பிப்ரவரி 27, 2012

இன்றைய இளைஞ்சர்களும் ஆண்மைக் குறைவுகளும் .



          இன்றைய  பதின்  பருவத்தினர்  அல்லது அதைத்  தாண்டிய  சிறு  அகவையிலேயே   பல  நோய்களை  சந்திக்கிறனர் . எம்மிடம் எழுபது  அகவை  இளையவர்களும்  இருபத்தைந்து  அகவை  கிழவர்களும்  பாலியல்  குறைபாடு என  கூறி  வருகின்றனார் . எழுபது அகவை  இளையவர்களை  வழிநடத்துவது  எனக்கு  களைப்பைத்  தரவில்லை . சொல்லுவதை  புரிந்து கொள்ளுகிறார்கள்  நல்ல பலனளிப்பதாக  கூறி  வாழ்த்துகளையும்  மகிழ்வையுயம்   உளமார சொல்லுகிறார்கள்   ஆனால்   இந்த   இருபது  தொடங்கும்   கிழவர்களின்   தொல்லை   சொல்லி மாளவில்லை .

     

    நோயற்ற  வாழ்வு என்பது  தமிழர்களுகானது . ஏன் எனின்  இங்குதான்  மறுப்பது சாவையும்  மருந்தென லாமே  என  மரணமிலாப்  பெருவாழ்வு  என அனைத்து மெய்மங்களும் (தத்துவங்களும் )  கொட்டிகிடக்கிறன .அதை  தொடுவார் இன்றி இருக்கிறது . இன்றைய  நிலையில் பல நிலைகளில்  ஆண்மைக்குறைவு  களுக்கான  காரணங்களை  கொண்டு  இருக்கிறாகள் . இதை தன்னுடைய வாழ்நிலையை  மாற்றிக்கொள்ளுவதாலும். நோயிலிருந்து  விடுபட முடியும்.

     இன்றைய  வாழ்க்கை முறை  யாருக்காகவோ  வாழ்வது போல  வாழ்கிறார்கள்  . மயக்கப் பொருட்களைப்   பயன்படுத்தி   சீரழிகின்றவர்கள்  பலர்  (குடி ,பீடி ,லேடி  இல்லாதவன்  பேடியாம்?) பலர்  முறைதவறிய   பாலுறவு அதாவது  மிகவும்  இளமையிலேயே...  . இன்னும்  பலர்  முறைதவறிய  நடவடிக்கை  நீண்ட  நேரம்  கண்விழித்து  இருத்தல்  மற்றும்  புட்டியில் அடைக்கப்  பட்டப்  பொருட்களைப் பயன்படுத்துவதால் அல்லது இராசயானங்கலந்து  உள்ள உணவுகளை  உண்ணுதல்   எந்த  வித கட்டுப் பாடுக்களுமின்றி   நேரம் காலம் இல்லாமல்  உண்ணுதல் இப்படி   பலகேடுகளே...நோயாக  பரிமாணம்   அடைகிறது  எல்லா நேரத்திலும் பாலுறவைப் பற்றிய  சிந்தனை  கொண்டு இருத்தல்  பாலுறவு பட  காட்சிகளைப்   பார்த்துப்  பரவசமடைவது ,   இவை  எல்லாமே   மனிதனை  மிருக  நிலைக்கு  இட்டுச்   செல்லக்  கூடியவைகள்  என்பது எவருக்கும்  புரிவதில்லை .

       நமது  கருத்தியல் வாதிகள் கூட  இதை  சிற்றின்பம்  எனவும்  கூறுவர் ஒருவகையில்   நாம் சிற்றின்பம்  என எடுத்துக் கொண்டாலும்  இதே நினைவுடன்பாலுறவு  எண்ணத்துடன்    இருத்தல்  மனிதனை  நோயளையக்குமே யன்றி  வேறல்ல .  ஒருநாளில்  சில நிமிட நேரங்களை  கொண்டது பாலுறவு அதைப் பற்றியே  சிந்தித்துக் கொண்டே  இருத்தல்  பிழைதானே ?

         இன்றைய  நோய்களில்  பல புரதப்  பற்றாக்குறை  நோயாக இருக்கறது . இந்த முறையான புரதப் பற்றாக்குறை  தான்  மிகையான  குழந்தைபேற்றை  உண்டாக்குகிறது  மேலை நாடுகளில்  மாமிச  புரதம் கிடைத்து விடுவதால்   சிக்கல் இல்லாமல் போகிறது ஏழ்மை நாடுகளில்  இந்த புரதப் பற்றாக்குறையே நாம் மக்களை பாடாய் படுத்து கிறது . இந்தவகை புரதம்  கிழங்குகள் , பச்சைப் பயறு  போன்றவற்றில்  மிகையாக கிடைகிறது  இதை  எடுக்கலாம் .

