க்கும் எந்த பதிப்பும் இல்லமால் எளிமையான குழந்தைப்பேறு கிடைக்கும் .
அடுத்த இடுகையில் மீண்டும் சிந்திப்போம்
சித்த மருத்துவம் காப்போம் நோய் வேண்டு நீடு வாழ்வோம்More than a Blog Aggregator

செப்டம்பர் 19, 2011

திருமணத்திற்கு முன் ஒரு ( Counselling ) வழிகாட்டல் மருத்துவ ரீதியாக.
இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொன்னது போலவும் சொர்கத்திலும், வர்கத்திலும் நிச்சயிக்கபடுவதாக தெரியவில்லை. எதோ கடமைக்காக நடத்தி பின்னர் சில நாளில் மணமுறிவை நடுகிறனர் சில மாதங்களில் மணவாழ்வு பிண வாழ்வாக மாறிபோவதுண்டு, இதற்கெல்லாம் காரணம் என்ன சிந்தித்தோமா? இல்லை பணத்தை தேடுவதில் முழுமையான? சிந்தனை செலுத்துவதால் மணமுறிவை பற்றி சிந்திக்க எல்லோருக்கும் நேரமில்லையா ?

இது கண்களை கூவி விற்றுவிட்டு சித்திரத்தை வாங்குகிற அறிவாளிகள் ? நிறைந்த காலமாக இருக்கிறது .மரித்துபோகும்நிலை பற்றியும் நோயாளிகளையும் சிந்திக்க வைக்க ஒரு சின்ன வழிகாட்டல். செய்ய எண்ணினோம் அதன் தொடர்சியாக...... இது நிச்சயம் உங்களுக்கல்ல அனால் நோயாளிகளுக்குதான்?ஆவர்தான் படிக்கவும் மாட்டார் கடைபிடிக்கவும் மாட்டரே ? என நீங்கள் கூறுவது என் காதுகளில் சத்தமாக கேட்கிறது .நீங்கள் படித்து சொல்லீடுவீங்க இல்லையா?

இப்போது முறையில்லாத வளர்பினால் இளமையிலேயே முதுமையை விழுங்கி வாழவேண்டிய நேரத்தில் மரண ஓலத்தை கேட்க முடிகிறது உண்மையை சொல்லுகிறவர்கள் இங்கு பித்து பிடித்தவராக தோற்றமளிக்கிறார் என்ன செய்வது இதுவும் காலத்தின் கட்டயாம் .

நீங்கள் திருமணத்திற்கு நிற்க்கிரீரா? உண்மையிலேயே இதை கடைபிடித்தல் உறுதியாக பலன் கிடைக்கும் ஆனால் நீங்கள் நான் சொல்லுவதை நூறு விழுக்காடு கடைபிடிக்க வேண்டும் ஏழு மலைதாண்டசொல்லவில்லை வாழ்வில் சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள் வாழ்கை உங்களுக்கே உங்களுக்கு மட்டுமே இனி ... நீங்கள் படியுங்கள் இனியும் கதை வளர்க்க விரும்பவில்லை .....

அன்பு உறவுகளே இப்போது நமது வாழ்க்கை முறை மாறித்தான் போனது இருந்தாலும் நாம் புதியதாக வாழ்ந்துதான் ஆகவேண்டும் என எண்ணுகிறோம் எப்படி என்பதுதான் புரியவில்லை ....
மாறுபட்ட வாழ்க்கைமுறை ... மாறுபட்ட உணவுமுறை சுற்று சூழல் இப்படி நம்மை நோய் துரத்தி கொண்டே இருக்கறது இவற்றை எல்லாம் விட்டு விலகி நோயற்று வாழுவது சிலருக்கு மட்டுமே முடிகிறது எல்லோராலும் இயலுவதில்லை முறையாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் கெட்ட பழக்கமெல்லாம் ? இப்போது இல்லை நீங்க எந்த காலத்தில இருக்கிறீங்க? இப்படியான வினாக்கள் நம்மை தாக்க தொடங்கும் . என்ன செய்வது இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது வாரம் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க பழக வேண்டும் பின்னர்
உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ வற்றை முறையான தேர்ந்த சித்த மருத்துவரிடம் கூறுக ஆணோ அல்லது பெண்ணோ உங்களின் குறைபாட்டை உறுதியாக நீக்குவார் . பாலியல் ரீதியான குறைபாடுகள் எனின் முறையாக விளக்கம் பெறலாம் பின்னர் மற்றவரின் வாழ்கையை கெடுப்பானேன்?

திருமணம்செய்து கொள்ளவிரும்பும் ஆண் அல்லது பெண் தங்களது குருதி என்ன வகை என்பதை அறிந்து கொள்க . குருதி ஒரே பிரிவை இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள் (அதாவது Rh + அல்லது Rh _ எதாக இருந்தாலும் ஒரேபிரிவாக இருக்கும்படி பார்த்துகொள்க அதாவது ஆணுக்கு Rh + எனின் பெண்ணுக்கும் இதே பிரிவு இருத்தல் சிறப்பு .) மணப்பெண் அல்லது மணமகன் உண்மையில் அவரைப்பற்றி முழுமையாக தமக்கு ஏற்றவர்தானா ? இங்கே பணத்தை குறிக்கோளாக கொண்டவர் அருள் கூர்ந்து படிக்க வேண்டாம் என அறிவுறுத்த படுகிறீர் பணம் பக்கத்திலே வந்து படுத்து கொள்ளாது அது இன்ப வாழ்க்கையையும் தராது . ஒத்த கருத்தொற்றுமை கொண்டவர்தனா என்பதை பல முறை பேசுங்கள் எல்லாவற்றிலும் நிறைவு கண்டபின்னர் எந்த முடிவையும் எடுங்கள் . இப்போதைய பெண்களுக்கு கருப்பை சார்ந்த குறைபாடுகள் மிகப்பலரிடம் இருக்கிறது அதை முறையாக நீக்கி கொள்க பின்னல் வரும் பிணக்கு களுக்கு இந்த கருப்பையின் குறைபடுகளினாலே பல்வேறு பெண்களின் சினங்களுக்கும், பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது நான் சான்று காட்ட ஆயத்தமாக இருக்கிறேன் . இந்த கருப்பை குறைபாடுகளை ,வீட்டு விலக்கின்மை மிகையான வீட்டு விலக்கு, ஒழுங்கற்ற வீட்டு விலக்கு இப்படி இந்த குறைபாடுகளை கருப்பையை பலமடைய வைக்கும் பல மருந்துகள் சித்த மருத்துவத்தில் உண்டு . இதை முறையாக செய்து கொள்க ஆண்கள் எனின் மயக்கப் பொருட்கள் (மது , புகை )பழக்கத்திற்கு ஆளானவர் எனின் இதோடு கைவிடுக . காரணம் பல்வேறு பாலியல் குறை பாடுகளுக்கு இது காரணம் ஆகிறது பின்னர் ஆண்மையை பெருக்கும் மருந்துகளை முறைப்படி எடுத்து கொள்க அதும் சித்தமருத்துவத்தில் நிறைய உண்டு . இதை முறைப்படி எடுத்து கொள்க இதற்கும் முன்னதாக இருவரும் கழிச்சலை (பேதி )மருந்து எடுத்து வயிற்றை தூய்மை ஆக்கிகொள்க நலமுடன் இருக்கிறவர்கள் கூட இவற்றை செய்து கொள்வது தவறல்ல . இப்படி திருமணத்திற்கு இரண்டு மதங்களுக்கு முன்பே தங்களை ஆயத்த படுத்தி கொள்ள வேண்டும் இதற்குள் குழந்தை பேறு பற்றிய முறையான திட்டமிடல் இருக்க வேண்டும் என்னதான் இருந்தாலும் மணாமான இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பேற்றை உண்டாக்கி கொள்வது சிறந்தது.
குழந்தைப் பேற்றின்போது பெண்ணின் அகவை 23 க்கும் 30 க்கும் இடைப்பட்டதாக இருத்தல் சிறப்பு நல்ல சிறப்பான நோயற்ற குழந்தைப் பேறு உறுதியாக வாய்க்கும்.சிக்கலாற்ற எளிமையான குழந்தைப்பேறு பற்றி அடுத்த பகுதியில் எழுதப்படும் .

கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களின் எண்ணம் சலனமற்று எந்த உள போராட்டமும் இல்லமால் இருக்க வேண்டும் இந்தகாலத்தில் உண்டாகும் போராட்டங்கள் குழந்தையை பாதிக்க செய்யும் .மேலும் இந்த கருக்கலத்தில் பெண்கள் எந்த நோயும் வராமல் காத்து கொள்ளவும் சிக்கலற்ற குழந்தை பேரிற்கும் நோயல்லாத குழந்தைக்கும் விளக்கம் பெறவேண்டி நீங்கள் தேடினால் அதற்க்கு அடுத்த எமது இடுகை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் .....

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .

