தூய்மையில்லாத உணவுகளும் மொச்சை , காராமணி, பட்டாணி , சோயாமொச்சை , கிழங்குகள் , போன்றவைகள் முறைதவறி தவறாக உண்ணப்பட்டால் இவைகள் நீண்ட நேரம் குடலில் தங்கிமட்கி அங்கு ஒருவித வளியை(காற்றை) உற்பத்தி செய்கிறது . இந்த உணவுகளை துணை உணவுகளுடன் அதாவது சுக்கு , மிளகு, இஞ்சி , எண்ணைவகைகள் போன்றவற்றுடன் எடுக்கும்போது பெரும்பாலும் சிக்கலை உண்டாக்குவதில்லை .
இயல்பாகவே மனிதன் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ஈற்று உணவை (மலம் ) கழிக்கச் செய்ய வேண்டும். இந்த நடைமுறை தவறும்போது மனிதன் நோயாளியாகிறான். மனிதனின் பதிமூன்று வேகங்களை வலுக்கட்டாயமாக அடக்குவதால் வலிந்து நோயைத் தழுவு கிறான். இதயம் தொடர்ந்து தொழிற்ப்படும்போது அதன் பாதையில் எந்த குறுக்கீடும் இருக்கலாகாது அனால் வலுக்கட்டாயமாக குடல் காற்று அழுகை, கண்ணீர் , சினம் , ஈற்றுணவு , இப்படி அடக்குவதால் இதயத்தின் பதை மாறிப்போகிறது இதயம் சிரமப் படுகிறது.
இன்று நமது வாழ்க்கை முறையும் உணவு முறையும் மாறித்தான் போனது
இப்போது நமது உணவை தீர்மானிப்பது முட்டாள்களின் பெட்டி யாகிவிட்டது
முட்டாள்களின் பெட்டி ? (டிவி ) இந்த தொலைகாட்சி
களில் ஒரு விளம் பரம் வந்துவிட்டால் அதுதான் தமிழர்களுக்கு பொன்னான
நாள் தமிழன் திரைப்படங்களையும் இந்த முட்டாள் பெட்டி களையும்
விட்டொழித்து என்று அறிவைத் தேட புறப்படுவானோ? குறிப்பிட்ட உணவின்
தன்மை என்ன எந்த அளவிற்கு அது உடலை பாதிக்கிறது எந்த கேட்டை
உண்டக்குகியது என்ற அடிப்படை அறிவைக்கூட பெறாதவன் ஆசிரியராகவும் ஆட்சியாளராகவும்
இருந்து தொலைக்கிறான் . கேடு நிகழ்வதே இங்குதான் . முறையான உணவுகளைத்
தேடுவோம் .முறையனவர்களை ? தேர்வு ? செய்வோம்??????
புட்டியில் அடைக்கப் பட்ட பளபளப்பான பன்னாட்டு நிறுவங்களின்
தயாரிப்புகளான கோக் , பெப்சி போன்றவை மனிதன் இதயத்தையும்
சிறுநீரகத்தையும் செய்யும் கேடுகள் எண்ணிலடங்கா இவற்றை விட்டொழிப்போம்
நோய் நீங்கி வாழ்வோம் . சித்த மருத்துவத்தையும் காப்போமே ?
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
இன்றைய சூழலில் இந்த வாயுத் (குடல் கற்று ) தொந்தரவு பல்வேறு நோய்களை
தோற்றங் கொள்ளச் செய்கிறது என கடந்த இடுகையில் பதிவு செய்து இருந்தேன் .
