சித்த மருத்துவ கோட்பாடுகளை கொஞ்சமேனும் உள் வாங்கிக் கொண்டால்தான் அதனுடைய சிறப்புகள் புரியவரும் ஏனெனில் படித்தவர்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் வருவதில்லை முறையான பழமையையும் நமது பண்பாட்டையும் பேணிக் காப்பது படிக்காத வர்களினாலே செய்யப் பட்டு வருகிறது பெரும்பாலும் படிக்காதவர்கள் வறட்டுத்தனமான கோட்பாடுகளை வெறித்தனமாக பின்பற்றுவதில்லை
கோட்பாடுகள்
சித்தமருத்துவத்தில் வாதம் Anabolic forle ஆக்கும் ஆற்றல். ,பித்தம் காக்கும் ஆற்றல் Metablolic force ,கபம் அழிக்கும் ஆற்றல் Catabolic force . என்பவை முப்பெரும் உயிர்தாத்துக்கள் ஆகும் .
இந்த மூன்றும் உடலில் வளர் , சிதை மாற்றங்களை உண்டாக்குபவை . இவை முறையே (4 : 2 : 1 ) என்ற விகிதத்தில் இருக்கும் இவற்றின் இயக்கம் மனித உடலுக்கு மிகவும் தேவையானது .
மனித உடலுக்கு மிகவும் தேவையான ஏழு தாதுக்களின் கண்ணரைகளிலும் (cells ) தொழிற்படும் . மூன்று தாத்துக்களும் அளவோடு தொழிற்படும் போது கண்ணறைகளும் பிற தாதுக் களும் முறையாக பிழையின்றி இயங்கும் . அங்ஙனம் பழுதின்றி இயங்கும் போதுதான் உடல் நன்னிலையில் இயங்கும் . மாறாக மூன்று தாதுக்கள் தம்மளவில் மாறி செயல்படும் போது பிற தாதுக்களின் செயல்களும் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கண்னறைகளின் இயக்கமும் உட் சூழலும் internal environment மாறுபடுகிறது இவைகள் பழுதடைந்த சூழலே நோய் எனப்படுகிறது . இவற்றை சமநிலைக்கு கொண்டு வருதலே மருந்து எனப்படுகிறது . இந்த மூன்று தாதுக்களின் மாற்றமே நோய் என்பதை வள்ளுவமே ஈராயிரம் ஆண்டு களுக்கு முன் பதிவு செய்கிறது
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று திருக்குறள் .
சித்த மருத்துவத்தின் பின்னணியைக் கொண்டுதான் மேலை நட்டு மருத்துவ முறைகள் கடன் பெற்று இன்று மருத்துவத்தில் கொடி கட்டி பறக்கிறது ஆனால் இதை உணராத தமிழன் நோயில் வீழ்ந்து கிடக்கிறான் . நோயில் இருந்து விடுவிப்போம் .
சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .
உணர்ந்து கொள்ள வைக்க எடுத்துக்கொண்ட உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் .. நன்றிகளும் ..
பதிலளிநீக்குசில சித்த மருத்துவ கோட்பாடுகள்"
பதிலளிநீக்குமிகப் பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். ஐயா..
இனிய குழ்ந்தைகள் தின வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஐயா உங்களின் முயற்சிக்கு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
ப்யனுள்ள அருமையான பதிவு
பதிலளிநீக்குமிக அழகாக தெளிவாகவிளக்கியிருக்கிறீர்கள்
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தயா.ஆங்கில வைத்தியத்தை விட்டுவிட்டு நிறையப்பேர் சித்தவைத்தியத்தை
பதிலளிநீக்குநாடுகிறார்கள்தானே !
வருகைக்கும் சிறப்பான கருத்து களிற்கும் பணிவான வணக்கங் களும் பாராட்டுகளும் நன்றி களும் .அரசன் &
பதிலளிநீக்குஇராஜேஸ்வரி அவர்களின் குழந்தைகள் நாள் வாழ்த்திற்கும் நன்றி இருந்தாலும் எம்மை குழந்தையாக பவித்திருப்பரோ ? நாமும் குழந்தை இல்லை நமக்கும் இன்னும் ....&
மச்சவல்லவன் புதியதோர் வரவு வருக வருக &
ஐயா இரமணி அவர்களின் கருத்துகளுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றிகளும் பாராட்டுகளும் .&
ஹேமா கருத்துகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி . . சிலர் தவறான வர்களிடம் சென்று தவறான பட்டறிவை பெறுகிறார்கள் . வருகை குறைவு ஆனால் தேர்ந்த மருத்துவர்களிடம் செல்பவர்கள் முறையான வழிகாட்டலுடன் நல்ல பலனை பெறுகிறார்கள் நன்றி .