மே 28, 2012

மூப்பைத் தவிர்க்கலாமே வரிசை 3    இந்த மூப்பைத்  தவிர்க்கும் படியான  விரிவான செய்தி  பல பக்கங்களில்  முழுமையாக வழங்கினால்தான்  சிறப்பாக உள்வாங்க இயலும்  இருந்தாலும் படிப்பவர் எந்த  கோணத்தில் உள்வாங்கிக் கொள்கிறார்  என நமக்கு புரியவில்லை ஆக்கங்களை வெறுமனே படிப்பது  என்பது  விமர்சனக் கண்ணோட்டம் இல்லாமல்  எந்த கேள்வியும்  இல்லாமல்  படிக்கப் படல்  ஒன்று புரியவில்லை  என்றும் பொருளாகிவிடும் அல்லது கணிசமாக  படிக்கப் படுகிறது என்ற கோணத்தில் நாம் அணுகினால்    அதுகூட பிழையாகிவிடும்  இருந்தும்  எழுதுவது  கடமை என எண்ணி பதிவு செய்கிறோம்.

                 உலகினுக்கு வள்ளுவம் கொடையாக தந்தது  கணக்கில் அடங்காதவை  மருத்துவத்தையும் விட்டு வைக்காத வள்ளுவம்

  மிகினும் குறையினும்  நோய் செய்யும்நூலோர்
 வளி  முதலாக   வென்னிய மூன்று 

     என மக்களுக்கு சிறந்த அறிவியலை போதிக்கிறது  இது நாடிகளை குறித்தான   செய்தியாக மட்டும் கொள்ளாமல்  முறையில்லாத உணவு பழக்கங்களையும் நீக்கி  முறையான உணவுகளையும்  அளவுடன் கொள்ள வேண்டும் என எடுத்துக் கொள்ளவேண்டும்  உலகின் முதலில் தோன்றிய  அறிவியல்  நமது சித்த மருத்துவம் என்பது எதைனைபெருக்கு தெரியும்?வள்ளுவம் மட்டும் அல்லாமல்  பல சித்தர்கள்  நமக்கு அருளியது கோடிக் கணக்கனவைகள்   தேரையர்   என்ற சித்தர்
தின்னமிரடுல்லேசிக்கலடக்காமல்...
பெண்ணின்பால் லோன்றைப்  பெருக்காமல்... உண்ணுங்கால்  நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம் பேருரைக்கில் போம் பிணி  என்கிறார்

நோய் வந்தபின்  தீர்க்கும்நமது உயரிய  சித்த மருத்துவம்   முறை நம்மண்ணில்  வேர்விட்டு  ஆலமரமாக  செழித்து விளங்கிய போதும் கூட  நோய் வராமல்  காத்துக் கொள்ளும் முறை  சித்த மருத்துவத்திர்க்கே  உரியது

பாலுன்போம்  எண்ணைப் பெறின்  வென்னீரில்  குளிப்போம்
பகற்ப் புனறோம் பகற்றுயிளோம்  பருவமூத்த வேலன்சேர் குழளியரோடு இள வெய்யிலும்   விரும்போம்  இரண்டு  அடக்கோம்  ஒன்றை  விடோம் இடது  கையிர்ப்  படுப்போம் .
மூலஞ் சேர்  கரி நுகறோம்  மூத்த தயிர் உண்போம்  முதனாளிர்  சமைத்த கரி அமுதெனினும்  உண்ணோம்   பசித்தொழிய  உண்ணோம்

    இப்படி செய்தால்  எமனுக்கென்ன வேலை  நாம் இருக்கும் இடத்தில்  எவ்வளவு உயரிய அறிவியல்  தமிழன் கடைபிடித்தானா   சொன்னவர்களை மதித்தானா   போற்றினான?  இல்லை இன்றவாது செய்கிறானா செய்வானா?   தமிழன் நோயாளி  ஆகிக்  கொண்டு  இருப்பதற்கு அடிப்படை  காரணம்  புரிகிறதா? நோய் நீங்க  வேண்டுமா ? நோய்  வெல்ல வேண்டுமா?
தமிழன்  உலகில்  உயரிய  இடத்திற்கு  செல்ல  வேண்டுமா ? தொடர்ந்து  வாசிப்போம்  அதுவரை ....

சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் ....
More than a Blog Aggregator

மே 21, 2012

மூப்பை வெல்லலாமே வரிசை 2        மனித உடல்  அமைப்பு என்பது  கோடான கோடி உயிரிகளைக்  (செல்களைக் ) கொண்டது  என்பதை நாமறிவோம்  அந்த உடலை உயிர் ஆற்றலை  முழுமையாக காக்கிறார்களா  என்றால்  இல்லை இல்லவே இல்லை என  மறுப்பச்சமின்றி  கூறலாம்  இன்றைய  தனியுடமை  வாழ்க்கைமுறை மனிதனை பாடாய் படுத்துகிறது  என்பது  எத்தனைபேர்  உணர்ந்து கொண்டர்கள்  என்பது  ஆய்வுக்குரிய செய்தி .இந்த விரைவான வாழ்க்கைமுறையில் பொறுமை  என்பது கொஞ்சமும் இருப்பதில்லை . இந்த பரபரப்பும் விரைவும் மனிதனை நோயாளி ஆக்குகிறது  என்பது  ஏன்  புரியவில்லை ? காரணம் இன்றைய சமூக அமைப்பு  அவனை நாய்  கழுத்தில்  கட்டிவிடப்பட்டு  விரைந்து ஓட்டப் படுகிற நிலையில்  கொஞ்சமும்  வெட்கமின்றி ஓடுகிறான் . இதுதான்  வாழ்க்கைமுறை  என  எண்ணுகிறான் . சரியானதை சரியானவர்கள் சொல்வதை ஏற்கும் நிலையில்  அவனில்லை  இதுதான்  இன்றைய மூகாமையான  சிக்கல் . புரிய வைத்து விட்டால்  ....

       இன்று நாம்  தமிழர்களை  வாழ்கை முறையை மாற்றி  முழுமையாக வாழ பழக்குகிற  வாய்ப்புகளைத் தேடி தருகிறோம்  எங்கு  தவறுகிறான்  எங்கு  தடுமாறுகிறான்  என  புரிய வைக்கும் முயற்ச்சியில்  ஈடுபட்டு  வருகிறோம் .  இதற்காக  விடியலை உடைப்போம்  என்ற நமது  ஒரு சிறிய அளவிலான புத்தகம்  அச்சேறாமல்  தமிழர்களுக்காக  காத்து கிடைக்கிறது  பொருளாதார காரணகளினால்....  . வரும் போது  தமிழர்கள் விழிக்கும்  முறைகளை சிந்திப்போம்.

கற்பம்  தின்னலாமா ?
      ஆமாம் சித்தர்கள் கூரிய படிக்கு  கற்ப மருந்துகளை  சித்த மருத்துவர்களின்  கைவண்ணத்தில்  கண்டறிந்த  வற்றை தின்ன பார்க்காலாம் .... அனால்  அதற்கும் ... சில  கட்டுப் பாடுகளை வைத்துள்ளனரே  சித்தர்கள்  அது என்ன?

            காணாது சித்தர்க்குக்  காயம் வலுநிற்க
            ஏணாகாத் தின்ன விரைந்தமுறை  கேளு
            ஈணாக வயது இருபதில் மண்டலம்
            பூணா வறுபதில் போல்ரொட்டித் தின்னிடே .

    சித்தர்களைத்  தவிற மற்ற பேர்களுக்கு காயம்  (தேகம் ) அதிக நாட்கள் திடமாக நிற்காது  ஆகவே கற்ப்பம் உண்ணும் முறையைக் கேள்  இருபது வயதில் கற்ப்பங்களை ஒரு மண்டலாம்  வீதம் உட்கொள்ள  வேண்டும் ஆனால்  அறுபது  வயதை கடந்தால்  கற்பங்கள் இரண்டு மண்டலம்  தின்ன வேண்டும்  என்கிறார்  திருமூலர் .

         இன்றைய நிலையில்  இந்த கற்ப மருந்துகளைத்  தின்னும்  நிலையில்   இல்லை   தின்றாலும்  பலன் தரும் நிலையில்  மனித உடல் இருக்கிறதா  என எண்ணிப் பார்க்க வேண்டும்  இந்த இடுகையின் முதலில் குறிப்பிட்டதைப் போல  மனித உடல் கோடானு கோடி  செல்களின்  கட்டமைப்பு  என்பது  நாமறிவோம் . ஆனாலும்  முறையில்லாத  வாழ்க்கைமுறை  முறையில்லாத வாழ்க்கைமுறை  போன்றவற்றினால்  வழிதடுமறிப்  போயிருக்கிறான்  தமிழன்  அவற்றில் இருந்து மீண்டு உடலில்  தேங்கியுள்ள  இதளியங்களையும்  (இரசாயணம்)  தேங்கியுள்ள  நச்சுக் களையும்  நீக்கிக்  கொள்ள  வேண்டும்  அப்போதுதான்  உடலை  நாம் விரும்பியபடிக்கு மற்ற முடியும்  என்றும் இளமையாக  இருக்க முடியும் .  

