டிசம்பர் 19, 2011
நமக்குத்தேவை வலி நீக்கும் மருந்தா வலி நிவாரண மருந்தா ?
நமது உண்மையான நோக்கம் நோயில்லாத குமுகத்தை படைப்பது என்பதால் அதற்க்கான கருத்தாக்கத்தை உண்டாக்குவது முறைஎன்பதால் அது குறித்து கொஞ்சம் சிந்திப்போம் .இப்போது உடலில் அல்லது தலைவலி , அல்லது மூட்டுவலி என வைத்துக் கொள்வோம் இதற்க்கு நேரான மருந்து என்ன ? வலி நிவாரண மருந்தா அல்லது வலியை நீக்கும் மருந்தா இதை நாம் கண்டு பிடித்து விட்டால் எது சரியான மருந்து, முறையான மருந்து என கண்டறிந்துவிடுவோம் . இதில் தானே சிக்கல் நமக்கு .
மூட்டு வலி என வைத்துக் கொள்வோம் , இந்த மூட்டுவலி அல்லது தலைவலி இதற்க்கு குறிப்பிட்ட பகுதிகளில் உண்டாகும் வலியை நீக்க ( குறிப்பிட்ட பகுதில் உள்ள நரம்பு மண்டலத்தை போதையூட்டி நோய் நீக்குவது மருந்து வீரியம் குறைந்ததும் நோய் மீண்டும் வரும் ) மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கப் படுகிறது இது தற்காலிக நிவாரணத்தை கொடுக்கிறது . இந்த மருந்துகள் முற்றாக குறிப்பிட்ட வலியை நீக்குவதில்லை. தற்காலிக தீர்வை தருகிறது இந்த மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது நோய் கண்டவர் நோயிலிருந்து விடுதலை அடைவார் ஆனால் மருந்தை நிறுத்தியதும் முன்பைவிட நோயினால் மிகையாக துன்பப் படுவார் .
ஹோமியோபதி மருத்துவத்தை கண்ட சமுவேல் ஆனிமன் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்திற்கு வருவதற்கு முன்பாக சிறந்த ஆங்கில மருத்துவராவார் இவர் நீண்ட காலமாக ஆங்கில முறை மருத்துவம் செய்தவர் இவரிடம் வரும் நோயாளிகள் தொடர்ந்து ஒரே நோய்க்கு மீண்டும் மீண்டும் வந்தனர் தான் மருந்து முறையாக வழங்க வில்லையோ என எண்ணி தான் அளித்த மருந்துகளை சரிபார்த்தார் மருந்துகள் சரி. தான் சரியில்லையோ என எண்ணினார் தானும் மிகவும் சரியாக இருப்பத உணர்ந்தார் ஆக இந்த முத்துவ முறை தான் சரியில்லை இது மீண்டும் மீண்டும் நோய் கண்டவரை வரவழைக்க்றது என கண்டு அந்த மருத்துவ முறைக்கு முழுக்கு போட்டார் . இதை விட்டு ஹோமியோபதி மருத்துவத்தை தன்னுடைய வாழ்நாளில் தொண்ணுற்று ஒன்பது மருந்துகளை தன்னையே ஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்தார் .
நீரிழிவு , இதயநோய், மூட்டுவலி, இப்படி பலநோய்களுக்கு ஆண்டு கணக்கில் மருந்து எடுத்து கொள்கிறவர்களும் மருந்து கொடுக்கிறவர்களும் இங்கு உண்டு . நீண்ட நாளுக்கு எடுக்கப் படும் இரசாயணம் கலந்த மருந்துகள் பின் விளைவை உண்டாக்குகிறது என இன்றைய பட்ட மேற்ப்படிப்பு படித்த ஆங்கில முறை மருத்துவர்களே கூறத் தொடங்கி விட்டனர் .
வலி நீக்கும் மருந்துகளை விட்டு அதற்கு மாறாக தூய தமிழ மருத்துவத்தை முறையான மருத்துவர்களிடம் எடுக்கத் தொடங்கினால் முதலில் கக்கல் , கழிச்சல் மருந்துகளை கொடுத்து உடலையும் குடலையும் தூய்மையாக்கி வள்ளுவரின் குறள் போல நோய் கண்டவரின் அகவை, நோயின் நிலை ,அவரின் உணவுமுறை வழக்கம் , காலம் , போன்ற எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு முறையான மருந்துகளை வழங்குவார். இதனால் நோயில் இருந்து விடுபட்டு நோய் நீங்கி நீடுவாழ்வார் .
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்
லேபிள்கள்:
valinivarana marunthaa
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)