மே 23, 2011

நோயில் இருந்து விரைந்து குணமடைவது படித்தவர்களா.? பாமரர்களா?
இன்று நோய்கள் குறித்தான புரிதலை உண்டக்குவதைவிட நோயில் இருந்து தம்மை முழுமையாக விடுவித்து கொள்ள தூண்டுவது தேவையாக இருக்கிறது.இது நோய்கள் குறித்தான பிழையான /தவறான
முரண்பட்ட கற்பிதங்களைநீக்குவன்றி வேறல்ல . நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொண்டிருந்தால்தான் நோய்கள் நீங்கும் வழிமுறைகள் புரியும். நோய்வரும் காரணங்கள்.மனிதனுக்கு மனிதன் உண்மையில் மாறுபடும். ஒருவரின் உணவு மற்றவருக்கு நஞ்சாக / நோய்வர காரணமாகிறது.

நாடி மாறுபடும் மனித உடல்வகையும்

வளி ( வாதம்) அழல் (பித்தம் ) ஐ (கபம் )தொந்தம் என மனிதன் உடல்வகை ஒன்பது என முன் இடுகையில் கண்டோம். நாடி . நடைகளுக்கேற்ற வகையில் உடல் அமைப்பும் குளிர்ந்தும் ,வெப்பமடைந்தும் வேறுபட்டு கானலாகிறது . இது இயற்கையின் படைப்பு . உடல் வகைக்கு ஏற்ற உணவு எடுக்கவேண்டும் என முன் இடுகையில் குறிப்பிட்டு இருந்தேன் . இது சித்த மருத்துவத்திற்கே உரிய தனித்த கோட்பாடு . அதாவது நமது பாரம்பரிய பண்பாட்டின்படி நமது உணவு கொள்கையை கடைபிடிக்க வேண்டும் பாரம்பரியத்தை
கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லுவதால் நாம் கவட்டியை (உள்ளாடை )நீக்கி நீர்சீலை அணிய வேண்டும் என வற்புறுத்த வில்லை அப்படி ஒருமாற்றம் வரின் தனிச்ச்சிறப்பே .

படிக்காதவர் என நோய் அறியுமா?

நோயாளி ஆவதற்கு நல்லவாய்ப்பு படித்தவர்களுக்கே விரைந்து கிடைக்கிறது . கண்டதையும் படிப்பதைபோலவே கண்டதையும் தின்று நோயில் விழுகின்றவர்கள் நன்கு படித்தவர்களே . பள்ளி படிப்பை படித்துவிட்டாலே பட்டனவழைக்கை தான் சிறந்தது என கண்மூடித்தனமாக நம்பி அலைகிறனர். பட்டணத்தில் பணம் கிடைக்கலாம் அனால் பண்பாடு? நம் பண்பாட்டிலான வாழ்கை?
பணம் குவியும் இடத்தில் பண்பாடு சீரழியும் என்பது உண்மையானது தானே? பண்பாடு என்பது வாழ்க்கைவழிமுறையில் இருந்து தோற்றம் கொள்ளு கிறதல்லவா? வாழ்கை முறையும் உணவு முறையும் பண்பாட்டை அடியொற்றியது தானே ?

நோய் யாரைதாக்குகிறது ஏன்?

ஊர் புறங்களில் இன்னும் முறையான இயற்கைசார்ந்த அறம்பிழறாத வாழ்க்கை கடைபிடிக்கபடுகிறது அல்லவா? இவர்கள் நோயில் இருந்தே விடுபடுகிறனர். பட்டன வாழ்க்கைமுறை
சுற்று சூழல் கேட்டில் இருந்து உணவுமுறை மாற்றம் இரசாயணம் கலந்த உணவுமுறை வாழ்க்கைமுறை மாற்றம்போன்றவை நோவை தழுவ வைக்கிறது . ஆக பட்டண (நகர ) வாழ்க்கைமுறை நோயாளி யாவதும் நோய்க்கு விரைந்து இரையாவதும் ஆன காரியங்களை தூண்டுகிறது .மனிதம் கெடுவது இன்றைய நாகரீக பட்டண வாழ்க்கைமுறை என்பதிலிருந்துதான் என விளங்குகிறது அல்லவா?

படித்தவர்களும்..... பாமரர்களும் .....
ஊர் புறங்களில் மனிதம் கெடுவதற்கான சூழல் குறைவு என்பது கண்கூடு .
அதுபோலவே நோய்கள் வருவதற்கான வாய்புகளும் குறைவே .எழுபது ,என்பது அகவை கடந்தவர்கள்கூடஎந்த மருந்து மாத்திரை இன்றி வாழ்வதனை காணும்போது மகிழத்தனே முடிகிறது . இவர்கள் ஒருமுறைகூட என்னுடம்பில் ஊசி குத்திகொண்டதே இல்லை என கூறுகின்றனர் . இதற்க்கு கரணம் இயற்கையுடன் இணைந்த வழ்க்கைமுறையன்றி வேறல்ல.

