நவம்பர் 28, 2011

சித்த மருத்துவ கோட்பாடுகள் வரிசை 3




தூய தமிழ அறிவர்களின் (சித்தர்கள் )கோட்பாடுகளை எழுத நினைத்தால் கோடிகணக்கான பக்கங் களில் எழுதிக் கொண்டே போகலாம் அனால் தமிழர்கள்தான் வழமைபோல படிக்கவும் கடைபிடிக்கவும் செய்ய மாட்டார்கள் . அந்த அளவிற்கு மெய்மங்களையும் மருத்துவக் கோட்பாடுகளையும் இந்த பேரண்டத்திற்கே கொடையாக வழங்கியுள்ளனர் நமது அறிவர்கள் . இதற்காகவே உலகத் தமிழர் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம் .

நோய்களுக்கு காரணம் கிருமிகளின் தொற்று என இன்றைய மேலைநாட்டு ஆங்கில மருத்துவம் பசப்புகிறது .கைக்குழந்தையான இந்த மருத்துவம் கீழை நாடு மக்களை எலிகளாகவும், முயல் களாகவும் பாவிக்கிறது தன்னுடைய உயரிய கலைகளைகளை முறையாக காக்காத / பின்பற்றாத தமிழன் தன்னையும் ஆய்வுகூடத்தில் உட்படுத்த துடிக்கிறான் . ஒருபக்கம் காட்டிக் கொடுக்கும் கீழை எண்ணமுடையோர் கூலிக்காக பாவம் இதையும் கட்டிக் கொடுக்கிறனர் . இதை கண்டு விழி பிதுங்கி நிற்க்கவேண்டியவர்கள் ஆகிறோம் .

மேனாட்டார் கிருமிகளை நோய்க்கு காரணமென்கிறனர்.ஆனால் தமிழ அறிவர்கள் வளி , அழல், ஐ என்ற உயிர்தாத்துக் களின் பணியே மனிதத்தை ஆக்குகிற அல்லது அழிக்கிற வேலையை செவ்வனே செய்கிறது என முன் பதிவில் எழுதி இருந்தேன் . அதற்கும் முன்பாக சித்த மருத்துவ கண்ணோட்டத்தில் இருந்துதான் மனித ஆய்வுகளை தொடங்க வேண்டும் என பதிவு செய்து இருந்தேன் .காரணம் வளி , அழல் , ஐ ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களினால்தான் நோய் தோற்றங் கொள்ளுகிறது என சித்தர்கள் பருண்மையாக பதிவு செய்கின்றனர் .

இப்போது கொடிய நோயாக கருதப் படுகிற புற்று நோய் (இது பற்றி பின்னர் விரிவாக எழுதப்படும் ) வளி , அழல் ஆகியவை பழுதடைந்த நிலையில் உள் மாறுபட்டால் தோற்றங் கொள்ளுகிறது. ஆக்கம் தரும் ( anablic force ) வளி பழுதடைந்து தன்னளவில் செயல்படும் வேகம் (Activity ) உடல் முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட உடற்கட்டிலோ Tissue பரவுவதால் அது செயல்படும் தாத்துக்களும் உறுப்புகளும் பாதிக்கப் படுகின்றன . வளியின் வளர்ச்சி இப்பகுதியில் மிகுந்து இயங்க்குவதால் பாதிப்படைந்த உடற்கட்டுகள் கட்டுப் பாடு இல்லமால் வளருகிறது .

இப்படி கட்டுப் பாடட்று வளரும் உடற்கூடுகளின் மீது ஐயின் தாக்கமான அழிக்கும் ஆற்றலை இயங்கி நல்ல கட்டுகளை அழித்தும் பதிக்கப் பட்ட கட்டுகள் வளர்வதற்கும் துணை செய்கிறது . இவற்றால் நன்னிலையில் உள்ள தாதுக்கள் அழிக்கப் படுகிறன . இங்ஙனம் வளியின் கூறும் ஐ யின் கூறும் புற்று நோயின் வளர்ச்சிக்கு விடுதளையளிக்கிறது . மேனாட்டு மருத்துவம் குறிப்பிடும் புற்று நோயின் பின் வளர்ச்சிக்கும் anaplasiya விடுதலைக்கும் Autonomy of the tumour பிறழ் நிலைப் பட்ட வளியும் ஐ யும் காரணங் களாகிறது.

இந்நிலையி தேர்ந்த தமிழ மருத்துவர் வளி , அழல் , ஐ ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களை துல்லியமாக கணித்து வள்ளுவரின் குறள் நெறி வழிகாட்டலின் படி

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று .

என்ற நாடிகளைமனிதனின் உயிர்த்தாதுக் கலையும் ஏழு உடல் தத்துக் களையும் இனம் கண்டு மாந்தனுக்கு வரும் நோய்களை விடுவித்து நலமடைய வைக்கிறார் .

நோய் வெல்வோம் சித்த மருத்துவங் காப்போம்More than a Blog Aggregator

3 கருத்துகள்:

  1. புதிய விடயங்களை தூய தமிழில் அறிந்து கொள்ள முடிந்தது தங்களின் அழகிய பதிவில் ..
    தொடரட்டும் உங்களின் மக்கள் பணி... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஐயா உங்களின் பதிவுகளை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.மேலும் தொடற வாழ்த்துக்கள்.
    உங்களிடம் பேச ஆவலாக உள்ளேன் உங்களின் தொடர்பு என் இந்த முகவரிக்கு அனுப்பவும்.
    camuthu.06@gmail.com

    பதிலளிநீக்கு
  3. எதுவும் அளவோடு இருந்தால் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவு என்கிறீர்கள் !

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...