உளவியல் போராட்டங்களும் நோய்களும்
அன்பான உறவுகளே வணக்கம் .
இந்த இடுகையை நான் பதிவு செய்து கொண்டு இருக்கும் பொது பலவிதமான உளவியல் போராட்டங்களோடு பதிவு செய்கிறேன் .
காரணம் இந்த இடுகை உயிர்ப்போடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் . ஓமியோபதி தத்துவத்தை கண்ட சாமுவேல் ஆனிமன் தனது வாழ நாளில் பல மருந்துகளை தானே உண்டு மெய்பித்தார் இது சித்தர்களின் வழிவந்த அறிவு மரபு என்பது உமக்கு தெரியும் .
இதற்கு முன்னதாக பாலுறவு படங்களை பார்க்கலாமா ?
என்ற பதிவை எழுதுவதற்கு பல பாலுறவு பட காட்சிகளை நுணுகி நுணுகிபர்த்துவிட்டு அதும் கூட உடல் முழுவதும் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு உடலை குளிரவைத்துக் கொண்டு பார்த்து உடலில் என்ன மற்றம் நிகழுகிறது என பதிவு செய்தேன். அதேபோல கடந்த இடுகை பல மாதங்களுக்கு முன்பே எழுத எண்ணி தொகுக்கப் பட்டதாகும் இதற்க்கு 50க்கும் மேற்பட்ட பாலுறவு தொழிலாளி களை நேரில் கண்டு கேட்டு பதிவு செய்யப் பட்டதாகும் .
அதே போல இந்த இடுகையும் உயிர்ப்போடு இருக்க எண்ணி பல போரட்டங்களை வர வழைத்துக் கொண்டேன். அந்த உளவியல் கூறு இப்போது கூட இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றாலும் இப்போது பதிவு செய்வது சிறந்ததாக இருக்கும் என எண்ணி பதிவு செய்கிறேன் இதை நான் விரும்பிய அதே கண்ணோட்டத்தோடு எத்தனைபேர் உள்வாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை .
உலகில் வாழும் உயிரிகளில் மனித உயிரி பலவிதமான உளவியல் போராட்டங்களோடு நோய்களை உள்வாங்கிக் கொள்ளுகிறது . இது உண்மையில் எவரும் தவிர்க்க இயலாத கூறு என்பது எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் இதிலிருந்து விடுபடுவதும் இதை எளிமையாக எடுத்துக் கொள்ளுவதும் முடியும் இது உண்மையும் எல்லோராலும் இயலுகிற செயலே
உளவியல் போராட்டங்களில் உடலில் பலவிதமான இரசாயன மாற்றங்கள் நிகழுகிறது இந்த இரசாயன மாற்றங்கள் பலவிதமான நோய்களாக மாற்றங்கொள்ளுகிறது. இது தற்காலிக நோயாகவும் நீண்ட தீரா நோயாகவும் பரிமாணம் அடைகிறது இந்த உணச்சிப் போராட்டத்தில் மனிதன் கற்றுக் கொள்ளுவது மிகவும் சொற்பமே இதை முறையாக கற்றுக் கொண்டு இவற்றில் இருந்து விலகி நோயில் இருந்து.விடுபடுகிறவர்கள் மிகவும் குறைவு .
