மார்ச் 26, 2011

வெள்ளப்படுதலும் தீர்வுகளும்

     இந்த வெள்ளைப்படுதல்  நோயை இருபத்தொருவகையாக சித்தர்கள் பகுத்து உள்ளனர்
          உரைத்திட்டேன்  பிரமியமென்ற  ரோகந்தானே
          உத்தமனே  இருபதொன்  றாகுங் கண்டாய்    
    (யூகிமுனிசிந்தாமணி )

 . இந்நோய்  சிறுநீர் இறங்கும் முன்போ அல்லது பின்போ வெள்ளை நிறத்துடன் சீழ்போல  பெண்களின்  பிறப் புறுப்புகளில் இருந்து வெளியேறுதல்  எனலாம்.இந்த சூழலில்  எரிச்சல் ,கடுப்பு ,அரிப்பு போன்ற தொந்தரவுகள்  தோன்றி  பாடாய் படுத்துகிறது .

    இந்த நோய் வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமல்லாது  குளிர் பகுதிகளிலும்  காணப்படுவதாக   ஆய்வுகள்  தெரிவிக்கிறது .கிருமிகளின் தாக்கத்தினால் இந்த நோய் தோற்றம் கொள்ளுகிறது  என பசப்புகிற  வைத்திய சிகாமணிகளும் ? உண்டு .

பாடகப் பெண்போக மிகவி  ரும்பிப்
பயின்றிட்டு  பட்டினியே  மிகவி  ருத்தல்
தாடாகத்  தன்பாதத்தின்   சூடு  தாங்கள்
சரசமாய்  காரத்தை மிகப்  புசித்தல்
ஊடாக உப்ரைத்து  துவர்ப்பு மிஞ்சல்
உக்கிரமாம் பலப்  பலவாம்  விசேடம்  செய்தல்
காடான  உளச்சிக்கல்  கார மான
  கைத்தலொடு   மிகுத்தலித்து  காணுங் காலே 
(.யூகிமுனி  சிந்தாமணி )

என இன் நோய்க்கான  காரணங்களை  அடுக்கு கின்றனர்  சித்தர்கள்   மிகுதியான பட்டினி , காரமான உணவுகள் , கடுமையான  வெப்பம்

    இது பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும்  தாக்குகிறது  இதன் தாக்கத்தினால்  ஆண்கள் மிகவும்  பதிப்பு அடைகின்றனர் .பெண்களுக்கு பெண்குறியில்  நமைச்சலும்  அரிப்பும் சிறுநீர் புழையில்  எரிச்சலும்  சிறுநீர் கழிக்கும் போது வெண்மையான சீழ் போன்ற  திரவம் வெளியேறும் . சிலருக்கு நூல்போலவும்  சிலருக்கு மிகையாகவும்  வெளியேறும் .
இதேபோல  ஆண்களுக்கும் ஆண்குறியில் ...

லிங்கத்தில் நோயுண்டாய்க்  கடுப்பு காணும்
நீரிறங்கி வெண்மையாய் சலமாய் வீழும்
பங்கத்தில் மேனியெல்லாம் பழுப்பாய் காணும்
பாண்டுவாய்க்  கண்ணங்களி இரத்த மில்லை
 

     என்பதால் ஆண்குறியில்  வலியை உண்டாக்கி நீரை கழிக்க செய்யும் .சிறுநீரில் வெண்மையான சீழுங் கலந்திருக்கும் . நீர்புழை எரிச்சல் அடையும் .அடிக்கடி நீர்சுருக்கு உண்டாகி உடல் அழல் (பித்தம் )குற்றம்  மிகுந்து சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் அடித்தண்டில் வலி  உண்டாகும் .அடிவயிறு ஒருபக்கம் இழுத்து பிடிப்பது போல இருக்கும் .

    இப்படி இருபாலினரையும் கண்மூடித்தனமாக  தாக்குகிறது .இந்த நோய்  பெண்குழந்தை களையும்  தாக்குகிறது .நம் மருத்துவ நடுவத்திற்கு பத்தே அகவை நிரம்பிய பெண்குழந்தையை இந்த நோதக்கியிருக்கிறது என்றுகூறி  அழைத்து வந்தார் பெண்ணின் தாய்
முறையான  மருத்துவமும் ,உணவுபழக்கங்களையும்  கடைபிடிக்க வேண்டிக்கொள்ள பட்டது .
       பெரும்பாலும் முறையற்ற நடவடிக்கை களும் , முறையற்ற  உணவு  பழக்கங்களும்  இந்நோய்க்கு காரணமாகிறது .