          ஆமே இக்கற்ப்பம் அறிந்தவர் கொள்ளுவார்
          காமே விகாரத்தில் கசப்பென்பார் காட்டதே
         தாமே  புளிப்பு  தள்ளட்டால்  பொய்யாகும் 
        காமேவி  யுண்டது  நாடோர்க்குஞ்  சொன்னேன் .

       திருமூலர் மனிதனை  முறைப்படுத்துகிறார்  நான்  கூறும்  கற்ப  மருந்துகளை  அறிந்தவர்  உண்பார்கள் . ஆனால் உலா வாழ்க்கையில்  சஞ்சரிப்பவர்கள் எதிர்ப்பார்கள் / தூற்றுவார்கள் .
அதனால் இதை அவர்களுக்கு  காட்டதே  புளிப்பை நீக்காமல் கற்பத்தை உட்கொண்டால்  காய சித்தி  பொய்யாகும்  கற்ப முறைகளை காவி உடுத்தி  காட்டை நோக்கி செல்பவர்களுக்காக  சொன்னேன்  என்று அறி. என தெளிவாக்குகிறார் .

முதலில்  வள்ளுவத்தை  உள்வாங்கிக்  கொள்ளவேண்டும்  அதாவது வாழ்க்கைமுறையை  முறையாக  கட்டமைத்துக் கொண்டால் நோய் விலகும் அல்லவா ? அதைத்தான்

         மாறுபாடு இல்லாத  உண்டி மறுத்துண்ணின்
         ஊறுபாடு  இல்லை உயிர்க்கு  என்கிறார் .

ஒன்றுகொன்று  முரண்பட்ட உணவுகளை ஒதுக்கி அளவிற்கு மிகாமல் உண்டு  முறைப்படி  வாழ்கிறவர்க்கு நோய்  இல்லை என்கிறார் . எவ்வளவு  தெளிவான பார்வை  ஈராயிரம்  ஆண்டு களுக்கு முன்னதான தமிழர்களின் அறிவியல்  என்பதை  நாம் சிந்திக்க வேண்டும்
மேலும்  அடித்த பதிவிலும்  பகிர்ந்து கொள்வோம்   அதுவரை ....

சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம்
More than a Blog Aggregator

மே 14, 2012

மூப்பை வெல்லலாமே
     இன்று   சித்த  மருத்துவத்தின்  முழுமையான  பரிமாணத்தை  பெரும்பான்மை  மக்கள்  புரிந்து  கொள்ள  வில்லை  அல்லது  புரிய  வைக்கப்  படவில்லை  நானூறு  ஆண்டுகால  அடிமைசிந்தனை தமிழனை  மிகையாகவே  பாதிக்கச்  செய்து   விட்டது  அதனால்  தான்  தமிழில்  உள்ள  சிறப்புகளை  தேடிதேடித்  தந்தாலும்  அவனுக்கு  செரிக்க  வில்லை  தன்னுடைய  இனத்தின்  அறிவை   பலத்தை  அவனால்  புரிந்து  கொள்ளப்  படவில்லை   மருத்துவத்தை  எடுத்துக்  கொண்டால்  உலகினுக்கே  சித்த  மருத்துவம் கொடுத்ததது   எண்ணிலடங்கதவைகள்   இருந்தாலும்  தமிழன்   அடிமைத்தனத்திலேயே   கிடக்கிறான்  என்றால்  நானூறு  ஆண்டுகளின் அடிமைத்தன  மிச்ச  சொச்சம்தனே  ? அதனால்தான்  நோவில் வீழ்ந்து கிடக்கிறான்

      மூப்பை  தவிர்க்கலாமே  என  எழுதிவிட்டு  அறவுரை  கூற தொடங்கி விட்டீரே  என  கேட்பது புரிகிறது சிந்திக்க தெரியாதவர்கள் சிந்தனையை  ...  தமிழில் உள்ள அறவியலை...  புரிய வைப்பதர்க்குதான் . மனிதம் மீண்டும்  மரணத்தை இளமையிலேயே  சந்திக்க தொடங்கி விட்டன இது அவனின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதானே...  உன்னத்தெரிந்தவனுக்கு நோயில்லை என்பார்கள் . அதுபோல நீடுவாழும் நெறியை உங்களுக்கு  அறிமுகப் படுத்துவது எனது தேவையாகிவிட்டது உலக மருத்துவ  முறைகளில் சிறந்த மருத்துவம் சித்த மருத்துவமே என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை  இதில்  உள்ள சிறப்புகளைதனே  தமிழன் தொலைத்துவிட்டான்  அதைத்தான் அறிமுகப் படுத்துகிறேன் .

