இன்றைய நிலையில் நோயில்லாத உலகம் என்பதுவெறுங் கனவாகி போகிறது ஆனால் நாம் தொடர்ந்து நோயில்லாத உலகம் பற்றி எழுதுகிறோம் . இது இயலுமா? சாத்தியமா? என்ற வினாவும் தொடுக்கவில்லை எப்படி என கேட்கவும் இல்லை . இப்படி கேள்வியில்லை எனின் எங்கோ பிழை என பொருள் கொள்ளவேண்டி இருக்கிறது. தமிழர்கள் எங்கும் கேள்வி கேட்கும் உள ஆற்றலை பெறவேண்டும் என்பதே எமது பேரவா.
கடந்த இடுகைகளில் நாம் குழந்தை களுக்கு உரை மருந்து பற்றி எழுதி இருந்தேன் . அவைகளில் மூகமையான மருந்து பற்றி எழுத வில்லை இது தற்செயலாக நேர்ந்துவிட்டது இப்போதெல்லாம் நாம் குறிப்பெடுத்துக் கொண்டு வலைபூ எழுதுவதில்லை காரணம் புரியவில்லை .சுக்கு . சித்தரத்தை . கடுக்காய் , மாசிக்காய் ,குலக்காய் (ஜாதிக்காய் )இந்த வரிசையில் மூகமையான மருந்துப் பொருள் அதாவது தமிழரின் பண்பாட்டில் சிறந்த இடத்தை வகிக்க கூடிய மருந்து எனின் அது வசம்பு . இதன் பெயரையே ஊர்ப்புறங்களில் குறிப்பிட மாட்டார்கள் காரணம் இதற்க்குதரும் மதிப்பு அப்படி இதை ஊர்ப்புறங்களில் பிள்ளை வளர்த்தி என குறிப்பிடுவார்கள் . அந்த அளவிற்கு குழந்தை வளர்ப்பில் சிறந்த பங்காற்ற கூடியது .
இன்று குழந்தை வளர்ப்பில் பல்வேறு நோய்களுக்கு காரணம் இந்த வசம்பை முறைப்படி பயன் படுத்தாமைதான் இதன் பயனை நாய்பெற்ற தெங்கம் பழம்போல தமிழர்கள் விட்டுவிட்டார்களோ என எண்ணத்தூண்டுகிறது .செரிக்காமை, வயறு உப்புசம் மலசிக்கல் காற்று பிரியாமை இப்படி பல நோய்களை நீக்கி குழந்தைகளை வளர்த்து உடல் பலத்திலும் ஆள்பலத்திலும் அறிவு பலத்திலும் உயர்ந்தோங்க செய்ததது இந்த மருந்து இன்று பலகுழந்தைகள் சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருப்பதற்கு இந்த மருந்தை முறைப்படி குழந்தை களுக்கு வழங்காமைதான் எனநான் அடித்து கூறுவேன் .
இந்த மருந்து அறிவை செழுமைப்படுத்து வதில் சிறந்த பங்காற்றுகிறது என்பதில் எள் முனையளவும் ஐயம் வேண்டாம் . அது மட்டும் அல்லாமல் பினார் உண்டாகும் கைகால் வலிப்பு நோய் களும் இந்த மருந்தை முறைப்படி எடுக்கும் குழந்தை களுக்கு வருவதில்லை . ஆக நோயை நீக்கும் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைகளை பின்பற்றி நோய் வென்று நீடு வாழ்வோம் .
இப்போது புரிகிறதா நோயில்லா குமுகத்தை உண்டாக்க முடியும் என்பதை ....
சிந்திப்போம் .....
ஒரு பயனுள்ள பதிவு., நன்றி சகோ..
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருக்கும் மருந்துப் பெயர்களெல்லாம் கேட்ட ஞாபகம் கனவுபோலக் கேட்கிறது.தொண்டை கரகரப்பாக இருந்தால் வசம்புபோல ஒன்றைச் சப்பிக்கொண்டிருக்கக் கொடுப்பார்களே.
பதிலளிநீக்குஅது வசம்புதானா தயா ?
அது சித்தரத்தை இது நுரையீரலை தூய்மைப் படுத்துவதில் தேர்ந்தத்து தடுமனை (சளி )நீக்குவதில் சிறந்த பங்களிப்பது எல்லோர் வீட்டிலும் எப்போதும் இருக்க வேண்டிய சிறந்த மருந்து நன்றி .
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு
பதிலளிநீக்கு