தீர்வுகள்

காரம் குறைத்து உண்க.
குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.
மென்பானங்களை (கோக் ,பெப்சி ...) நீக்குக .
காபின் கலந்த (காபி )சாக்லேட்  நீக்குக.
மிகையான  பாலுறவை குறைத்துக் கொள்க .
கீரைகள். பழங்கள்  உணவில்  சேர்த்துக் கொள்க.
மாமிச  உணவை  நீக்குக .
எள் எண்ணெய்க் குளியல்  செய்க.

மருந்துகள்
     நெல்லி வற்றல் ,படிகாரம் (தூய்மையாக்கியது)கற்கண்டு  சம அளவு  எடுத்து தூளாக்கி சீன கற்கண்டு  சமன் கூட்டி  நாளும்  மூன்று வேளை மோரில்  அருந்தவும் . மூன்று  நாட்களுக்கு  மோர்  பால் போன்றவற்றில்  சோறு  உண்க .

குமரி கலந்த மருந்து  எடுத்து கொள்க
.
தண்ணீர்  விட்டான் கலந்த மருந்து எடுத்து கொள்க

      கருவேப்பிலை  மிகவும்  சரியான மருந்து  இதன்  பெயரே காரணமாய் அமைந்தது எனலாம் . கருப்பை  வெப்பம்  இல்லை  என்பதுதான் .பழந்தமிழர்  எல்லாவற்றிற்கும்  காரண,காரியத்தோடு  பெயரிட்டனர்  அந்த வகையில் கறிவேப்பிலை  கருப்பையின்  வெப்பத்தை  நீக்குவதில்  வல்லது  துவையல் செய்து  நாளும்  உண்க.



நாளும்  சிறுநீர்  கழித்த  பின்னர் படிகாரம்  கலந்த தண்ணீரில்  பிறப்புறுப்புகளை  கழுவி வரவேண்டும்  இப்படி செய்வதால்  எரிச்சல் , அரிப்பு , துர்வாடை  போன்றவை  நீங்கும் .

நோய்வென்று  நீடு வாழ்க
More than a Blog Aggregator

மார்ச் 21, 2011

அயல் மகரந்த சேர்க்கைக்கு (அடுத்தவர் மனைவிக்கு ) ஆசைபடுவதேன் ?


அயல் மகரந்த சேர்க்கைக்கு (அடுத்தவர் மனைவிக்கு ) ஆசைபடுவதேன் ?

இப்போது எல்லாம் குடும்ப உறவுகள் எல்லாம் சிதைந்து போகும் படியான
சூழ்நிலைகளே பெரிதும் கானலாகிறது இது ஏதோ இங்கொன்றும் அங்கொன்றும்
இருந்தால் பரவாயில்லை அனால் பெரும்பான்மை குடும்பங்கள் இந்த சீரழிவில்
சின்னாபின்னமாக ஆகிவருகிறது . இந்த கோட்பாடுகள் எங்கிருந்து வருகிறது .
உலகின் நாகரீகங்களுக்கும் ஒட்டுமொத்த உலகின் கூட்டுக்குடும்ப முறைகளுக்கும்
நமது வாழ்க்கைமுறை முன்னுதாரணமாக இருந்து வந்ததை நாம் அறிவோம் , அனால்
இன்று நமது கூட்டு குடும்ப முறைகளே வினாக்குரியாகிவருவதின் காரணமென்ன.
ஐரோப்பிய நாடுகளே வியந்து போற்றிய நாம் வாழ்க்கைமுறை எங்கே ?
இந்த குமுகமும் இந்த சிக்கலில் தவிப்பதானால் இதுவும் மாந்த குலத்தின் நோயே
என்பதால் இதற்கும் நம் தீர்வை கூறவேண்டும் தானே ?

