செப்டம்பர் 27, 2010

இன்றே செய்வோம்

இன்றே  செய்வோம்
வாழ்வை வளம் செய்வோம்  
நோய்க்கு  விடைகொடுப்போம் 
இலக்கை அடைந்திடுவோம் 
இன்பமே வாழ்ந்திடுவோம் . 

நோய்க்கு   காரணமாம்...
முறையற்ற  உணவுகளும் ..
தூய்மை  இலா உயிர்வளியும் .
மசான குடிநீரும் ..

பரபரப்பும்  ஆத்திரமும் ...
நோய்களை  கூட்டு  திங்கே

நீரை  உண் ...
உணவைக்குடி   நம்மவர்
கண்ட  கோட்பாடு


வெண்மை  நிற  நஞ்சாமே...
உப்பும்  சர்க்கரையும் ..
மட்டை  தீட்டிய  அரிசியும் .


சின்னத்திரை  சீரழிவும் ..
பெரியதிரை  பேரழிவும்
முட்டாளாய்  ஆக்குதிங்கே...

மயக்கம் தரும் ...
குடியும்  புகையும் ...
நமக்கெதற்கு ?

இன்றே  தொடங்கிடுவோம் ..
ஏற்றம்  தரும் 
நாம்  மருத்துவத்தை ..
சித்தமருத்துவத்தை ...
வீட்டில்  புகுத்திடுவோம் ..
 

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...