குறிப்பு: மருத்துவம் தொடர்பாக விளக்கம் பெற எமது மின் அஞ்சலுக்கு எழுதாலாம் தமிழ்அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம் தங்லீசில் எழுதினால் எம்மிடம் இருந்து பதிவல் வராது .More than a Blog Aggregator

செப்டம்பர் 12, 2011

சித்த மருத்துவமும் வளரட்டுமே ?
கடந்த இடுகையில் ஒரு விமர்சனம்


பெயரில்லா சரவணா கூறியது...

என்ன சார் ! புரியாத பேரெல்லாம் சொல்றிங்க ? சுலபமாக கிடைக்க கூடிய உணவுகளை சொல்ல கூடாதா ? இதையெல்லாம் எங்க போய் தேடறது ? தப்பி தவறி பக்கத்துல இருக்குற சித்த மருத்துவர்கிட்ட போனாலும் , காசை கரந்துடுவன்களே ?
வணக்கம் உறவுகளே எமது கடந்த இடுகையில் யாரோ சரவணன் என்ற நபர் விட்டுசென்ற வினாவுடன் கூடிய விமர்சனம்தான் இது இதை இங்கு பதிவு செய்ய காரணம் அவரை நாம் உளபூர்வமாக வரவேற்கிறேன் வணங்குகிறேன் . ஏனெனில் எமக்கு பாராட்டுகளைவிட விமர்சனங்களே பிடித்தமானவை கேள்வி கேட்கும் நிலைக்கு எல்லோரும் வரவேண்டும் என எண்ணுகிறேன். ஒருவகையில் பாராட்டுகளை வெறுக்கிறேன் ஏனெனில் அது மயக்கத்தை தரும் என்பதால்.

சேதிக்கு வருவோம் நம்மை வினா கேட்ட அந்த நபர் சித்த்மருத்துவர்கள் எல்லோருமே காசை கறக்கும் நபராக பார்க்கிறார் . இது முற்றிலும் பிழையான ஒன்று உண்மையில் சேவை நோக்குடன் மருத்துவத்தை செய்யும் வணங்க தாக்க பலர் இருக்கத்தான் செய்கின்றனர் . இருந்தாலும் சிலர் வணிக நோக்கத்தோடு இருக்கலாம் அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பதாகவும் இருக்கலாம் அவர்களையும் நாம் நடவடிக்கையினால் முறைப்படுத்தயியலும் தானே . இருக்கட்டும் .

நாம் இந்த பதிவு செய்வதின் நோக்கம் ஒருமருத்துவம் பழமைவாய்ந்த நமது அழிவின் விளிம்பில் இருக்கும் மருத்துவம் செய்கிறவர்கள் எத்தனை பேர் கோடிகளில் புரள்கிறார்கள்? மிகவும் சொற்பமே மீதமுள்ளோர் வறுமையில் வாழுகின்றனர் .நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி இது தனி மனிதரை வாழ வைக்கிறது என பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழினத்தின் உயர்ந்த கலை இதை காப்பது என்பதும் இந்த சித்த மருத்துவ தொழில் செய்கிறவர்களை ஆதரிக்கிறது என்பதும் ஒன்றே . ஆக இந்த உயர்ந்த கலை இந்த மண்ணின் போற்ற வேண்டிய கலை இது எல்லோருக்கும் போய் சேரவேண்டுமானால் சித்த மருத்துவ தொழில் செய்கிறவர்கள் வளமுடன் வாழ வைக்க வேண்டும் இல்லை எனின் இந்த கலை அழியும் அதேவேளை மக்கள் நோயில் விழுந்து கிடப்பார்கள் .

அதுமட்டும் இல்லாமல் இந்த நிலப்பந்து முழுமைக்கும் நோயற்ற ஒரு நிலையை உண்டாக்க முடியும் தூய வாழ்க்கை நோயற்ற வாழ்க்கை எவ்வளவு இன்பம் பாருங்கள் ? ஆனால் இந்த பாழாய் போன த்மிழ் சமூகம் இந்த உயர்ந்த கலைகளைபாது காக்கிறதா ? என்றால் இல்லை என கூறுவேன் ஏன் இந்த இழிவான நிலை? தமிழகத்து தலைவர்கள் அப்படி பட்டவர்களாக இருக்கிறார்கள் .

எம்மைபற்றி ......

உண்மையில் தமிழர்களின் உயர்ந்த மொழியும் பண்பாடும் , இசையும் மற்ற கலைகளும் அவற்றோடு சித்தமருத்துவமும் முறைப்படி பாதுகாக்க வேண்டும் என எண்ணுகிறோம் நாம் வளமோடும் இல்லை வசதியோடும் இல்லை . ஆனாலும் நமது கலைகளை காக்க வேண்டும் என்பது நமது விருப்பம் விருப்பமாக இருக்கறது இதை இந்த மருத்துவத்தை முறையாக பயன் படுத்தி கொள்ளும் போதுதான் இந்த சமூகம் அடுத்தகட்ட சமூகத்திற்கு இந்த உர்யர்ந்த கலையை இட்டு செல்ல முடியும் .நம்மைபோலவே எல்லோரையும் எதிர் பார்க்க முடியாது அவர்களுக்கு குடும்பம் உண்டு குழந்தை குட்டிகளுண்டு நமக்கு அதெல்லாம் இன்னும் அமைய வில்லை என்பதால் நாம் சேவை செய்கிறோம் அவ்வளவே ?
சித்தமருத்துவம் மனிதத்தை நோயில் இருந்து விடுவிக்கும் மருத்துவம் இந்த உலகம் முழுமைக்கும் நோயில் இருந்து விடுவிக்கும் மருத்துவம் எனவே காப்போம் பின் பற்றுவோம்More than a Blog Aggregator

செப்டம்பர் 05, 2011

ஆண்குறி பெரிதாக ( Penis size increase herbal medicine )
இப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பது போலவும் விளம்பரம் செய்கிறார்கள் இவர்களின் இந்த சில செய்திகளாலேயே உண்மையான மருத்துவர்கள் காணமல் போகின்றனர் .

இப்படி நாம் கூறுவது சிலருக்கு பிடிப்பதில்லை நமக்கு உண்மையான மருத்துவம் தமிழ மருத்துவம் உலகம் போற்றவேண்டிய மருத்துவம் முறையாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதே . பாலுறவு தொடர்பான சிக்கல் பெரும்பாலும் இந்த விளம்பர பேர்வழிகள் கூறுவதுபோல எவருக்கும் இருப்பதில்லை அல்லது சிலர் தவறாக புரிந்து கொண்டு இப்பதனால் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது .

இந்த ஆண்குறி சிக்கல் களும் இப்படித்தான் பாலுறவில் ஆண்களின் குறிசிறியதாக இருப்பதற்கும் பாலுறவிற்கும் ஏதாவது இணைப்பு இருப்பதாக நமக்கு படவில்லை .பெண்களின் பிறப்பு உறுப்பில் இரண்டு அங்குல நீளத்தில் தான் உணர்வுகளை தூண்டுகிற நரம்பு மண்டலம் இருப்பதாக கூறுகின்றனர் . அப்படி இருக்க ஆண்குறி நீண்டு இருப்பதற்கும் பெரியதாக இருப்பதற்கும் எந்த வித இணைப்பு இருப்பதாக தெரிய வில்லை பாலுறவு என எடுத்து கொண்டால் உண்மையில் உளதிடமே சிறந்தத்தாக இருக்க முடியும் காரணம் இன்று பெரும்பாலும் உளவியல் சார்ந்த குறைபாடுகளே மிகுந்து காணப்படுகிறது . இவற்றிற்குதிருமணத்திற்கு முன்பே முறையான ஆற்றுப் படுத்துதல் (வழிகட்டுதால் ) தேவை என்பது நமது கருத்து விரைந்து இது தொடர்பாக எழுதப்படும்.

இப்போதைய இளசுகள் (பதின் பருவத்தினர் ) இந்த ஆண்குறி சிக்கலையே முன்வைக்கிறனர் . அன்பர்களே ஆண்குறி சிறியதாக இருந்தால் பாலுறவில் குறைபாடு ஏதும் உண்டாகாது. இதை முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் நல்லதே. இதுவும் கூட முந்தய பதிவில் கூறியபடி உடல் மற்றும் பரம்பரைத்தன்மை தன் காரணமாகிறது . இதைகூட பதின் பருவத்திற்கு முன்னதாக ஏதாவது குறை இருப்பின் அவற்றை சீர் செய்து கொள்ளவேண்டும் .

