ஆகஸ்ட் 27, 2012

தமிழ வலைப்பதிவர் குழுமம்



இது ...
பன்முகத்தன்மை கொண்டவர்கள்
பறைசாற்றுகிற களம்.

இங்கு ...

விடிந்தால்  புதிய புதிய செய்திகள் .
மாறுபட்ட  சிந்தனைகள்
மகத்தான  கண்ணோட்டங்கள் .

மனிதனை

" மா " மனிதனாக ஆக்குகிற
கோட்பாடுகளை  விதைக்கும் அறச்சாலைகள்
புதியன படைக்கத்தூண்டும்
வேள்விச்சாலைகளும் உண்டு .

இங்கு ...

மூழ்கி  முத்தெடுத்து
சமூகத்திற்கே  அர்ப்பணிக்கிறவர்களும்உண்டு.
காட்டாற்று  வெள்ளமாய்  பாயும்
கருத்துப்  பட்டறைகளும்  உண்டு .

இங்கு ...

தன்னுணர்வில்  வீழ்ந்து 
கிடப்பவர்களும் உண்டு
மக்கள்  நலன்பேசும்
சமத்துவ
வாதிகளும்  உண்டு.

சிந்தையுள்  பட்டதை

சந்தைப்  பொருளாக்குகிறவர்களும்
கண்ணில்  பட்டதை
ஓவியமாக்கி  வண்ணச் சிறகு
விரித்து விண்ணில்
பறக்கிரவர்களும்  உண்டு .

சின்னத்திரையையும்

வண்ணத்திரையையும்
பக்கம் பக்கம்மாய்
ஆய்வு  செய்கிறவர்களும்  உண்டு .

செப்படி  வித்தைபோலே

கண்கட்டி  வித்தை  காட்டி
கவர்ந்திழுக்கும்  நல்லவர்களும்  உண்டு.
உள்ளங்  கவர்  கள்வர்போலே
கருத்துகளை  களவுசெய்து
பட்டைதீட்டி  பதிப்பிக்கும்
பண்பாளர்களும்  உண்டு .

ஆனாலும்  நாமனைவரும்

ஓர் சாதி ஆம்
தமிழ்  வலைப்பதிவர்சாதி .

பதிவுலகச்  சான்றோரே !

நமக்கென  ஒரு பெருங்
கூட்டம்  கூட்டினீர்  நன்றி .

இனி ...

ஊர்தோறும்  வேடந்தங்கலாய்
கிளை  பதிப்போம் அதில்
நாமனைவரும்  ஒன்றுகூடி
புதியன  படைப்போம் .

கருத்துக்  களின் கருவூலமாய்

தமிழர்தம் உயரிய  கலைகள்
பண்பாடு நாகரீகம்
தமிழர்  தத்துவம்
தமிழ  மருத்துவம் -ஆம்
சித்தர்களின்   சீரிய
சித்தமருத்துவம்
விளையாட்டு ...
கட்டிடக்கலைகள்
ஒக  இருக்கை...
இசை  நடனம்
போன்ற  வற்றோடு  நம்
புறநானூற்றையும்  புரட்டி
அகநானூற்றையும்  அகழ்ந்தெடுத்து
இந்த  சமூகத்தை
வழி  நடத்துவோம் .

பொழுது  போக்கு

அம்சங்கள்    தேவைதான்   அது
ஊருகாய்போல  இருந்தால்    நன்று
ஊறுகாய்  உணவும்   ஆகிவிடாது
ஆகிவிடக்கூடாது .
 .

அறிவு 
சான்றீர் 
அறத்தை  விதைப்போம்  
நல்லன  அறுவடை  செய்வோம்
களத்தில்  இருக்கும்  நாம்
கருத்தினில்  ஒன்றிணைந்து
புதியன புகுத்துவோம் 


அன்பும்
  அமைதியும் 
பெருக்கெடுக்க  
நன்மையையும்   நேர்மையும்
செழித்தோங்க 

அறிவெனும்  கருவி  ஏந்தி
வென்றெடுப்போம்  புத்துலகை .

நேற்று  நடந்த  பதிவர்களின்  சந்திப்பில் நடந்த  பாவரங்கில்  கலந்து கொண்டு  வாசித்த  பா .
விழா மிகவும் சிறப்பாக  நடந்தேறியது . விழாக்குழுவினருக்கு நமது  பாராட்டுகள் .

                     தமிழன்புடன் ...... போளூர்  தயாநிதி 

 .



 
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 21, 2012

மிளகின் மருத்துவக் குணங்கள்



     பொதுவாகவே  தமிழர்களின்  எளிமையான உணவுப் பொருளே  தீவீராமான  நோய்களை நீக்கக் கூடிய சிறந்த மருந்தாக வினை புரிகிறது என்பது நாம் அறியாத  செய்தியாக தெரிகிறது  காரணம் தமிழர்கள் பெரும்பாலும்  தமிழ மருந்துகளைத்  தேடி  அலைவதில்லை  ஆனால் நோயில் வீழ்ந்து கிடக்கறான் அதானல் தான்  குறிப்பிடுகிறேன் .
     மிளகின் மருத்துவ குணம்
வாயு
கபம்
இருமல்
செரியாமை
மிகுஏப்பம்  ஆகியன நீங்கும்
பசிமிகும் .
மூன்று  கிராம் மிளகை குடிநீராக்கி அருந்த
செரியாமை
காய்ச்சல்
வயிற்றுப் பொருமல்  ஆகியவை  தீரும்  மருந்து வீறு தணியும்.