இன்றைய உணவுமுறை அப்படியாகி விட்டதன் காரணத்தை நாம் அறிந்து கொண்டுதான்
தீரவேண்டும் .முதலில் உணவுமுறை ஒரு கட்டுக்கடங்காத நிலையில் நம் வைத்து
இருக்கிறோம் . அறிவைத் தேடி அதன் அடிப்படையில் நமது வாழ்வை
கட்டமைப்பதில்லை . உணவைத்தேடி உண்பதில்லை முறையான வாழ்வு , உணவுமுறை,
வாழ்க்கைமுறை எப்படி பாட்டதாக இருக்கவேண்டுமென ஒரு வரைபடத்தை வகுத்துக் கொள்வதில்லை. அல்லது அதுபற்றி தேடலும் இருப்பதில்லை இதுதான் இன்று நோயாக பரிமாணம் அடைந்து மனிதத்தைக் கொல்லுகிறது.
வறட்சி நிறைந்த உணவுகள் குடலில் ஒருவித நைப்புத் தன்மையை உண்டாக்குவதில்லை இதனால் குடலில் செரிக்கும் தன்மை குறைதல் ,குடல் பலவீனம் அடைதல் கழிச்சல் காணுதல் குடல் கற்றுத் தொந்தரவு என பலவேறு நோயாக வந்து சேருகிறது . வறட்சி நிறைந்த உணவுகள் என்பது எலுமிச்சை
, தக்காளி , இப்படியான பொறிக்கப்பட்ட உணவுகளும் துரித உணவுக்களுமான
இந்த உணவுகள் குடலில் நைப்புத்தன்மையை உண்டாக்குவதில்லை இந்த உணவுகளை
தொடர்ந்து உண்பதால் குடல் கட்டுப் பட்டை இழக்கிறது . முன்பே சொன்ன
மாதிரி பல நோயாக பரிமாண மற்றம் அடைகிறது.
பழந்தமிழரின் முந்தய உணவு முறையை கடைபிடிக்கமையால் பலவேறு நோய்களையும் கேட்டுப் பெறுகின்றனர். குறிப்பாக சுவையை உண்டாக்கும் எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள் சில கிழங்குகள் துரித உணவுகள்
எல்லாமே
வறட்சியைத் தரும் உணவுகள் என கண்டோம் பருப்பு வகைகளும் இன்று
முறையில்லாமல் முறையாக பதப் படுத்தாமல் உணவில் சேர்ப்பதால் நோய்
உண்டாகிறது என்பதையும் கணக்கில்எடுத்துக் கொள்ளவேண்டும் . முளை கட்டி பயன்படுத்தப் படும் பருப்பு வகைகள் செரிப்பதற்கு நீண்ட
நேரம் எடுத்துக் கொள்வதில்லை உணவுத்துனுக்குகள் குடலில் நீண்ட நேரம்
தங்குவதால் பலவேறு நோய்கள் தோற்றம் கொள்ளுகிறது செரிப்பதற்கு எளிமையான
உணவுகளை நாம் எடுக்க வேண்டும் இப்படி முறைப்படி உணவு திட்டத்தை
வகுத்துக் கொள்வதால் நோயில் இருந்து விலகி இருக்க முடியும் . முளைகட்டாமையால்பருப்பு வகைகள் அதும் புரதம் நிறைந்த பருப்பு உணவுகள் உண்ட உணவு நீண்டநேரம் குடல் பகுதியில் தங்கி அழுகி அங்கு ஒருவித வளியை(காற்றை ) உற்பத்தி செய்கிறது . இதுதான் பலருக்கு சங்கடத்தைக் தருகிறது . பலமருத்துவ
வல்லுனர்கள் இந்த குடல் காற்று உணவின் வழி செல்லும் காற்று என
புரியாமல் பாவம் பிதற்றக் கேட்டு இருக்கிறேன் அவர்களை விடு விடுவோம் .
நாமும் சரியானவர்களை முதன்மைப் படுத்த பழகுவோம் .மீண்டும் அடுத்த
பதிவில் சிந்திப்போம் அதுவரை ....
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
இப்போது
மிகையாக வாயுத் (குடல்காற்று ) தொந்தரவு என கூறி வருகிறார்கள் . இது முறையில்லாத உணவுப் பழக்கத்தினலன்றி வேறல்ல.உண்ணுகிற உணவு உடலுக்கு ஏற்றதாகவும் எந்த தீங்கும் இல்லாத தன்மை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் . அனால் இன்றுள்ள நிலையில் இது சாத்தியம் இல்லையென நம்மிடம் வருகிறவர்கள் கூறு கின்றனர் .
