ஜனவரி 31, 2012

௨.மண் குளியல் (Mud bath )



       இன்றைய  வாழ்க்கை முறை  மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை  மாறி புதுமை  அந்த  இடத்தை  பிடித்துவிட்டது கூடவே நோயும்.  பழமை நமது  உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல்  நோக்கில் இருந்தன  அதை நாம் மறந்து விட்டோம்  அதனால்  நோய்கள்  நம்மை பின்தொடர  விட்டுவிட்டோம் . முன்பு  குளிக்கும் முறைகூட  அறிவியல்  அடிப்படையில்  இருந்து நோயில்  இருந்து காத்தத்து  இன்று  குளியலே  நோயை  உண்டாக்குவதாக  இருக்கிறது . இன்றைய  வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா  போட்டு குளிப்பதால்  உடலில்  இருந்து  இயற்கையாக  சுரக்கும்  எண்ணத்  தன்மை  முழுவதும்  நீங்கி  எலும்புகள்  கலகலத்து போய் நோயில்  மரித்து போகிறனர் .

       இந்நிலை  கூடாதென  என  எண்ணிய  நமது  பழம் பெரும்  சித்த மருத்துவ அறிவர்கள் மனிதனை நோயில் இருந்து விடுவிக்க  பல நிலைகளை  கண்டறிந்து மக்களுக்கு கொடையாக  வழங்கினர் . அவற்றில்  ஒன்றுதான்  மண் குளியல் (Mud  bath ) இந்த  குளியல்  சிறந்த  குளியல் முறைகளில்  ஒன்றானது  என  நாம்  சிந்திக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம் .

           புற்று மண்  , களிமண் , இவற்றை  எதை  தெரிவு  செய்து  குளிக்க முயண்டறாலும் தேவையான  மண்ணை  தூய்மையான  இடத்தில்  இரண்டு  அங்குலம்  அளவிற்கு   எடுத்துவிட்டு  தூய மண்ணை  எடுத்து தேவையான அளவு  நீர்விட்டு  குழைத்து  உடல் முழுவதும்  பூசி  இள வெயிலில்  அரை  அல்லது முக்கால் மணிநேரம்  இருந்து குளிர்ந்த நீரில் குளிப்பது  மிகவும்  சிறந்தது  இந்த குளியல் தோல்  சம்பந்த  நோயில்  சிறந்த பலனைத்தரும் .

        பெரும்பாலும்  குளிப்பவர்கள்  வெந்நீரில்   குளிக்கின்றனர்  இது தவறானது எண்ணெய்த் தேய்த்த நிலையில்  வெந்நீரில்  குளிக்கலாம்  ஆனால்  எண்ணெய் தேய்த்து  குளிக்கத நிலையில்  வெந்நீர்  குளியல்  நோயை  உண்டாக்கும்  என்பதறிக  எண்ணைக் குளியல்  செய்த  அன்று  வழலைக்  கட்டியை  பயன்  படுத்த  தேவையில்லை . சீயக்காய்  போட்டி குளிக்க வேண்டும்

மீண்டும்  அடுத்த இடுகையில்  சிந்திப்போம் .
சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .










More than a Blog Aggregator

ஜனவரி 23, 2012

எண்ணைக் குளியல் (oil bath )

            மாறிவரும்  இன்றைய  சூழலில்  பழமையும்  பாரம்பரியமும் மறந்து  வருகிறது . நாற்றமெடுக்கும்  போலித்தனமும்  மேலை  நாகரீகமும்  கடைபிடிக்கப்  பட்டுவருகிறது . இதனால்  நோய்கள்  பெருகுகிறது .பழமையான  நமது  மருத்துவமுறை  சிறந்த  வாழ்வியலை  தன்னகத்தே  கொண்டது . அந்த வகையில்  எண்ணெய் குளியல்  இன்றைய  விரைவு  சூழலில் மறந்து  போன  ஒன்றாகி  விட்டது.  வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்வது சிறந்த முறையாகும் .