தீர்வுகள்

பாலியல் குறைபாடுகள் ஆண்குறியில் இருந்து தொடங்குவதில்லை அது உணவு திட்டம் முறையில்லாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இருந்து தொடங்கு கிறது முறையான உணவு திட்டங்கள் இரத்தம் எந்த அளவிற்கு ஆண்குறியில் பாய்கிறதோ அந்த அளவிற்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை இருக்கும் ஆக உடலில் ஆற்றலுக்கும் பாலுறவிற்கும் இருக்கும் நேரடி உறவை எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை . சில காரணங்களினால் தளர்ச்சி அடைய கூடும் சிலருக்கு ஆண்குறி மிகவும் சிறுத்து இருக்கும் இவற்றை முறையான சித்த மருத்துவத்தில் குணமாக்க இயலும் என மருத்துவ குறிப்புகள் உண்டு என்றாலும் உங்கள் பக்கத்தில் உள்ள நேர்மையான சித்த மருத்துவரை அணுகினால் இவற்றிக்கு முறையான தீர்வு அளிப்பார் அவரிடம் நேர்மை இருக்க வேண்டும் என்பது நமது அவா அதேவேளை தளர்ச்சி அடைந்து இருந்தாலும் சிறுத்து இருப்பதற்கும் மருத்துவ குறிப்பு ஒன்றை நாம் தர வேண்டியது ( இங்கு எவரையும் ஏமாற்றாமல் ) கடமையாகிறது எட்டி(இது நச்சு தன்மை கொண்டது ஹோமியோபதியில் நக்ஸ் என்ற மருந்து செய்கிறார்கள் ) கொட்டை,வசம்பு இவற்றை முறைப்படி தூய்மையாக்கி பாலில் அரைத்து இரவில் பூசிவர ஆண்குறி பருத்து விம்மி புடைக்கும் என ஒரு மருத்துவ குறிப்பு உண்டு இதையும் மருத்துவரின் பார்வையில் செய்வது நல்லது .அதேபோல ஆண்குறி உறுதியாகவும் பருககவும் வராகிக் கிழங்கு பால்முதுக்கன் கிழங்கு , பூனைக்காலி வித்து இவற்றை முறைப்படி தூய்மையாக்கி தூளாக்கி பாலில் எடுக்க நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .

எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தினால் குணப்படுத்த இயலும் தெளிவடைவோம்

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம். .

மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் சட்டமியற்றிய முதல்வரை வணங்குகிறோம் அமைச்சர்கள் மட்டத்திலும் தீர்மானம் இயற்ற வேண்டுகிறோம்.More than a Blog Aggregator

ஆகஸ்ட் 29, 2011

கோழிக்கறி (chicken ) விசமே
உறவுகளே வணக்கம் நலன் இல்லத்தில் உள்ளத்தில் நலந்தானே .
கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு ஞயிற்று கிழமையில் உங்களோடு அறிமுகமானேன் . அதுவரை ஏதோ ஒரு சிறிய ஊர்ப்புறத்தில் இருந்து சிறிய நகர்புறத்தில் எமது மருத்துவ நடுவத் தோடு எனது குறுகியஅளவில் பணி இருந்தது அதுவரை இந்த வலைபூ பற்றிய ஒரு விரிந்த தளத்தில் பார்வை இருந்தது இல்லை ஒரு நாளிதழில் வெளிவந்த கட்டுரை மட்டுமே வலைபூ பற்றிய பார்வையை தந்து இருந்தது .

நண்பர் சுகுமாரன் அவர்கள்தான் இந்த வலைபூ விற்கு எம்மை அறிமுகப்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் எமது முதல் இடுகை திருநெல்வேலி மனோன்மணியம் பல்கழகத்தில் வாசித்து அளித்த ஆய்வு கட்டுரையாகும் . இந்த கட்டுரையை தொடர்ந்து ஆறு மணிநேரம் தட்டச்சு செய்து பதிவேற்றினார் .நண்பர் சுகுமார் . அவருக்கு எமது நன்றியை மீண்டும் பதிவு செய்கிறோம் .

எமக்கு கணினியோடு பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்பு இருந்தாலும் நாய் பெற்ற தங்கம் பழம் போல தூர நின்று அச்சத்தோடு பார்த்துவிட்டு (இதையெல்லாம் எப்ப நாம பயன் படுத்த்போரோமோ தெரிய வில்லையே என ஏங்கி இருந்தவன்.) இந்த இடுகையின் போது தான் கணினியின் மிக அருகில் வந்து அமர்ந்தேன் . இன்னும் கணினியின் முழுமையான செயல் பாடுகள் நான் அறியாத ஒன்று முதலில் எனக்கு பின்னுட்டம் இடவும் தெரிந்து இருக்க வில்லை மீனகத்திற்க்கும் எமது பின்னுட்டம் தங்க்லீசில் தான் இட்டுவந்தேன் பின்னர் சில வலைபூ நண்பர்கள் வழி பின்னுட்டம் இடதெரிந்து கொண்டேன் அந்த அளவில்தான் எனது இன்றைய நாள் வரை இருந்து வருகிறது .

நாம் முன்பே குறிப்பிட்டது மாதிரி எமக்கு பெயரும் புகழும் வரவேண்டும் என்பதற்காக நாம் எழுத தொடங்கவில்லை எமது மொழிபண்பாடு தமிழ கலைகள் போன்றவற்றை இன்றைய சமூகத்திற்கு அறிமுகப் படுத்த வேண்டி இருக்கிறது அதை இன்றய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவே, ஆனால் இது எந்த அளவுக்கு பயன்படுத்த படுகிறது என்பது எம்மால் விளங்கி கொள்ள இயலவில்லை
தமிழர்கள் தங்களின் சொந்த மொழிமீதும் தமது கலைகள் மீதும் மிகப் பெரும்பான்மை பற்று கொண்டு இருக்கவில்லை இது இராயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் மெத்தன போக்குதான் என்றாலும் மாந்த குலத்தின் நோய்களை முறையாக நீக்குகிறது இது அறிவியல் அடிப்படையிலானது என கூவி கூவி அழைத்தாலும் இந்த தமிழர்கள் வருவதாக காணோம் நம்மோடு வாழ்ந்த வள்ளலார் பெருமான் கடைவிரித்தேன் கொள்வாரில்லை ... என வாரி சுருட்டி கொண்டு விட்டதை போல செய்ய வேண்டியே இருக்கிறது . தமிழ் சமூகம் நோயில் வீழ்ந்து கிடைக்கிறது

தமிழர்கள் எப்படி நோயில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என வினவலாம் சிறிய விளக்கம் அதாவது உண்மையான மொழி பற்றாளர்களும் கொள்கை பிடிப்பாளர்களும் வறுமையில் வாட விடுவது தமிழர்கள் வழக்கமாக இருக்கிறது இது இன்று நேற்றல்ல வள்ளுவர் காலம் தொடங்கி நம்மோடு வாழ்ந்து மறைந்த தேவநேய பாவாணர் வரை இதே கதிதான் அதனாலும் மேலும் விண்ணை முட்டும் மற்ற மருத்துவ முறை கட்டிடங்கள் உயர்ந்து இருக்கும் போது தமிழர்கள் நோயாளியாகத்தானே இருப்பார்கள்? இருக்கிறார்கள்.
தமிழ சித்தமருத்துவர்கள் வாடி கிடக்கும் போது நோயில் இருந்து விடுபடுவது சத்தியம் இல்லாத ஒன்று இந்த பார்வையை நாம் கொடுக்க வில்லை என்றால் நானும் பிழை செய்கிறேன் என்று தான் பொருள் எனவேதான் பதிவு செய்தேன்
இந்த சமயத்தில் என்னை ஊக்கு வித்து பின்னுட்டம் இட்டு இன்ட்லி மற்றும் தமிழ்மணம் போன்ற வற்றில் விருப்ப வாக்குகள் அளித்தும் ஊக்குவித்த அனைவரையும் வணங்கி மகிழுகிறேன்.

தமிழன்புடன்
போளூர்தயாநிதி.

கோழிக்கறி (chicken ) விசமே
இன்றைய விரைவு உலகம் எது நல்லது எது கேட்டது என தேடிக்கொண்டு இருப்பதில்லை கிடைத்ததை உண்டு நோயை பெறுகின்றனர். முன்பு கோழிகளின் தேவை நாட்டுப்புறவளர்ப்பு கோழிகள் ஈடு செய்தன இன்று மிகையான தேவையை ஒட்டி அதிக அளவில் வளர்ப்பு கோழிகளை மாமிசத்திற்காக பயன் படுத்தப்படுகிறது இந்த கோழிகள் விரைவாகவும் மிகையான எடையுடனும் இருப்பதற்கு இரசாயணம் கலந்த தீவிணங்கள் போடப்பட்டு வளர்க்கபடுகிறது . இந்த தீவினங்களில் உள்ள கொழுப்பு சத்தில் டயாக்சின் என்ற இரசாயணம் காணப்படுகிறதாம். இது மனிதர்களிடம் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்தது எனவே இப்படி பட்டதீவினங்களை உண்ணும் கோழி மற்றும் பன்றி போன்ற வற்றை உண்பது அபாயம் நிறைந்தது என செய்திகள் வெளியாகி உள்ளது .
நாள் 10 .01 .2011 பக்கம் 7 ல் தமிழ் முரசு வேலூர் பாதிப்பு .

தேனும் விசமா?

இயற்கையான தேனின் மருத்துவ குணத்தை சொன்னால் நாம் பலநாட்கள் இந்த இடுகையை தொடர வேண்டி இருக்கும் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு தேன் அதுகூட இன்று நஞ்சாக மாறிவிட்டது . இயற்கையான தேனை நீண்ட நாள்கள் பாதுகாப்பாக இருக்க அதில் எரித்ரோமைசின் என்ற மருந்து பொருளை சேர்க்க படுகிறதாம் இது நச்சு தன்மை வய்ந்தத்து என கருத்தபடுகிறது என ஒரு இதழ் கூறுகிறது
அனிதா நாராயணன் என்ற அறிவியலாளர் முன் காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் நச்சு உள்ளது என கண்டு ஆய்வு செய்து பரபரப்பை உண்டாக்கிய அதே அறிவயலாளர் தான் இதையும் நமக்கு ஆய்வு செய்து பதிவு செய்து இருக்கிறார்.