    சித்த மருத்துவத்தில்  நூற்றிஎட்டு  கற்ப மருந்துகள்  உள்ளது அதாவது கற்பம் என்றாலே  அழிவில்லாத   என்ற  பொருளை உடையது  இந்த உடலை அழியாமல் கக்கும் மருந்து என்பது
பொருள் இதையும் கூட

        மூலிகைக் கற்ப  முயன்ற அறுபத்தும்
        பாவி யுபரசம்  பாங்காய்  அறுபது
       வாழிய சூதமும்  தங்கம் மிகரண்டு
        யொலி யொருநூற்றுப் பத்திரண் டொன்றே.

      உடலை திடப்படுத்தி உயிரை நிலைக்கசெயும்  சக்தி கொண்ட  கற்பங்கள்  நிறைவே உள்ளது  ஆனால் அவற்றில் மிகவும் மூகமையனது கர்ப்பங்கள் மொத்தம் நூற்றி இருபதொருவகைகள்  உள்ளது இதில்
மூலிகைகள் அறுபதும் உபரசங்கள் அறுபதும் தங்கமும் இரசமும்  சேர்ந்த கர்ப்பம் ஒருவகையும் அடங்கும் என்கிறார்  திருமூலர்    இவற்றை முறைப்படி  பயன்படுத்த  வேண்டும் என்றாலும்  அதற்குரிய கட்டுப்பாடுகளை  கடைப்பிடிக்க வேண்டும்.

       உடலை  கட்டுக் காப்புடன் வைத்து  கொள்ள வேண்டும்  உணவை  முறைப்படி முறையான உணவை  முறைப்படி  எடுக்க வேண்டும்.

                அண்டம்  சுருங்கில் அதற்கோர்  அழிவில்லை
              பிண்டம்  சுருங்கில் பிராணன் நிலைபெறும்
                உண்டி  சுருங்கில் உபாயம்  பலவுள
                  கண்டம்  கருத்த  கபாலியும்  ஆமே .

      ஒரு மனிதனுடைய உடல் இளைத்து விட்டது என்று வருந்த வேண்டியதில்லை. உடல் இளைத்தால் நாம்  நீண்டநாள் வாழலாம்.உடலுக்கு அழிவில்லை. வயிறானது பெருத்து இருந்தால் மூச்சு  விடுவதற்கு சிரமப்படுவான் .வயிறு சிறுத்து இருந்தால் மூச்சுவிட  ஏதுவாகும் உணவு குறைத்து உண்ணும்போது உடல் எளிதாக  இயங்கும். அதாவது  உயிர்ப்பற்றலை முறைப்படுத்தி  மூச்சுக் காற்றை முறைப்படி பயன்  படுத்த  உயிர் நிலைபெறும்  மூச்சை  முழுமையாக உள்வாங்கி  வெளிவிடும்   ஆமை  ஆயிரமாண்டுகள்  வாழுகிறது  மூச்சை  விரைந்து செலவழிக்கும் உயிரினங்கள் விரைந்து  மரணத்தை  தழுவுகிறது .

    மூச்சை  அடக்கும்  வித்தையை  திருமூலர்  அழகாக  விளக்குகிறார்  இந்த  சிறந்த முறையை  கடைபிடிக்கும் போதுதான்  உயிர்ப்பாற்றல்  கூடும்

                      ஏற்றி  இறக்கி இருகாலும் பூரிக்கும்
                      காற்றைப்  பிடிக்கும்  கணக்கறி வாரில்லை
                      காற்றை பிடிக்கும்  கணக்கறி  வாளர்க்கு
                      கூற்றை  உதைக்கும்  குறியது  வாமே .
 
