ஏப்ரல் 30, 2012

விசமாகும் மாங்கனிகள் ( mango froot) எச்சரிக்கை         தமிழர்  உணவில் மாங்கனி  முதலிடத்தில்  இருப்பதுநமக்கு தெரியும்.  அதாவது  மா,பலா,வாழை , என முக்கனிகளை  இணைத்து உணவு வழங்குவார்கள் . இந்த மாங்கனி  இன்று  நச்சாகி  மரணத்தையும்  புற்று நோயையும்  தரும்  என எத்தனைபேர்  அறிவார்கள்? ஆம்  இந்த முதன்மையான கனி  இன்று நோயை பரப்பிக் கொண்டு  இருக்கிறது  எப்படி? இன்றைய  விரைவு உலகம்  எதையும் பொறுமையாக  அணுகுவதில்லை  விரைவு  அதாவது  இன்றய  முதலீடு  நாளை  கொள்ளை  இலாபம்   என வந்துவிட்ட  தனியுடமை  காலம். எனவே  விரைந்து  பழங்களை  பழுக்க வைத்து  காசாக்க நினைக்கிறது . நாம் ஏன் நோயாளியாக  வேண்டும்  எத்தனைபேர்இதை   சிந்திப்பார்கள்?

      மனிதன்  சிந்திக்கும் திறன் பெறவேண்டும்  என்பதே  நமது அவா. இயற்கையாக  காய்த்த மாங்காய்களை நீண்டகம்புகளைக் கொண்டு வலையமைத்து பறித்து பயன் படுத்த வேண்டும். பயன் படுத்தி  இந்த மாங்காய்களை இயற்கையாக  பழுக்க வைக்க  குறைந்தது  ஐந்து , அலது ஆறு  நாட்கள்  ஆகும் ஆனால் இன்றைய  விரைவு  உலகம்  சில இதளியங்களை(இரசாயணம் )  கொண்டு  பழுக்க  வைக்கப் படுகிறது  எப்படி?

      முன்பெல்லாம்  பழங்களை இயற்கையாக ... இயற்கைன  முறைகளை   கொண்டு  பழுக்க வைத்தனர் .முற்றிய  காய்களை வைக்கோலைப்  பயன் படுத்தி  பழுக்க வைத்தனர் . அல்லது மண்  பானை  கொண்டு  பழுக்க வைத்தனர். இந்த  பழங்கள்  மிகையான  கவர்ச்சி  இல்லாமல் மிகுந்த சுவையுடன்  இருந்தது  அது ஒரு காலம்  இப்போது  அதை  எதிர்ப்பார்க்க  இயலாது .

    விரைந்து  மாங்காய்கள்  பழுக்க கால்சியம் கார்பைடு  இரசாயன  கட்டிகளைக் கொண்டு  பழுக்க வைக்கின்றனர். இந்த பழங்களை உண்பதால்  வயிற்று  கோளாறுகள்,  பல்வேறு உடல் நலக் கேடுகள்  உண்டாகிறது.  இந்தவகையில் பழுக்க வைக்கப் பட்ட  பழங்கள் சுவையும் மனமும்  இருப்பதில்லை . இயற்கைத்தனமையோடு  இருப்பதில்லை  அதாவது இன்றைய  இளசுகளைப்  போலவே  வெறும் கவர்ச்சியை  மட்டுமே  கண்டு காமுருவதுபோல  பலர்  கவர்ச்சியை  மட்டுமே கண்டு  பொருளை வாங்கி  மடிந்து போகின்றனர் . கவர்சிக்குள்ளும்  மிகப் பெரிய கேடுகள்  மறைந்து உள்ளதை  எத்தனைபேர்  அறிவார் ?

    இந்த பழங்களில்  பாஸ்பரஸ்  ஹைட்ரைடு, மற்றும் ஆர்கானிக்  இரசாயணம்  போன்றவை  பழத்தில் சேர்ந்து விடுகிறது  இது உடலுக்கு  கழிச்சல் , கக்கல்( வாந்தி ) வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல்  , வயிற்று எரிச்சல் , மிகையான தாகம், பலவீனம் மறந்து போகுதல், பேச்சுக் குறைபாடு, ஆகியவை உண்டாகிறது. இந்த கலவை  அதாவது இந்த பழங்கள் புற்று  நோயை உண்டாக்க வல்லன .  இந்த பழங்களை  உண்ணுவதால்  உடல் சீர்கேடு அடைகிறது. உடலில் உள்ள கோடானுகோடி  செல்கள் மரித்துப் போகிறது  பலவேறு மாற்றங்களை சந்திக்கிறது, தேவையா ? எப்போது  சிந்திப்போம்?

