பிப்ரவரி 27, 2011

சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்
சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்
(Balanced diet )
இப்போதைய விரைவு
வாழ்க்கை முறையில் உடலுக்கு தேவையானதை முறையாக தேடி சேமித்து உண்ணும் வழக்கம் இருப்பதில்லை . அதற்க்கு நேரமும் வாய்ப்பதில்லை .முறையான அறிவிகித உணவு என்பது என்ன?எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது ? இதைப்பற்றி கதைப்பதே இந்த இடுகை .

சர்க்கரை சத்து

இது
மாவு சத்து என்றும் ,சர்க்கரை சத்து என்றும் (carbohydraret ) என்றும் அழைக்கப்படும் .இந்த உணவே நமதுபெரும் பான்மையான உணவு எனலாம் .உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை அது தருகிறது என்பதால் இந்த உணவை தேடி எடுத்துக்கொண்டான்மனிதன் .இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தவசங்கள் (தாணியம்) கிழங்கு வகைகள் போன்றவற்றில்இருந்தும் பெறப்படுகிறது . இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டு (enzymes ) உடைக்கப்பட்டு குளுக்கோசாகமாற்றப்பட்டு மனித பொறி (இயந்திரம் )சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது .இந்த குளுக்கோசு உயிர்அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாகமாறிமனிதத்தை இயக்குகிறது .இதனால்தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்திதர குளுக்கோசு தரப்படுகிறது ஒருகிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரிவெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .ஒருகிரம்தன்நீரை ஒருடிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒருகலோரி எனப்படும் .சர்க்கரையைவிட வெல்லமே சிறந்த உணவு எனலாம் .நூறு கிராமில் (சர்க்கரை )புரதம் 0 .1 கி , கால்சியம் 12 மிகி பசுபரசு 1 மிலி
(வெல்லம்) புரதம் 0 .4 கால்சியம் 80 மிகி பாசுபரசு 40 மிகி தமிழர்களின் உணவு முறை எவ்வளவு சிறந்தது என்பது தெரிகிறதல்லவா ?

கொழுப்பு சத்து


இது நிலைத்திணை (தாவர),மாமிச , எண்ணைகளில் ,இருந்து கிடைக்கிறது .கொழுப்பு சத்துக்களில் கார்பன் ,ஹைட்ரஜன் , உயிர்வளி (ஆக்சிஜன் ),ஆகிய மூன்றும் , பாசுபரசு ,கந்தகம்,நைட்ரஜன் ,போன்ற வையும் காணப்படும். உணவுமுறைகளில் (FAT )எனப்படும் கொழுப்பே மிகையாக உண்ணப்படுகிறது. ஒருகிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது .

கொழுப்பு நிறைந்த உணவுகள் ஊண்,(மாமிசம் )தேங்காய்,எள்,நிலக்கடலை , பனை,சூரியகாந்தி, கடுகு, சோயா,ஆமணக்கு,வெண்ணை ,நெய்,அரிசிதவிடு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

புரதம்

சர்க்கரையும் ,கொழுப்பும் சக்தியை தருகிறது அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும் ,உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது.பின்தங்கிய (கொள்ளையடித்து ஒருசிலரே வைத்து கொள்ளும் நம் நாட்டைப்போல்)இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதும் காணப்படுகிறது .இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே பெரிதும் நோய் காணப்படுகிறது . கோடிகணக்கான உயிர் அணுக்களினால்ஆனது இந்த உடல் இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் மூகாமையனது இந்த புரதமே .ஒருகிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசியில் உள்ள புரதத்தில் லைசின் (Lysine ) குறைந்தே இருந்தாலும் பருப்புவகைகளில் மித்தியோனின் (methionine )குறைந்தே இருந்தாலும் இந்தஇரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுவதாக கூறுகின்றனர் .
நிலைத்திணை (தாவர )உணவு உண்ணுபவர்கள் பலவித தவச (தானிய) வகைகள் , கனிவகைகள்
கீரைகள் ,பால் போன்றவைகள் சேர்க்கபடுவதால் அவற்றினின்று தரமான புரதம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .
புரத உணவுகள் மொச்சை , குதிரை மசால்,பாசிபயறு , வேர்கடலை , பருத்தி சோளம் , போன்ற வற்றில் தரமான புரதம் கிடைக்கிறது என்கிறனர்

நார்சத்து
இந்த நார் சத்தை பொறுத்தவரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் மிகையாக உண்ணப்படும்
மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதாகையால் ஈற்றுணவு (மலம் )வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும் என்பதாலும் மிகுதியான கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவையாகிறது . எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் தேவையாகிறது.

