ஜனவரி 18, 2011

சிறு நீராக செயலிழப்புகள்
சிறு நீராக செயலிழப்புகள்
இன்றைய அவசர வாழ்க்கை முறை மனிதனை பாடு படுத்துகிறது . முறையில்லாத
உணவு முறை நோயாளி யாக்குகிறது எதை எப்படி திண்பது எவருக்குமே
தெரிவதில்லை . எங்கேதேடுவது வாழ்வை ? விடைதெரியாமல் வீணடிக்கிறோம் .
இருக்குமிடத்தை காணுவதற்கு சிரமப்படுகிறோம் . அனால் தேடிநோமில்லை
.
பழமைமறா பண்பாட்டைத் தேடுவோம்

எங்கும் ஓடி ஒழிந்துவிடவில்லை மனித வாழ்வு மண்ணில் புதையலாக
கிடக்கிறது தொடுவோம வாருங்கள் .
இந்திய புள்ளிவிவரம்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1 .5 இலட்சம் பேர் மிக மோசமான சிறுநீரக
கோளாறினால் பதிக்கப்
படுகின்றனர் . இவர்களில் மூவாயிரத்தைநூறு போர் மட்டுமே மாற்று சிறுநீரகம்
பெற முடிகிறது .
மாற்று சிறுநீரகம் கிடைக்காதவர்கள் டயாலிசீஸ் செய்ய வேண்டியது கட்டாயம் .
வாரத்திற்கு மூன்று முறை செய்யவேண்டி வரும் இதற்க்கு ஆகும் மருத்துவ செலவு
மிகுதி இந்த அதிகப்படியான மருத்துவ செலவினால் பத்தாயிரம் பேர் மட்டுமே
டயாலிசீஸ் செய்து கொள்ளுகின்றனர் . பெரும்பாலோர் நோவுடன் மடிகின்றனர்
என்கிறது 23 திசம்பர் 2010 புதிய தலைமுறை இதழ்

முறையில்லாத உணவும் சரியில்லாத வாழ்க்கைமுறையும்

இன்றைய வழக்கை முறை விரைவை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது . இதில் தன் வழ்வைபற்றி துளியளவும் நினைப்பதில்லை . விரைந்தோடும் நோக்கில் கிடைத்தை உண்டு செரிக்கவேண்டும் என நினைக்கின்றனர் . நம் மனித உடல் என்பது இரும்பினால் செய்யப்பட்டதில்லை .
மாறாக சதையும் எழும்பும் ரத்தமும் கொண்டதாகும் . எனவே இரசாயணம் கலந்த உணவு பழக்கங்கள் மனிதனை பாழாக்க கூடியன எனவே நம் உணவு இயற்கையானதா இரசாயணம் கலக்கப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும் . நாம் இயற்கையானது என எண்ணிக்கொண்டிருக்கும்
உணவுகள் எல்லாம் இன்றைய விரைவு உலகம் நாசப்படுத்திக்கொண்டு இருக்கிறது . வாழைபழம் ஒன்றை எடுத்துக் கொள்வோம் பச்சை வாழைபழம் போலவே இருக்கும் அனால் இப்போது மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது இதை பழுக்கவைக்க இரசாயணம் கலக்கப் படுகிறது அப்படி பழுக்கவைக்கபடுவதால் விரைந்தும் நல்ல வண்ணத்திலும் கிடைக்கிறதாம். இவற்றால் சிறுநீரகம்
விரைந்து செயலிழக்கும் என்கிறது ஆய்வுகள் . இன்றய துரித உணவுகள் சிறுநீரகத்தை மட்டுமல்ல புற்று நோயையும் உண்டாக்கும் என்பது எத்தனைபேருக்கு தெரியும் ?
சிறிய சிறிய நோய்களுக்கு எல்லாம் வீரியமிக்க மருந்துகளை உண்பதால் சிறுநீரகம் கெடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . முறையான வாழ்க்கை முறைக்கு மாறுவோம்
.
கலப்படங்கள்

இன்று மனித நேயமும் உண்மையும் மரித்துப்போன தனியுடமை அமைப்பு முறையாகிவிட்டது . எனவே இங்கு கிடைத்தவரை எல்லாம் நமதே என்ற எண்ணம் கொண்டுவிட்டனர் . எனவே இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்று வந்துவிட்டது . உண்மை , நேர்மை என்பதெல்லாம் கேலிக்குரியவனாக ஆகிவிட்டது . முறையான உணவு பழக்கமும் இயற்க்கைசர்ந்த உணவுமுறைகளும் மனிதனை நோவில் இருந்து விடுவிக்கும் .கலப்பட பொருட்களை இனங்கண்டு அவற்றை எல்லோரும் எதிர்க்க கற்போம் . ஒரு தீமை நடக்கிறது என்றால் அவற்றை அறிவுத்துறையினர் இனங்கண்டு சொன்னால் ஒட்டுமொத்த சமூகமும் எதிர்க்க வேண்டும் . இல்லை என்றால் காட்டுமிராண்டி கூட்டமாக எல்லோரும் மடிந்து போவது தவிர்க்க இயலாது . சிந்திப்போம் விழிப்போம் . நோய் வரின் தூய தமிழ சித்த மருத்துவத்தை கடைபிடிப்போம் நோய் வெல்வோம் .
வாழ்க தமிழர் கலைகள்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...