ஜூலை 02, 2012

காய கால்ப தான்றிக்காய் (BELERIC MYROBALANS )மருத்துவ குணங்கள்     தமிழ  மருத்துவத்தில் காய கல்பம்  என்ற சொல்லாடல் அடிக்கடி கேட்டு இருக்க கூடும் சரி  காயகல்பம்  என்பதென்ன ? காயம்  என்பது உடல்  கல்பம் என்பது அழியாமல் பாதுகாத்தல்  என்பதாகும்.
எதற்கும்  வினா எழவேண்டும்  எழவில்லை எனின் தான்  ஐயமே . நாம் குறிப்பிடும் இம்  மா  மருந்து  காய  கல்ப  வகையை  சேர்ந்தது உடலை அழியாமல்  பாதுகாக்கக்  கூடியன .

தூய  தமிழ  மருத்துவத்தின் உயரிய  சிறப்பே  இவைகள் நோயில் இருந்து விடுவிப்பதோடு நோயின்றி வாழ  வழிவகை செய்கிறது.  சித்தமருத்துவத்தில் மருந்தே உணவு உணவே மருந்து  என்பது உங்களுக்கு தெரியும் .

காய கல்ப  தன்றிக்கையின் மருத்துவக் குணங்கள்


குடலுக்கு சக்தியை  கொடுக்கும்
காய்ச்சல்  நீக்கும்
பித்த தலைவலி  நீக்கும்
இரத்த மூலம்
சீதக்  கழிச்சல்
மலசிக்கல்
வாய் நீர் ஒழுகல்
கண்பார்வை  தெளிவடையும்
புண்  ஆறும்
கோடைகால  அக்கியை குணமாக்கும்
உடலினை  உரமாக்கும்
சிலந்தி விடம்  நீக்கும்
ஆண்குரிப்புன்
சீழ்மேகம்
வாதபித்தம்
இரத்த பித்தம்
தலை மயிரை வளர்க்கும்
காசம்
சுவாசம்
நினைவு  மறத்தல்
வயிற்றுப் போக்கு
வீக்கம்
பல்வலி
ஆகியவற்றை  நீக்கும் .

சிலந்தி  விடம் காமியப்  புண்  கீழான  மேகங்
கலந்து  வாரும்  வாதபித்தங்  காலோ- ட்லந்துடலில்
ஊன்றிக்காய்  வெப்ப முதிரபித்  துங் கருங்
தான்றிக்காய்  கையிலெடுத்தால்.

ஆனிப்பொன் மேனிக் கமழும்  ஒளியுமிழும்

கோணிக் கொண் வாதபிதங்  கொள்கைபோம் - தானிக்காய்
கொண்டவர்க்கு  மேகம்  அறும் கூற  அளந்தனியும்
கண்டவர்க்கு  வாதம் போம்  கான் .

      இவ்வளவு  மருத்துவக்  குணங்கள்  நிறைந்த  கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்  சேர்ந்த  மா  மருந்துகள்  தான்  சித்த மருத்துவத்தில்  நூறு  நோய்களுக்கு மேல்  நீக்கும்  மிகசிறந்த  மருந்து மட்டும் அல்லாமல்  காய  கல்பம்க  செயல் படும்  திரிபலா . இந்த முக் கூட்டு  மருந்து  திரிபலா  மூன்று ஒன்றாய்  கூடும் போது  பலன் பாலமடங்கு  கூடும்  இதைப்  பற்றி  நான் தனியாக  எழுத  வேண்டுமா ? என்ன .


போளூர் தயாநிதி 
91-94429 53140.

 சித்த மருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...