ஐஸ் கிரீம் பதிப்புகள்

இந்த ஐஸ் கிரீம்களில் அடங்கியுள்ள சர்க்கரை பலநோய்களை வர வழைக்கும் காரணியாகிறது .மூகமையாக நீரிழிவு (சர்க்கரை நோய் ) உண்டாகிறது அதிக இரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது அதிகமான சர்க்கரையை உடைய ஐஸகிரீம் அருந்தும் போது அதை செறிக்க உடனடியாக அதிக அளவு
இன்சுலின் சுரக்கிறது அதனால் உடலில் திடீரென்று குளுக்கோசு அளவு குறைகிறது இதன் வெளிப்பாடாக தலைவலி தோன்றுகிறது
(நீங்கள் படிக்க வேண்டிய மருத்துவ நூல் ஆக்கம் டாக்டர் பூ .பழனியப்பன் பக்கம் 14 )
மிகையாக அதே நேரம் விரைவாக உண்பது இந்த மீதூண் காலத்தில் இந்த வகை ஐஸ்கிரீம் மிகையாக எடுத்து கொள்வது என எனமது உணவு பழக்கத்தை முறைபடுத்தி நோயில் இருந்து விடுபடுவோம் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம்
.
அன்புஉறவுகளே இராஜீவ் காந்தி மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டு சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் ஆகியோரின் மரணத்தை உறுதி செய்து செப்டம்பர் 9 என நாள் குறித்து உள்ளது .இதில் பல்வேறு அரசியல் உள்ளதாக கூறப்படுகிறது . உலக நாடுகள் எல்லாம் மரண தண்டனையை நீக்கி விட்ட போதிலும் இந்தியா விடப்பிடியாக மரண தண்டனையை கையாண்டு வருகிறது இது மனித குலத்திற்கே இழுக்கானது இதற்காக நமது எதிர்ப்பை மனிதாபிமானத்துடன் காட்டுவோம் .
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனை யை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ...அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்கு தண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.....
Send E-mail to Indian Government:
------------------------------
-------------

Her Excellency Smt. Pratibha Devisingh Patil
President of India
presidentofindia@rb.nic.in

Sri M.Hamid Ansari
Vice-President of India
vpindia@nic.in

His Excellency Mr. Manmohan Singh
Prime Minister of India
manmohansingh@sansad.nic.in

Mr. P.CHIDAMBARAM
Home Minister of India
hm@nic.in

Hon'ble Mr. Justice S.H. Kapadia
Supreme Court of India
supremecourt@nic.in

Smt.Sonia Gandhi
soniagandhi@sansad.nic.in
President, Indian National Congress

Shri L.K. Advani
Leader of Opposition in the Lok Sabha
advanilk@sansad.nic.in

Smt.Meira Kumar
speakerloksabha@sansad.nic.in
Hon’ble Lok Sabha Speaker

His Excellency Thiru Surjit Singh Barnala
Governor of Tamil Nadu
govsec@tn.nic.in

Dr. J. Jayalalitha
Chief Minister of the state of Tamil Nadu
cmcell@tn.gov.in

Hon. Justice Shri K.G. Balakrishnan
National Human Rights Commission of India
chairnhrc@nic.in

Send E-mail to Intl. Organisations against Death
-----------------------------------------------------------
Penalty:
---------

இந்தியஅரசே
மரண தண்டனை சட்டப்பிரிவை உடனே இரத்து செய்.
இப்பது உள்ள மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்று.


.

More than a Blog Aggregator

ஆகஸ்ட் 22, 2011

ஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்

ஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வியக்கத்தக்க கலைகளை நம்முன் கொடையாக வழங்கி சென்று உள்ளார்கள் அதை இன்று பல மேலை நாடுகள் ஆய்வுகள் என்ற பெயரில் தமதாக்கி கொண்டு வருகிறது தமிழர்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என்றுதான் புரிய வில்லை . சரி செய்திக்கு வருவோம்.இந்த எண்ணெய் கொப்பளித்தல் நமது முன்னோர் தொண்டைபகுதி( கண்ட ) தூய்மையாக்கல் என்ற பெயரில் வழங்கி வந்த ஒரு முறையாகும் .

எண்ணெய் கொப்பளித்தால்

இந்த எண்ணெய் கொப்பளித்தளுக்கும் நோய் நீங்குதளுக்கும் என்ன ஒற்றுமை என வினவாலாம் பல்வேறு வகையில் மனிதனின் நோய்களை நீக்கு கிறது என்பதை மேலை நாடுகள் தமது ஆய்வுகளின் வழி காட்டுகிறது இதை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்.

எண்ணெய் கொப்பளித்தால் செயல்முறை


தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும் .

இந்த வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம் இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் கொப்பளிப்ப்பதால் உண்டாகும் சிறப்புகள் .

இந்த காலங்களில் எந்த உணவு கட்டுபடோ வேறு ஏதும் செய்து கொள்ளத் தேவையில்லை முறையான உணவு திட்டத்தை பழகினால் ஏன் நோய் வரப்போகிறது என நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது இப்படி செய்வதால் எந்த பின் விளைவும் இல்லை என்பது இனிப்பான செய்தி சிலர் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை (இப்படி பட்டவர்கள் காலையில் கழிவறைக்கு செல்கையில் செய்யலாமே நான் மாலையில் தான் மலம் கழிக்கிறேன் என்றால் நாம் பொறுப்பல்ல )என்பார்கள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதாவது வேறு யாருக்காகவோ செய்வது போல இருக்கிறார்கள் அவர்கள் அல்ல நமதுஇலக்கு நோயின்றி இருக்க வேண்டும் என எண்ணுகிறவர்கள் நமது இலக்கு. இந்த எண்ணெய் கொப்பளிப்ப்பதால் பல்வேறு நோய்கள் நீங்குவத மருத்துவ வல்லுனர்கள் கூறு கின்றனர் .புற்று நோய் கூட கட்டு படுகிறது என்கிறார்கள்

.எண்ணெய் கொப்பளித்தல் (Oil pulling ) செய்வாதால்

நல்ல உறக்கம் உண்டாகிறது
பற்கள் வெண்மை நிறமடைகிறது.
வாய் புண் நீங்குகிறது.
வாயு தொந்தரவு நீங்குகிறது.
தசை நோய்கள் விலகுகிறது
மார்பு நோய் நீங்கு கிறது.
நெஞ்சக தடுமன் (சளி )நீங்குகிறது
இரைப்பிருமல் நீங்குகிறது .
முதுகு வலி குறைகிறது .
இதய நோய்கள் நீங்குகிறது .
பல் நோய்கள் விலகுகிறது
காதுநோய்கள் விலகுகிறது
கண் நோய்கள் விலகுகிறது
குடல் தொடர்பான நோய்கள் விலகுகிறது
நீண்டகால இரத்த நோய்கள் விலகுகிறது.
மூச்சு குழல் நோய்கள் விலகுகிறது
நரம்பு நோய்கள் விலகுகிறது
தோல் நோய்கள் விலகுகிறது
கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது
மூல நோய்கள் விலகுகிறது
காச நோய்கள் விலகுகிறது
சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது .
பக்கவாத நோய் விலகுகிறது.
வலிப்பு நோய்கள் விலகுகிறது
புற்று நோய் கட்டிகள் ,மாதவிடாய்
ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.
இப்படி பலவேறு நோய்கள் விலகு கிறது இது அறிவியல் அடிப்படையிலானது தான் எனவே முறைப்படி இதை செய்து நோய் வெல்வோம் .

இந்திய அரசே தமிழக மீனவர்களை துன்புறுத்தும் சிங்களவன் மீது நடவடிக்கை எடு இல்லையென்றால் தமிழ மீனவர்களுக்கு, ( சிங்களவனுக்கு கொடுத்த கருவிகளை )தமிழக மீனவர்களுக்கும் கொடு .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்


More than a Blog Aggregator

ஆகஸ்ட் 15, 2011

மார்பகம் பெரிதாக ( Breast Develop )கடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று

நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை 50 கிலோ என் மார்பகம் சிறியதாக இருக்கிறது மார்பக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் இதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா ?இப்படியாக வினா தொடுத்து இருந்தார் .