      இங்கு கூற்று  என்பது எமன்  என்று  நம்மக்கு தெரியும்  ஆக மரணத்தை வெல்லும்  மா  மருந்து
 காற்றை  அதாவது மூச்சுப் பயிற்சியை  முறைப்படி  செய்யும் போது  கிடைக்கிறது  என்பது  உண்மைதானே .        வளரும் அடுத்த  இடுகையில்  விரிவாக  சிந்திப்போம் . அதுவரை

சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம்  
More than a Blog Aggregator

மே 07, 2012

அயோடின் (ayodin salt) உப்பே தப்பு ... தமிழா என்ன செய்யப் போகிறாய்?


    அண்மையில் கலப்பட  உப்பு  தடைச்  சட்டத்தை  நடுவணரசு  முன்வைதத்தாம்( நீண்ட  நாளாகவே  வந்து விட்டது)  இது யாரை  பாதுகாக்க  அல்லது  யாரை  அழிக்க  என நீங்கள்தான்  முடிவு  செய்து கொள்ள வேண்டும் .

     முன்பு எல்லாம்  எதாவது ஒரு  பொருளில்  கலப்படம்  செய்தால்தான்  தவறு என  அரசு குறைகூறும்  . இன்று  கலப்படம் செய்யவிட்டாலே  கம்பி  என்ன வேண்டி  இருக்கும்  இது  எங்கோ  வெளிநாட்டில்  இல்லை  இந்தியாவில்தான் . அதும்  தமிழன் என்றால்  அவன் ஒரு மனிதனே  இல்லை  ஒரு மலையாளியோ  அல்லது  சீக்கியனோ  சின்ன  எறும்பு  கடிபட்டு விட்டால் கூட  திருவாளர்  பரிசுத்தம்  ஓடோடி  வருவர்  அனால்  தமிழன் .... அவன் கிடக்கிறான் விடுங்கள் ... என .... தூங்க  தொடக்கி விடுவார் .

      உப்பு  இயற்க்கை  அன்னையின் செல்லப்  பிள்ளையான  ஆதவனின்  பார்வைப்  பட்டு கடல் நீரே  உப்பகிவிடுகிறது . இந்த உப்பை அப்படியே  விற்றால்    கலப்படமாம் . கூடவே  கொஞ்சம்  அயோடினை  கலந்து விட்டால்  அது  நல்ல உப்பு ? இது சரியா என யாரவது கேட்டீர்காளா இல்லைதானே   கொஞ்சம்  உங்களின்  இரத்தத்தை  சோதித்துப்  பார்த்துக்  கொள்ளுங்கள்  கப்படமான  இரத்தம்  எதையும் சிந்திக்காது  ...

        அயோடின் சத்து குறைபாட்டுடன்  பிறக்கும்  குழந்தை மந்தத்தன்மை  கொண்டு இருக்கும்  என இன்றைய  மருத்துவம்  கூறுகிறது . இது  பத்தாயிரத்தில் ஒன்று  என்ற  விகிதத்தில்தான்  அதுமட்டும் அல்ல  இந்த அயோடின்  குறைபாடு  மலைப் பிரதேசங்களில்  தான்  இந்த    மிகையாக  இருக்கும். இதை  தடுக்க கருவுற்று இருக்கும்  பெண்களுக்குஅயோடின் கொடுக்க வேண்டும் .

         இதை விட்டுவிட்டு  குறைபாடு இல்லாத  வர்கள்  எல்லோரும்  அயோடின் கலந்த   உப்பை  தின்று  நோயை  பெற்றுக் கொளுங்கள்  என கூறுவது  அறிவுடைமையா ? என  கொஞ்சம்  சிந்திக்க  வேண்டாமா? அது சரி  இந்த அயோடின்  உப்பை தின்று தான் தொலைப்போமே   இதை ஏன்  வேண்டாம்  என  கூறுகின்றார்கள்  என  நீங்கள்  கேட்பது புரிகிறது இந்த  அயோடின் கலந்த உப்பை தின்று  தீர்ப்பதால் பல்வேறு நோய்கள் நம்மை தாககுகிறதாம். அதை தெரிந்துகொள்ள  நீங்கள்  இந்த கட்டுரையை  முழுமையாக படிக்க வேண்டும் . நமது  இடுகையை  எப்போதுமே  முழுமையாக  படித்தால்தான்  என்ன நோக்கத்திற்காக  எழுதப் படுகிறதோ  அது முழுமையாக  புரியும்.. படிக்கின்றீர்களா...?