பழமையான வாழ்க்கைமுறை என்பது நாம் நம் முன்னோர்கள் கட்டி காத்து வந்த
வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வந்தது ஆகும் .
இப்போது அது சிதைந்து வருகிறது கற்பு என்பது கற்று அதன்படி ஒழுகுவதுதனே ?
அதன் படிபார்த்தால் பிழை இன்றைய முறையில்லாத வாழ்வியலில் இருந்து
தொடங்குகிறது எனலாம் . அறிவுரை கூறி நல்வழி படுத்திய பெரியவர்கள் இன்று
ஆறாவது விரலாக்கி போயினர் ,. அதனால் அவர்களின் அறிவுரை இல்லாமலே போனதுஅதுவே
பிழைகளுக்கு முதன்மையான காரணமாகி
போனது .

பெரும்பாலும் பழங்காலங்களில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்
அப்போது தன் குடும்பத்திற்கு வேண்டியதை தாய் பார்த்து பார்த்து
செய்தாள் கணவன் மனைவி பாலியல் உறவுகளும் முறையாக இருந்தது கட்டுப்பாடு
இல்லாமல் இன்றுபோல் இருந்தது இல்லை . கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதனால்
இன்று கணவன் மனைவி உறவும் கூட விரைந்து கசந்து போகிறது .
குடும்பங்களில் நடக்கும் சிறிய சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நல்வழிபடுத்தி
நல்ல வழிகாட்டியாக இருந்து வந்தனர் பெரியோர் . அனால் அதற்க்கு எல்லாம் இன்று
வாய்ப்பில்லாமல் போகவே இன்று குடும்பங்கள் சிதைவை நோக்கி பயணமாகிறது .

தனியுடமை அமைப்பு என்பதால் இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் ஆகி
போனது? பணம் மட்டுமே வாழ்க்கை என்றால் பணம் வைத்து இருப்பவர்கள் எல்லாம்
மகிழ்வுடன் தானே இருக்கவேண்டும் அப்படி எல்லாம் இருப்பதாக தெரியவில்லையே ?
விண்ணைமுட்டும் கட்டிடங்களை (மருத்துவ நடுவங்களுக்கு ) நோக்கியல்லவா
ஓடுகின்றனர் . இது பற்றி சிந்திப்பார்களா?

அதுமட்டும் அல்லாமல் இன்று விரைந்தோடும் வாழ்க்கைமுறை என்பதால்
எல்லாவற்றிலும் தெளிவையும் அறிவையும் தேடும் வழக்கம் எல்லாம் இருக்கவில்லை
உண்மையை பற்றி எங்களுக்கு கவலையில்லை இந்த நிமிடம் மகிழ்வோடு இருக்கிறோமா
என்கிறனர் இது நோயன்றி வேறல்ல . தேவையில்லாத விடயங்களில் காட்டும் ஆர்வம்
இந்த குமுகத்திற்கு தேவையானத்தில் காட்டுவதே இல்லை .

பாலியல் உறவுகளை பொறுத்தவை முறையான அறிவு தோவை இதில் இந்த குமுகம்
அக்கறை காட்டுவதில்லை இன்றைய புதிய புதிய கண்டுபிடிப்புகளினால் தொழில்
நுட்பங்களினால் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் செய்திகளும் நம் வீட்டின்
கதவங்களை தட்டுகிறது கணினி . செல்பேசி இவைகளை கூறலாம் இன்று இவைகள்
முறையில்லாத வகையில் பாலியலை படம் பிடித்து காட்டுவதை நாம் அறிவோம் . இதை
பார்த்துவிட்டு இயற்க்கைக்கு முரணாக நீண்ட நேர பாலியல் வேட்கையில்
நாட்டம் கொள்ளுகின்றனர் .இது நோயே . பாலியல் இன்பத்தை சிற்றின்பம் என்பர் .
அதுதான் இயல்பானதும் கூட . அதைவிடுத்து நீண்ட நேர பாலியல் இன்பத்திற்கு
வேட்கைகொள்ளுவது தவறான வழிக்கு வித்திடுகிறது .

