டிசம்பர் 27, 2011

வயிற்று பூச்சிகள் தொந்தந்தரவு ஏன் ? .
        இப்போது பலர் வயிற்று பூச்சி தொந்தரவோடு வருகிறார்கள் . இது எப்படி வருகிறது ஏன் வருகிறது எப்படி தீர்ப்பது என மிகப் பெரிய வினாக்குறியோடு வருகிறார்கள் . இது மிகப் பெரிய தீர்க்க இயலாத சிக்கலோ அல்லது மிகப் பெரிய நோயோ அல்ல .இந்த சிக்கலுக்கு ஆளாகாத வர்களே இல்லை எனலாம் இதற்க்கு பல விதமான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் . இதனால் வயிற்றில் நன்மை செய்யும் பாக்ட்டீரீயாக்களும் மரித்துப் போகிறது என்பது அனைவரு அறிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும் .

இன்றய நுகர்வு பண்பாடு எப்படி வேண்டுமானாலும் பொருளீட்டலாம் எதைவேண்டுமானாலும் தின்று தீர்க்கலாம் என வந்தாகிவிட்டது . இதனால் முறையில்லாத சில கேடுகள் மனிதனுக்கு வந்து சேருகிறது .உணவு பழக்கம் என்பது உடலை வளர்ப்பதற்கும் நோயின்றி வாழ்வதற்கும் என இருந்த காலம் போய் நாவை அடக்கமால் கண்டபடி தின்று நோவை பெற்றுக் கொள்கிறார்கள் . உணவு எல்லா சுவைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் .கசப்பு, துவர்ப்பு, காரம் , இனிப்பு ,உப்பு ,புளிப்பு என அனைத்தையும் முறையாக எடுத்துக் கொண்டால பொரும்பாலும் நோய் கொஞ்சம் தள்ளியே நிற்கும் . அப்படி இல்லமால் வெறுமனே இனிப்பையும் புளிப்பையும் காரத்தையும் எடுக்கும் பலர்கசப்பையும் , துவர்ப்பையும் தள்ளிவிடு கிறார்கள் இதுதான் நோய்க்கு அடிப்படை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . இந்த முறையில்லாத இனிப்பும் சில சுவைகள் மட்டுமே வயிற்றில் பூச்சிகள் வளர காரணமாகி விடுகிறது . 

இந்த வயிற்று பூச்சிகள் சிலசுவைகளுக்கு அச்சப்பட்டு தள்ளியே நிற்கும் அதுதான் கசப்பு இதை நேரடியாக இல்லாமலும் சில காய்கள் மூலம் பெறலாம் .பாகல், சுண்டை , வேப்பம் பூ , வாழைப்பூ , தேங்காய் போன்றவை இந்த வயிற்று பூச்சிகளை நீக்க கூடியது நாளும் தேங்காயை வெறும் வயிற்றில் உண்டுவர பூச்சி தொந்தரவு நீங்கும் . எனவே மேற்கண்ட இந்த சுவைகளை முறையாக எடுத்துவர வயிற்று பூச்சிகள் இல்லாமல் நீடுவழ முடியும் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் 

        எதிர் வரும்  தமிழர்  புத்தாண்டு  மட்டும்  பொங்கல்  திருநாள்  முன்னிட்டு  எங்களின் ஊர் பகுதிகளில்  

தமிழறிஞ்சர்கள் 
தமிழ  கலைகள் 
தமிழ  விளையாட்டுகள்
பேச்சு போட்டிகள் 
பா வரங்கம் 
கட்டுரைபோட்டி 
 என  நடத்துகிறோம்  வெளிநாட்டு தமிழர்கள் இதே வடிவத்தை  தங்களின் இருப்பிடங்களில்  செய்யலாம் தமிழ  நாட்டிலும்  எல்லா இடங்களிலும்  இப்படி  பண்பாடு  விழாக்களை  நடத்தலாமே  ?

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...