ஜூன் 06, 2011

டையாலிஸ்(Dialysis ) தேவையா ? (நடிகர் ரசினி )
இன்று சராசரி களுக்கே பெரிய பெரிய நோய்கள் வரத்தொடங்கி விட்டது காரணம் இன்று முறை இல்லாத சில பழக்க வழக்கங்களினால் மயக்க பொருள்கள் (மது ,புகை ) போன்றவற்றினாலும் சில ஆங்கில முறை மருந்துகளினாலும் பலவித நோய்கள் தோற்றம் கொள்ளுகிறது . இவைகள் சிறுக சிறுக மனிதத்தையே அழித்துவருகிறது டையாலிஸ் தேவையா ? என்ற அளவிற்கு ஒரு திரைப்பட நடிகருக்கு அவரின் முறையில்லாத நடவடிக்கை காரணமாக வந்த நோய் இன்று தமிழக மக்களின் அவசியமான பேச்சாக மாறியுள்ளது யார் அந்த நடிகர் ?

.


மும்பையை பூர்விகமாக கொண்டு கர்நாடகத்தில் இருந்து கோடம்பாக்கம் (சென்னை ) வந்த வர்தான் இந்த ரசினி தொடர் புகைபழக்கத்தினால் மூச்சுத்திணறல் , நுரையீரல் தொற்று , அளவிற்கு மீறிய குடிபழக்கத்தினால் சிறுநீரக மாற்று அல்லது டையாளிசு ஆகியவை செய்யும்படி நேர்ந்திருக்கிறது .


நோய்காரணங்கள்

குறிப்பாக சிறுநீரகம் மனிதமூளை இதயம் போன்றவை அவ்வளவு எளிதில் கேடு அடைவதில்லை காரணம் இவைகள் மனிதனின் மூகமையான உடலுறுப்புகள் .என்பதால் . இந்த முறையில்லாத மது ,புகை அளவுக்கு அதிகமான வீரியம் மிகுந்த ஆங்கில மருந்துகள் மனிதனின் சிறுநீரகத்தை சல்லடையாக ஆக்கிவிடுகிறது. மென்பானங்களும் விதி விளக்கில்லை என்பது இரு செய்தி .

இரும்பு அல்ல மனித சிறுநீரகம்

மனிதனை தவிர வேறு எந்த விலங்கு களுக்கும் இந்த அறுவை மருத்துவமோ மாற்று உறுப்புகள் பொருத்துவதோ நிகழுவதில்லை காரணம் அவைகள் இன்னும் இயற்கையை ஒட்டியே வாழுகிறது . ஆனால் மனிதன் தன்னோடு பட்டணங்களில் (நகர்புறம் ) சமைக்கப்பட்ட உணவுகளையும் செயற்கை உணவுகளையும் விலங்கு களுக்கு கொடுப்பதால் அவைகளும் நோயாளியாகிபோகிறது.

ஒரு மனிதனிடம் பத்து இலட்சம் சிறுநீர் வடிப்பிகள் இருக்கிறது இவைகள் மனிதனின் முறையில்லாத நடவடிக்கை களினால் நாளும் சில பழுதடைகிறது இவைகளின் பணியை எஞ்சியுள்ள சிறுநீரக வடிப்பிகள் செலாற்று கிறது .

சிறுநீரக செயலிழப்பும் டயாலிசிசும்

இப்படி தாக்குதலுக்கு ஆளாகும் சிறுநீர் வடிப்பிகள் (Nephrons ) ஒருகட்டத்தில் சிறுநீரகம் செயலிழந்து போகிறது தன்னுடைய இயலாமையால். இந்நிலையில் உடலியக்கம் தொடர ஆங்கில மருத்துவ முறையில் செயற்கை கருவிகள் கொண்டு சிறுநீரகத்தை தூய்மையாக்கு கிறார்கள் . என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். இந்த டையாளிசிசு செய்யும் நிலையில் உடல் கடுமையாக சூடு அடையும் எனவும் , இந்த டையாளிசிசு செய்து கொண்ட அன்று உணவு எடுக்க முடியாது எனவும் கக்கல் (வாந்தி )ஏற்டும் எனவும் கடுமையான போராட்டம் நிறைந்த நாட்கள் என்கிறார் கருவி மூலம் சிறுநீரகத்தை தூய்மை செய்தும் பலன் கிட்டாமல் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்ட நண்பர் கணேசுமூர்த்தி.

