மே 28, 2012

மூப்பைத் தவிர்க்கலாமே வரிசை 3    இந்த மூப்பைத்  தவிர்க்கும் படியான  விரிவான செய்தி  பல பக்கங்களில்  முழுமையாக வழங்கினால்தான்  சிறப்பாக உள்வாங்க இயலும்  இருந்தாலும் படிப்பவர் எந்த  கோணத்தில் உள்வாங்கிக் கொள்கிறார்  என நமக்கு புரியவில்லை ஆக்கங்களை வெறுமனே படிப்பது  என்பது  விமர்சனக் கண்ணோட்டம் இல்லாமல்  எந்த கேள்வியும்  இல்லாமல்  படிக்கப் படல்  ஒன்று புரியவில்லை  என்றும் பொருளாகிவிடும் அல்லது கணிசமாக  படிக்கப் படுகிறது என்ற கோணத்தில் நாம் அணுகினால்    அதுகூட பிழையாகிவிடும்  இருந்தும்  எழுதுவது  கடமை என எண்ணி பதிவு செய்கிறோம்.

                 உலகினுக்கு வள்ளுவம் கொடையாக தந்தது  கணக்கில் அடங்காதவை  மருத்துவத்தையும் விட்டு வைக்காத வள்ளுவம்

  மிகினும் குறையினும்  நோய் செய்யும்நூலோர்
 வளி  முதலாக   வென்னிய மூன்று 

     என மக்களுக்கு சிறந்த அறிவியலை போதிக்கிறது  இது நாடிகளை குறித்தான   செய்தியாக மட்டும் கொள்ளாமல்  முறையில்லாத உணவு பழக்கங்களையும் நீக்கி  முறையான உணவுகளையும்  அளவுடன் கொள்ள வேண்டும் என எடுத்துக் கொள்ளவேண்டும்  உலகின் முதலில் தோன்றிய  அறிவியல்  நமது சித்த மருத்துவம் என்பது எதைனைபெருக்கு தெரியும்?வள்ளுவம் மட்டும் அல்லாமல்  பல சித்தர்கள்  நமக்கு அருளியது கோடிக் கணக்கனவைகள்   தேரையர்   என்ற சித்தர்
தின்னமிரடுல்லேசிக்கலடக்காமல்...
பெண்ணின்பால் லோன்றைப்  பெருக்காமல்... உண்ணுங்கால்  நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம் பேருரைக்கில் போம் பிணி  என்கிறார்

நோய் வந்தபின்  தீர்க்கும்நமது உயரிய  சித்த மருத்துவம்   முறை நம்மண்ணில்  வேர்விட்டு  ஆலமரமாக  செழித்து விளங்கிய போதும் கூட  நோய் வராமல்  காத்துக் கொள்ளும் முறை  சித்த மருத்துவத்திர்க்கே  உரியது

பாலுன்போம்  எண்ணைப் பெறின்  வென்னீரில்  குளிப்போம்
பகற்ப் புனறோம் பகற்றுயிளோம்  பருவமூத்த வேலன்சேர் குழளியரோடு இள வெய்யிலும்   விரும்போம்  இரண்டு  அடக்கோம்  ஒன்றை  விடோம் இடது  கையிர்ப்  படுப்போம் .
மூலஞ் சேர்  கரி நுகறோம்  மூத்த தயிர் உண்போம்  முதனாளிர்  சமைத்த கரி அமுதெனினும்  உண்ணோம்   பசித்தொழிய  உண்ணோம்

    இப்படி செய்தால்  எமனுக்கென்ன வேலை  நாம் இருக்கும் இடத்தில்  எவ்வளவு உயரிய அறிவியல்  தமிழன் கடைபிடித்தானா   சொன்னவர்களை மதித்தானா   போற்றினான?  இல்லை இன்றவாது செய்கிறானா செய்வானா?   தமிழன் நோயாளி  ஆகிக்  கொண்டு  இருப்பதற்கு அடிப்படை  காரணம்  புரிகிறதா? நோய் நீங்க  வேண்டுமா ? நோய்  வெல்ல வேண்டுமா?
தமிழன்  உலகில்  உயரிய  இடத்திற்கு  செல்ல  வேண்டுமா ? தொடர்ந்து  வாசிப்போம்  அதுவரை ....

சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் ....
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...