பெரும்பாலும் தமிழர்களின் உணவு எல்லாமே மருந்துகள்தான் என தமிழர்களுக்கே புரிவதில்லை
இதை புரிய வைக்கவே தனியான இயக்கம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கிறது . அதனால் நாங்களே எடுத்துவிட்டோம் . அதாவது போளூர் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவி தமிழர்களின் அளப்பரிய சிறப்புகளை தமிழர்களுக்கே புரிய வைக்கத்தான் . தமிழில் என்ன இருக்கிறது இட்டிலியும் சட்டினியும்தவிற என அறியாமையில் புலம்பித்தவித்துக் கிடக்கும் தமிழ் மாடுகளுக்கு நல்ல மேய்ச்சலை பழக்குவததாக இந்த போளூர் தமிழச் சங்கத்தின் பணியாக இருக்கும்.
சித்த மருத்தவத்தில் மிகசிறந்த மருந்துப் பொருட்களுள் இந்த சுக்கும் ஒன்று ....சுக்கு என்பது உலர்ந்த இஞ்சி என நாம் சொல்லத்தேவையில்லை....
இந்த சுக்கு......
வேப்பத்தையுண்டக்கும்
பசியயைதூண்டும்
அகட்டுவாய் அகற்றும்
விலாகுத்தல்
அசீரணம்
மார்பெரிச்சல்
புளியேப்பம்
நீர்ப்பினிசம்
நீரேற்றம்
மெகவா குண்மம்
சலதோடம்
வேப்பம்
ஆசன நோய்
சுவாசம்
காசம்
சீத கிரகணி
வாதநோய்
வயிற்று உப்புசசம்
செவிக்குத்தல்
முகநோய்
சிரநோய்
சூலைவலி
கபசுரம்
சீத கழிச்சல்
செரியமைக் கோளாறுகள்
பாண்டு
வயிற்றுக் குத்தல்
கபசீத சுரம்
ஆகிய பிணிகளைப் போக்கும் தன்மை சுக்கிற்கு உண்டு .
சூலைமந்தம் நெஞ்சரிப்பு தொடமேப் பாமழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் -வாலகப
தொடமதி சரண் தொடர்வத குண்மம் நீர்த்
தோடம்ஆ மம்போக்கு சுக்கு .
என்கிறது தமிழர்களின் மருத்துவப் புதையல்
சுக்கை களிசெய்து நெற்றியிலிட தலைவலியும் கழுத்தின் மீதிட தொண்டைவலியும் புருவத்தின் மீதிட அண்மைப் பார்வைதோடமும் தீரும் .
சுக்கை முலைப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றிட நெருப்பு அனல் படும்படி காட்டினால் தலைவலி நீங்கும் .
சுக்கை அரைத்து மூட்டுகளில் பூச மூட்டு வலி குறையும்
சுக்கை வாயில் பொட்டு மெல்ல பல்வலி குறையும்
என்ன உறவுகளே தமிழர்கள் தங்களின் கலைகளைபின் பற்றுவதில் உலகிலேயே பின்தங்கி இருக்கிறார்கள் பார்த்தீர் களா நோய்க்கு மருந்து இங்கு இருக்கும் போது விடியலைத்தேடி எங்கோ அலைகிறான் தானே .
சித்த மருத்துவாங் காப்போம் நோய் வெல்வோம்