இது எப்படி என புரியவில்லை நாம் நலமோடு வாழ்வதற்க்குதனே வாழ்கையும்
நமது தேடலும் இருக்க வேண்டும் அனால் உண்ண நேரமில்லை உறங்க நேரமில்லை.
சரியானதை சரியான நேரத்தில் உண்ண முடியவில்லை இதுபற்றி சிந்தித்தோமா?
எதற்காக வாழ வேண்டும் ? வரட்டுத் தனமாக வாழ்ந்து பன்றிகள் போல ஈன்று கூட்டத்தை சேர்த்து செத்து மடிவதா வாழ்க்கை ?
இன்று உள்ள உணவு முறை மனித இனத்தை நோயாளியாக்குகிறது எனவே பண்பாட்டு வடிவிலான பழக்க வழக்கங்களையும் மாற்றித்தான் ஆக வேண்டும் அது பழந்தமிழர்களின் உணவு முறையை அடியொற்றியாதக
இருக்க வேண்டும். பழந்தமிழர்கள் உணவு முறையில் மிகவும் சரியாகவே
இருந்தார்கள் . திட்டமிட்டார்கள் நோயின்றி வாழ்ந்தார்கள். நாமும் ஏன் வாழக்கூடாது?
முன்பு உணவுக்கு குழம்பிற்காக பயறு வகைகளை முறைப்படி தூய்மையாக்கி
பயன்படுத்தினார்கள், இது நோயில் இருந்து அவர்களை காத்தது இன்று
அதற்க்கு நேரமில்லை அதனால் உயரமான கட்டிடங்களை கொண்ட மருத்துவ
நடுவத்தில் செத்து எடுத்து வந்து அழுது புதைப்பதை பெருமையாக கருதுகிறோம் .
தூய்மை எப்படி? துவரை , சிறுபயறு , காராமணி , என எந்த பயறு வகைகளையும்
நேரடியாக உண்ண மாட்டார்கள் அப்படி உண்ண நேரிட்டால் குடலில் நீண்ட
நேரம் அழுகி கிடப்பதனால் பல்வேறு நோவை உண்டாக்குகிறது என்பதை
கண்டறிந்த பழந்தமிழர்கள் முறைப்படி முளைக்கட்டி செரிக்கும் திறனைக்
கூட்டி அதனுடன் முறையாக இஞ்சி , சுக்கு , பூண்டு போன்ற வற்றை சேர்த்து பயன்படுத்தினர் . இன்று அப்படி முளைக்கட்டாமையால்
குடலின் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்து மட்கி குடலில் ஒருவித
வளியை(காற்றை) உண்டாக்கி ஆசன வாய்வழியாக கெட்ட நாற்றத்துடன்
வெளியேறுகிறது . இது பெருந் தொந்தரவாக படுகிறது இந்த காற்றை நீண்ட
நேரம் அடக்குவதால் பல்வேறு நோய்கள் தோற்றம் கொள்ளுகிறது . இது இதய நோய்
முதல் பல்வேறு நோயாக பரிணாம வளர்ச்சி அடைகிறது எப்படி என அடுத்த
இடுகைகளில் பார்போம்.
/
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
சித்தமருத்துவம் உணவே மருந்து , மருந்தே உணவு என தனது கோட்பாட்டை
முன்வைக்கிறது . ஆனால் இன்று விசமே உணவாக மாறி நம்மைக் கொல்லவருகிறது.
அதாவது உணவாக இருக்க வேண்டிய பொருட்கள் தவறானவர்களின் செய்கையால்
விசமாக மாறி நம்மைக் கொள்ளுகிறது அந்த வரிசையில் இதுவரை நாம் உணவாகவும்
மருந்தாகவும் பயன் படுத்தி வந்த தனியா இன்று விசமாக நம்முன் காட்சி அளிக்கிறது எப்படி ?