இன்றைய காதல் மணம் புரிந்தவர்கள் கூட மணம் முறிவுகளை நோக்கி
ஓடுகின்றனர் . இதற்க்கு காரணம் வாழ்கையை முழுமையாக புரிந்து கொள்ளாத
காரணத்தினால் தான் எனலாம் எதையோ கற்பனை செய்து கொள்ளுகின்றனர் ஆனால்
இயல்பாக கிடைக்கும் பாலியல் இன்பத்தால் ஏமாற்றம் அடைகின்றனர் தம்
முறையில்லாத வகையில் கேட்டதற்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாடு அவர்களை
வேறுபட வைக்கிறது அதுமட்டும் அல்லாமல் மனித உடல் விந்து உற்பத்தி செய்யும்
பொறி (இயந்திரம் ) என எண்ணிவிடுகிறனர். இதும் தெளிவு பெறவேண்டிய செய்தியே .
அதுமட்டும் அல்லாமல் திருமண அல்லது காதலிக்கும் காலங்களில்
பார்க்கும் கணவன் அல்லது காதலன் வேறு திருமணம் முடிந்து பார்க்கும் கணவன் அல்லது மனைவி வேறுபாடு அதிகமாக தெரிகிறது காரணம் புரிந்து கொல்லாமை .பெரும்பாலும் வேலியை தாண்டுவதற்கு உளவியலும் ஒருகாரமகிறதுதிருமணத்திற்கு முன் அல்லது காதலிக்கும் முன் இருவரின் மாறுபட்ட குணன் நலன்களை அல்லது விருப்பு ,வெறுப்புகளை அறிந்து கொள்ளுவதில்லை . பணவருவாய் உள்ளவரா? அழகு இருக்கிறதா என்ற கண்ணோட்டத்தில் வினா நீளுகிறதே தவிர இருவரின் உளவாற்றல் பொருந்தியுள்ளதா என்பதை பற்றி சிந்திப்பதே இல்லை . அழகாக இருப்பவர்கள் எல்லோருமே அறிவாளியாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை .அழகை மட்டுமே பார்த்து காதலிப்பது அல்லது மணமுடிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும் . பின்னாளில் இந்த அழகே சிக்கலுக்குரியதாக மாறிவிடுகிறது

பெண்கள் குழந்தை பேற்றிற்கு பின் உடல் அளவில் தளர்ச்சி அடைகிறார்கள் . இது இயல்பானதே . இது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன் அல்லது காதலிக்கும் முன் இருவரும் சந்தித்த விதம் வேறுமாதிரியானது ஆனால் உண்மையில் கணவன் மனைவியாக ஒன்றாக வாழும் போது இருக்கும் நிலை வேறுமாதிரியானது . அப்போது எல்லாம் நீட்டாக உடையுடுத்தி ஒருவரைஒருவர் கவர்ந்தனர் ஆனால் திருமணம் ஆனதும் கிழிந்த உடை , தளர்ந்த உடல் முகச்சாயம் இல்லாத மூஞ்சி இவை எல்லாம் அடுத்த வீட்டு பெண்ணை , அல்லது ஆணை பார்க்கும்படி செய்துவிடுகிறது .

இங்கு மற்றொன்றையும் தெளிந்து கொள்ள வேண்டிய நிலையிருக்கிறது . சினத்திற்கும் வெறுப்பிற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை என்ற கண்ணோட்டத்தை கொண்டிருப்பது தான். கணவன் அல்லது காதலன் இவர்களின் மேல் சினம் இருந்து விட்டால் இதை சரி செய்து கொள்ளலாம் . அனால் வெறுப்பு அடைந்து விட்டால் அவ்வளவு எளிதில் வெறுப்பை சரி செய்து கொள்ள இயலாது .அதனால் இருவரும் வெறுப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்டியது தேவையாகிறது .

முழுமையான வாழ்வு என்பது எங்கு வாழுகிறோம் என்பதல்ல யாருடன் வாழுகிறோம் என்பதுதான் . இந்த உத்தியை தெரிந்து கொள்ளதவ்ர்களின் வாழ்வில் சிக்கல்தான் விளையாடுகிறது .