அரைகிராம் மிளகுப் பொடியுடன் ஒருகிராம் வெல்லம் சேர்த்து உண்ண

பீனிசம்
தலைப்  பரம் குறையும்.
தலைவலி  தீரும்.

மிளகு நான்கு  கிராம் பெருங்காயம்  ஒருகிராம் கழற்சிப் பருப்பு பத்துகிராம் பொடித்து தேனில் அரைத்து  மருந்தாக்கி அகவைக்கு ஏற்ப  காலை, மாலை கொடுக்க

காய்ச்சல்
குளிர்காய்ச்சல்
யானைக்கால்  காய்ச்சல் தீரும்.

பொதுவாக இதன் குணம்

காரல் உண்டாக்கும்
அகட்டுவாய் அகற்றும்
முறை வெப்பம் அகற்றுதல்
தடிப்பு உண்டாக்குதல்
வெப்பம் உண்டக்குகுதல்
வீக்கங்களைக் கரைத்தல் 
வாத  மடக்குதல்
வாத நோய்களையும்
சீழ்  மூலத்தையும்  குணமாக்கும்

அளவை ஊராக் காரம் அடைந்திருக்கும்  வாத

விளைவைஎல் ல்லாம் அறுக்கும்  மெய்யே - மிளகின் காய்
கண்டவர்க்கும்  இன்பமாம் காரிகையே ! சீழ் மூலங்
கொண்டவர்க்கு  நன்  மருந்தாங்  கூறு      (குணபாடம்)

என்னதான்  இருந்தாலும் மிகளின் தனிசுச்வை  அதன் குணங்கள்  எல்லாமே சிறந்தவைகள் ஆனால் இது  குருதியை  குடிக்க கூடிய தன்மை கொண்டது விந்துப்  பொருளை  வற்றச்  செய்யக் கூடியது  அளவுடன் உண்ண எந்த  பின்விளைவும்  இல்லை என அறிக .


முந்தய  பதிவு களில்  இடம்பெற்ற  சுக்கு, திப்பிலி , இந்த பதிவில்  இடம் பெற்ற  மிளகு இந்த மூன்று மருந்துப் பொருட்களும் மிகசிறந்த மருத்துவ பயன் நிறைந்தவைகள் . மருத்துவத்தில் இவைகளின் கூட்டுப் பெயர்  திரிகடு  இந்த மருந்துப் பொருள் இல்லாதவர் மருத்துவரே  இல்லை எனலாம்  இது காயகல்ப  மருந்துப்  பட்டியலில் உள்ள மா மருந்து .

முறைப்படி பயன் படுத்தி நோய் வெல்வோம் .


சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .

.
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 13, 2012

திப்பிலியின் மருத்துவக் குணங்கள்



    பொதுவாக  தமிழ  மருந்துகள்   உணவுப்  பொருளாகவும் இருப்பது  தமிழர்களின்  உணவின் சிறப்பு எனலாம் . அந்த வகையில்  திப்பிலி  சிறந்த உணவுப் பொருள் மட்டுமின்றி மிகசிறந்த  மருந்தும்   ஆகும் .இதை  எப்படி மருந்தாகும் ? உணவாக  எப்படி பயன்படுத்துவது ? மருந்தாக  எப்படி பயன்படுத்துவது ?  சிந்திப்போம் ....

இது கொடிவகையை  சேர்ந்தது  மிளகைக்  காட்டிலும்  இந்தன் வீரியம்  மிகவும் மிகுதி .இது பச்சையாக இருக்கும்போது  இதன் சுவை இனிப்பு  அனால் உலர்ந்தபின் இதன் சுவை கார்ப்பு  என்னே  இயற்கையின் விளையாட்டு ?
இது வெப்பத்தையுண்டாக்கும்
அகட்டுவாய் அகற்றுதல் ஆகியவை திப்பிலின்  தனிக்குணங்கள் .
பச்சைத் திப்பிலி கபத்தையும்
சீதத்தையும்  உண்டாக்கும் .
அனால் பித்தத்தைப்  போக்கும் .

உலர்ந்த  திப்பிளியினால் ...
இருமல்
குன்மம்
இரைப்பு
சயப்பிணி
ஈளை
பாண்டு
சந்நிவாதம்
அரோசகம்
பெருமல்
தலைவலி
மூர்ச்சை
தடுமன் (சளி )
பீலிகம்
மலப்பெருக்கு
பெருவயிறு
முத்தோடம்
குளிர்சுரம்
மேககட்டி
ஆசன நோய்
தொண்டை நோய்
அவரனபித்தம்
மூக்கு -காது -கண் நோய்
நோய்கள் விலகும்
நீர்த்த விந்து இருகும் .

