பிப்ரவரி 06, 2012

வாழை இலைகுளியல் (Sun Bath through the banana leaves )

நோய் நீக்கும் மருத்துவக்  குளியல் வரிசை.௩


                  மண் பட்டிக் குளியல்  (  mud  pack )
  இந்த குளியலை மண் முடிச்சி  என கூறுவார்கள் பொதுவாக  மனிதனுக்கு  வரும்  தலைவலி , மார்புவலி , இடுப்புவலி, காய்ச்சல் , வயிற்றுவலிபோன்ற  நிலைகளில் இது பயன்படுத்தப் படுகிறது.  தூய்மையான மண்ணை குழைத்து நூல்  துணி எடுத்து நீலவட்டத்தில் கிழித்து மண்ணை அதில் குழைத்து  வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்கு கிழே அடி வயிற்றில் மண் பட்டியை வைத்து கட்டி  இருபது அல்லது முப்பது நிமிடங்கள்  வைத்து இருந்து  நீக்கிவிடலாம்..
      இந்த மண்ணின் குளிர் தன்மையினால்  அடிவயிற்றில் உள்ள இரத்த  நாளங்கள் சுருக்கமடைந்து உடலின் கழிவுகள்  எல்லாம் வெளியேறி  நச்சுநீக்கம்  உண்டாகி குடலையும் உடலையும் தூய்மையாக்கு கிறது . இந்த சூழ்நிலையில் நோய் நீங்கும் தானே ?
     இதேமாதிரி  பலநிலைகளில்  மண் குளியல் செய்யலாம்  மனிதனுக்கு  எந்த  இடத்திலகிலும்  நோய்  வீக்கம்  இருந்தால்  இந்த மாதிரி வலியும் வீக்கமும்  தீரும்.
வாழை இளைக்குளியல் (Sun Bath through the banana  leaves  )

        இந்த குளியல் வாழை  இலை முழுமையாக  எடுத்துக் கொண்டு  பகல் நேரத்தில்  ஒரு மணிக்குள்ளாக உடல் முழுவது  சுற்றிக்கொண்டு  கட்டிவிடவேண்டும்  இதற்க்கு மற்றவர்களின் துணை இல்லாமல் செய்யக் கூடாது  இந்த குளியலின் பொது  சிகிச்சை பெறுகிரவரிடம் பேச்சு  கொடுத்துக் கொண்டே  இருக்க வேண்டும் .  இப்படி . உடல்முழுமையும்  இலையால் சுற்றி  மூடி  தண்ணீர்  சிலகுவளை அருந்திவிட்டு  உடல் பகுதி வெளியில் தெரியாமல்  அரை மணிநேரம் வரை வெய்யலில்  வைத்து இருந்து  கட்டை அவிழ்த்து  விட வேண்டும்.  இதனால்  உடலில் உள்ள அழுக்குகள்  நீங்கி  உடல்  தூமையடைகிறது .

     இதய  நோய் உள்ளவர்களும் , இதய பலவீனம் உள்ளவர்களும்  இந்த முறையினை பயன் படுத்தலாம்  இதனால்  குறிப்பிட்ட பகுதி  பலமடைகிறது.சிறுநீரகங்களுக்கு  வேலைப்பளு குறைந்து  அதன்  பணி கூடுதல் ஆகிறது. இப்படி  முறையான  குளியலை செய்து  பயன் பெறுவோம் .

சித்த மருத்துவம்  காப்போம் நோய்  வெல்வோம்.
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...