        வேறெந்த  மருத்துவ முறைகளிலும்  இல்லாத சிறப்பு  நமது சித்த மருத்துவத்திற்கு  உள்ளது. அதுதான் மனித வாழ்வியலோடு  இணைந்த  மருத்துவமுறை. வாரம்  இருநாள்  எண்ணெய் குளியல்  செய்க.காரம், புளி குறைத்து  உண்ணுக என  கட்டளையிட்டு  மனிதனை  வழி  நடத்தும் .

        எண்ணைக்  குளியல்  காலை 6 .30  க்குள் தொடங்கிவிட  வேண்டும் .இள வென்நீரில்தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . சீயக்காய்  அல்லது நலுங்குமா  பயன் படுத்தலாம் . எளிமையான  உணவுகள் உண்ணவேண்டும்.  எண்ணைக்  குளியல் செய்த அன்று  பாலுறவு  கூடாது . பகலுறக்கம் கூடாது .கடுமையான  வெய்யலில்  வேலை  செய்யகூடாது  .குளிர்ந்த உணவுகள்  கண்டிப்பாக கூடாது .

எண்ணைக்குளியல்  செய்வதால் பலன்கள் . 

உடற்சூடு  சீராகும் .
அழகுகூடும்.
சருமம்  மென்மைபெரும்.
ஐம்புலனும் நல்ல பலன் கிடைக்கும் .
தலைமயிர்  நன்கு  வளரும் .
நல்ல குரல் வளம்  கிடைக்கும் .
 எலும்புகள்  பலப்படும் . 

 இப்படி  பல பலன்கள்  இதனுள்  பொதிந்து  கிடக்கிறது.  எனவே  முறைப்படி  எண்ணக் குளியல்  செய்வோம் .

சித்தமருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம்.
More than a Blog Aggregator

ஜனவரி 15, 2012

தமிழர் திருநாள் வாழ்த்துகள் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

              பண்டைய  தமிழ  அறிவர்கள் எல்லாவற்றையும்  அறிவியல்  அடிப்படையிலேயே  பகுத்தும்  தொகுத்தும்  செய்தனர் . இது பறந்து பட்ட  மக்களை  நல்வழிப்படுத்தவும்  அறிவியல் அடிப்படையில்  சிந்திக்கவும்  செய்தன .  அதே  அடிப்படியில்தான்  தமிழர்களின்  ஆண்டின்  தொடக்கத்தை  அறிவியல் அடிப்படையிலேயே " தை " திங்களில்  இருந்தே கணக்கிட்டனர்  இது  சிந்துவெளி  காலங்களிலேயே  தொற்றங்க்கொண்டதகும். என்கிறனர்  தமிழ  அறிவர்கள் .

    எனவே  ஆண்டின்  தொடக்கம்  சுறவத்(தை ) திங்களில்  இருந்து தொடங்குவதே  அறிவியல்  அடிப்படையிலானது .

     தமிழினிய  வணக்கங்களும்  வாழ்த்துகளும் .

தமிழர்களின்  கலைகளைக்  காப்போம் .

சித்தமருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் .
More than a Blog Aggregator

ஜனவரி 09, 2012

நோய்களை  நீக்கும் மருத்துவக்  குளியல்கள்

  பழந்தமிழர்கள்  நோயின்றி  வாழ்வதற்க்கான  கட்டமைப்பை  குளியல்  மூலமாகவும் மருத்துவ  ரீதியான  குளியல்கள்  முறையிலும்  கண்டறிந்தார்கள்   தமிழர்கள் அறிவு  சார்ந்து சிந்தித்தார்கள்  நான் கடந்த காலத்தில் இருந்தார்கள் என  குறிப்பிடுகிறேன் . இப்போது இல்லையா என்றால்  இருக்கிறார்கள் அவர்கள் மண்ணிற்குள்  வேராக பழமையை  முறைப்படி காத்து வருகிறார்கள் . இந்த அறிவு  சார்ந்து சிந்தித்ததின்  பலனான  நோயின்றி  வாழ்தலை  மக்களுக்கு கொடையாக  வழங்கினார்கள். அந்த கொடைதான். இன்று நமக்கு புதையலாக  நோயின்றி  வாழ  வழிகாட்டுகிறது  அந்த புதையலினுள்  நுழைவோமே ?