ஆசனநோய் தொண்டைநோய் ஆவரண  பித்தமுதல்
நாசிவழி காதிவைநோய்  நாட்புழு  நோய் - வீசிடு
யன்காலன்ச  நஞ்ச்சிதையும் அம்பாய் அழிவிந்தும்
போன்கலன்ச  நன்கைகொட் போல். (தேரையர்  குணபாடம்)
திப்பிலி ஐந்து பங்கு தேத்தான் விதை மூன்று  பங்கு இரண்டையும்      நன்கு    அரைத்து   கழுநீரில் 

எட்டு   கிராம்   அளவு   மூன்று நாள்   காலையில்   கொடுக்க   பிரமேகம்   பெரும்பாடு    நீங்கும்  .
இவ்வளவு   சிறப்புகள்  வாய்ந்த   சித்த மருத்துவத்தை   ஏன்   நாம்    பின்பற்ற   மறுக்கிறோம்   சிந்திப்போமா  ?
சித்த மருத்துவங்   காப்போம்   நோய்   வெல்வோம் 

        

     
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 06, 2012

சுக்கின் மருத்துவக் குணங்கள்


     

 பெரும்பாலும் தமிழர்களின் உணவு  எல்லாமே மருந்துகள்தான் என தமிழர்களுக்கே புரிவதில்லை 

இதை புரிய வைக்கவே தனியான இயக்கம் ஒன்றை  எடுக்க வேண்டியிருக்கிறது . அதனால்  நாங்களே  எடுத்துவிட்டோம் . அதாவது போளூர்  தமிழ்ச்  சங்கம்  ஒன்றை நிறுவி  தமிழர்களின்  அளப்பரிய சிறப்புகளை  தமிழர்களுக்கே  புரிய வைக்கத்தான் . தமிழில்  என்ன இருக்கிறது இட்டிலியும் சட்டினியும்தவிற என அறியாமையில் புலம்பித்தவித்துக் கிடக்கும் தமிழ்  மாடுகளுக்கு நல்ல மேய்ச்சலை பழக்குவததாக  இந்த  போளூர் தமிழச்  சங்கத்தின்  பணியாக   இருக்கும்.

     சித்த மருத்தவத்தில்  மிகசிறந்த மருந்துப் பொருட்களுள்  இந்த  சுக்கும் ஒன்று ....சுக்கு என்பது உலர்ந்த  இஞ்சி  என நாம் சொல்லத்தேவையில்லை....
இந்த சுக்கு......
வேப்பத்தையுண்டக்கும்
பசியயைதூண்டும்
அகட்டுவாய் அகற்றும்
விலாகுத்தல்
அசீரணம்
மார்பெரிச்சல்
புளியேப்பம்
நீர்ப்பினிசம்
நீரேற்றம்
மெகவா குண்மம்
சலதோடம்
வேப்பம்
ஆசன நோய்
சுவாசம்
காசம்
சீத கிரகணி
வாதநோய்
வயிற்று  உப்புசசம்
செவிக்குத்தல்
முகநோய்
சிரநோய்
சூலைவலி
கபசுரம்
சீத கழிச்சல்
செரியமைக்  கோளாறுகள்
பாண்டு
வயிற்றுக் குத்தல்
கபசீத  சுரம்
ஆகிய பிணிகளைப் போக்கும்  தன்மை  சுக்கிற்கு உண்டு .

சூலைமந்தம்  நெஞ்சரிப்பு  தொடமேப்  பாமழலை
மூலம்  இரைப்பிருமல்  மூக்குநீர் -வாலகப
தொடமதி  சரண் தொடர்வத குண்மம் நீர்த்
தோடம்ஆ மம்போக்கு  சுக்கு .
என்கிறது தமிழர்களின் மருத்துவப் புதையல்

சுக்கை களிசெய்து நெற்றியிலிட  தலைவலியும்  கழுத்தின்  மீதிட  தொண்டைவலியும் புருவத்தின் மீதிட அண்மைப் பார்வைதோடமும் தீரும் .
சுக்கை முலைப்பால் விட்டு  அரைத்து நெற்றியில் பற்றிட நெருப்பு அனல் படும்படி காட்டினால் தலைவலி நீங்கும் .

சுக்கை அரைத்து மூட்டுகளில் பூச  மூட்டு  வலி குறையும்
சுக்கை வாயில் பொட்டு மெல்ல  பல்வலி குறையும்
     என்ன உறவுகளே  தமிழர்கள்  தங்களின்  கலைகளைபின் பற்றுவதில்  உலகிலேயே  பின்தங்கி இருக்கிறார்கள் பார்த்தீர்  களா நோய்க்கு மருந்து இங்கு இருக்கும் போது விடியலைத்தேடி  எங்கோ அலைகிறான் தானே .



சித்த மருத்துவாங் காப்போம் நோய்  வெல்வோம்   
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...