ஜூலை 04, 2011

பாலுணர்வு (Sex Appeal ) உளவியல் காரணங்கள் .

பாலுணர்வு (Sex Appeal ) இன்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது இதனால் பல்வேறு குழப்பங்களும்சண்டைகளும் தோற்றம் கொள்ளுகிறது.பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும் . வரட்டுத்தனமாக அல்லது கடமைக்ககாக அல்லது பாலுணர்வை , பாலுணர்வு வெறித்தனத்தை , வெறித்தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது அங்கே சிக்கல்கள் தொடங்குகிறது . என ஒருபுள்ளிவிவரம் கூறுகிறது .,

இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவற்றிற்கு அடிப்படை காரணம் பாலுறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தான்

அக்கரைக்கு இக்கரை பச்சை

மனித உடலமைப்பு என்பது கடந்த இருபதுஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துவருகிறது .காரணம் முறையற்ற உணவுபழக்கம் முறையற்ற வாழ்க்கைமுறை எனலாம். இந்தமுறையற்ற
வாழ்க்கைமுறையில் மனிதத்தையும் மனித நேயத்தையும் இழந்து வருகிறான் மனிதன் .இந்த காரணங்களினால் பாலியல் கோளாறுகளும் உண்டாகிறது .இன்று குடும்ப உறவுகள் சீர்குலைந்து வருகிறது இதற்க்கு காரணம் அயல்மகரந்தசேர்க்கைக்கு ஆசை கொள்ளுவதுதான். . முன்பு ஒரு இடுகையில் குறிப்பிட்டது போலவே அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற கண்ணோட்டம் தான் . அதாவது நாளும் கணவனும் ஒரே இடத்தில் புழங்குவதால் ஒருவித சலிப்பு தோன்றுகிறது இந்தசலிப்புதான் ஒருவகையில் படி தாண்ட காரணமாகிறது இது இருபாலரையும் சேர்த்துதான் சொல்லபடுகிறது .பாலுறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை சொல்லியுள்ளார்கள் அதாவது வள்ளுவர் மலரினும் மெல்லிது காமம் என பதிவு செய்வர் . பாலுறவை மலரைப்போல மென்மையாக கையாளவேண்டும் என்பர் இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் தோன்றுகிறது . கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும்போது பாலுறவில் சிக்கல் தோன்றுகிறது .மேலும் மேலும் பாலுறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலில் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் . தேவையில்லாத பதற்றமும் அச்சமும் பாலுறவில் சிக்கலை உண்டாக்கலாம் .

பாலுறவை நீடித்தால் நல்லதா?

இன்று பலருக்கு இந்த எண்ணம் இருக்கிறது நம்மிடம் வருகிறவர்கள் நீண்டநேர பாலுறவிற்கு மருந்துகளை கேட்கிறனர் .இந்த எண்ணம் பழங்காலம் தொட்டே இருந்துவருகிறது அன்றய முடிசூடிய மன்னர்கள் அந்த புறங்களில் பல மகளீரை வைத்து இருந்தத்தின் காரணம் நம்சித்தர்களின் ம்பந்தம் மருந்து மற்றும் ன்னும் ம்பனத்ம் மருந்துகள் வியக்க வைக்கும் வகையில் பாலுறவை நீட்டி பல மகளீரை வீழ்த்த வைத்ததது .

உளவியல் காரணங்கள்

திருமணமான காலங்களில் முதன் முதலாக பாலுறவு கொள்ளும்போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல் போக வாய்ப்பு உண்டாகிறது.இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம்பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . தவறானான நண்பர்கள் முறையற்றவர்களின் முறையற்ற நடவடிக்கை களினால் தவறான பெண்களின் / சுய இன்ப பழக்கம் தோன்றுகிறது .இந்த சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதியில் எண்ணுகிறார்கள் .இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது .தவறான பெண்களிடம் பாலுறவு கொள்ளும்போது அவர்களின் தவறான வார்த்தை நடவடிக்கை களினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது . திருமணத்திற்க்குமுன்பெண்கள் களுக்கு உண்டாகும் பாலுறவு திருமணமான பின் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்திலும் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது .எனவே தவறு நடக்க கூடாது நடந்தபினர் அதையெண்ணி வருந்திக்கொண்டிருத்தலும் நோயே . நடந்தவற்றை மறந்து புதிய வாழ்வில் தவறு உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் .

முறையாக வாழவேண்டிய வாழ்கையை வீணடித்துக் கொள்ளுவது அறியமையன்றி வேறல்ல எனவே வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத்தை பெறவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம் முதலில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே .இதை எதிர்கொண்டு இனிமையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்கை .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...