       பழமையை  கடைபிடிப்பதும் , காப்பதும்  சிரமம்  என இன்றைய  சமகால  இளசுகள்   சொல்லும் போது   என்ன செய்வது  என புரியாமல்  தவிப்பதுண்டு  சரி அது கிடக்கட்டும்  மீண்டும் வேதாளம் முருங்கை  மரத்தில் ஏறிய கதையாக ஆகிவிடும்  ஆகையால்  நேரே  செய்திக்கு செல்வோம்.

     நோயை நீக்குகிற  குளியல் முறைகளை  தமது பட்டறிவால்  பழந்தமிழர்களும்  சித்தர்களும் நமக்கு கொடையாக  வழங்கினார்கள் . அவைகள்
.
௧.மழை நீரில்  குளித்தல்      (Rain  bath  or  natural  bath )
௨.மண் குளியல்                      (Mud  bath )
௩.வாழை இலைக் குளியல்   (Sun  bath  through  the bnana  leaves )
௪.தொட்டிக் குளியல்               (Tup  bath )
௫.எண்ணைக் குளியல்          (Oil  bath )
௬.முதுகுத் தண்டு குளியல்  (Spinal cord )
௭.இடுப்புக் குளியல்                  (Hip  bath )
௮.குறிக் குளியல்                      (Chits  bath )
௯.நீராவிக் குளியல்                 (Steam bath )
௧௦.ஆதவக் குளியல்                 (Sun  bath )

       என பலவகைக்  குளியல் முறைகள்  தமிழகத்தில் இருந்து வருகிறது  இந்த முறைகள்  நோய் வராமல் காக்கவும்  வந்த நோயை  நீக்கவும்  செய்கிறது .

௧.மழை நீரில்  குளித்தல்  (Rain Bath )
      இந்த குளியல்  உலக  உயிர்கள்  அனைத்திற்கும்  ஏற்றதான ஒரு குளியல் முறையாகும்.மழை நீரில்  அளவற்ற  உயிர்வளி (ஆக்சிஜன் ) கொட்டிக்  கிடக்கும்  என்பது  நமக்குத்  தெரியும்  இந்த நீரை  நாம்  அமிழ்தம்  என்போம்  இந்த நீரின்  சுவையும்  தூய்மையும்  எங்கும்  கிடைக்காதவை  என்பதும் நாமறிந்த ஒன்றே  ஆனால்  அதை  நாம்  குடிக்க மாட்டோம் என்பது வேறு  செய்தி . இந்த மழை நீரில் அளவற்ற  உயிர்வளி (ஆக்சிஜன் ) உள்ளமையால்  உடலில் உள்ள  மயிர்க்  கால்கள்  வழியே  உள்சென்று  குருதி  ஓட்டத்தை  சீராக்குகிறது . இதனால்  உடல்  புத்துணர்வு  பெற்றுவதுடன்  நோயற்ற  வாழ்வை  தருகிறது .

௨.மண் குளியல் (Mud Bath )

   பழங்  காலந் தொட்டே  மண்குளியல் சிறப்பான  இடத்தில்  நிற்கிறது  இந்த மண் குளியல்  பல்வேறு வகையானது  குளிப்பதற்கு  பல்வேறு வகையான மண்ணை  பயன் படுத்தி  வந்து இருக்கிறார்கள்

௧.புற்று  மண்
௨. செம்மண்
௩.களிமண்

 இப்படி  பல்வேறு வகையான  மண் குளியல்கள்  இருந்து  வந்து இருக்கிறது  அடுத்த பதிவிலும்  முறையாக  தொடர்வோம் ......


சித்தமருந்துவங்  காப்போம்  நோய்வென்று  நீடு  வாழ்வோம் .


கூடுதலான  தமிழ் புத்தாண்டு  மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்

More than a Blog Aggregator

ஜனவரி 02, 2012

குண்டானவர்  இளைக்க  இளைத்தவர்  குண்டாக  ஆக  வேண்டுமா ?.


