பொதுவாகவே தமிழர்களின் எளிமையான உணவுப் பொருளே தீவீராமான நோய்களை நீக்கக் கூடிய சிறந்த மருந்தாக வினை புரிகிறது என்பது நாம் அறியாத செய்தியாக தெரிகிறது காரணம் தமிழர்கள் பெரும்பாலும் தமிழ மருந்துகளைத் தேடி அலைவதில்லை ஆனால் நோயில் வீழ்ந்து கிடக்கறான் அதானல் தான் குறிப்பிடுகிறேன் .
மிளகின் மருத்துவ குணம்
வாயு
கபம்
இருமல்
செரியாமை
மிகுஏப்பம் ஆகியன நீங்கும்
பசிமிகும் .
மூன்று கிராம் மிளகை குடிநீராக்கி அருந்த
செரியாமை
காய்ச்சல்
வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும் மருந்து வீறு தணியும்.
அரைகிராம் மிளகுப் பொடியுடன் ஒருகிராம் வெல்லம் சேர்த்து உண்ண
பீனிசம்
தலைப் பரம் குறையும்.
தலைவலி தீரும்.
மிளகு நான்கு கிராம் பெருங்காயம் ஒருகிராம் கழற்சிப் பருப்பு பத்துகிராம் பொடித்து தேனில் அரைத்து மருந்தாக்கி அகவைக்கு ஏற்ப காலை, மாலை கொடுக்க
காய்ச்சல்
குளிர்காய்ச்சல்
யானைக்கால் காய்ச்சல் தீரும்.
பொதுவாக இதன் குணம்
காரல் உண்டாக்கும்
அகட்டுவாய் அகற்றும்
முறை வெப்பம் அகற்றுதல்
தடிப்பு உண்டாக்குதல்
வெப்பம் உண்டக்குகுதல்
வீக்கங்களைக் கரைத்தல்
வாத மடக்குதல்
வாத நோய்களையும்
சீழ் மூலத்தையும் குணமாக்கும்
அளவை ஊராக் காரம் அடைந்திருக்கும் வாத
விளைவைஎல் ல்லாம் அறுக்கும் மெய்யே - மிளகின் காய்
கண்டவர்க்கும் இன்பமாம் காரிகையே ! சீழ் மூலங்
கொண்டவர்க்கு நன் மருந்தாங் கூறு (குணபாடம்)
என்னதான் இருந்தாலும் மிகளின் தனிசுச்வை அதன் குணங்கள் எல்லாமே சிறந்தவைகள் ஆனால் இது குருதியை குடிக்க கூடிய தன்மை கொண்டது விந்துப் பொருளை வற்றச் செய்யக் கூடியது அளவுடன் உண்ண எந்த பின்விளைவும் இல்லை என அறிக .
முந்தய பதிவு களில் இடம்பெற்ற சுக்கு, திப்பிலி , இந்த பதிவில் இடம் பெற்ற மிளகு இந்த மூன்று மருந்துப் பொருட்களும் மிகசிறந்த மருத்துவ பயன் நிறைந்தவைகள் . மருத்துவத்தில் இவைகளின் கூட்டுப் பெயர் திரிகடு இந்த மருந்துப் பொருள் இல்லாதவர் மருத்துவரே இல்லை எனலாம் இது காயகல்ப மருந்துப் பட்டியலில் உள்ள மா மருந்து .
முறைப்படி பயன் படுத்தி நோய் வெல்வோம் .
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
.