இந்த வகைப் பழங்களை எப்படி அடையாளம் காணுவது  இதுதானே உங்களின் வினா?
பழம் முழுவதும்  ஒரேமாதிரியாக  மஞ்சளாக  இருக்கும்  பழத்தில் கரும் புள்ளிகள் இருக்கும் .பழத்தின் உள்ளே  பழத்திற்கு உரிய  மனமும்  சுவையும் இல்லாமல்  வெண்மையாக  இருக்கும். பழம் மிருதுவாக  இருக்கும் . சுவை குறைந்து இருக்கும் . சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்  நீங்கள் மாம்பழம் வாங்க  போகின்றீர் களா?
More than a Blog Aggregator

ஏப்ரல் 23, 2012

கோடை நமக்கு வழங்கும் கொடை வரிசை 2


  நமது தமிழ் சூழல் என்பது பல்வேறு மாறுபட்ட பருவ நிலைகளைக் கொண்டது . எதற்கும் கட்டுபடாத ஒரு சிறந்த சூழல்.இந்த சூழல்தான் வியக்கத்தக்க அளவிற்கு உலகின் முதன்மையான மூலிகைகளின் விளைச்சலுக்கு ஏற்றதாக இருக்கிறது என பல்வேறு மேலை நாடுகள் தெரிவிக்கின்றன. அதோடு மட்டும் அல்லாமல் இங்கு இருந்து பலவேறு மூலிகைகளை தருவித்து பயன்படுத்திக் கொள்ளுகிறது . ஆனால் தமிழர்கள்தான் பாவம் இன்னும் படித்தவர்கலனாலும் பாமரரர்கள் ஆனாலும் அந்த ஆங்கில மருத்துவத்தை விட்டு விலக மாட்டேன் என அடம் பிடித்து மடிந்து போகின்றனர்.

மேலை நாடுகளில் முதலில் மருத்துவர்கள் இயற்க்கை மருத்துவத்திற்க்கே முன்னுரிமை கொடுக்கிறனர் . வலிந்து அனுப்பிவைக்கப் படுகிறனர் . ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் கவலை கொள்ளுவதில்லை என்ற நிலைபாட்டை தமிழர்கள் எடுத்து விட்டார்கள். எதற்கும் மேலைநாட்டு மோகத்தில் அடிமைத்தனத்தோடு சுற்றித்திரியும் நபர்களும் உண்டு. உலகினுக்கே அறிவியலை கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள் என்பது தெரியாது இவர்களுக்கு.

இந்த கொடுமையான வெம்மை தமிழகத்திற்க்கே உரியது. இந்த கோடையை சற்று மென்மையாக அணுக வேண்டும். எல்லா காலங்களிலும் நன்மையும் தீமையும் உண்டு.  கோடையின் வெம்மைத்தான் எல்லோருக்கும் கொடுமையாக தெரிகிறது, உடலில்  உள்ள கழிவுகளை வியர்வை வழியாக வெளியேற்றுகிறது ,சிறுநீரகங்களுக்கு  கடுமையான பணியை அளிக்காமல் உடலில் உள்ள தோள்களின் வழி வியர்வை நாளங்கள் நன்கு செயல் பட்டு தோலின் வழி அழுக்குகளை நீக்குகிறது. சிறுநீரகம் சற்று ஒய்வு கொள்ளுகிறது எனலாம். உடலில் உறைந்து கிடக்கும் ஐ (கபம் ) கதிரவனின்  ஆளுகையால் உறைந்து வெளியேறுகிறது. இந்த ஐ குற்ற நோய் கண்டவர்கள் சற்று  நிம்மதி பெருமூச்சு விடுகிறனர் . இந்த நேரத்தில் உணவுமுறையும் நடவடிக்கை களும்  முறைப்படி அமைந்து இருந்தால் பின்னாலில் நோயில் இருந்து விலகி இருக்க இயலும் .

அனைவருமே கோடைகாலத்தில் வெண்மை பருத்தி ஆடையை பயன்படுத்தலாம் .

மதுப் பழக்கம் உள்ளவர்கள் இந்த கொடுமையான வெம்மையை கருத்தில் கொண்டாவது  அதை தவிர்க்கலாம். காரணம் இந்த கால மதுப் பழக்கம் சிறுநீரகத்தில் கற்களை  உண்டாக்கும் . எனவே கண்டிப்பாக மதுப் பிரியர்கள் மதுவில் இருந்து விலகி இருக்கலாம்.

