ஜனவரி 06, 2011

ஆண்மைக் குறைவிற்கான கரணங்கள்
ஆண்மைக் குறைவிற்கான கரணங்கள்

இலைமறை காயாக இருந்த பாலியல் தொடர்பான செய்திகள் பெருகிவரும் தொழில் நுட்ப வளர்ச்சியினால் எல்லா மக்களையும் விரைந்து சென்றடைகிறது . பலஇடங்களில் இவற்றால் குழப்பங்களே உண்டாகிறது எனலாம் . இந்த பாலியல் குறைபாடுகளுக்கு கரணங்கள் அறியப்படாமையால் பல குடும்பங்களில் சண்டைகள் , மோதல்கள் , பிரிவுகள் , கொலைசெய்யும் (கணவன் அல்லது மனைவியையே )அளவிற்கு வெறித்தனங்கள் உண்டாகிறது .

பழங்கால முறைகள்

எமது மருத்துவ நடுவத்திற்கு வரும் பலரும் கேட்கப்படும் வினாவில் பெரும்பாலும் பாலியல் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளே மிகையாக உள்ளது . காரணம் இந்த சமூக அமைப்பு முறையான பாலியல் கல்வியை கொடுக்கமைதான் எனலாம் . பழங்காலங்களில் பாலியல் தொடர்பாக பெரும் இன்பத்தை சிற்றின்பம் என்றனர் . அப்போது இல்லறம் நல்லறமாக இனித்தது . இப்போது ?
பழங்காலங்களிலும் பிணக்குகள் இருந்தன அனால் அவை குறளாசான் வள்ளுவர் கூறியதுபோல்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

சண்டைக்கு பின் பெற்ற இன்பம் இனித்தது நன்கு சுவைத்தது இதற்க்கெல்லாம் அவர்களின் உணவு முறையும் வாழ்க்கை நடைமுறைகளும் துணைநின்றது . அப்போது கணக்கு வழக்கில்லாமல் குழந்தை பெற்றுக்கொண்டனர் அப்போது அவர்கள் உடல் நலனுடன் நூறாண்டு வாழ்ந்தனர் .


நஞ்சே இன்றைய உணவு

முன்பெல்லாம் மாடு புல் தின்று பால்கரந்தது இன்று சுவரொட்டியையும் இரசாயணம் கலந்த தீவனங்களையும் தின்று பால்கறக்கிறது அவைகள் மட்டும் அல்லாமல் பால்சுரப்பிகளைத்தூண்டும் ஊசிபோட்டு பால் கறக்கின்றனர் அவைகளினால் நோய்தானே? பழங்காலங்களில் கைகுத்தல் அரிசியும் , கம்மங்கஞ்சியும் , கேழ்வரகு களியும் உடலை தின்னென்று வைத்திருந்தனர் இப்போது ? இயற்கையாய் விளைந்த கீரைகளும் காய்களும் பழங்களும் மனிதனை நோயின்றி பாதுகாத்தன அவர்கள் நூறாண்டுகள் நோய்இல்லாமல் வாழந்தனர் .

மட்டைதீட்டிய சத்தே இல்லாத அரிசி , இரசாயன கலப்பு மிகுந்த உணவுகள் இவைகள் மனிதனின் உடலை கூறுபோடவைக்கிறது. இப்படிப்பட்ட உணவுகளை உண்ணும் போது முப்பதை தொடும்போதே மூப்பைத்தொடுகிறனர் .இன்றைய முறையல்லாத உணவுகளும் இரத்த நாளங்களையும் நரம்பு மண்டலங்களையும் செயலிழக்கசெய்த்து கிழடுதட்டிபோகின்றனர்
குறுகிய காலத்திலேயே சர்க்கரைநோய் , இரத்த அழுத்தம் , சிறுநீரக கோளாறுகள் என நோய்களின் படடியல் தொடருகிறது

இரத்த அழுத்தமும் சிறுநீரக நோய்களும்

இந்த நோய்கள் இப்போது எல்லோராலும் எளிமையாக பேசவைக்கிறது இதனால் அரச உறுப்புகளான கண் , இதயம் , சிறுநீரகம் போன்ற உறுப்புகள் கெட்டு மனிதனை பாடாய்படுத்துகிறது . இந்த கனங்களினால் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உட்பட்ட மனித இனம் நோயாளி யாகிறது .