சலிப்பில்லாது வாழ
உள்ளம் முழுவதையும் இருவரும் முழுமையாக புரிந்து கொள்க .
விட்டு கொடுத்து வாழ பழகுக .
இருவரும் இணைந்து விவாதம் முறையாக நடத்துக .
குறைகளை புண்படாத வகையில் சுட்டிகட்டுக .
எப்போதும் பளிச்சென இருக்க பழகுக .
பாலியல் ரீதியான குறைபாடுகள் இருப்பின் தீர்க்கசெய்க .
மணமுறிவு தீர்வு என எக்காலத்திலும் எண்ணாதீர்கள் .
வள்ளுவர் காட்டிய இன்பத்து பால் இருநூற்று ஐம்பது பாடல்களை இருவரும் சேர்ந்து படிக்க செய்க .
நம்புங்கள் நூறாண்டுகள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியும் அதற்க்கு முயற்சி செய்க .
வாழ்க்கை வாழ்வதற்கே .
தமிழ கலைகளை காப்போம் மீட்போம் .More than a Blog Aggregator

மார்ச் 13, 2011

நினைவாற்றல் மேம்பட ...(Maind Power)


நினைவாற்றல் மேம்பட ...(Mind Power)

நமது தனிப்பட்ட எண்ணம் நம் தமிழ் குமுகம் மட்டுமல்லாமல் இந்த உலகே நோய் வென்று நீடுவழவேண்டும் என்பதுதான் , அந்த அடிப்படையில் நினைவாற்றல் குறைபாடு ஒரு நோயேயன்றி வேறல்ல . எப்படி இது நோயாகும் ? இதை எப்படி நாம் அணுகவேண்டும் உண்மையில் இதுவெல்லாம் தீர்வாகுமா? கதைப்போமா ?

நினைவாற்றல் குறைபாடு நோயா?

இயற்க்கை அன்னையின் இயல்பிற்கு மாறாக இருப்பின் எல்லாமே நோயே பழங்கால தமிழ அறிவர்கள் எல்லாவற்றையும் நுணுகி நுணுகி ஆய்வு செய்து உடலை பாதுகாத்தனர் .உணவுகளை தேடி எல்லா சத்துகளும் தனக்கு கிடைக்கும்படி பார்த்து கொண்டார்கள்.அனால் முடைநாற்றம் வீசும் மேற்கத்திய நாகரீகத்தையும் மருத்துவமுறைகளையும் கண்மூடித்தனமாக பின்பற்றியதன் விளைவு இன்று நம் பண்பாடு ,உயரிய மருத்துவ அறிவு எல்லாவற்றையும் மறந்து போயினர் ?

பழமையே அறிவுடைமை

பழங் காலங்களில் காலங்களுக்கு ஏற்ற உணவுகளை உண்டு நோய்வென்றனர்.அதனால் நோய்களுக்காக விண்ணைமுட்டும் கட்டிடங்களை நோக்கி ( மருத்துவத்திற்காக) ஓட வில்லை .குதர்க்கம் பேசுவோர் ஒருவினா தொடுக்கலாம் அப்போது புதியபுதிய நோய்கள் எல்லாம் கண்டுபிடிக்கவில்லை .அதேபோன்று கட்டிடங்களும் இல்லை எனலாம் .குறிப்பாக கூறுவது என்றால் அப்படி ஒருதேவையும் இருக்கவில்லை அதாவது முறையான உணவுபழக்கத்தில் நோய் என்ற பேச்சு இருக்க வாய்ப்பு இல்லை .சிறிய நோய்கள் இருக்கலாம் .மருத்துவ துறையில் நம்மவர்கள் மிகவும் முன்னேறியே இருந்தார்கள் .


உடல் என்ற பேராலயம்

மனித உடல் கோடானு கோடி உயிர் அணுக்களை கொண்டது .திசுக்களையும் கொண்டது . இந்த அணுக்களும் திசுக்களும் ஊட்டமுடன் செயல்பட மாசற்ற உணவுத்தேவை .தூய்மையான உயிர்வளி (ஆக்சிஜன் )தேவை . தாதுக்கள் அடங்கிய நீர்த்தேவை .இவற்றில் இன்று கலப்படங்களும் மாசுக்களும் ஒன்றாகி கலந்து விட்டபடியால் மனித உடல் என்ற பொறி (இயந்திரம் ) விரைந்து பழுதாகிறது எனலாம் .அன்று மாடு புல்தின்று பால் கறந்தது இன்று சுவர் ஒட்டி தின்று பால் கறக்கிறது . சுவரொட்டியில் உள்ள நச்சு நம்மையும் நம் குழந்தைகளையும் என்ன பாடுபடுத்தும் .உயிப்பாற்றலை கெடுக்கும் தானே ?

டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்

எழுபத்தைந்து விழுக் காட்டிற்கு மேல் வறுமையில் வாழும் நம் கீழ் திசை நாடுகளின் புரத /சத்து தேவைகளுக்கு உலகின் பணக்கார நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபடுகிற டப்பாவில் அடைபட்டு கிடக்கும் உணவே தீர்வாக இருக்கிறது இதுபோன்று பதப்படுத்தப்பட்டு டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் அவைகளின் சுவைக் காகவும் நீண்டநாட்கள் கெடாமல் இருக்கவும் இதளியம் (இரசாயன ) கலப்பிற்கு ஆளாகிறது இவைகள் நோயன்றி வேறல்ல .இவற்றால் மனித உயிர் செல்கள் கேடு அடைகிறது . இயற்கையான உணவுகள் அரத்ததையும் (இரத்தம் )செல்களையும் புத்துயிர் ஊட்டத்துடன் வைத்திருக்க உதவுகிறது .


தீர்வுகள்

முறையான தவச (தாணிய)உணவுகளை முளைகட்டி எடுக்கவேண்டும் .அதேபோல தரமான கொட்டைகள் முளைகட்டியது எடுக்கவேண்டும் . தரமான காய்கள் கீரைகள் எடுக்கவேண்டும் . புரத உணவே நமக்கு விரைந்த சக்தியையும் உயிர் ஆற்றலையும் தருகிறது என்கிறனர் எனவே தரமான தாவர புரதம் தேவை .இரசாயன கலப்பில்லாத பழவகைகள் எடுக்கவேண்டும் .இனிப்புக்காக தேன்,வெல்லம் சேர்க்கவேண்டும் . தூய்மையான நெய் ,பால் எடுக்கலாம் வல்லாரை தேன், நெய் இவற்றுடன் சேரும்போது மூளைக்கு நல்ல ஊடமகிறது என்கிறனர் .
குழந்தைகளின் உணவில் சரிவிகித உணவு தேவை . பிள்ளை வளர்த்தி என்று அழைக்கப்படும் வசம்பு மருந்தாக எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு நினைவு சம்பந்தமான குறைபாடுகள் இருப்பதில்லை . அதயும் விட முறையான உணவுபழக்கம் இன்மையால் மனித மூளை அதனின் செல்கள் காரணம் இன்றி தேவையில்லாத உணவுகளை தேடுகிறது . எனவே சரிவிகித முறையான உணவுகள் எடுத்துக்கொண்டால் கண்டதைஎல்லாம் உண்ணவேண்டும் என்ற வேட்கை தோன்றுவதற்கு வாய்பில்லை .அதுமட்டும் அல்லாமல் தவறு செய்யும் எண்ணம் தோன்றவும் செய்யாது முறையான உணவுகளை எடுப்போம் .

நினைவாற்றல் ....

நாளும் எரியோம்பல் (யோகாசனம் )செய்க .
தலைகீழ் (சிரசாசன் )செய்க .
ஊழ்கத்தில் (தியானம் )நாளும் பயிற்சி செய்க .
அச்சம் ,எரிச்சல் , சினம், பதற்றம் ,... நீக்குக .
இவைகளினால் பெரும்பான்மை நினைவு மறதி தோன்றுவதாக கூறுகின்றனர் .

பழமைவாய்ந்த தமிழ பண்பாட்டை காப்போம் .
நோய் வெல்வோம் .

.
More than a Blog Aggregator

மார்ச் 06, 2011

அந்தமாதிரி படங்களை பார்க்கலாமா ?