இது ஒரு கல்லுரி மாணவியின் வினா. இப்படியான வினாக்கள் படித்தவர்களிடம் இருந்து தயக்கமின்றி வருகிறது ஆனால் பெரும்பாலும் நோய்களைப்பற்றி மிகையாக சிந்தப்பதாக தெரியவில்லை நாம் குறையாக கூறவில்லை இருந்தாலும் மார்பகம் என்பது தாய்மையின் உயர்ந்த ஒரு உடல் உறுப்பு இதே மாதிரியான வினாக்கள் ஆண்களிடமும் இருந்து வருகிறது அதாவது என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது இதற்க்கு என்ன செய்யவ்ண்டும்? என்பதுமாதிரியான வினாக்கள்தான்

உடல் உறுப்புகள் ஆண்குறி சிறியதை பெரியதக்குகிறேன் பெண்களின் மார்பகத்தை பெரியதாக்கு கிறேன் என தமிழ இதழ் களில் மிகுதியான விளம்பரங்கள் வருகின்றன இதையும் .கண்டு பெரும்பான்மை மக்கள் தங்களின் அறியாமையால் தேடவைக்கிறது
பெரும்பான்மை படிக்காத வர்களிடம் இதுமாதிர்யான வினாக்கள் வருவதில்லை வாழ்வில் மகிழ்வுடன் பெரும்பாலும் இருக்கின்றனர் இவர்க்ளைடம் கடுமையான உழைப்பு இருப்பதால் இவர்களின் தேவை இருப்பதை கொண்டு சிறப்புடன் வழவைக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது .

மனித உடல் அமைப்பு நாம் உண்ணும் உணவு செய்கிற பயிற்சிகள் வாழ்கை நடைமுறை போன்றவற்றின் அடிப்படையிலும் மரபியல் கூறுகள் அடிப்படையிலும் பெரியதோ அல்லது சிறியதோ
தோற்றம் அளிக்கிறது . இந்த உறுப்புகளை பெரியாதாக்கும் எந்த மருந்துகளும் பெரும்பாலும் மாற்றத்தை உண்டாக்குவதில்லை ஆனால் சில முறையான பயிற்சிகளை பழக்குவத்தின் மூலம் நம் உடல் அமைப்பை மாற்றி கொள்ளலாம். அதற்க்கு அரிதின் முயன்று பயிற்ச்சி செய்ய வேண்டும் முறையான உணவு திட்டத்தை கைகொள்ள வேண்டும் .
பெண்களை பொறுத்தவரை அவர்களின் பூப்புக்கு பின்னர் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அடிப்படியிலேயே உடலுறுப்புகள் உருவாகிறது . ஈஸ்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருக்கையில் அவர்களின் உடலமைப்பு நல்ல கட்டுடலாக மாற்றி இந்த உலகிற்கு அறிவிக்கிறது

உடலுருப்புகளை பொறுத்தவரை முறையான உணவு திட்டத்தில் இருந்து தோற்றம் கொள்ளுகிறது . முன்பெல்லாம் பெண்களின் பூப்பு கலத்திக்கு முன்பாகவே பெண்களின் தாய்மைகருதி அவர்களை ஆயத்தபடுத்துவார்கள் . இந்த விரைவு உலகத்தில் எல்லாவற்றையும் மருந்தில் இருந்து தொடங்கு கிறார்கள் . பழங்காலங்களில் பெண்களுக்கு அவர்களின் எதிர்கால பெண்மையை ஊக்கு விக்கும் விதமாக புரத உணவுகளையும் கொழுப்பு உணவுகளையும் முறையாக வழங்கி வந்தனர் அவர்கள் பத்து குழந்தைகள் பெற்றெடுத்தும் இளைமை குறையாமல் நீண்ட நாள் வாழ்ந்தனர் இன்று அவ்வாறு இல்லாமைக்கு முறையில்லாத உணவு பழக்கமே காரணம் எனலாம்.

தீர்வுகள் .

பெண்களின் ஏழு அகவையில் இருந்தே பெண்மையை போற்றும் உணவுமுறைகளை வழங்க கற்க வேண்டும் . தரமான தாவர , விலங்கு புரதங்களை உண்ண பழக வேண்டும் .உளுந்து ,பச்சைபயறு ,சோயா , போன்ற பயறுவகைகள் பெண்மையை வளர்க்க கூடியன .கீரைகள் மற்றும் சரிவிகித உணவுகளை எடுக்கும் போது இந்த சிக்கல் தோன்றுவதில்லை .முறையான கொழுப்பு உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் இல்லையெனில் மிகவும் குறித்த அகவையிலேயே பெண்குழந்தைகள் பூப்பு எய்தி விடுவார்கள் .ஆசனங்களில் சர்வாங்காசனம் பெண்களின் பெண்மையை வளர்க்க கூடியது .இவற்றை முறைப்படி பழகுக .நேரே நின்று கையை மேலே உயர்த்தி மேலும் கீழுமாக சீரான வேகத்தில் ஐந்து முதல் பத்து எண்ணிகையில் இரண்டு கைகளையும் தனித்தனியே சுற்றுக.இரண்டு உள்ளங்கைகளையும் தோள்மீது வைத்து கொண்டு முன்னும் பின்னும் இயக்குக . அதாவது வாயற்படி அருகில் நின்று வயற்படியின் மீது இரண்டு கைகளையும் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உடலை இயக்குக இந்த பயிற்சியினால் நல்ல பலனை எதிபார்க்கலாம். அதிமதுரம் என்ற மருந்தை வாங்கி வந்து தூளாக்கி துணியில் வடிகட்டி தாய்பாலில் குழைத்து மார்பகத்தில் பூசி சற்று பிடித்துவிட நல்ல பலனை எதிர்பார்கலாம் இந்த மருந்தை இரவில் பூசி காலையில் குளிப்பது சிறந்தது . பாலியல் தொடர்பான குறைபாடுகளை மட்டும் அல்லது மனிதனின் எல்லா நோய்களையும் நீக்க வல்லன நம் சீரிய சித்த மருத்துவம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .

நாம் முன்னமே குறிப்பிட்டபடி பார்த்தீனியம் என்ற நச்சு செடியைமுற்றாக நீக்கவேண்டும் என எழுதி இருந்தோம் .கடந்த வாரத்தில் இதை முற்றாக நீக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி களையும் பாராட்டுகளையும் கூறி வணங்கி மகிழுகிறோம் .

அதேவேளை ஈழம் தொடர்பான முதல்வரின் நடவடிக்கை களை கொச்சை படுத்திய இனவெறி சிங்களனை வன்மையாக கண்டிக்கிறோம் .
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 07, 2011

கணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )
இன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் வந்து விடுகிறதே என கவலைப்படுகிறவர்கள் மிகுதியாக இருக்கிறனர் அதில் கண்களுக்கு உண்டாகும் சிக்கலும் மிகையாக இருக்கிறது என்பது உண்மை .

உடலோம்பளும் கண் பாதுகாப்பும்

முன்பே கண் பற்றிய தனியான இடுகையில் பல செய்திகளை குறிப்பிட்டு இருந்தேன் . இருப்பினும் இதில் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறேன் . தேவையை ஒட்டியே இந்த செய்தி. மனித உடல் பெரும்பாலும் விரைவில் கெடுவதில்லை . இயன்றவரை தன்னை முழுமையாக அர்பணித்து கொள்ளவே விரும்புகிறது நமது உடலுறுப்புகள் . இருப்பினும் தொடர்ந்து நாம் அவற்றிற்கு முறையான பயிற்ச்சி வழங்காமையால் மனிதனுக்கு கேடுகள் உண்டாகிறது இந்த கேட்டில் இருந்து மனிதன் தப்பித்து கொள்ள விரும்பின் எல்லா பிணிகளில் இருந்தும் தன்னை பாது காத்துக் கொள்ளலாம். எனவேதான்
முறையான வழிமுறைக்கு வருவதை பற்றி சிந்திப்போம் .

இன்றைய முறையல்லாத உணவு பழக்கம் முறை இல்லாத வாழ்க்கைமுறை போன்றவற்றின் காரணமாக கண் தொடர்பான பிணி தோற்றம் கொள்ளுகிறது .தாய் கருவுற்றிருக்கும் போது புளி /புளிப்பு சேர்ந்த உணவுகள் மிகையாக எடுக்கும் போது குழந்தையின் . கண் பார்வையை அது பாதிப்பதாக சொல்லப்படுகிறது . இதுமாதிரி உணவுகளை நீக்கி விடலாம் அல்லவா?

பார்வை குறைபாடு நோயா

மனித உடல் நோய்க்கு காரணமாக வாழ்க்கைமுறை சூழலும் ஒரு காரணம் என குறிப்பிட்டு இருந்தோம் . இரவில் மிகையாக கண் விழித்தல் மயக்கப் பொருட்களான மது ,புகை மிகையாக எடுத்தல் உப்பு உணவில் மிகையாக எடுத்தல் எல்லா நேரங்களிளுக் மிகையாக கவலையுடன் இருத்தால் போன்ற காரணங்களும் நோய்க்கு காரணமாக இருக்கிறது.

