செப்டம்பர் 17, 2012

பகுத்துண்ணப் பழகுவோம் வரிசை 2      இன்றைய  சூழலில்  எல்லோருக்கும்  எதை உண்ணுவது  எப்படி உண்ணுவது  என்பது தெரிவதில்லை என்பதாக கடந்த பதவில்  எழுதியிருந்தேன் . உண்மைதான்  உண்ணத் தெரிந்தவனுக்கு  நோயில்லை  என்பார்கள் . இப்போது நோயும் இன்னதென்று  தெரிவதில்லை  எப்படி உண்பதேனவும் அறிவ தில்லை  ஆகையால் காலம் முழுவதும் நோயாளியாகவே  கிடந்துவிடுவது  சிலருக்கு பழகிவிட்டது .

        நாம் கூட எல்லா உணவுகளையும்  பட்டியலிட்டு  இதை எல்லாம் உண்ணலாம் எதெல்லாம்  உண்ணக் கூடாது என  அழகாக  பட்டியலிடலாம் என  எண்ணினேன்   இன்றைய  உணவுகளின்  பட்டியல்  விண்ணை முட்டும் அளவிற்கு  உயர்ந்து உள்ளமையால்  என்னால் பட்டியல் இடமுடியவில்லை. வாய்க்கு சுவையும்  வயிறு நிரம்பினால்  போதும் என்ற  உள வாற்றளுக்கு  இன்றைய மனித விலங்குகள்  தள்ளப்பட்டு விட்டன .ஆனால் விலங்குகள்  என மனிதனால் வருணிக்கப் படும்  எந்த விலங்கும் சுற்று சூழலை கெடுப்பதில்லை  நோய்வந்த பின்னர்  மனிதன் மாதிரி  தீனியை வலுக்கட்டாயமாக  திணிப்பதுமில்லை. உடலில் கேடு நிகழ்ந்து விட்டால்  உணவை  நிறுத்துவது  விலங்குகளின்  முதன்மையான பணியாக இருக்கிறது . ஆனால் மனிதன்  தீனிப்  பையை  வலுக்கட்டாயமாக  நிரப்பி நோயை  வலிந்து அழைக்கிறான்  நோய்  உள்ளநிலையில் உணவை தவிருங்கள்   என சொன்னால்  வேற்று  கிரக மனிதனை பார்ப்பது மாதிரி  நம்மை  பார்க்கிறார்கள் . பெருந்தீனி நோயை உண்டாக்கும் . இதைத்தான் வள்ளுவர்  கழி  பேரிரையான்  கண்  நோய் என்கிறார் .நாம்ம வர்கள்தான்  நல்லதை கேட்பதில்லையே ?

       இங்குள்ள  சில கொள்ளை (இந்த  கணினிவேறு  கொள்கை  என அடித்தால் கொள்ளை  என வருகிறது ) கொலை  செய்யும்  கூட்டத்தார்  என்ன புரியவில்லையா? அதுதாங்க அரசியல்  பிழைப்பளிகள்  எடுத்ததுக்கு எல்லாம்  காந்தி  ...காந்தி... என்பர்கள்  இதைத்தான் இந்த உலகத்திற்கு தமிழ்  தேசிய  தலைவர் சொல்லவேண்டும்  என  திலீபனை  காவு கொடுத்தார்  தலைவருக்கும் தெரியும்  தீலீபன் மரித்துப் போவார் என  இருந்தும்  அமைதி வழியிலும்  நாங்கள் முயன்று  பார்த்துவிட்டோம்    என்பதை  பதிவு செய்தார் . எந்த உண்மையை  உலக  கொலைகாரர்கள்  ஏற்றுக்கொன்றர்கள் . கொன்றுதான் அழித்து விட்டார்களே ? இதை ஏன் சொன்னேன்  என்றால்   ஏறத்தாழ  பதின்மூன்று  நாள்கள  உணவின்றி  நீரைக்கூட  அருந்தாமல்  திலீபன் உயிர்வாழ்ந்தார் . வெறும் நீரை மட்டுமே  அருந்தி   வாழ்நாள் முழுவதும்  கழிக்கயியலும்  தெரிந்து  கொள்ளத்தான்  சொன்னேன் .

        கடினமான  நோயுள்ள  நிலையில்  உணவை மறுப்பது  நோயில் இருந்து  தன்னை முழுவதுமாக  விடுவித்துக்  கொள்ள முடியும்  அல்லது  நோய் என்னது என கண்டறிந்து  குறிப்பிட்ட  அந்த நோய்க்கு பகையான  அதாவது  பொருந்தாத  உணவை மறுத்தல்  மனிதன் செய்கிற நல்ல  செயல் .இப்போது மனிதன்  தான்  நோயாளியாக  அல்லாவா இருக்கிறான் .பாவம் அவர்களுக்கத்தான்  இதை படித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு  இல்லவே இல்லை .


இனிப்பு ;மண் ,நீர் இணைத்து  தோன்றும்
புளிப்பு ;மண் ,தீ இணைத்து  தோன்றும்
உப்பு ;நீர் ,தீ இணைத்து  தோன்றும்
கசப்பு ;காற்று, விண் இணைத்து  தோன்றும்
கார்ப்பு ;தீ . காற்று இணைத்து  தோன்றும்
துவர்ப்பு ; மண் , காற்று இணைத்து  தோன்றும்

காரம், கசப்பு ,துவர்ப்பு  மிகையாக கொள்ள வளிக்(வாத )குற்றம்  மிகையாகும் .

உப்பு ,புளிப்பு, காரம் மிகையாக  கொள்ள பித்தம் மிகையாகும்

இனிப்பு ,புளிப்பு , உப்பு மிகையாக  கொள்ள ஐ (கபம் மிகுதியாகும் )

      சீதள வீரிய உணவுகள் வாயுவையும் கபம் போன்றதையும் மிகையாக்கும் .இது பித்தத்தை  குறைக்கும். கப  வகை  உணவுகள்  வாயுவைக்  குறைக்கும் சூடான  வீரிய உணவுகள்  பித்தத்தை  மிகையாக்கும் .   இந்த மிகப் பெரிய அறிவியலும் கண்டவர்கள்  நமது பழந்தமிழ  அறிவர்கள் (சித்தர்கள் ) அவர்களின் கால் வழிவந்த  சித்த மருத்துவத்தை  பொன்னேபோல்  காப்போம்  பின்பற்றுவோம் 

      
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...