      திருமணத்திற்கு முன்பாகவே  உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொள்ளுகின்றனர் . இது பலவழிகளில்  நோவைத்தருகிறது  உடலை பேணுதல் என்பது   என்னவென  புரிவதில்லை . இன்றைய ஊடகங்களும்  அவர்களை  தூண்டில்  மீனாக   இழுக்கிறது  அதன் பின்னரே  சுற்றி  தங்களையும்  இந்த குமுகத்தையும்  சீராழிகிறனர் .

    உடலை  ஒட்டி இறுக்கமான  ஆடைகளை அணிவாதல்  பாலுறவுக் குறைபாடு    உண்டாக்கும். மிகையான  புளிப்பும்  காரமும் சிக்கலை உண்டு பண்ணும் .நேரம் தவறிய  தூக்கமும்  பாலுறவை  பாழ்படுத்தும்  நாளும் வெந்நீரில்  மிகையான  வெப்பத்தில்  குளிப்பதாலும்  பாலுறவில்  நாட்டத்தை  குறைக்கும் .விந்தணுக்களை  அழிக்கும்

வாரம்  ஓர்  நாள்  எண்ணெய்க்  குளியல் செய்க.
சரிவிகித உணவு கொள்க .
பதப்படுத்தப் பட்ட  உணவுகளை  தவிக்க செய்க.
மயக்கப் பொருட்களை  நீக்குக.
குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.
கீரைகள் பழங்கள்  இரசாயணம் கலவாமல்  உண்க.
இரவில் நீண்டநேரம்  கண்விழிக்காமல்  இருக்க செய்க.

நோயும்  நீங்கும்  வாழ்வும் இனிக்கும் .

சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம். 




More than a Blog Aggregator

பிப்ரவரி 20, 2012

சூரிய ஒளிக் குளியல்( sun bath)




      குறிப்பாக  குளியல்கள்  அதிகாலையில் செய்வது   சிறப்பானது  ( வைகறைத் துயில் ) எழுதல் என்பது  மிகவும் சிறப்பான  ஒன்று என நமக்கு தெரியும் .  இந்த வைகறை  துயில் எழுதல்  ஒரு மனிதனுக்கு வழமையான  பணியாக இருந்தால்  அவன் வாழ நாளில்  நீண்ட  நோயற்ற  வாழ்வை  வாழ இயலும்  காரணம் அதிகாலையில்  உயிர்வளி  தூய்மையாக  இருக்கும் . இந்த உயிர்வளிதான்  மனிதன்  வாழ்வை  நிர்ணயிக்கிறது.

    அதுபோல இந்த குளியல் களும்  பெரும்பாலும் அதிகாலையில் இருக்கும்  ஆனால்  இந்த மருத்துவ    ரீதியான குளியல்களைப்  பொறுத்தவரை  ஆதவ  உதயத்திற்கு   பிறகும்  நீண்ட நேரம் கழித்தும்  எடுக்க வேண்டி  வரலாம்.

சூரிய  ஒளிக் குளியல் (sun bath )
    இதனை  காலை  பத்து மணிக்குள்ளும்  மாலை  நான்கு  மணிக்கு மேலும்   எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆதவக் குளியலில்  தலையும் மூஞ்சியும்  வயிலில்  படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . குளியலில் வேண்டிய அளவு  ஆடையை  குறைத்து கொள்ளலாம் . இந்த நேரத்தில் தூய்மையான நல்ல  எண்ணையை  லேசாக தடவி பின்னர்  ஆதவக் கதிர்கள் உடலில் படும்படி  குளிக்கலாம். பெரும்பாலும்  என்னதான் உணவில்  எல்லா  சத்துகளும்  இருக்கும் படி பார்த்துக்  கொண்டாலும்  நமக்குத்  தேவையான  வைட்டமின்  டி ஆதவ  ஒளியின் மூலமே கிடைக்கிறது  என்பதை நாம்  உளம் கொள்ளல்  வேண்டும்.