அந்தமாதிரி படங்களை பார்க்கலாமா ?
பழமைவாய்ந்த தமிழ அறிவர்கள் எல்லாவற்றிலும் தேர்ந்தும் சிறந்தும் விளங்கினார்கள் இந்த குமுகத்திற்கு தம்மை முழுமையாக அற்பனித்துகொண்டு பல கலைகளையும் அதன் கூறிய நுட்பங்களையும் நமக்கு கொடையாக வழங்கினார்கள் . பாலியல் தொடர்பாக பலநிலைகளில் சிந்தித்து செழுமைபடுத்தி இந்த குமுக அமைப்பிற்கு எந்த தீய விளைவுகளையும் அது உண்டக்கிவிடகூடது என்ற எண்ணம் கொண்டு நேர்த்தியாக கட்டமித்தர்கள் .

இன்று பெண் என்பவள் வெறும் பாலியல் இன்பத்திற்காக படைக்கப்பட்டவள் என்ற தவறான கற்பிதம் கற்பிக்கப்பட்டு வருகிறது . இந்த சீரழிவு பண்பாடு எங்கிருந்து தேற்றம் கொண்டது ? குடும்ப உறவுகளையும் கணவன் மனைவி உறவுகளையும் சிக்கலாகி சீக்களியகி கொண்டிருக்கிறது இந்த குமுக அமைப்பு .மனிதமே நோயாளியாகி கொண்டிருக்கிறதே ஏன்? இன்றைய வாழ்க்கைமுறை இனிமையாக பயணிக்கிறதா? என்றால் இல்லை என்று கூறலாம் .இன்று வெறித்தனமான பாலியல் சிந்தனைகள் எங்கிருந்து ஊற்றெடுத்தன ? இத்தகு சீரழிவு பண்பாடு எங்கிருந்து தோற்றம் கொண்டது? இலைமறை காயாக இருந்த இந்த பாலியல் தொடர்பான செய்திகள் சிக்கலாகி வருவது பரிணாம வளர்ச்சியா ? மனித இனத்தின் சீரழிவுகளின் தொடர்ச்சியா? கதைப்போமா?


நம் நாடுகளை போன்ற கிழ்திசை நாடுகளில் இத்தகு சீரழிவுகள் எல்லாம் இருக்கவில்லை பின் எங்கிருந்து வரத்தொடங்கியது ? எல்லாம் இந்த பாழாய் போன ஆங்கிலேயர்களினால் தான் . ஆங்கிலேயர்களின் வருகையை போற்றும் மேட்டடிமைத் தனங் கொண்டவர்கள் ஒன்றை சிந்திப்பதில்லை சாலைவசதிகளும் தொடர்வண்டி (இரயில் )அஞ்சல் சேவையும் ஆங்கிலேயர்களின் வருகையினால் வந்தது என வாய்கிழிய பேசுவார்கள் . இவைகள் எல்லாம் நம் நாட்டில் இருந்த அளவற்ற்ற செல்வங்களை கொள்ளையடித்து செல்லவேயன்றி வேறல்ல . வந்தவன் நம் உயர்ந்த மொழியையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் சீரழித்துவிட்டு நம் செல்வங்களை கொள்ளையடித்து சென்றான் என்பது உண்மை .

ஆபாச படங்களோ புத்தகங்களோ உளவியல் ரீதியில் தனிமனிதன் மனமாற்றத்தை உண்டாக்கவில்லை என்பதுதான் அறிவியல் உண்மை . பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இதை உண்மையாக்குகிறது . பாலியல் படங்களையும் , கட்சிகளையும் பார்ப்பதால் அது குமுக நேரடியான சிக்கலை உண்டாக்கவில்லை என்பது தெளிவாக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது ?.

பாலியல் தொடர்பான தொடர்சிந்தனை ? நம் முன்னவர்கள் காட்டிய பட்டறிவு (அனுபவம் )என்பது அறிவு நிறைந்தது . அறிவைமட்டுமே அடிப்படையாக கொண்டது அனால் இன்று எந்தப்பொருளையும் ஆய்வு முடிவுகளையும் மேலை நாட்டவர்களை ஒப்பிட்டு உயர்த்தி காட்டவே செய்கின்றனர் பாவம் அவர்களின் அறியாமையை எனவென்பது? மறுப்பது உளநோய் மருந்தென சாலும் ... என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியலை படம் பிடிக்கிறார் திருமுலர் .அனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்வந்த சிக்மண்ட் பிராய்டு பெரிதாக தெரிவார் நம் புல்தடுக்கி பயில்வான்களுக்கு. உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டு என கொஞ்சம் கூட நானப்படாமல் சொல்லுவார்கள் . அதேபோல பாலியலையும் அழகாக படம்பிடித்து கட்டியவர்கள் நம்மவர்களே என்பது உண்மை .