உயிர் சத்துகள்

இவைகள் உடலின் சீரான வளர் ,சிதை மாற்றத்திற்கு துணை செய்கிறது . இது நம் உணவில் சேர்க்கவேண்டிய அங்கக வேதிபொருலாகும். இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகியதோ அதற்க்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது .
வைட்டமின் பி 1 இது கைகுத்தல் அரிசி , மாமிசம் போன்ற வற்றில் உள்ளது .

வைட்டமின் பி 2 நிலைத்திணை (தாவர )உணவில் காய் ,கனி ,கீரைகள்,நிறைந்து உள்ளது.
வைட்டமின் பி 12 இது மாமிசத்தில் ஈரல் பகுதியில் உள்ளதாக கணக்கிட்டு உள்ளனர் . மரக்கறியில் குறைந்தே காணப்படுகிறது என்கிறனர்.

போலிக் அமிலம் (Folic acid )இலத்தீன மொழியில் போலிக் என்றல் இலை என்று பொருள் தாவர உணவில் இது மிகையாக காணப்படுகிறது என்கிறனர் . இது நாளும் 30 முதல் 400 மைகிரோகிரம் அளவு எடுக்க வேண்டும் என்கிறனர்
.
வைட்டமின் சி இது எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த பழங்களான அரஞ்சு ,சாத்துக்குடி, போன்றவற்றிலும் ,தக்காளி பச்சைமிளகு ,கோசு, போன்றவைகளில் காணப்படுகிறது இருப்பினும் இவைகள் உணவுக்காக வேகவைக்கும் போது வெப்பத்தில் அழிந்து போகிறது . அனால் நெல்லி கையில் இருந்து கிடைக்கும் இச்சத்து எவ் வகையிலும் கெடுவதில்லை.
இவைகள் நாளும் 35 மிகி முதல் 60 மிகி வரையில் உணவில் சேரும்படி பார்த்து கொள்ள வேண்டும்
.
வைட்டமின் A இது பால் ,முட்டை , மீன் கல்லீரல் போன்றவற்றில் இருந்து கிடக்கிறது

வைட்டமின் D வெய்யல் படாமலே இருக்கும் மனிதர்களிடம் மிகையாக குறைந்து காணப்படுகிறது . இது மாலை வெய்யிலில் இருந்து கிடைகிறது .

வைட்டமின் E இது கோதுமை , அரிசி தவிட்டு எண்ணெய் போன்ற வற்றில் உள்ளது .

வைட்டமின் K தாவர எண்ணெய் ,காய், கொதுமைதவிடு போன்றவற்றில் உள்ளது
.
இந்த சத்துகள் நிறைந்த உணவுகளை முறைப்படி எடுத்து கொண்டாலே நோய்களில் இருந்து விடுபட முடியும் முயல்வோம்

குறிப்பு : சராசரியாக நம் நாட்டை பொறுத்தவரை கடுமையான உழைப்பாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்ற உணவுமுறைகளை கூறுகிறோம் .

நாளும் கலோரிகள் தேவை 3900

புரதம் 55 கிராம் , கால்சியம் 5 மிகி , இரும்பு 20 மிகி , வைட்டமின் A 750 மைக்ரோ கிராம் , தயமின் 1 .2 மிகி ,ரைபோ பிளேன் 1 .3
மிகி , நிகோடின் 16 மிகி , C 50 மிகி , போலிக் 100 மைக்ரோ கிராம் ,B 12 1 மைக்ரோகிராம் ,வைட்டமின் D 200 மைக்ரோ கிராம் .

தமிழர் கலைகளை காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...