      இப்போதெல்லாம் இருபாலரும்  நான்  குண்டக்க  ஆகவேண்டும்  அல்லது ஒல்லியாக  ஆகவேண்டும்  என சொல்லி மருந்து கேட்டு  வருகிறார்கள் .  இந்த பாழாய்  போன உலகம் நம்மை  எப்படி  மாற்றி விட்டு  இருக்கிறது எண்ணி  நகைக்க  வேண்டி  இருக்கிறது  நிலமென்னும்  நல்லாள்  மெல்லநகும் .... என்பது போலத்தான் .உண்மையில்  இதற்கு  மருந்து வேண்டுமா  ?நமது கல்வி  முறையில்  வந்த பெரும்  பிழைதானே ?

       இந்த  வலைபூவிற்கு வந்தாலே  நம்மையே  திட்டுகிறார்களே  என எண்ணம்  கொண்டவர்கள் சற்றே  பொறுப்பீராக . மனித  உடலுக்கான  சக்தி  வளி (காற்று) மண்டலத்தில் இருந்து  வருவதில்லை  நமது உணவு  பழக்க வழக்கம் வாழ்வியல்  நடைமுறை  உளவற்றால்  இன்னபிற காரணங்களினால்  உடல்  பருத்தும்  சிறுத்தும்  காட்சி தருகிறது . உண்மையில் சற்று  குண்டான  உடல்வாகு  கொண்டவர்கள்   உள்ளத்தில்  ஒன்றும்  உதட்டில்  ஒன்றும்  வைத்துக் கொள்வதில்லை  அதனால் முறையான  உணவு கூட  சற்று  ஊட்டத்தை தந்து விடலாம் .

    பருத்த உடல்வாகு  கொண்ட வர்கள்  உடலை இளைக்க  செய்ய  உப்பை குறைத்து  உண்ணலாம் .
நேரத்திற்கு  முறையான உணவை  எடுக்கலாம். நொறுக்கு தீனி  உண்பதை  நிறுத்தலாம். உணவுநேரத்தில் முறையாக  உண்டபின்னர்  குறுநடை  பயிலலாம் .உணவில் நிறைய  காய்களையும் கீரைகளையும் சேர்க்கலாம் . குறிப்பாக  வாழைத்தண்டு , சுரைக்காய் , முள்ளங்கி  போன்றவற்றை  எடுக்கலாம் . வாழைத்தண்டு  வாரம் இருமுறை  எடுப்பது சிறந்தது . இது பொதுவான   நடைமுறை என்றாலும்  உண்மையில் நடைமுறையில்   நல்ல சில  மாற்றங்களை  செய்ய  வேண்டி  இருக்கிறது .

     நான்  எதைவேண்டுமானாலும்  தின்பேன்  அதனிடையே  மருந்து  எனது உடலை இளைக்க  அல்லது  பருக்க செய்ய வேண்டும்  என எண்ணுவது  எப்படி  சரியாக  இருக்கும்  சிந்தித்தோமில்லை.?
வாய்  இருப்பதே  எதையாகிலும்  தின்பதர்க்குதன்  என தவறாக  எண்ணி விடுகிறார்கள்  பின்னர்  உடல் பருத்து வேதனை படுகிறார்கள் . சிலருக்கு  உடல்வாகே அப்படி  குண்டாக அமைந்து விடுவதுண்டு . உணவு திட்டத்தில்  முறையான மாற்றத்தை செய்து கொண்டாலே  எந்த மருந்தும் இல்லாமல்  நல்ல மாற்றத்தை செய்து கொள்ள முடியும் .

