ஜூன் 20, 2011

கால்கை( காக்கா )(Epilepsy) வலிப்பு தீர்வுகள் காரணங்கள் .....


கால்கை வலிப்பு நோய் பற்றிஎழுதுங்கள் என ஒரு வலைபதிவர் கேட்டு இருந்தார் இன்றைய நிலையில் இந்த காக்க வலிப்பிற்கு பாதிக்கப் படுகின்றவர்கள் மிகையாகி வருகின்றனர். பழைய காலங்களிலும் இந்நோய் இருந்ததனால் இந்த நோய்க்கு முறையான மருத்துவம் கண்டு இருக்கிறார்கள் சித்தர்கள் . இந்நோய் பற்றிய குறிப்புகள் சித்த மருத்துவத்தில் காணக்கிடக்கிறது . இந்நோய் அடிப்படையில் மூளை சார்ந்ததே . .

நோயின் தன்மை

இந்நோய் அறிவு குன்றி தன்னிலை மறந்து தன்னை முற்றிலும் மறந்த மயக்க நிலையில் கையும் காலும் வலித்தது இழுத்தல், வாய் கோணுதல், வாயில் நுரை தள்ளுதல் , கண்பார்வை குன்றுதால் ,, ஒருபக்கமாக இழுத்தல், என பல அறிகுறிகளை காட்டும். இந்த நோய் கண்டவர்கள் இந்த பாதிப்புகள் வரும் முன் சில அறிகுறிகளை காட்டுகிறது என்று கூறுகின்றனர் .
இந்த நோய் இருபத்தொரு வகையாக அழைக்கபடுகிறது இந்த இருபத்தொருவகை வலிப்பு நோய்களுக்கும் தனியான முறையான மருந்து களை சித்த மருத்துவம் கூறுகிறது .

நாடி நடை

சிறுவிர லிரண்டு பக்கம்
நாடிதான் சிதறி யோடில்
மருவிய காலுங் கையுங்
வலித்துடன் மிகவே நோகும் .

என தெளிவாக இந்நோயை பகுக்கிறது சித்த மருத்துவம் .சித்தமருத்துவம் என்பது அறிவியலை உள்ளடக்கியது என்பது நாம் அறிந்தது .

பொதுவாக வலிப்பு நோய் கண்டவருக்கு அந்நேரத்தில் சாவிக் கொத்தையோ அல்லது இரும்பு களையோ ஏதாவது ஒன்றை கொடுப்பார்கள் . இதில் அறிவியல் இருப்பதாக தெரியவில்லை.அந்த நேரத்தில் அவரை தனிமைபடுத்தி ஆடைகளை தளர்த்தி நாக்கை பல் இடுக்கு களில் மாட்டிகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு கட்டைகலையோ வேறு ஏதாவது பொருளையோ கொடுத்து நாக்கை கடிக்காமல் செய்ய வேண்டும். அதே சமயம் சுவாசத்தை சீராக்க வேண்டும் . அந்த நேரத்தில் அவருக்கு தூய உயிர்வளி (ஆக்சிஜன் )தேவை எனவே கூடி நின்று வேடிக்கை பார்க்காமல் அவருக்கு வெளிச்சத்தை தந்து சங்கடப்படுத்தாமல் அவரை தனிமைபடுத்தவேடும்.

நோய் கராணங்கள்

வலிப்பு நோயை பொறுத்தவரை பல காரணங்கள் கூறப்பட்டாலும் சித்தமருத்துவம் தெளிவான கருத்தாக்கங்களை கொண்டு இருக்கிறது.
சிலர் பரம்பரை யாக வரும் என்கிறார்கள் சில குடும்பங்களில் இது உண்மையாகிறது . நம்மை பொறுத்தவரை இந்நோயில் மூளைக்கு செல்லும் அறத்த நாளம் தடைபடுவது ஒரு காரணமா கொள்ள வழி இருக்கிறது. குழந்தைகளில் பலர் நோய் எதிர்ப்பின்மையால் அடிகடி தடுமன் (சளி )தொந்தரவு உண்டாகிறபோது மூளைக்கு செல்லும் நரம்புகள் பலமிழந்து போவதால் மூளைக்கு உயிர்வளி (ஆக்சிஜன் )மாற்றும் தேவையான சத்துகள் செல்லாமல் போகவே இந்நோய் தோன்றுவதாக படுகிறது . காரணம் இந்நோக்கு நாம் பலருக்கு மூளையை பலபடுத்தபடும் மூலிகை மருந்துகளையும் வலிப்பிற்கான மருந்துகளையும் அளிக்கும் போது நோயில் நல்லபலனை எதிர்பார்க்க முடிகிறது.

தீர்வுகள்

முறையான சித்தமருத்துவரின் கீழ் இந்நோய்க்கு தீர்வு கிடைக்கும். இந்நோய்கும் மூளைக்கும் நொறுங்கிய தொடர்பு இருப்பதால் மூளையை பலப்படுத்தப்படும் மருந்துகள் தேவைப்படலாம். நெய் ,தேன். வல்லாரை , பிரம்மி போன்ற மருந்துபொருட்கள் நல்ல பலனை தரும். தரமான தாவர புரதம் கொழுப்பு சேர்ந்த உணவுகள் தேவைபடல்லாம். பழங்காலங்களில் மணமான பெண்ணிற்கு ஐந்தரை பெட்டி வழங்குவார்கள் இந்த ஐந்தர பெட்டிகளில் உள்ள மருந்துகள் குழந்தை பிறந்தத்தில் இருந்தே வழங்குவார்கள் . அதில் ஒன்றுதான் வசம்பு இந்த வசம்பை பிள்ளை வளர்த்தி என்றே வழங்குவார்கள்
இம்மருந்தை முறைப்படி குழந்தைகளுக்கு வழங்குவது தமிழர்களின் மறிவு மரபில் தோன்றியதாகும். மேல்பூச்சகவும் உள்ளுக்கும் கொடுப்பார்கள் இந்த மருந்து மூளைவளர்ச்சியை துரிதப்படுத்தகூடியதாகும் . இப்படியாக சித்தமருத்துவத்தை முறைப்படி குழந்தையிலிருந்தே கொடுத்துவர வலிப்பு நோயும் மற்றும் பிற நோய்களும் வர வாய்ப்பே இல்லைநோய்கண்டவர்கள் மூளை வளர்ச்சிக்கான மேற்கண்ட வல்லாரை, பிரம்மி , தேன், நெய் போன்றவற்றை எடுத்தும் முறையான மருத்துவரை நாட நல்ல பலன் கிடைக்கும் முறையான நமது சித்த மருத்துவத்தை பயன் படுத்தி நோய் வென்று நீடு வாழ்வோம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்.More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...