உளவியல் போராட்டங்களினால் தாறுமாறாக உண்டாகும் இரசாயன மாற்றம் தருமாறன இரசயான உற்பத்தி உடலில் பலமிழந்த எல்லாப் பகுதிகளையும் சேதப்படுத்துகிறது .இந்த சூழலில் தூக்கம் இருக்காது பசி இருக்காது அமைதியாக இருக்க இயலாது மன நிலை பாதிக்கப் பட்ட நிலையில் இருப்பார் .இந்த சூழலில் அதிகமான பய உணர்ச்சி இருக்கும் மனிதனுக்கு அதிகமான பய உணர்ச்சி இருக்கும் போது உடலில் தண்ணீர் சக்தி காணமல் போய்விடும் உடலில் தண்ணீர் சக்தி காணமல் போவதால் சிறுநீரகம் கடுமையாக பாதிப்பு அடையும் அளவுகடந்த சினம் இதயத்தையும் கண்களையும் பாதிக்கச் செய்யும்
அளவு கடந்த கவலை கொள்ளும்போது பசி உணர்வு குறைந்து போகும்.தூக்கம் குறையும் போது உடல் சூடேறிப் போகும் உடல் சூடு அடைவதால் ரத்தம் சூடேறும் இந்த நிலையில் தென்றல் சில்லென வீசினாலும் அங்கே நெருப்பைக் கொட்டுவதுபோல உடலின் நெருப்பு தீண்டும் ...மனிதன் தூங்குவதால் இரத்தத்தில் ஒரு வெற்றிடம் உண்டாகும் இது தடையில்லாமல் உடல் முழுவதும் இரத்தம் பாய்வதற்கு பயன் படுகிறது தூக்கம் இழப்பதால் இந்த வெற்றிடம் உண்டாவதில்லைஆதலால் மனிதன் மனநலன் பதிப்பு அடைகிறான்
இந்த கடுமையான உளவியல் போராட்டத்தில் கடுமையான வீரியம் மிக்க மருந்துகள் எடுத்தாலும் அது எந்த பலனையும் தராது அனால் ஆங்கில மருந்துகள் குறிப்பிட்ட உடலை கட்டிப் போட்டு பயமுறுத்தி வேலை வாங்குவது போல வாங்கி குறிப்பிட்ட பகுதியை பாதிப்படையச் செய்து செயலிழக்கச் செய்யும் ஆக உளவியல் போராட்டங்களை தவிர்த்து நோயின்றி வாழ்வதற்க்கான வழிகளை உண்டாக்கிக் கொள்ள கோருகிறேன் இந்த பதிவை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட போராட்டம் உண்மையில் அதிகம் என்றலும் நான் பட்ட எல்லாஉணர்வுகளையும் நான் பதிவு செய்துவிடவில்லை ...
சயனைடு என்ற விசத்தை அதன் சுவையை உலகிற்கு அறியச் செய்வதற்காக ஒரு அறிஞ்சர் ஒரு கையில் நச்சுப் பொருளையும் மற்ற கையில் வெள்ளைத் தாளையும் வைத்துக் எழுதத் தொடங்க நச்சைவாயில் வைத்தவர் s என்ற ஆங்கில எழுத்தை மட்டுமே எழுத முடிந்ததது அதற்க்குள்ளக அவரை மரணம் தழுவிக் கொண்டது அறிவியலாளர்கள் உயிரைவிட உலகிற்கு உண்மையை அறிவிக்க பல சாதனைகளை செய்து இருக்கின்றனர்
முதலில் நான் சொல்லுவது....
உணர்ச்சி கரமான போராட்டத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள் இந்த சூழலில் 1000 மடங்கு பிழை உண்டாகும் .
பதற்றமான சூழலில் உங்களின் எண்ணங்களை திசை திருப்பி விடுங்கள்.
நிகழ்ந்துவிட்ட பதற்றத்தை தனித்துக் கொள்ள முயலுங்கள் .
சிக்கலை பெரிது படுத்தும் நபர்களை/ சூழலை தவிர்த்து விடுங்கள் .
எந்த சிக்கலுக்கும் எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவை கைக் கொள்ளாதீர்கள்.
இந்த சூழலில் எந்த முக்கியமான முடிவையும் எடுக்காதீர்கள் ..
உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்
நீங்கள் எத்த்தனை பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் உங்களை உங்களின் உணர்ச்சி கவிழ்த்துவிடும்.
நீங்கள் செய்யும் செயல் நியாயமானது என கற்பிதம் கொள்ளாதீர்கள்.
இந்த பதற்றத்தில் கொடிய குற்றவாளியாக இருந்தால் கூட அவர்களின் தரப்பு நியாயத்தை பதிவு செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கொடுங்கள் .
நான் செய்தது மிகவும் குறைவு ...குடும்பத்தில் சிக்கலைத் தீர்க்க குழப்பத்தையும் உண்டாக்கலாம் எல்லோரும் கூட்டுக் திரும்பினால் குழப்பமும் தீரலாம் ....குழப்பங்கள் தீரவேண்டாம் என எண்ணினால் விடையும் தரலாம் உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்
Click here to Reply or Forward
|
உங்களின் ஆய்வு திகைக்க வைக்கிறது...!
பதிலளிநீக்குஉணர்ச்சிகரமான கருத்துக்கள்... நன்றி... தொடரவும் வாழ்த்துக்கள்...