ஏப்ரல் 10, 2011

அம்மை நோய் (chicken pox)




அம்மை நோயை பொறுத்தவரை "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் " என்ற சித்தர்களின் வாக்கிற்கு
ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு மாந்த உடல் தட்ப வெப்ப மாறுதலடையும். கோடைகாலத்தில் வெய்யலின் கொடுமையால் மனித உடல் சூடாகி அழல் குற்றம் (பித்தம் ) மிகுந்து அந்த சூழலில் மழை பெய்தால் ஐ (கப ) குற்றம் சேர்ந்து அழலையமாகி இந்த நோயை உண்டாக்குகிறது.

இதே மாரிக்காலத்தில் உயிரில் ஐ குற்றம் மிகுந்து அந்த வேலை வெய்யலினால் அழல் (பித்தம் )சேர்ந்து ஐயழல் குற்றம் உண்டாகி இந்த அம்மை நோய் தோற்றம் கொள்ளும் என்கிறனர் சித்தர்கள்.

இந்த நோய் வகைகள்

பனை முகரி, பாலம்மை, வரகு திரி , கொள்ளம்மை , கல்லுதிரி , கடுகம்மை , மிளகம்மை , உப்புத்திரி , கரும்பனிசை , வெந்தய அம்மை , பாசிபயரம்மை , விச்சிரிப்பு , குளுவன், தவளையம்மை , என பதினான்கு வகைப்படும் .

இவைமட்டும் அல்லது

பெரியம்மை .
சிறிய அம்மை (.விளையாட்டம்மை)
தட்டம்மை .
புட்டாலம்மை . எனவும் வழங்க படுகிறது.

அம்மை நோயின் பொதுவான குறி குணங்கள் .

சுரம் காய்தல் , உடல் வலி,தலைவலி , இடுப்பில் உளைசல் , தலைபாரம், உடம்பு எரிதல், கண் சிவத்தல் , தும்மல் , கக்கல் (வாந்தி )மூக்கில் நீர்பாய்தல் , வாயில்/ உடம்பில் ஒருவித நெய் மணம் . போன்றவை இருக்கும். இவற்றுடன் மூன்று ,நான்கு நாளில் காய்சல் குறைந்து தலையில் குருக்கள் தோன்றி உடம்பெல்லாம் பரவும் . கொப்புளங்கள் நீர்கோர்த்து பெரிது ஆகும் . சிறுநீர் தடைபடும் . மலமும் கட்டும்.

தொண்டைவலி மயக்கம் பிதற்றல் உடல் வீங்குதல் கொப்புளங்கள் , தாமே உலர்ந்து தோலுரித்தல் நடந்து நோய் குணமாகும்.

இந்த நோயின் காரணமாக நரம்புகள் ,கீல்கள் ஆகியவற்றை தாக்கி முடங்க செய்யும். முறையாக பராமரிப்பு இல்லை எண்டால் உயிருக்கே பாதிப்பை உண்டாக்கலாம். ஆண் மலடு, பெண் மலடு ,போன்றவையும் உண்டாக்கும் .

அம்மை நோயில் உணவுகள் .

சுரம் உள்ள போது கருங் குருவை அரிசி மாவுக் கஞ்சி,பார்லி மாவுக் கஞ்சி , கூவை மாவுக் கஞ்சி ,
ஆகியவற்றை கொடுக்கலாம். சுரம் தணிந்த பின் குளிர்ச்சியான உணவுகளை கொடுக்க வேண்டும் . கேழ்வரகு மாவும் அரிசி நொய்யும் கலந்து தண்ணீர் விட்டு புளிக்க வைத்து கூழ் காய்ச்சி வெங்காயம் அறிந்து போட்டு கொடுக்கலாம் இவை வெப்பத்தை தணிக்கும் . நோய் உள்ள போது ஆறின அரிசி சோறு மிளகு நீர் கூட்டி அருந்தலாம். அம்மை நோய் நீங்கி விட்டால் நீர் மோரும் சோறும் உண்ணலாம் .
காரம் கூடாது. எலுமிச்சை ,பழம்புளி , நெல்லிக்காய் பனைகற்க்கண்டு கறிவேப்பிலை , பச்சைபயறு ,காராமணி , அத்தி பிஞ்சு ,சீனி , கற்கண்டு , முறையாக கொடுக்கலாம்.