       சற்று  பருத்தவர்கள் காலை உணவை இயற்கையாக  அதாவது  சமைக்கப் படாமலே  உண்பது மிகசிறந்த  உணவுமுறையாக இருக்கும் . அதோடு  எந்த உணவையும் நன்கு மென்று  உன்னப் பழகினால்  இந்த உடல் பருத்தல்  சிக்கலே வர வாய்ப்பு இல்லை என்றே  சொல்லலாம் .  நன்கு  மென்று  உன்னப் படும் போதும்  உப்பைக் குறைத்து உன்னப் படும் போதும்  அளவிற்கு  மேலாக  உன்னத்தேவையிருக்கது அல்லவா? இவர்கள் உண்ட முன்பும்  பின்ன்பும்  குறைந்த அளவு  நீர்  பருக வேண்டும் . அது வெந்நீராக  இருந்தால்  சிறப்பு .

      இளைத்தவர்கள்  முதலில்  செரிமான மண்டலங்களை  தூய்மையாக்கிக் (கழிச்சல்  மருந்துகள்  எடுத்து   வயிற்றை  தூய்மை செய்து )கொண்டு கரிசாலை , அல்லது  வில்வம்  இதில் ஏதாவது ஒன்றை  காலையில்  பச்சையாகவோ  அல்லது உலர்ந்த நிலையிலோ நீரில் கலக்கி அருந்தி  செரிமானத்தை கூடிக் கொண்டு உடலுக்கு ஊட்டமான  உணவை  எடுக்க  வேண்டும். உணவுக்கு பின்னர் சற்று  வேண்டிய  அளவு நீர்  அருந்தலாம்   இனிப்பு வகைகள் எடுக்கலாம் . பகல் உணவை  முக்கால் வயிறு    அளவு எடுக்க வேண்டும் . இரவு  உணவு  கண்டிப்பாக எடுக்க வேண்டும்  வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . நேரத்திற்கு  தூங்க செய்க . பகல்  உறக்கம் கூடாது என்பது  சித்த மருத்துவ  கோட்பாடு  என்றாலும்  சற்று படுத்து  எழலாம் . இதை  முறையாக கடை பிடித்தால்  இரு தரப்பிற்கும் நல்லமாற்றம் வரும்  என்பது நூறு  விழுக்காடு  உண்மை .


சித்தமருத்துவம்  வெல்லட்டும்  தமிழன் முதலில்  நோயின்றி  வாழட்டும் .
சித்தமருத்துவ்ங்  காப்போம்  நோய் வெல்வோம்.


       எதிர் வரும்  தமிழர்  புத்தாண்டு  மட்டும்  பொங்கல்  திருநாள்  முன்னிட்டு  எங்களின் ஊர் பகுதிகளில்  

தமிழறிஞ்சர்கள் பற்றிய  முறையான புரிதல்  உண்டாக்குதல் .

தமிழ  கலைகள் கற்றுக்  கொடுத்தல்  அல்லது அறிமுகப் படுத்துதால் .
தமிழர்  பண்பாட்டு  மீட்டுருவாக்கம்  செய்தால் .
சித்தமருத்துவம் தொடர்பான புரிதலை உண்டாக்குதல் .
ஒக இருக்கை (யோகாசனம் ) பழக்குதல் .

தமிழ  விளையாட்டுகள்
பேச்சு போட்டிகள் 
பா வரங்கம் 
கட்டுரைபோட்டி 
 என  நடத்துகிறோம்  வெளிநாட்டு தமிழர்கள் இதே வடிவத்தை  தங்களின் இருப்பிடங்களில்  செய்யலாம் தமிழ  நாட்டிலும்  எல்லா இடங்களிலும்  இப்படி  பண்பாட்டு

  விழாக்களை  நடத்தலாமே  ?

இந்த அறிவிப்பை  கண்டதும்  karaiseraalai .blogspot .com  அரசன்  எங்கள்  ஊரில்  செய்கிறோம்  என  பின்னூட்டம் அளித்து இருந்தார்  அவருக்கு நன்றி  எல்லோரும்  பின்பற்றலாமே .


      இந்த அறிவிப்பினை இடுகைகளில்  செய்யுங்கள்  என கூரிய நண்பர்  சுகுமாருக்கு எமது  நன்றியும்  பாராட்டுகளும் . அதேபோல  வலைப்பூவில்  பலமாதங்களுக்கு முன்பாகவே பல மாற்றங்களை  செய்தமைக்கும்  உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றியும் .





 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...