கோடையில் மிகையாக வெய்யலில் சுற்றித்திரியாமல் அதன் தாக்குதல் குறைந்த போது பணி முடிக்கலாம்.

கண்ட கடைகளில் கவர்சிகரமாக, வண்ண வண்ணமாக விற்கப் படும் குடிநீரை பயன் படுத்தாமல் இயற்கையான இளநீர் , முலாம் பழம் , தர்பூசணி, போன்றவற்றை  பயன்படுத்தலாம்.

இரவில் உள்ளங் காலுக்கு விளக்கெண்ணை தடவி விடலாம். கண்ணையும் பாதுகாக்கும் உடலையும் குளிர்விக்கும் . தலையிலும் விளக்கெண்ணெய் தடவி  நீராடலாம். குளிக்க குளிர்ந்த நீர் சிறப்பானது.

வாரம் இரண்டு நாள் எண்ணைக்குளியல் சிறந்தது.

உடலுக்கு வழலைக் கட்டி (சோப்பு ) போட்டு குளிப்பதை தவிர்க்கலாம்.
வெட்டிவேர் , சந்தனம், ஆவாரை,கோரைக் கிழங்கு, பூலாங் கிழங்கு , கார்போக அரிசி , போன்றவற்றை பயன் படுத்தலாம் .

இளநீரில் பனங் கற்கண்டு கலந்து அருந்தலாம் .


சித்த மருத்துவங்காப்போம் நோய் வெல்வோம் 
More than a Blog Aggregator

ஏப்ரல் 16, 2012

கோடை நமக்கு கொடை summer
             கோடைக்காலம் என்றாலே எல்லோருக்கும் எரிச்சல்தான் வரும் . கரணம் ஆதவனின் வெம்மை மட்டும் அல்லாமல் அதன் தொடர்ச்சியாக  பல்வேறு  நோய்கள் நம்மைவந்து தாக்குவதால்தான் . அதையும் மீறி கோடை நமக்கு பல  நன்மைகளையும் செய்கிறது .

      கோடைக்காலத்தில் ஆதவன் வடக்கு நோக்கி செல்வதால் வெப்பம் மிகையாக இருக்கும். குளிர்காலத்தில் உறைந்து இருந்த ஐ (கபம் ) கதிரவனின்  ஆளுமையினால் உருகி சீற்றம் அடைந்து செரிமானத்தை மந்தப்படுத்தும். இந்த செரிமானம் மந்தமாவதால் பல்வேறு நோய்கள் நம்மை வந்து தாக்கத்  தொடங்கும். உதாரணமாக இக்காலத்தில் கபம் மிகுந்து அதன்  தொடர்பான பிணிகள் வரத்தொடங்கும் .தடுமன் (சளி ), இருமல் ,சுரம்  போன்ற  மூச்சுக்குழல் தொடர்பான பிணிகள் வந்துதாக்கத் தொடங்கும் .

        எனவே இந்த காலங்களில்  உணவு  பழக்கவழக்கங்கள்  எல்லாம் கபத்தை குறைப்பதாக இருக்க வேண்டும் . அதோடு  வயிற்றுத்தீயை வளர்ப்பதாக  இருத்தல் வேண்டும்  வாய் கொப்பளித்தல்,  நசிய  மிடல் (மூக்குவழி  மருந்து ) பயன் படுத்த வேண்டும்
      உடற்பயிற்சி  செய்தல்  உடல் பிட்டித்துவிடல் (மசாஜ் )இது மிகவும் தேவையானது. மேலும் தேன் மருந்து  பொருட்கள்  சேர்த்துக் காய்ச்சிய  குடிநீர்  போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
                               

     கோரைக்கிழங்கு , சுக்கு, போன்றவற்றை சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் அல்லது சந்தனம், கருங்காலி  இவைகள் சேர்த்துக் காய்ச்சிய  குடிநீர்  தேன் கலந்த குடிநீர்   இவற்றைப் பருக வேண்டும்.  எளிதில் செரிக்க கூடிய  உணவுகளை எடுக்க வேண்டும்.  குளிர்ந்த பொருட்கள்  பகல் தூக்கம்  எண்ணெய் பசை கொண்ட  உணவுகள் உப்பு மிகையாக  உள்ள  உணவுகள்  புளிப்பு  இனிப்பு கலந்த உணவுகள் தவிர்க்க வேண்டும்.  