படுக்கை

மென்மையானதாக இருக்க வேண்டும் . வேப்பிலையில் படுக்கை தயாரித்ததை பயன் படுத்தலாம் .இது நாம் முன்னோர் கண்டது. இதுவே சிறந்தது. .

ஆகாதவை

தேங்காய் , மாங்காய், நல்லெண்ணெய் , இலுப்ப எண்ணெய், சோற்று ஆவி , நெல் ஆவி , கறிகள் அவித்த வாடை ,பாலுறவு கூடவே கூடாது
.
நோய் எதிர்ப்பாற்றல் பெற

இந்த அம்மை நோயை பொறுத்தவரை அழல் குற்றம் மிகை யாவதால் தோன்றுகிறது எனவே அழல் (பித்தம் ) குறைக்கும் படியான உணவுகள் தேவை .பித்தத்தை வாழை குறைக்கும் என்பதால் இதை நாளும் எடுக்கலாம் .

ஆள்காட்டி குருவிஅமிழ்தம் சித்தமருத்துவர்கள் இதனை பரிந்துரைக்கின்றனர் . இதனை தடைமருத்துவமாக கருதுகின்றனர் . இந்த ஆள்காட்டி குருவியின் முட்டையை உடைத்து சட்டியில் விட்டு சம்பா புழுங்கல் அரிசியை மேற்படி கருவில் அடுப்பேற்றி கருகாமல் பொரியரிசியாக வறுத்து தரம் கண்டவுடன் இடது கை நிறைய கொட்டி வலது கையில் மாற்றி ஒருபிடி அரிசி சாப்பிட வேண்டும் . நோய்க்கு அச்சப்பட தேவையில்லை என்கிறனர் சித்த மருத்துவர்கள்.

மென்பானங்களை நீக்கி இளநீர் ,நுங்கு , தர்பூச்சுனை பழம் எடுக்கலாம் .
வாரம் இரண்டு நாள் எள் நெய் குளியல் செய்யலாம்.
நோய் கடுமையாக முற்றிய நிலையிலும் தேர்ந்த சித்த மருத்துவர்களிடம் சென்றால் நல்ல விரைந்த குணத்தைஅவர் களினால் தரமுடியும் முறையான சித்த மருத்துவத்தை அணுகி நோய் வெல்வோம் .

நோய் வெல்வோம் சித்தமேருத்துவம் காப்போம்More than a Blog Aggregator

10 கருத்துகள்:

  1. உபயோகமான தகவல்கள்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள பதிவு ..

    பதிவுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. மிக்க பயனுள்ள பதிவு.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. யாழ்ப்பாணத்தில் அம்மை நோய் வந்தால் பனங்கள்ளு பனையால்
    இறக்கும்போதே வாங்கித் தருவார்கள் குடிக்க இள்நீர்போல சுவையாக இருக்கும் !

    பதிலளிநீக்கு
  5. அடேங்கப்பா.. படமே பயங்கரமா இருக்கே

    பதிலளிநீக்கு
  6. இன்று தான் இங்கு வந்தேன்.உங்கள் ’மீட்டெடுக்கும்’ முயற்சிக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    சித்த மருத்துவம் பற்றி அறிய எனக்கு அடங்காத ஆவல் உண்டு.சில மாதங்களின் முன்னால் ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்ற அரிய தமிழர் தம் மருத்துவ நூலை தரவிறக்கி அதனை நூலாக்கி வைத்திருக்கிறேன்.

    மிகச் சிறப்பான விடயங்கள் பல அதில் உள்ளன.

    உங்களிடம் இருந்து மேலும் இவ்வாறான பதிவுகள் வர வேண்டும்.

    நமக்கெல்லாம் அது மிக்க பயனுடயதாக இருக்கும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/medicine மருத்துவ குறிப்புகளை அழகாக தொகுத்துள்ளது.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் பயனுள்ள பதிவு.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. கர்ப்பிணி பெண்களுக்கு அம்மையால் பாதிப்பு இருக்குமா? அதனால் சேயுக்கும் பாதிப்பு இருக்குமா

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...