மே 16, 2011

மருத்துவ ஆய்வுகளை சித்தமருத்துவகண்ணோட்டத்திலிருந்து தொடங்குக ....
இப்போது பல மருத்துவ ஆய்வுகளை கானலாகிறது இவைகள் எல்லாமே ஆங்கில முறைமருத்துவத்தின் கண்ணோட்டத்திலேயே செய்யபடுகிறது . இவைகள் தவறானவை பிழையானவை என்கிறேன். இவைகள் சித்த முத்துவ கண்ணோட்டத்திலிருந்து தொடங்க பெறவேண்டும் என்கிறேன் . மொழி ஆய்வுகளும் மெய்மங்களும் (தத்துவம் ),பண்பாடு , கலை இலக்கியங்கள் உள்ளிட்ட எல்லாமே தமிழிலிருந்து தொடங்க படவேண்டுமே யன்றி வெறுமனே தமிழுக்கு பின் தோன்றிய மொழிகளில் இருந்து ஆய்வுகளை தொடங்கினால் எந்த முடிவும் முழுமையாக கிடைக்காது . இந்த உலகம் இந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறது.

மொழியரிஞ்சர் கள்

இன்றைய தமிழ முன்னோடியான மொழியரிஞ்ச்ர்கள் எல்லாமெய்மங்களுக்கும் (தத்துவங்களுக்கும் ) நாக ரீகங்களுக்கும் , மொழிகளுக்கும் தமிழே முதன்மையானது என சான்று காட்டுகின்றனர் . தமிழிலிருது ஆய்வுகளை தொடங்க வேண்டும் என்பது போலவே மருத்துவம் குறித்த ஆய்வுகளையும் தமிழ மருத்துவமான சித்த மருத்துவத்தில் இருந்தே தொடங்க படவேண்டும்.

சித்த மருத்துவத்திலிருந்தே ஆய்வுகளை தொடங்குக...

இன்று பல ஆய்வுகள் செய்யபடுகின்றன . இவைகள் ஆங்கில மருத்துவ கண்ணோட்டத்தில் செய்யபடுகிறது . அதாவது மனிதனின் உடலை பொறியாக (இயந்திரமாக ) பார்க்கும் கண்ணோட்டம் கொண்டது ஆங்கில மருத்துவம் . ஆனால் சித்த மருத்துவம் மனிதனின் முழுமையான உடலை ஒருநோய்க்கு ஆய்வுக்கு எடுத்து கொள்ளுகிறது . அதாவது மனிதனின் நோய் நிலையறிய எண்வகை தேர்வை சித்த மருத்துவம் கடைபிடிக்கிறது . அதேபோல சித்த மருத்துவம் மனிதனின் உடல் அமைப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது .

மனித மூன்று வகை உடல்கள் ...

சித்த மருத்துவம் மனிதனின் உடல் அமைப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது அதாவது
வளி (வாதம் ) , அழல் (பித்தம் ) , ஐ (கபம் ) மூன்று வகை உடல்களையும் பருண்மையாக ஆய்வு செய்து
விளக்கிறது இந்த மூன்று வகை உடல்கள் இவற்றிற்கு உரிய குணன் நலன்கள் இந்த உடல்களுக்கு உரிய உணவு பழக்க வழக்கங்கள் என பருண்மையாக பட்டியலிடுகிறது சித்தமருத்துவம் . இப்படி இருக்கையில் ஆங்கில மருத்துவமோ மனிதனை பொறியாக (இயந்திரமாக ) கணக்கிட்டு ஆய்வுகளை செய்கிறது .

அறிவியல் விதிக்கு பொருந்தாதது...

வளி (வாத ) வாகு உடல் என எடுத்து கொள்வோம் . இந்த வளி (வாத ) வாகு உடலுக்கு என பல நோய்களை பட்டியலிடுகிறது "" காணப்பா வாதம் மீறில் கால்கைதான் வலிக்கும் நோவும்..."" என உடல் வாகுக்கு ஏற்ற நோய்களை பட்டியலிடுகிறது வாத வாகு உடல் கொண்டோர் கிழங்கு வகைகள் எடுத்து கொண்டால் நோய்கள் மிகையாகும் என்பது சித்த மருத்துவ விதி இது உண்மையும் அறிவியல் அடிப்படையில் ஆனதும் கூட ஐ (கப ).வாகு உடல் கொண்டோர் உப்பையும் , இனிப்பையும், புளிப்பையும் குறைத்து உண்ண பரிந்துரைக்கிறது .காரணம் இவைகள் நோயினை மிகையாக்கும் என்பதால் . இப்படி இருக்க குறிப்பிட்ட மக்களை ஆய்வு செய்கிறேன் என ஆங்கில மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்களின் ஆய்வு முடிவுகள் தவறு உண்டாக்க வாய்ய்பு உள்ளது என அறியலாகிறது .

தமிழிலிருந்து....

ஒரு மருந்தை ஆய்வு செய்ய மனிதனின் உடல் வாகை அறிந்து ஆய்வு செய்தால் உண்மைகள் புரியும் சித்த மருத்துவ கண்ணோட்டத்தில் தொடங்க பட வேண்டிய மருத்துவ ஆய்வு முடிவுகள்நாடி நடை

பொருந்துமோ ருந்திக் கீழே
புகன்றேதுஞ் சுழியைப் பற்றி
எழுந்ததோர் நாடி தானும்
எழுபத்தி ராயி ரந்தான்
தெரிந்ததோ ரிவற்றில் பத்துத்
தசநாடி இவற்றில் மூன்றும்
பரிந்தத்தோர் வாத பித்தம்
படர்ஐயும் அறிந்து பாரே !