உயர் இரத்த அழுத்தத்தினால் பலரும் பாதிக்கப்பட்டு எந்தவித மருத்துவமும் செய்து கொள்ளாதவர்களிடத்தே பாலியல் குறைபாடுகள் தோன்றுகிறது .

இந்த நோய்கள் இரசாயன மருந்து எடுத்துக்கொண்டாலும் பாதிக்கிறது என்கின்றனர் . பட்ட மேல் படிப்பு படித்த ஆங்கில முறை மருத்துவர்கள் .

உளவியல் ரீதியான குறைபாடுகள் இருப்பின் இதன்தக்கம் அதிகம் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது . நரம்பு மண்டலம் தளர்ச்சி அடைந்து இருந்தாலும் இன் நோயின் தாக்கம் அதிகமிருப்பதாக கணக்கிடுகின்றனர் .

இறுக்கமான ஆடைகளையும் , இரவில் அதிகமாக கண்விழிக்கிரவர்கள் , முறையான உணவு பழக்கம் இல்லாதவர்கள் குழந்தையில் பல்வேறு நோய்கள் பதிக்கப் பட்டவர்கள் இப்படி ஆண்களை பாலியில் தொடர்பான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்

தீர்வுகள் சில

இந்த உலகம் நமக்கத்தான் உதிக்கிறது என்ற எண்ணம் வேண்டும் ஏனெனில் மனிதனின் உளவியல் தான் இந்த பாலில் குறைபாடுகளுக்கு பொரித்தும் காரணமாக இருக்கிறது .

முறையான அகவைல்திருமணம் செய்து கொள்க .
முறையான உணவுத்திட்டம் வகுத்து கொள்க .
நோய்களை உண்டாக்கும் கவலைகளை விட்டொழியுங்கள் .
எல்லைபாலியல் வேட்கை கொள்ளாதீர்கள் .
பாலுறவு கட்சிகளை அறவே தவிருங்கள் .
பாலுறவு கட்சி படங்கள் பலநிலைகளில் , பலநாட்கள் எடுக்கப்பட்டதாகும் . அவைகளில் உண்மை இல்லை .
நீண்ட நேரம் பாலியல் இன்பம்வைத்து கொள்வது என்பது மரணத்தை வலிந்து அழைக்கவே செய்யும் .
தேவை இல்லாத இரசாயன கலப்பு களையும் இரசாயணம் கலந்த உணவு களையும் எடுக்க வேண்டாம் அவைகள் உயிர்பற்றலை கொடுக்கும் .

எந்த நோய்க்கும் நீங்கலாக மருந்து எடுக்க வேண்டாம் அதற்கானவர்களிடம் செல்க .

இன்பம் நீடிக்க வேண்டுமா
இன்பம் நீடித்ததல் என்பது நீண்ட நாட்கள் வாழ்ந்து பாலியல் இன்பம் துய்பதை சொல்கிறோம் .வாரம் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்

உணவில் சரிவிகித உணவு தேவை , சரிவிகித உணவு என்பது நார்சத்து 30 விழுக்காடு கொழுப்பு சத்து 30 விழுக்காடு சர்க்கரை சத்து 40 விழுக்காடு முறையே தானியங்கள் 40 கொழுப்பு உணவுகள் 30 விழுக்காடு காய்கறிகள் 30 விழுக்காடு என முறையான தரமான உணவுகளை இரசன கலப்பில்லாமல் உண்க .

சித்த மருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம்

பாலியல் தொடர்பான பல கோணங்களில் உங்கள் முன் வந்து கொண்டே இருக்கும் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...