இன்று கடைகளில் விற்கப் படும் தனியா நீண்டநாட்கள் கெடாமலும் அதேவேளை புத்தம் புதியதாகவும் காட்சியளிக்க சில மருந்துகளை சேர்த்து அதற்க்கு தனியான வண்ணத்தை யுண்டாக்கி சந்தைக்கு அனுப்புகிறார்கள் . இதன் கவர்ச்சியால் கவரப்பாட்ட மக்கள் நல்லதை ஒதுக்கி தள்ளிவிட்டு விசத்தை வாங்கிவந்து உண்கிறார்கள்.
வழமையாக அறுவடைசெய்த தனியா வேளாண் பெரும்மக்கள்மூலம் சந்தைக்கு வரும் இதை வியாபாரிகள் வாங்கிவந்து பதப்படுத்தி வைத்து இருந்து நமக்கு கொண்டுவந்து சேர்ப்பார்கள் . இதில்தான் சிக்கல் வேளாண் பெரும் பக்களிடம் இருந்து பெறப்பட்டு பெரிய பெரிய அறைகளில் பதுக்கப்பட்டு குடோனில் அடைத்து அந்த அறை முழுவதிலும் கந்தக புகையை
நிறப்புவார்கள் இந்த குறிப்பிட்ட இடத்தில் வைத்து இருந்து பின்னர்
அதன் தன்மை முற்றிலுமாக மாறிவிடும் அதாவது கந்தக புகையின்
தாக்கத்தினால் தனியா தனியான அப்போதுதான் அறுவடை செய்யப்பட தனியபோல
பொன்னிறமாகவும் கரும்பச்சை நிறத்தையும் அடையும் . பின்னர் இதை சந்தைக்கு
அனுப்பி விடுவார்கள் இது நீண்டநாளுக்கு இந்த தன்மை மாறாமல் இருக்கும்
அனால் நம்மை மட்டும் நோயாளி ஆக்கும்.
மிகக் கொடிய நச்சுகளில் கந்தக டை ஆக்சைடும் ஒன்று என்பது நமக்கு
புரியாத ஒன்று அல்ல இந்த நச்சுசுதான் தாஜ்மாகலையே நிறம் மாற்றியது .
கல்லையே நிறம் மற்றும் இந்த கொடிய நச்சு மனிதனை என்ன படு படுத்தும்?
நுரையீரல்
, வயிறு மற்றும் மூளைபகுதிகளில் புற்று நோய்க்கட்டிகளை உண்டாகும். இந்த
கொடுமை குழந்தைகளை மிகையாக பாதிக்கும் என்கிறார்கள்.
நச்சு தனியா
இதன் பாதிப்பால் வேறு என்ன நோய்கள் உண்டாகும் என்பதுதானே உங்கள் வினா ...? பொறுமை இருந்தால் மேற்கொண்டு படியுங்கள் ...
முதலில் செரிக்கும் திறன் குறையத் தொடங்கும் உணவுகளின் செயல்பாட்டைக் குறைக்கும். சிறிது சிறிதாக குடல் புற்று நோவை உண்டாக்கும் . கழிவு மண்டல குடல்கள் சிறுநீரகங்கள்.சிறுநீர்த்தாரை என எல்லா உடல் உறுப்புகளையும் பாதிக்கசெய்யும் . குருதியோட்டத்தை பாதிக்க செய்து நரம்பு மண்டலங்களையும் உடலின் இயக்கத்தை குறைக்க செய்யும்.
இப்படிப் பட்ட
பொருட்களை நாம் அடையாளம் கண்டு நாம் ஒதுக்க வேண்டும் இல்லையேல்
பல்வேறு நோய்கள் வந்து விரைந்து நோயைத்தழுவி மரணத்தைத் தரும்
நோய்வெல்வோம்.
சித்தமருந்துவங் காப்போம்