மனித உடல் 72 இலட்சம் நாடிகளை கொண்டது . அதை குறுக்கி 72 ஆயிரம் நாடிகளாக பகுத்தனர் அதையும் துய தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் எண்ணிக்கை மிகுதி என்பதால் இவற்றை கணக்கிட இயலாது என பத்து (தச) நாடிகளை கொண்டனர் இதுவும் கணக்கிட இயலாது என்பதால் எளிமையாக கணக்கிட மூன்று நாடிகளை எடுத்துக்கொண்டனர்.

மூன்று நாடிகளும் ஒன்பது வகை மனித உடலும்

இப்படிமனித உடலை மூன்று நாடிகளாக பகுத்து மனித உடலின் நோய்களை கணக்கிட வளி(வாதம்
) அழல் (பித்தம் ) ஐ (கபம் ) என குறுக்கி வகைபடுத்தினர் .இவற்றினூடே நுட்பமாக தொந்தம் என்பதையும் கணக்கிட்டனர் .வாதத்தில் வாதம் ,வாத்தத்தில் பித்தம், வாதத்தில் கபம் , என மனித உடலை ஒன்பது வகையாக கணக்கிட்டனர் .
இந்த உடல் வகை மனிதர்கள் ஒருநோய்க்கு ஒரேவித மருந்து ஏற்று கொள்ளது என பருண்மையாக ஆய்வு செய்து கண்டறிந்தனர் சித்தகள் .அதேபோல எல்லோருக்கும் எல்லாவகை உணவுகளும் பொருந்தாதது என்பது சித்த மருத்துவ கோட்பாடு .
வளி (வாத ) உடல் குளிர்ந்து காணப்படும்.. அழல் (பித்த )உடல் சூடாகி காணப்படும் .ஐ (கப ) உடல் செழுமையுடன் வியர்த்து காணப்படும் என மனித உடல் வகையை பகுக்கிறது . இவற்றினுடன் தொந்த வகை உடல் இந்த உடல் வகைகள் முறையே ஒரேவகையான மருந்து களையும் ஒரேவகை உணவுகளையும் ஏற்றுக்கொள்ளுவதில்லை என துல்லியமாக பட்டியலிடுகிறது சித்த மாத்துவம் .
ஆக முறையான உணவுகளை எடுத்து கொண்டால் நோயிலிருந்து விடுபட முடியும் என்பது சித்தமருத்துவ கோட்பாடு .
அனால் ஆங்கில முறை மருத்துவ ஆய்வுகளில் மனிதர்கள் என்கிற வகையில் பலரை ஆய்வுக்கு (சித்த மருத்துவ கண்ணோட்ட முறைப்படி ஆய்வுக்கு ) உட்படுத்துவதில்லை . இது அறிவியலுக்கு முரணாகவே இருக்கும் என்பது எமது கோட்பாடு .

உணவுகளும் சுவையும் ....

இனிப்பு சுவையை எடுத்து கொள்வோம். இந்த இனிப்பே உடலின் ஏழு தாதுக் களையும் வளர்க்க்கும் மனித உயிரை வளர்க்க கூடியது உறுதிபடுத்தக் கூடியது. வளி (வாதம்) ,அழல் (பித்தம் ), இவற்றை
போக்கி உடல் எரிச்சல் , மயக்கம் போக்கி நாவரட்சியை தணிக்க கூடியது .

இனிப்பு சுவை எண்ணெய் பசை உடையது .செரிப்பதக்கு கடினமானது. இந்த சுவை கொண்ட உணவுகளை ஐ (கப ) வகை உடலினர் எடுத்து கொண்டால் நோயை மிகையாக்கும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு . இப்படி ஒவ் ஒரு உணவும் ஒருமாதிரியான குணத்தை கொண்டிருப்பதால் ,
ஒரே மாதிரியான உணவு முறை மனிதனுக்கு நோயை உண்டாக்கும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு .

சித்த மருத்துவ கண்ணோட்டத்தின் படி ...

மூன்று வகை நாடிகளின் படி மனிதனை தனித்தனி குழுக்களாக பிரித்து அவர்களின் உடல் வகைக்கு ஏற்றவகையில் பிரித்து ஒருமருந்தையோ அல்லது உணவையோ , கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும் .நாடிகளின் படி மனித உள்ளமும் வேறுபட்டு இருக்கும் என்பது சித்த மருத்துவம் கூறும் கோட்பாடு . ஆக மனித உடலை சித்த மருத்துவ கோட்பாட்டின் படி உடல் வகைக்கு ஏற்ற படி பிரித்து ஆய்வுகள் தொடங்கினால் மனித இனம் அடைய போகும் பலன் எண்ணிலடங்காத வகையில் இருக்கும் என்பது எனது எண்ணம் .அறிவுலகமே இனி சித்த மருத்துவ கோட்பாட்டின்படி உடல் வகைக்கு ஏற்ற வகையில் பிரித்து ஆய்வுகளை மேற்கொண்டால் நல்லதுதானே ?

பழமையை காப்போம் புதியன வெல்வோம் !More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...