      புதிய மண் பாண்டத்தில் ஊற்றப்பட்ட நறுமணம் கொண்ட  குடிநீர் எடுக்க  வேண்டும் நெய் கலந்த அரிசி  கஞ்சி  திரவமான  குளிர்ந்த காடி அன்னம் , பால் நெய்  திராட்ச்சை  போன்றவை எடுக்க வேண்டும்  உடல் மீது சந்தானம் தேய்த்துக் குளிக்க வேண்டும்  இரவில் திறந்த  வெளியில் (வீட்டை பூட்டி விட்டுத்தான் ) தூங்க வேண்டூம் . வெட்டி வேர் ,சந்தனம் கருங்காலி  சேர்ந்த உணவுகள் மிகவும் நல்லது  .    இயற்கையின் கொடையான  இளநீர், தர்பூசணி  முலாம் பழம்  போன்றவற்றை  மிகயாகப்பயன்படுத்துவது       மிகவும் தேவைஎனலாம் .
   சுக்கு, தனியா, போன்றவற்றை  தட்டிப் போட்டு வெதுவெதுப்பாக  அருந்தலாம்.
மோரில் வெல்லம்  கலந்து அருந்தலாம். இதனால் மூக்கடைப்பு தும்மல்,மார்புச் சளி  போன்றவை வராமல் தடுக்கலாம்.
    மிகையாக வேர் குறு  தோன்றினால் அரிசி   கஞ்சியை உடல் முழுவதும்  பூசி குளிக்க நல்ல பலன் .
    கால்களில்  எப்போதும் செருப்பு அணிதல்  கண்களுக்கு பாதுகாப்பைத்தரும் .
சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் .

More than a Blog Aggregator

ஏப்ரல் 09, 2012

பன்றிக் காய்ச்சல்(swing flu) பூச்சாண்டி ... ....
          இன்றைய  மக்களின்  அறியாமையை  பயன்படுத்தி  சில்லறை  சேர்க்கும்  சிலர்  , சில  நிறுவங்கள் எப்படி வேண்டுமானாலும்  அச்சுறுத்தி  சில்லறை  சேர்க்கின்றனர் இதில் மக்கள்படும்
பாடு  சொல்லி  மாளாது மருத்துவ  மனைகளும்  எல்லாமே  இந்தவரிசையில்  வைக்க வேண்டியதுத்தான்  மக்கள்தான்  அறிவை  பயன்படுத்துவதில்லை  அறிவைத்தேடி  செல்வதில்லை   என்றாகிய பின்னர்  பன்றிக் காய்ச்சல்  என்ன  தரமான  தமிழர்களின்  வாழ்க்கைமுறையை , உணவுமுறையை  குறை சொன்னால் கூட  அதை அப்படியே  நம்பிவிடுவான்

  இன்றைய  நிலையில்  பன்றிக்  காய்ச்சல்  அறிகுறியான கடுமை
யான  காய்ச்சல் , உடல்வலி, மூக்கில்  இருந்தும் கண்ணில்  இருந்தும்  நீர்வடிதல் , போன்ற  அறிகுறிகளை  கொண்டு  இந்த நோய் வருகிறது என மக்களை  அச்சுறுத்துகிறது   அனால்  இந்த பன்றி  காய்ச்சலுக்கு  சித்தமருத்துவம்  என்ன தீர்வை சொல்லுகிறது கொஞ்சம்  சிந்திப்போமா?
       காய்ச்சல்  என்பது  மனிதனுக்கு  உண்மையில்  வரவேண்டிய  ஒன்று  அது  வராவிட்டால்தான்  நாம்  அச்சப்பட வேண்டும் . சுர் + அம் = சுரம் .சுர்  என்றால்  சுடுதல் , அம்  உடையது    சுரம் சுடுதலை  உடையது   .


                    சுரநிலம்   போலச்  சுடுநோய்ச்     சுரமென் 

                      றுரைப்பர்    செரிக்லத் துண்டா    மனநலம் 

                    நரம்பின்   வழியே   நண்ணி   நுடம்பில்  

                      பெருகும்   வெப்பம்   பிழைசெய்  நோய்  .

     உயிர் அனல் தன்னிலை விட்டு மாறிப் புற உடலில் பரவுமாயின் அது சுரம். 
காய்ச்சல் வெம்மை  என்று  பல பெயர்களில் அழைக்கப் படுகிறது. சுரத்தை தன்வழிச்  சுரம் 52  வகை யாகவும். புறவழிச்  சுரம் 12  வகையானது எனவும்  மொத்தம்  64  வகை  சுரம் உண்டு  என சித்தமருத்துவம்  பட்டியல் இடுகிறது . இதில்  பன்றிக்  காய்ச்சல்  என்று  அழைக்கப்  படும்  சுரத்தை  நஞ்சு (விச) சுரம்  என சித்த மருத்துவம் பகுக்கிறது.