இவை எல்லா வற்றையும் விட சத்து பற்றாக்குறை பற்றி நம் மக்கள் கவலை கொள்ளுவதே இல்லை . பெரும்பாலும் நோய்களுக்கு சத்து பற்றாக்குறையும் ஒரு மூகாமையான காரணமாக இருக்கிறது . எல்லா உடல் உறுப்புகளுக்கும் தனியான சத்து தேவையிருக்கிறது இந்த தேவையை அறிந்து இட்டு நிரப்பாமையினால் நோய் நம்மோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

கண் பாதுகாப்புகள்

எந்த ஒரு பொருளையும் மிகையாக பயன் படுத்தும் போது அது கேடு அடையும் தானே? கண்களை கடினமாக வேலை வாங்கினால் விரைந்து அது ஓய்வு எடுத்து கொள்ளுகிறது . கடினமாக வேலை வாங்கும் போது அதை முறையாக பழக்கினால் அதனால் வரும் கேடுகளை நீக்கி கொள்ள லாம்

கண்ணிற்கும் கணினிக்குமான இடைவெளியை முறைபடுத்துக .
கண்ணிற்கு தொடர்ந்து களைப்பு தரும் வேலையை குறைத்து கொள்க .
சிவப்பு வண்ணங்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்கவும்.
கண்களுக்கு நாளும் முறையான பயிற்ச்சி தருக அதாவது அதிகாலையில் வயிற்றை தூய்மை செய்து கொண்டபின் நேரே நின்று இடம் ,வலமாக முறையே கழுத்தை திருப்பும் ஆசன பயிற்ச்சி செய்க . பின்னர் நேரே நின்று மூஞ்சியை திருப்பாமலே கண்களை மட்டும் எல்லா பக்கங்களையும் பார்க்கும் படி சுழற்றுக . தலை அசைய கூடாது கண்களை மட்டுமே சுற்ற வேண்டும் .முறையே மூன்று ,மூன்று முறை மாற்றி மாற்றி செய்க .
உணவில் முருங்கை கீரை , சிறுகீரை, குறிப்பாக கண்களை பலப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரையை நாளும் உணவில் பயன்படுத்துக .கேரட் முறைப்படி பயன்படுத்துக.
தலைக்கு நாளும் திரிபலா என அழைக்கப்படும் நெல்லிக்காய் ,தான்றிக்காய் ,கடுக்காய் சேர்ந்த எண்ணெய் தலைக்கு தடவி குளிக்க செய்க.
பகல் உணவிற்கு பின் பத்து நிமிடம் கருப்பு துணி கட்டி ஓய்வு எடுக்கவும் தூங்க கூடாது தூங்கினால் தீங்கில்லை பகலுறக்கம் கூடாது என்பது சித்தமருத்துவ விதி .
இவற்றை முறைப்படி பழக கண் இரவிலும் உங்களுக்கு பணி செய்ய காத்திருக்கும் .
நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் More than a Blog Aggregator

ஆகஸ்ட் 01, 2011

மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் )
இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது .
இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. முறையில்லாத நடவடிக்கையும் கூட .பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள். இந்த முறையற்ற குமுகம் ஆணாதிக்க குமுகம் பெண்ணை பிள்ளை பேறும் பொறியாக (இயந்திரமாக )பார்க்கிறது . குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை.

கருப்பை சார்ந்த குறைபாடுகள் .

வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது . பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . இந்த பெண்மைக்
குறைபாடுகளை முறையாக ஆய்ந்த நாம் அறிவு சார்ந்த முன்னவர்களான சித்தர்கள் பருண்மையாக ஆய்வு செய்து மக்களுக்கு கொடையாக வழங்கி இருக்கிறார்கள் .
1 .பெண்களுக்கு கருக்குழி விளக்கமற்று பாசு படிந்து இருந்தாலும்.
2 .கருக்குழி வளி மிகுந்து இருந்தாலும் .
3 .கருக்குழாயில் சதை வளர்ந்து இருந்தாலும்.
4 .கருக்குழையில் பூச்சிகள் இருந்தாலும்.
5 .கருக்குழாயில் இரத்தம் கட்டி இருந்தாலும்.
6 .கருக்குழாயில் தசை திரண்டு மதத்திருந்தலும்
கருக்குழாய் உள்ளே விந்தணுக்கள் செல்லாது . என பருண்மையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள் . இவை களுக்கு முறையே தனியே ஒவ் ஒன்றக்கும். தனியான குறி குணங்களும் தனியான மருத்துவமும் கூறப்பட்டு உள்ளது .முறையான மருத்துவர் எந்த நோய் பற்றி இருக்கிறது என கண்டறிந்து நோயில் இருந்து விடுவிப்பார் .

மண்சோறு

இந்த சிக்கலுக்கு மண் சோறு எங்ஙனம் தீர்வாக இருக்க முடியும் ? இதுவும் அறிவியல் பார்வை கொண்டது தான் அதாவது முறையாக எரியோம்பல் (ஆசனப்பயிற்சி ) செய்ய கூறினால் எனக்கு வேலை இருக்கிறது செய்ய இயலாது என வாய் கூசாமல் கூறும் தாய் குளங்கள் இப்படி கண்மூடித்தனமான செய்கை களை கூறினால் ஏற்பார்கள் என்பதால் இப்படி செய்யப்பட்டதாகும்.
இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் இந்த ஆசனம் செய்வதால் பெண்களின் கருப்பை குற்றங்கள் பெரும்பான்மை தீரும் . எனவே இன்றைய இளம் பெண்கள் இந்த மகாமுத்தர ஆசனத்தை நாளும் பழகி வந்தால் கருப்பை குறைபாடுகள் தீரும் . அவற்றோடு ஜானு காசியாசனம் என்ற ஆசனங்களை முறைப்படி செய்து வரலாம் . இவற்றோடு கருப்பையை வெப்பம் அடைய செய்யும் காரம் ,புளி, தள்ளி எள் நெய் குளியல் செய்து கருப்பை பலமடையும் குமரி சேர்ந்த மருந்து களை எடுத்துவர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் குழந்தைபேறு எளிதில் கிட்டும் அதேவேளை காபின், கோக் போன்றவை சேர்ந்த மயக்கப் பொருட்களை நீக்க வேண்டியது தேவையாகும்.

நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் .

முன்னர் குறிப்பிட்ட மாதிரி நாம் நோயில்லாத குழந்தைபேறு பற்றி இந்த இடுகை செய்ய எண்ணினோம் . மண் சோறு பற்றிய செய்தி நாளிதழ் களில் இருந்தது நம் கண்ணில் பட்டுவிட இந்த இடுகை பதிவிட வேண்டிய தாயிற்று .


வினா தொடுத்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் .அடிப்படியில் நான்தான் விவரமாக எழுதி இருக்கவேண்டும் ஐயம் தெளிய வைப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும் என கருதுகிறவன் . இருந்தாலும் விரவு கருதி விவரமாக சொல்லவில்லை பிழைக்கு பொறுத்தருள்க .

சித்தமருத்துவம் அடிப்படையில் அறிவியல் கொண்டது என தொடர்ந்து பதிவு செய்துவருகிறேன் .அந்தவகையில் சித்தர்கள் மாந்தர்களின் உடற்கூரை நன்குஆய்வு செய்து மருந்துகளையும் மருத்துவ் முறைகளையும் கொடையாக வழங்கினர்கள். இந்த மகா முத்ரா ஆசன பயிற்சி வஜ்ராசன நிலையில் அமர்ந்து பின்னர் ஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்களே அதுமாதிரி செய்கிற ஆசன பயிற்சிதான் மகா முத்தரா என்ற ஆசனம் செய்கிற முறையாகும் . மண்சோறு சடங்கில் இதே நிலையில் பெண்கள் கீழே மண்தரையில் / உணவை வைத்து விட்டு கையில் எடுத்து உணவு உண்ணாமல் வஜ்ஜிரசன்னா நிலையில் அப்படியே குனிந்து வாயினால் உண்பதாகும் . இதுதான் குறிப்பிட இந்த மகா முத்ரா ஆசனத்தை முறைப்படி பழக வேண்டும் என்கிறோம் . பெண்களுக்கு பெரும்பாலும் கருப்பை முறுக்கி கொள்ளுதல் போன்ற கருப்பையின் உள்பகுதியில் நுட்பமாக உண்டாகும் குற்றங்களை இந்த ஆசனம் நீக்குகிறது என்பது உண்மை .More than a Blog Aggregator

ஜூலை 25, 2011

திருநங்கைகள் தோற்றம் ஒரு ஆய்வு
இப்போதெல்லாம் திருநங்கைகள் எல்லா இடங்களிலும் காண முடிகிறது . மனிதகுலத்தின் இந்த இலக்கண பிழைகளை நாமும் தெரிந்து கொள்வோமே என சிந்தித்தேன் . இந்த திருநங்கைகளின் வாழ்க்கை சற்று மாறுபட்டதாக இருக்கிறது . இவர்கள் உடலால் ஆணாக இருந்தாலும் உள்ளத்தால் பெண்ணாகவே இருக்கிறார்கள் . தங்களின் இயற்கைக்கு மீறிய இந்த நிலைபாட்டை இவர்கள் விரும்பி ஏற்கிறார்கள் . குடும்பம் இந்த உலகம் எவரை பற்றியும் எந்த கவலையும் கொள்ளது தமது வழித்தடத்தில் தானே பயணிக்கிறார்கள் .

