குளிர்காலம் என்றாலே சில நோய்களுக்கு கொண்டாட்டம் என முன் இடுகையில் எழுதி இருந்தேன் இப்போது பல இளசுகள் பதின் பருவத்தினர் (டீன் ஏஜ் ) இந்த பொடுகு தொந்தரவோடு வருகிறார்கள் . இந்த நோய்க்கு காரணம் முதலில் முறையில்லாத உணவுப் பழக்கம்தான் என நாம் அறிந்து கொள்ள வேண்டும் பழங்காலங் களில் முறையான உணவுகளை எடுத்தனர் அல்லது இந்த இதளிய(இரசாயன ) உணவுகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை இந்த தலைப் போடுகுதான் பின்னாளில் சொரியாசிசு என்ற நோயை உண்டாக்கு கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அதுமட்டும் அல்லாமல் தலையில் இருந்து வரும் செதில் போன்றவை கண்ணில் பட்டால் கண்ணை அது பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .
கடுமையான உள சிக்கலில் இருப்பவர்களுக்கு முதலில் தலையில் இருக்கும் மயிரை வறட்சியடைய செய்கிறது இது மட்டும் அல்லாமால் முறையில்லாத உணவுகள் எண்ணையில் பொறிக்கப் பட்ட உணவுகள் இரத்தத்தில் கடுமையான நச்சு கலப்பினை உண்டாக்குகிறது இவர்கள் முதலில் ஈற்றுணவு (மலம் )கழிப்பில் சிக்கலுக்கு உரியவர்களாக இருப்பார்கள் இது தலைபோடுகை மிகையாக்கும் என்பதில் மற்று கருத்து இருக்காது . எப்போதும் பதற்றமாக இருப்பார்கள் தலையை நாளும் கழுவ மாட்டார்கள் .
அப்படி கழுவினாலும் அவர்கள் பயன்படுத்தும் இதளியம் (இரசாயணம் ) மயிரை உத்திர செய்கிறது எல்லாவற்றிக்கும் முதன்மையாக இரும்பு சத்து பற்றாக்குறை இருக்கும் . இந்த இரும்பு சத்து கீரைகள் , காய்கள் , உலர் பழங்கள் குறிப்பாக பேரிட்சை போன்றவைகள் இரும்பு சத்தை அளிக்க கூடியன இவற்றை நாளும் எடுக்க இரும்பு சத்து கூடும்.
இந்த தலைப் பொடுகிற்கு தூய்மையான உணவுப் பழக்கம் வேண்டும் இயற்க்கை உணவுகள் சிறந்ததது இரசாயணம் கலந்த வழலைக்கட்டிகள் (சோப்பு ) சாம்புகள் சீயக்கய்கள் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது இதனால் நோய் தீவிரம் அடையும் எனவே இவற்றை நீக்குக . தூய்மையான எள்நெய் எடுத்து கொஞ்சம் சூடாக்கி வெதுவெதுப்பாக மயிர்க்கால்களில் தேய்க்கலாம் இதற்க்கு பொடுதலை என்ற மூலிகை நல்ல பலனைத் தரும் இதை அரைத்து பூசலாம் .இயற்க்கை உணவுகள் எடுக்கலாம் நல்ல குணத்தை எதிர்பார்க்கலாம் .
நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம்
அடுத்த இடுகையில் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்போம் அதுவரை விடைபெறுவோம் .
தேவையான தகவல்கள்..
பதிலளிநீக்குவேகமாய் நகரும் இந்த காலத்தில் இளசுகள் முதல் அனைவரும் எது சரியோ அதை செய்ய மனம் ஒன்றாமல்
பதிலளிநீக்குகிடைத்ததை உண்பதும் , கையில் கிடைக்கும் அழகு கவர்ச்சி பொருட்களை போட்டுக்கொள்வதும் அப்புறம் திண்டாடுவதும்
இப்போ நடக்கின்றது ....
நல்ல பகிர்வுக்கு நன்றிகள் பல .. நண்பரே
எனக்குத் தெரிந்த ஒருவர் நிறையக் காலமாக இந்தப் பொடுகால் மிகவும் கஸ்டப்படுக்கிறார்.இந்தப் பதிவைப் பார்க்கச்சொல்கிறேன் !
பதிலளிநீக்கு