மேலைநாடுகளின் அறிவியலுக்கும் . கலைகளுக்கும் தய்போன்றது தமிழ் மொழி என்பதை மேலைநாட்டவர்கள் அறிவர் நம்மவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே நம் அவா .தமிழ அறிவு மரபு என்பது மனித இனக்குழுக்களின் அறிவு மரபுகளுக்கு முன்னேடியானது என்பதை புரிந்து கொண்டால்தான் எல்லாம் விளங்கும் என்பதற்குதான் நீண்டவிளக்கம்.

இந்த பாலியல் தொடர்பான எண்ணங்களும் அது குறித்தான வேட்கைகளும் பல்வேருதரப்பிலும் இன்று கண்மூடித்தனமாக பெருகிவருவது நோயின் அறிகுறியே எனலாம் . பாலுறவு என்பது உணவு உண்ணுதல் . உறங்குதல் , நீரருந்துத்தல் . போன்ற இயல்பான செயல்களே ஆனால் இதை அதாவது உணவு உண்ணுதலை நாள்முழுக்க சிந்தித்து கொண்டிருப்பதில்லை . சுவைமிகுந்த உணவு உண்ணுதலை எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பதில்லை அனால் பாலியல் இன்பத்தை .இந்த சிந்தனையில் நாள் கணக்கில் ஈடு பாடு கொண்டு சிந்தித்து கொண்டு இருப்பது ஏன் சிந்தித்தோமா ?

இப்படி எப்போது வேண்டுமானாலும் ஒரு மனிதன் தின்று கொண்டிருக்கிறான் எனவைத்து கொள்வோம் அவன் நோயாளியாவான்.இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் கழி பெரிரையான் கண் நோய் எனவிளக்குவார்.


ஒருவர்
கணக்கில்லாமல் நாள் கணக்கில் பாலியல் தொடர்பான காட்சிகள்.படங்கள் , பார்த்துகொண்டு இருப்பதால் அவரின் நரம்பு மண்டலம் மேலும் மேலும் தூண்டப்பட்டு உணர்வு கிளர்ந்து எழுந்து குறிப்பிட்ட அந்த நரம்பு மண்டலமும் உடலும் தூண்டப்பட்டு தளர்ச்சி அடைந்து நோயாளி ஆகும்தானே .வலுகட்டாயமாக இப்படி மனித உணர்வுகளை தூண்டிவிட்டு விரைந்து நோயை பெற்று கொள்வதை விட தான் அளப்பரிய நேரத்தை முறையாக செலவழிக்கலாமே ?

அளவற்ற
மனித இனத்தின் நேரத்தை உயர்ந்த மணித்துளிகளை முறையான நேரத்தை உற்பத்தி நடவடிக்கை , வேலைவாய்புகள் ,கல்வி, பொருளாதரத்தை உயர்த்துதல் கலைகளை கற்றுகொள்ளுதல் போன்றவற்றில் செலவிடலாம் இல்லையா ? திணைக்களம் (துறை )தோறும் புதிய
கண்டுபிடிப்புகளை செய்யலாம் இல்லையா நிலத்தை செப்பனிட்டு உற்பத்தியை விரிவு படுத்தி
வேலை வாய்ப்புகளை உண்டாக்கலாம் இல்லையா? பாலியல் தொடர்பான எண்ணங்களில் வலுகட்டாயமாக செலவிடுவதால் மனிதன் நோயாளியகிவிடுவான் தானே . இது தானே அறிவியல் விதி

இப்படி
உடலையும் உள்ளத்தையும் கெடுத்து கொண்டு மனித வாழ்வின் பொன்னான நேரத்தை மணித்துளிகளை இந்த குமுகத்திர்க்காக செலவிடலாம் தானே . இந்த குமுகம் தான் பயணத்தை தடையின்றி தொடரவும் ஆக்கப்பணிகளை செய்து நாடும் உயர்ந்து இந்த புடவியையும் நோயற்ற குமுகமாக தோற்றங்கொள்ள செய்வோம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...