அனால் பட்டணத்து வாழ்க்கைமுறை எல்லாம் அங்கனம் இருக்கவில்லை. இரசாயணம் கலந்த உணவுகள், இரசாயணம் கலந்த பால், இரசாயணம் கலந்த, சுற்று சூழல் கேடுகள் நிறைந்தவாழ்கை முறை வளி மண்டலத்தையும் அல்லவே கெடுத்து விட்டோம் . இந்த வரிசையில் பட்டணத்து வாழ்க்கைமுறையை அடுக்கலாம்.படித்தவர்கள் எது உயர்வான நாகரீகம் எது உயர்ந்த வாழ்க்கைமுறை என எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ அவைகள்தான் மனிதத்தை நோயாளியாக்குகிறது . நண்பர் வீடுகளுக்கு அல்லது தெரிந்தவர் வீடுகளுக்கு சென்றால் நாம் தேநீர் அருந்துவதில்லை குளம்பி(காபி )அருந்துவதில்லை என்றால் நம்மை வேற்று கோள் (கிரக) வாசியை பார்ப்பது பல பார்கிறார்கள் என்பது வேறு செய்தி .

படிக்காதவர்களே விரைந்து குணமடைகிறார்கள்...

நம்மை பொறுத்தவரை நுனிப்புல் மேய்ந்து விட்டு நச்சு கருத்துகளை அள்ளி வீசி கொண்டிருப் பதில்லை எம்மையும் வருத்தி கொண்டுதான் இந்த குமுகத்திர்காக எதாவது செய்யவேண்டும் என கருதுகிறோம்
ஆகையால் தம் பட்டறிவால் முற்றுனர்ந்த தேர்ந்த சித்தமருத்துவர்களின் ஆக்கங்களை உள்வாங்கிதான் இயன்றவரையில் தருகிறோம். நம்மிடம் வரும் படிக்காதவர்கள் பெரும்பாலும் ஆங்கில முறை மருத்துவத்தை நாடி சென்று நோய் நீங்க இயலாமல் உள்ளநிளையில்தான் சித்தமருத்துவத்தை நாடி வருகின்றனர் .அவர்களின் உளவியலை நன்கு அறிந்து அவர்களிடம் கற்பிக்கப்படும் பொது அவர்கள் அப்படியே உள்வாங்கி கொண்டு சொன்னவற்றை அப்படியே கடைபிடிக்கிறார்கள் எனவே நோயில் இருந்து விரைந்து விடுபடுகின்றனர் . அவர்களுக்கென்று தனியான கருத்துகள் எல்லாம் ஒன்று இருக்கவில்லை கண்டதையெல்லாம் படித்துவிட்டு அவர்கள் ஒரு கருத்துகளை வைத்திருக்கவில்லை எனவே சொன்ன கருத்துகளை கடைபிடிக்கின்றனர் . அனால் படித்தவர்கள் அவர்களுக்கென்று ஒரு கருத்துகள் வழிநடத்துகிறது எனவே அவர்களின் கண்ணோட்டமெல்லாம் மேலை நட்டு மருத்துவத்தை அப்படியே கடைபிடிக்க எண்ணுகிறார்களே யன்றி சித்த மருத்துவத்தை நாடிவருவதை இழிவாக கருத்து கிறார்கள் .அவர்களின் கண்ணோட்டமெல்லாம் நுனிநாக்கு ஆங்கிலமும் முடை நாற்றமெடுக்கும் மேலை நகரீகமும்தான் .
ஆக அவர்கள் படித்தவர்கள் சித்தமருத்துவத்தை நடிவருவது மில்லை வந்தாலும் நோயில் இருந்து விடுபடுவதுமில்லை . சித்தமருத்துவம் என்பதில்லை மேலை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் நவீன பொறிகளை கண்டுவியந்து அவற்றில் முடங்கி கிடக்கிறார்கள் .

சித்த மருத்துவம் என்பது பழங் காலங்களில் அரச முத்துவமகவே இருந்து இருக்கிறது அந்த பாழாய் போன அரசர்கள்தான் பல்வேறு பெண்களை அந்த புறங்களில் வைத்து கொண்டு அவர்களின் பாலியல் தேவையை நிறைவேற்ற மருத்துவர்களை அவர்களுக்கவே தனியாக வைத்து கொண்டனர் .அவற்றுடன் நிலக்கிழரிய கருத்தியலை கொண்ட்ருந்த அவர்கள் சித்த மருத்துவத்தை அரண் மனையில் மட்டுமே வைத்து இருந்தனர் . மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மருத்துவர்களிடம் i தம்மை அற்பணித்து மருத்துவ உதவிகளை பெற்றுவந்தனர்.
இன்று உள்ள நிலையில் எல்லா இடங்களிலும் படித்தவர்களை காட்டிலும் படிக்காதவர்களே பழமையை காக்கின்றனர் போற்றுகின்றனர் வணகுகின்றனர் . நோயில் இருந்து விரைந்துவிடுபடுகின்றனார். படித்தவர்கள் பொருத் தருள் (நாம் உண்மையை கூற எங்கும் ,என்றும் தயங்குவதில்லை என்பதால் கூறிவிட்டோம் ) வார்காளாக.

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் ...

கனடாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

மே முதலாம் நாள் கடனவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தமிழ் உறுப்பினர்
தேர்வு செய்யப்பட்டு உள்ளார் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதும் யாழ் மவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் புதிய ஜன நாயக கட்சியின் வேட்பாளராக (scharborough Rovge River) ஷ்கர்புரோ ரூச்றிவர் தொகுதில் வெற்றி பெற்றிருக்கிறார் அவரை வாழ்த்தி மகிழ்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...