      இந்த  அயோடின்  கலந்த  உப்பைத்  தின்பதால்  கழுத்து வீங்கித்  தொங்குதல், சிறிது நடந்தாலும்  மூச்சு  வாங்குதல்  எடைக்குறைவு , பசி இன்மை , கை , கால் , நடுக்கம்  என பல  நோய்கள் தாக்கி இருக்கிறதுஎன தமிழ நாடு   அரசு பொது மருத்துவ மனை நாளமில்லா சுரப்பிகளின் பிரிவின் தலைவர்  கூறுகிறார் .மேலும் எவ்வளவு   . எவ்வளவு  சாப்பிட்டாலும்  பசி அடங்காது ...  80   கிலோ  இருந்தவர்கள் கூட  நாற்பது  நாற்பத்தைந்து  கிலோவிற்கு வந்து  விடுவார்கள்  என  இதே  போல  பெண்களும்  இளம்  அகவையில்  இருந்து அறுபது அகவை  வரை  கழுத்தில் அறுவை  சிகிச்சை  செய்யப் பட்டு கைகள் நடுங்கி , உடல் மெலிந்து கண்கள்  வெளியே  தள்ளி   பெரிய நோவில் வீழ்ந்து கிடப்பதை  சான்று களுடன்  கூறுகிறார் .

      தைராய்டு  என்பது நம்  கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு நாமில்லா  சுரப்பி  இது  தைராக்சின்  டி3 ,டி 4  என்ற ஹார்மோனை  சுரக்க செய்கிறது .இது  அளவோடு சுரக்க வேண்டும் . எந்த அளவிற்கு  சுரக்க வேண்டும்  என மூளையின்  பிட்யூட்டரி சுரப்பியில்  சுரக்கும்  தைராய்டு  ஸ்டி முலேட்டிங்  ஹர்மன் கட்டுப் படுத்து  கிறது  தைரசின்  குறைபாடு இருந்தால்      அதாவது குறைவாக  சுரந்தால் அது ஹைபோ  தைரடிசம்  இதன் பதிப்பால் குழந்தை  மூளை வளர்ச்சி  குறைந்து காணப்படும். இந்த குறைபாடு தமிழகத்தை ப்ருத்தவரை மிகவும்  குறைந்த அளவிலேயே  காணப்படுகிறது . எங்கு குறைந்து காணப்படுகிறதோ  அங்கு கண்டு  இந்த  அயோடினை  கொடுக்கலாம்.

         ஒரு மனிதனுக்கு   அயோடினின்  தேவை மிகவும் குறைவு  அதாவது எழுபது  அகவை  நிரம்பிய  ஒருவர் அவர் வாழ்நாளில்  ஒரு  தேக்கரண்டி  அளவு தான் .  ஆனால் இதை நாளும்  எடுத்துக் கொள்வாதல்  எதிர்கால  குழந்தைகள் முதல் எல்லோருக்கும்  ஜீவனில்  ஆட்டோ  இம்யூன்  தைராய்டைஸ்  என்ற  நோய் தாக்க வாய்ப்பு  இருக்கிறது என்கிறார்  அரசு  பொது மருத்துவர் . அளவுக்கு  மிகையான  அயோடின் மனிதனின் தைராய்டு  சுரப்பியை  சிதைக்கும்    சிதைவுற்ற  அந்த செல்கள் இரத்தத்தில் கலந்து விடுகிறது.  உடனே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது தைராய்டு செல்லுக்கு எதிர்ப்பான நோய் எதிர்ப்பு பொருளை (அன்டிபாடிஸ் ) உற்பத்தி  செய்து விடுகிறது அந்த நோய்  எதிர்ப்பு பொருளானது கொஞ்சம் கொஞ்சமாக தைரய்டை அழித்துவிடும் . முழுவதும் அழிந்து விட்டால்  வாழ்நாள் முழுவதும்  தைரக்சின் ஹார்மொனுக்காக மருந்து எடுக்க  வேண்டும்    . நோய் முற்றிய நிலையில் அறுவை  சிகிச்சைதான்  தீர்வாம் ... தேவையா  முறைய இயற்கையாக கிடைக்கும்  உப்பை தின்பதை விட்டுவிட்டு டாட்டா வையும்  அம்பானிகளையும்  வாழ வைத்து  தமிழன்  நோயாளியாக வேண்டுமா ? சிந்திப்பாயா தமிழனே ?.......
சூடு  சுரணை உள்ளவன்  போராடி  பெறுகிறான்  இல்லாதவன்  நோயில் வேழ வேண்டியதுதானே ?

சித்த மருத்துவங் காப்போம்  நோய் வெல்வோம்

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...