புதிய பறவை புதிய வீடு

தங்களின் கூடுகளை பிரிந்த இந்த பறவைகள் வண்ணவண்ண கனவுகளுடன் புதிய வேடந்தாங்கலை உருவாக்கி கொள்ளுகிறது ..
இங்கு இவர்களில் சிலர் பாலியல் வெட்கைகொள்ளுவோர்களுக்கு . தங்களை பெண்ணாக மாற்றிக் கொண்டு விட எண்ணி உடலை அதற்க்கு தகவமைத்து கொள்ளுகிறனர் .அதாவது தங்களின் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அங்கே பெண்ணுருப்பினை போல செயற்கையாக உருவாக்கி கொள்ளுகிறார்கள் .

மருத்துவர் கை மாதா கை

தங்களின் ஆணுறுப்பை பெண்ணாக மாற்றிக்கொள்ள இவர்கள் பெரிதும் மருத்துவமனைகளை நாடி செல்லுவதில்லை . அதாவது முறையான அறுவை சிகிச்சை செய்துகொள்ளுவதில் இவர்களிடம் அதிக நாட்டமில்லை காரணம் மருத்துவர் களிடம் அது பெரிய மருத்துவ நடுவமாக இருந்தாலும் இவர்களுக்கு பிடிப்பதில்லை காரணம் முறையான மருத்துவமனை களுக்கு சென்று அறுவை செய்து கொண்டால் பின்னாளில் சிக்கல் உண்டாகிறதாம் செயற்கையான அந்த பெண்ணுறுப்பு வழி அடைத்து சிறுநீர் வெளியேறுவதில் சிக்கலை உண்டாக்கு கிறதாம். விரைந்து காயம் ஆறுவதில்லை என்கிறான் (ள்) சினேகா என்ற திருநங்கை. எனவே தாயம்மா எனப்படும் ஒரு முதிய திருநங்கை ஒரு நல்ல நாளில் கூரிய ஆயுதம் கொண்டு தன்னுடைய கைகளினாலே ஆணுறுப்பை நீக்கி விடுகிறாராம் . இந்த நேரத்தில் வலி மிகையாக தெரிவதில்லை என்கிறான்(ள் ) முத்தழகி என்ற திருநங்கை .
.
இந்த உறுப்பு மாற்றம் செய்து கொண்ட பிறகு நற்பது நாட்கள் கடுமையான உணவு கட்டுப்பாடுகள் கடைபிடிக்க படுகிறது .ஆண்களையும் பார்க்க கூடாதாம் .இதனால் நோயில் இருந்து காத்து கொள்வதுடன் உடல் பெண்களைப்போல மாறுகிறது மயிர் நீங்குகிறது என நம்புகின்றனர் . அதுமட்டும் அல்லது பிற மக்களைபோலவே இவர்களிடம் கட்டுபடுத்த முடியாத மூட பழக்கங்களும் குடி கொண்டிருப்பதை கானலாகிறது
அதுமட்டுமின்றி இவர்களின் பாலுறவு வேட்கை இவர்களை பெண்ணாக பாவித்து கொள்ளுவதால் ஆணின் தேவையை விரும்புவதாக கூறுகிறனர் .பாலுறவில் பெண்களைப்போலவே ஆர்கசம் எனப்படும் உச்சநிலை அடைவதாக கூறு கிறாள் (ன்)பவித்த்ரா .

சித்த மருத்துவ அறிவியல் பார்வையில் திருநங்கைகள் .

சித்த மருத்துவம் அறிவியலை உள்ளடக்கியது என்பதை நாமறிவோம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய திருமூலர்

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்தது முதலைந்து உயிரோடே ஏறி

என பதிவு செய்கிறார் . பாலுறவு கொள்ளும் காலத்தில் தாய் , தந்தை உளநிலை , உடல் நிலை போன்றவற்றையும் மிக நுணுக்கமாக பர்க்கவேண்டியத்தின் காரணத்தை பதிவு செய்கிறது . பாலுறவு காலமும் அதன் பின் தாயின் கருக்கலமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதின் தேவையை உணத்துகிறது . இப்படி முறையாக தாய்மைப் பேற்றைக் கடைபிடித்தால் வன்முறையற்ற சிறந்த அறிவு நிறைந்த தமிழ் குமுகத்தை தோற்றங்கொள்ள செய்யலாம் .

திருநங்கைகள் தோற்றம் .....

ஆண்மிகில் ஆணாம் பெண்மிகில் பெண்ணாம்
பூணும் இரண்டோன்றிப் பொருந்தில் அலியாகும்

என்கிறார் திருமூலர் அதாவது கணவனும் மனைவியும் குழந்தை வேண்டி கூடுகையில் கணவனின் மூச்சு காற்றுவலப்பக்கம் நடந்தால் ஆண்குழந்தையும் இடப்பக்கம் நடந்தால் பெண்குழந்தையும் இரண்டு பக்கமும் உயிர்வளி நடந்தால் அலியாகவும் பிறக்கும் என்கிறார் . சித்தமருத்துவம் அறிவியல் வழிபட்டது என்கிறோம் எந்த மூகந்திரமும் இல்லாமல் முழுமையாக இவற்றை வாசிக்காமல்அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் வாட்டுவதம் புரியும் சிலர் இது அறிவியல் இல்லாததது என்கிறனர் . . இந்த கூற்றை முழுமையாக ஆய்வு செய்தால் எல்லாம் புரியும் தானே செய்யுங்கள் என்கிறோம் அல்லது செய்கிறவனை விடுங்கள் செய்து கட்டுகிறோம் இங்கே தானும் படுப்பதில்லை தள்ளியும் படுப்பதில்லை .
அன்புள்ளம் கொண்டோரே சித்தமஆத்துவ அறிவியல் இந்த உலகபந்தே பின்பற்றவேண்டிய சிறந்த அறிவியல் என்கிறேன் . சித்தர்களின் கூற்று என்றும் பொய்த்ததில்லை பொய்க்காது எனவே சித்தர்களின் மருத்துவ அறிவியல் பார்வை இன்றைய நிலையில் நுணுகி நுணுகி ஆய்ந்து மக்களுக்கு கொடுக்கவேண்டிய சிறந்த மருத்துவம் பின்பற்றுவோம் . காப்போம் .
ஆக சித்த மருத்துவ அறிவியலின் படி முறையாக குழந்தை பேற்றிற்கு முயன்றால் சிறந்த எதிர்காலத்தை நோயற்ற ஒரு குமுகத்தை உண்டாக்க முடியும் என்பது நமது வாதமாகும்

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்

அறிவான குழந்தை அறுவை சிகிச்சை இல்லாத குழந்தை சாத்தியமா?.More than a Blog Aggregator

ஜூலை 18, 2011

உங்கள் உடலை அறிய.......உங்களுக்கு வரும் நோய்களை அறிய ...தேர்ந்த சித்த மருத்துவர் நோய்கண்டவர்களின் நாடியை முறைப்படி கண்டறிந்து என்ன நோய் வந்திருக்கிறது என சொல்லிவிடுவார்கள் அவர்கள் நோயாளிகளிடம் என்ன நோய் என கேட்டு கொண்டு இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு சித்த மருத்துவத்தின் நாடியரிதல் துல்லியமாக கணக்கிட பட்டு உள்ளது சித்தமருத்துவத்தின் என்வகைதேர்வு மனிதனின் நோய்களை அறிந்து முறைப்படி பட்டியலிடுகிறது .

மனித உடல்வகை

மனிதர்களின் உடல்வகை சித்தமருத்துவம் துல்லியமாக ஒன்பது (9 ) என கணக்கிட்டு உள்ளது .அவை வளி ,அழல் , ஐ , எனப்படும் இவற்றோடு தொந்தம் எனவும் உண்டு அதாவது வதமும் பித்தமும் கலங்கி நடந்தால் அதாவது வாதத்தின் பங்கும் பித்தத்தின் பங்கும் ஒன்றி இருப்பின் இது வாத பித்த தொந்தம் எனப்படும்

வாத உடல்வகை .

வாத உடல்வகை குளிர்ந்தும் மூக்கு ,விழி,பல், நாக்கு, ஈற்றுணவு (மலம் ) எல்லாமே கருத்து காணப்படும் .கண்ணில் நீர்வடியும் .நாக்கு கருப்பாக வறண்டு இருக்கும் . சிறுநீர் பொருமி கருமையாக இருக்கும் . ஈற்றுணவு வெளியேறுவதில் சிக்கல் காணப்படும்.
இவர்கள் தீனி மேல் மிகையான நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . தவறான செயல்கள் நடத்தைகள் இருக்கலாம் .வளமான உடல் மற்றும் வலிமை மிகுந்த உடலை பெற்று இருப்பார்கள் . இவர்கள் காற்று பிடிப்பு நோய் களால் அவதிப்படுவர்கள்.


பித்த உடல்வகை
இவர்கள் உடல் நெருப்பாக கொதிக்கும் . மூஞ்சி ,நாக்கு ,பல், ஈற்றுணவு , எல்லாமே மஞ்சளாக இருக்கும் . வியர்வை மஞ்சளாக இருக்கும் .அதோடு இவர்களின் வியர்வை வாடை அடிக்கும் என்னதான் குளித்தாலும் இந்த சிக்கல் தீராது . இவை நீங்க கடுமையான உணவு, உள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும் . இவர்கள் அறிவில் சிறந்து விளங்குவார்கள் . ஒருதடவை படித்தாலே இவர்களின் நினைவாற்றல் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். இவர்களிடம் நேர்மை இருக்கும் இளமையில் /இளைய அகவையில் மயிர் நரைக்க தொடங்கும் . எப்போதும் இவர்கள் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள் . இவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் , உளம் தொடர்பான நோய்கள், வரலாம்.