காற்றுக்  குளியல் (Air Bath 
     பெரும்பாலும்  இந்த காற்றுக்  குளியலுக்கு  உரிய  மதிப்பளிப்பதில்லை . காரணம் சில்  என்ற கற்று  உடலில்  நீண்ட நேரம் உடலில் பட்டுக் கொண்டே இருந்தால்  உடலில் வளிக்குற்றம் மிகும் என்பது சித்த மருத்துவத்தின்  கோட்பாடு  எனவே   இயன்றவரை  இந்த முறைக்கு நாம் மதிப்பளிப்பதில்லை .ஆனால்  தூய உயிர்வளி வேண்டிய  நிலையில் நாம் வைகறைத் துயில் எழுந்து   நாளும் மூச்சு பயிற்சி  செய்ய  உடலில்  மிகையான  உயிர்வளி மிகுந்து நோயில்லாத நிலையினைத்தரும் .  இந்த நிலையில் தான் நாம் அதற்க்கு  மூகமையான  காரணங்களை   முன்னுக்குக்குத்தாளி  உடல்  தூய உயிர்வளியை பெற   நாம்  வழி    செய்வோம் . 


     இந்த  காற்றுக்குளியலைகூட  நாம் தூய உயிர்வளியைத்தரும்  வேம்பு   புங்கன்   மாமரம் , துளசி  போன்றவை மிகையாக  இருக்கும் இடங்களில்   இந்த குளியல் களைசெய்யலாம் .

சுடுநீர்  ஒத்தடம்  தருதால்.(Hot  Fomentation 

     வெந்நீரை  கண்ணாடி  குவளையில் ஊற்றி  உடல் முழுவது  ஒற்றி எடுக்கலாம்.  மார்பு, வயிறு, முதுகு  போன்ற இடங்களில்  ஒத்தடம்  கொடுக்க  வலியை எடுக்கும். குறிப்பாக அடிபட்டு இரத்தக் கட்டு உடலில் வலி யுள்ள நிலையில் நாளும் குளிக்க இயலா நிலையில் இதை செய்யலாம். மேலும் பாதிக்கப் பட்ட இடத்தில் ஈரத்துணியை  உடலில் சுற்றி ஒத்தடம்  கொடுக்கலாம்   . வலியுள்ள  இடத்தில்  புற்று மண்ணை போட நல்ல வலி  நிவாரணியாக விளங்கும் .

                               இயற்க்கை குளியல்கள்  முற்று பெற்றது .

                             சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் 

 
More than a Blog Aggregator

பிப்ரவரி 15, 2012

நோயின்றி வாழ இயற்கைக் குளியல் வரிசை ......


                                                 தொட்டிக்குளியல்  (Tub Bath )

   தொட்டிக் குளியல் மூலம் முதுகுத் தண்டு , இடுப்பு, மற்றும் பிறப்புறுப்புகளை  தூய்மைப்படுத்துதல்  அவற்றில் உள்ள நோய்களை நீக்குக் கொள்ளல்  போன்றவற்றிக்கு  பயன்படுத்தி நலம் பெறலாம்.  ஒரு செவ்வக  வடிவ  தொட்டியில் கால்பகுதி  நீரை நிறப்பி முதுகெளும்ம்பு மட்டும் நினையும் படி  படுத்து இருந்து  அரைமணிநேரம் இருந்து குளித்துவிடலாம், அதேபோல  இடுப்பு மட்டும் நனையும்படி தொட்டியில் நீரை  ஊற்றி அதில் இடுப்பை மட்டும் நனையும்படி  செய்து  பின்னர் எழலாம்.

     ஆளுக்கு தகுந்த மாதிரி  தொட்டியின் அளவை  கூட்டியும் குறைத்தும் பயன்படுத்தி  நீர்வூற்றி தலையும் காலும் வெளியில்      இருக்கும்படி   செய்து இந்த  குளியலை எடுக்கலாம்.. இதனால் முதுகுத் தண்டு குளிர்ந்து இரத்த ஓட்டம் மிகுந்து    உடல்  சுறுசுறுப்பு  அடைகிறது  உடலின்  வெப்பம்  தணிந்து  உடலின் பகுதிகள்  துரிதமாக  பணிசெய்கிறது   இந்த குளியல் முதுகு வலி  உள்ளபோதும்  இடுப்பு வலியுள்ளபோதும்  தேவைக்கு தகுந்தபடி  எடுக்கலாம்.  

 நீராவிக்  குளியல்   (Steam   Bath ) 
       

      மாதந்தோறும்  இந்த குளியல் எடுக்கலாம். தண்ணீரில் நீலமலைத்தழை(நீலகிரி  தழை ) போட்டு  ஆவிக்குளியல் செய்யலாம் . உடலில் திசுக்களில் தேங்கி இருக்கும்   அழுக்குகுகளை  நீக்கி  வியர்வையாக  மாற்றி  வெளியேற்றிவிடும்   உடலில் தேங்கியுள்ள  கெட்ட  நீர் வெளியேறி உடல் தூய்மையடைகிறது  .
       இந்த குளியல் செய்வதால்  உடல்வலி , தலைபாரம் , மண்டையிடி   மூக்கடைப்பு , தலைவலி , தடுமன் ,( ஜலதோஷம் ) கபகட்டுமுதலிய  நோய்கள்  நீங்கும் . 