சித்த மருத்துவத்தால் சிறுநீரகத்தை தூய்மையாக்கல்

சித்த மருத்துவம் மனிதனை மனிதனாக பார்க்கும் எனவும் அது மனிதனை பொறியாக பார்க்காது எனவும் முன்பே குறிப்பிட்டு இருந்தேன் . அதே போல அப்படிப்பட்ட சித்த மருத்துவம் சிறுநீரகத்தை தான் தொண்ணுறு விழுக்காடு கெட்டுபோன நிலையிலும் தன்னுடைய முறையான மருத்துவத்தினால் மூலிகைகளை கொண்டு முன்போலவே செயல்பட வைக்க இயலும் என்கிறது சித்த மருத்துவ சித்தாந்தம் .மனிதனின் அரத்தத்தில் கலந்து உள்ள உப்பு தன்மையை நீக்க பாகல், வாழைபூ, வல்லாரை,சுண்டை, பெருமளவில் உதவுகிறது . இந்த பொருட்களை எடுக்காமல் மீண்டும் மீண்டும் முறையில்லாமல் சிறுநீரகத்தை கெடுக்கும் மயக்க பொருள் வீரியம் மிகுந்த ஆங்கில மருந்துகள் கேடு அடைய செய்கியது.

நாள்பட்ட சிறுநீரக செயல்திறநிழப்புஆங்கில மருத்துவர் விளக்கம்

இது முற்றிலும் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையாகும் . சிறுநீரகம் செயலிழந்த நிலை சிறிதளவே காணப்படும் . தொடக்கத்தில் எந்த அறிகுறியும் காட்டுவதில்லை . என்கிறனர் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் .
சிறுநீரகத்தில் (Urea ) என்ற கழிவு மிகையாக இருக்காது . ஆரோகியமான ஒருவருக்கு யூரியாவிண் அளவு 20 -40 மில்லி கிராம் 100 மில்லி இரத்தத்தில் . இது சிறுநீரகம் முற்றும் செயலிழந்த நிலையில் இவைகள் மிகையாக இருக்கும்.

சிறுநீர் வெகுவாக வெளியேறினாலும் வெறும் நீரேயன்றி எந்த கழிவுப்போருளும் இருக்காது .

இரத்த சோகை (Anemia ) உண்டாகும்.

இரத்தத்தில் சுன்ன சத்து (Calcium )குறைந்து இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைந்து தானே முறியும்.

கடைசியில் நோய்கண்டவர் பேசவும் நடக்கவும் இயலாமல் வலு வின்றி ஆழ்ந்த மயக்க (Coma stage ) நிலை அடையக்கூடும்.

சில சமயம் கை கால் வலிப்பு உண்டாக்கலாம்.

நாவரண்டு மூச்சு கெட்ட வடைவீசும் .

பசி இன்மை, வயிறுபுரட்டல் , கக்கல் தோன்றும் .
தோலில் வறட்சி உண்டாகி தாங்க முடியாத அரிப்பு உண்டாகும்.

இந்த நிலையில் கூழ்மாறி (Dialysis ) எனப்படும் சிகிச்சை வயிற்று உள்ளுறை மூலம் இரத்தத்தில் நேரடியாகவும் செய்யப்படும்

அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்தப்படும் என்கிறார் ஆங்கில முறை சிறுநீரக இயல் மருத்துவர் செல்வராஜ்

சித்த மருத்துவம்

இரத்தத்தில் உள்ள மிகையான உப்பை குறைக்க சித்த மருத்துவத்தில் பல்வறு மூலிகைகளும் மருந்துப் பொருட்களும் கொடையாக கொட்டி கிடைக்கிறது. இவற்றை முறையாக பயன் படுத்தினால் சிறுநீரகம் கெட வாய்பில்லை .
அப்படி கேடு அடைந்த நிலையிலும் தேர்ந்த மருத்துவர் நோய்கண்டவருக்கு செயற்கையாக சமைக்க பட்ட உணவை நீக்கி முறையான சித்த மருந்துகளை பரிந்துரைப்பார். நோய்கண்டவருக்கு எனிமா எடுக்கப்படும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் பட்டினி மருத்துவம் கொடுப்பார் பழச்சாறுகள் கொடுக்கப்படும் பின்னர் மண் குளியல் செய்வார் பின்னர் மூலிகைகள் கொண்டுணவு பட்டியலை தருவார் சிலவாரங்களில் சிறுநீரகம் தன் பணிசெய்யத் தொடங்கும் இந்நிலையில் எளிய மூலிகை மருந்துகளும் இயற்கை உணவுகளும் வழங்குவார் இதில் கவனிக்க வேண்டியது இனிப்பு, உப்பு மென்பானங்கள் , சமைக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்படும் இந்த நிலையில் நோய்கண்டவர் நோயில் இருந்து மீள்வார் மாற்று சிருநீரகமோ அல்லது கருவி வழி சுத்தகரிப்போ எள் முனையளவும் தேவையில்லை என்பது இம் மருத்துவத்தின் சிறப்புகள் எனலாம் .

இது எமது மேலோட்டமான இடுகையாகும்

சித்தமருத்துவத்தை நாடுவோம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...