கப உடல்வகை

இவர்கள் உடல் மிகையாக வியர்க்கும் மூஞ்சி ,பல்,நாக்கு, சிறுநீர், ஈற்றுணவு,(மலம் )எல்லாமே வெண்மையாக இருக்கும்.கண்ணில் பீளை கட்டும்.இவர்களின் உடல் செழுமையாக அழகாக இருக்கும். எதையும் நிதானமாக செய்வார்கள். பாலுறவில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . இவர்களின் அகவை நீண்டதாக இருக்கும் . இவர்களுக்கு தடுமன் ,( சளி )மூச்சிறைப்பு கபம் திட்ர்பன பிணிகள் தோன்றும் என சித்தமருத்துவம் பகுக்கிறது .
இது தொடர்பான விரிவான தகவல் பின்னர் விரிவாக எழுதப்படும்

சித்தமருத்துவம் காப்போம் நோய்வெல்வோம்More than a Blog Aggregator

ஜூலை 11, 2011

உள ( மன ) நோய்க்கு ஒரு மருந்து .
எதிலும் அவசரம் பரபரப்பு போன்றவை நிறைந்த இன்றைய நாளில் உள நோய் என்பது எளிமையாகி விட்டது .இந்த நோய் ஆளாளுக்கு வேறுபடுகிறது . இந்த நோயே இன்றைய எல்லா நோய்களுக்கும் காரணமாகிறது .

உளம் (மனம்) என்ற உறுப்பு

மனித உடலில் மனம் என்ற தனியான உறுப்பு ஒன்றுமில்லை . இந்த உளத்தை (மனம் ) மூளை மற்றும் நரம்பு மண்டலம் என நாம் கூறலாம். இதுதான் உளம் எனதமிழிலும் மனம் என வடமொழியிலும் வழங்கப்படுகிறது .


உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர்.

சினம் இறக்க கற்றலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் என் பராபரமே என்கிறார் தாயுமானவர் . அதனால்தான் அவர் தாயும் ஆனார்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்கிறார் திருமூலர் .

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் என்கிறார் வள்ளுவப் பேராசான் .

இவைகள் எல்லாமே உள்ளத்தை அடிப்படையாக கொண்டவைகளே .
வள்ளுவர் கூறும்போது ஒருவன் எந்த பொருளில் இருந்து பற்று அற்று விலகி நிற்கிறானோ அந்த பொருளினாலே துன்பம் இல்லை என்கிறார் . ஆக இன்றைய உள நோய்களுக்கு வீணான தேவையில்லாத ஏக்கங்களும் கனவுகளும் மூகமையான காரணமாகிறது .
மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக் கேடும்நோய் என பதிவு செய்கிறார்
விருப்பு வெறுப்பு அறியாமை ஆகிய இந்த குற்றங்கள் இல்லாமல் விட்டொழித்து வாழ்ந்தால் நமக்கு வருவதுற்குரிய துன்பங்கள் இல்லை என்கிறார் வள்ளுவப் பேராசான் .


உள (மன ) நோய் என்பது .

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்கிறார் நம் பாட்டி ஔவை . தனி மனிதனின் மன நிலை அரக்கனின் தொழிற்சாலை என்கிறான் ஒருவன் . இந்த மன பிழற்ச்சி நோய்க்கு அடிப்படை காரணமே ஏதாவது ஒன்றின் மேல் எண்ணத்தை ஊன்றி தனக்கென ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு அதை நடைமுறை படுத்தும்போது அதில் தோல்வி அடைந்தால் அதை மன நோயாக பதிவு செய்கிறோம்.
நல்ல கணவன் இல்லை,நல்லமனைவி இல்லை ,தாய்தந்தை இல்லை ,என உறவுகளுக்காக ஏங்குவது ஒருவித மனநோய் இல்லாத ஒன்றை தானே கற்பிதம் செய்துகொண்டு நோயாளியாவது ஒருவகை
இந்த உலகில் என்னைபோல சிறந்த அறிவாளி இல்லை என சிலர் கற்பிதம் செய்து கொள்ளுகின்றனர் தான் சொல்லுவதை யாரும் கேட்பதில்லை என்பார்கள் கேட்கிறமாதிரி சொன்னீர்களா என கேட்டால் விழிப்பார்கள் . ஆக நோயும் நோய்க்கு மருந்தும் நீயே என வள்ளுவர் காமத்து பாலில் ஒரு இடத்தில் பதிவு செய்து இருப்பார் அக அதுமாதிரி இவர்கள் தன்னுடைய நோய்க்கு தானே காரணமகிறனர் .

அறிஞ்சர் பெருமக்கள்

எம் இனமான வாழும் ஒரே தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுவார்கள் பாதையை தேடாதே உருவாக்கிகொள் . என்பார் அதுபோல நாம் பாதையை நாமே உருவாக்கி கொண்டால் சிக்கல் தீரும்தனே .

காரல் மார்கஸ் அவர்களை உங்களுக்கு பிடித்தனமது எது என கேட்டதற்கு அவர் உடனே சொன்னது போராட்டம்என எதனைபோருக்கு இந்த போராட்டம் பிடிக்கும் ஆக மனிதன் வாழ்வை எங்கோ தேடிக்கொண்டு இருக்கிறான் . ஆனால் வாழ்வு அவனுள்ளே இருக்கிறது .

மந்திரமல்ல வாழ்வு

மந்திரத்தால் மாங்காய் விழவேண்டும் அதுவும் தான் மடியில் விழவேண்டும் என நினைகிறார்கள் இது அறியமையான்றி வேறல்ல . நமது இலக்கு எதுவுமே முயன்று தேடாமல் கிடைத்துவிடுவதில்லை தேடவேண்டும் . தேடும்போது தான் கிடைக்கும் தேடாமல் எதுவும் கிடைபதில்லை . தேடலுக்கான முறையான காரணமும் இருக்கவேண்டும் .

மனிதன் களிமண் அல்ல

சிலரின் குண நலனும் ஒரு சிலரை பாதித்து மன நோயாளி யாகிவிடுகிறனர். மனிதனுக்கு மனிதன் தனியான குண நலன்கள் இருக்கிறது எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க இயலாது . இந்த வேறுபாட்டை நாம் உள்வாங்கி கொண்டால்தான் நாம் நிம்மதியாக வாழ இயலும் .

வீண் கவலைகள்

சிலர் தானே ஒரு கருத்தை உருவாக்கி கொண்டு எந்த முன்னேர்பாட்டையும் செய்து கொள்ளாமல் எனக்கு வெற்றி கிடைக்க வில்லை என கவலை கொள்ளுகிறனர் . உங்களுக்கான உண்மையான தேடலை முறையான வழிகாட்டலை உரியவரிடம் கேட்டு வெற்றிக்கான பாதையை உருவாக்கி கொள்ளவேண்டும்

எல்லா கவலைகளும் தீர்க்க கூடியதே

மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும் என பதிவு செய்கிறார் திருமூலர் அதாவது உள நோய்க்கு மருந்து உண்டு என்பது திருமூலரின் வாதம் .மன நோய்க்கான காரணங்களை பட்டியலிடுங்கள் பார்வையில் படும்போது எல்லாம் கூர்தீட்டுங்கள் பின்னர் அதன்மீது நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள் என்கிறார் ஒரு மன நல மருத்துவர் நாம் நினைத்து கொண்டிருப்பது போல எல்லா சிக்கல் களும் தீர்க்க முடியாதவைகள் அல்ல தீர்க்க கூடியதே .

சித்தர்கள் உலகில் அறிவில் சிறந்தவர்கள் மனிதனின் எல்லா நோய்களுக்கும் அதன் அறிவியல் அடிப்படையில் இருந்தே மருந்தை கண்டார்கள் . மன நோய்க்கு அடிப்படை காரணம் பித்தம் மிகையாதல் இந்த பித்தத்தின் சீற்றத்தினால்தான் . நோய் தோற்றம் கொள்ளுகிறது என அறிவிக்கிறனர் இந்த நோய்க்கு மருந்து களையும் சொல்லுகின்றனர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் தூய்மை அடையவும் துரிதமாக பணியாற்றவும் இந்த மருந்துகள் உதவிடகூடும்.
அதிமதுரம் , கோட்டம், மஞ்சிட்டி ஏலக்காய், நெல்லிமுள்ளி ,சிறுநாகப்பூ , சடமாஞ்சில்,சந்தனம்,கிராம்பு, தாளிசபத்திரி,சீரகம் . இவைகளை முறைப்படி உண்டு வர நல்ல உளவற்றால் கிடைத்து வாழ்க்கை இனிக்கும் .

இது குறித்து பின்னர் விரிவாக ஆய்வு செய்வோம் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...