குறிக்குளியல்  (Chits   Bath  ) 

       உடல்  சூட்டினால்  தக்குதலடையும்போது  நீர் சுருக்கு உண்டாகும்  இந்த சமயத்தில்  குறிக்  குளியல் செயாலாம் . குறி  (பிறப்பு  உறுப்பு  ) ஒரு முக்காலியின்  மேல்  உட்கார்ந்து  கொண்டு   கால்களை  அகட்டி வைத்தது   பிறப்பு உறுப்பை  சில்  என்ற தண்ணீரில் கழுவ  வேண்டும்  பின்னர் வேண்டிய  அளவு நீர் அருந்த  வேண்டும்  பின்னர் உள்ளாடையை   குளிர்ந்த நீரில்  நினைத்து  கட்டிக்  கொண்டு ஐந்து  நிமிடம்  இருந்து பின்னர் அவிழ்த்து விடலாம் . நோய்  நீங்கும் .

 சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் 
More than a Blog Aggregator

பிப்ரவரி 06, 2012

வாழை இலைகுளியல் (Sun Bath through the banana leaves )

நோய் நீக்கும் மருத்துவக்  குளியல் வரிசை.௩


                  மண் பட்டிக் குளியல்  (  mud  pack )
  இந்த குளியலை மண் முடிச்சி  என கூறுவார்கள் பொதுவாக  மனிதனுக்கு  வரும்  தலைவலி , மார்புவலி , இடுப்புவலி, காய்ச்சல் , வயிற்றுவலிபோன்ற  நிலைகளில் இது பயன்படுத்தப் படுகிறது.  தூய்மையான மண்ணை குழைத்து நூல்  துணி எடுத்து நீலவட்டத்தில் கிழித்து மண்ணை அதில் குழைத்து  வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்கு கிழே அடி வயிற்றில் மண் பட்டியை வைத்து கட்டி  இருபது அல்லது முப்பது நிமிடங்கள்  வைத்து இருந்து  நீக்கிவிடலாம்..
      இந்த மண்ணின் குளிர் தன்மையினால்  அடிவயிற்றில் உள்ள இரத்த  நாளங்கள் சுருக்கமடைந்து உடலின் கழிவுகள்  எல்லாம் வெளியேறி  நச்சுநீக்கம்  உண்டாகி குடலையும் உடலையும் தூய்மையாக்கு கிறது . இந்த சூழ்நிலையில் நோய் நீங்கும் தானே ?
     இதேமாதிரி  பலநிலைகளில்  மண் குளியல் செய்யலாம்  மனிதனுக்கு  எந்த  இடத்திலகிலும்  நோய்  வீக்கம்  இருந்தால்  இந்த மாதிரி வலியும் வீக்கமும்  தீரும்.
வாழை இளைக்குளியல் (Sun Bath through the banana  leaves  )

        இந்த குளியல் வாழை  இலை முழுமையாக  எடுத்துக் கொண்டு  பகல் நேரத்தில்  ஒரு மணிக்குள்ளாக உடல் முழுவது  சுற்றிக்கொண்டு  கட்டிவிடவேண்டும்  இதற்க்கு மற்றவர்களின் துணை இல்லாமல் செய்யக் கூடாது  இந்த குளியலின் பொது  சிகிச்சை பெறுகிரவரிடம் பேச்சு  கொடுத்துக் கொண்டே  இருக்க வேண்டும் .  இப்படி . உடல்முழுமையும்  இலையால் சுற்றி  மூடி  தண்ணீர்  சிலகுவளை அருந்திவிட்டு  உடல் பகுதி வெளியில் தெரியாமல்  அரை மணிநேரம் வரை வெய்யலில்  வைத்து இருந்து  கட்டை அவிழ்த்து  விட வேண்டும்.  இதனால்  உடலில் உள்ள அழுக்குகள்  நீங்கி  உடல்  தூமையடைகிறது .

     இதய  நோய் உள்ளவர்களும் , இதய பலவீனம் உள்ளவர்களும்  இந்த முறையினை பயன் படுத்தலாம்  இதனால்  குறிப்பிட்ட பகுதி  பலமடைகிறது.சிறுநீரகங்களுக்கு  வேலைப்பளு குறைந்து  அதன்  பணி கூடுதல் ஆகிறது. இப்படி  முறையான  குளியலை செய்து  பயன் பெறுவோம் .

சித்த மருத்துவம்  காப்போம் நோய்  வெல்வோம்.
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...