     இது வாதாதீ  முக்குற்றங்கள்  தம்தம் அளவில் மிகுந்தேனும்  குறைந்தேனும்  இருந்தாலும்  காலச்சூழளினாலும்  இந்த நஞ்சு  சுரத்தை  உண்டாக்குகிறது  இந்த சுரங்களை மாறல் சுரம்  முறைசுரம்  குளிர் சுரம் , சீத  சுரம், விட்டுவிட்டுவரும்   சுரம் என பலவகையில்   அழைக்கிறனர் .

      குறிப்பாக நோய் கண்ட  நிலையில்  தீணியை குறைக்க வேண்டும் . கழிபேரிரையான் கண்  நோய்  என்பார்  வள்ளூவர்  தலைசிறந்த மருத்துவரும் அல்லவா வள்ளுவர் ? அதனால்  நுட்பமாக  கணிக்கிறார் . இந்த  சுர நோயில் 
தீணியை  குறைக்க வேண்டும் என கூறி இருந்தேன் .  உண்ணா நிலை  கடைபிடிக்க வேண்டும்  அப்போது உடல்  தன்னிலையடைந்து நோய் வெல்ல இயலும் . சித்தமருத்துவம்  அறிவை  அறிவியலை  போதிக்க  கூடியது  எனவே 

                               பட்டினி பெருமருந்து 
                              சிறு உணவு  பெருமருந்து 
                             உற்ற  சுரத்திற்கும்  உறுதியம் வாயுவிற்கும் 
                       அற்றே  வருமட்டும் அன்னத்தை  காட்டதே  


      என்ற பழமொழிகள் வழி  நம்  அறிவுக் கண்ணை  திறக்க முயல்கிறது  . நாம் தான்  கண்ணையும்  தெறக்க மாட்டோம்  அறிவையும் பெறமாட்டோம் என வீணே   அழிந்து  கொண்டு  இருக்கிறோம் . சுரம் தீரும் வரை  கடின உணவுகளை  நீக்க வேண்டும்  எளிமையான  எளிதில் செரிக்கும் உணவுகளை  அரிசி  நொய் கஞ்சிகளை  உணவாக கொள்ள வேண்டும்  அப்படி கடைபிடிக்கப்  பட்டால் பன்றி   காய்ச்சல்  என்ன  வேறு  எந்த  பெயரிட்டு  இந்த நச்சு  சுரங்களை  அழைத்தாலும்  அந்த சுர நோய்கள்  நம்மைவிட்டு  அகலும்  .

 இந்த பன்றி  காய்ச்சலுக்கு உரிய சித்தமருத்துவ மருந்துகள் :

நெல்லி ,தான்றி, வேப்பீர்க்கு , சீந்தில் தண்டு , மல்லி , முத்தகசு , ஆகியவற்றை  7 .5  கிராம் அளவிற்க்கு தட்டிப் போட்டு  எடுத்து தேவையான  நீர்விட்டு  காய்ச்சி     குடிக்க லாம் .


ஆடாதோடை , நில வேம்பு, பேய்புடல் ,சீந்தில்தண்டு ,பேய் பீர்க்கு  வேர்ப்பட்டை  ,வெட்பாலை  அரிசி  வகைக்கு 7 .5  கிராம் அளவிற்க்குநன்கு  தூளாக்கி   நீரில்  இட்டு  காய்ச்சி  அருந்தலாம்  நொய் விலகும் 

பன்றி  காய்ச்சல்  மட்டுமல்ல  எந்தவிதமான  காய்ச்சலாக இருந்தாலும்  அதை  நீக்கும் வழியை  கண்ணுச்சாமியம் என்ற  பெருநூல் 

                        பாரே சிறுதேக்கு  பற்பாட  கற்தேவ 
                       தாரே  நன்னா  ரீச்சீந்தில்  கோட்டம் - பேராய 
                      சுக்குப்  புடல்  பேயும் சுத்த  சுனைக்கன்  செறியும் 
                           பக்குவ  முத்தக் காசும்  பண்பு .

     என கூறுகிறது  சிறுதேக்கு , பற்பாடகம் ,தேவதாரு , நன்னாரி ,சீந்தில் ,கோட்டம்  சுக்கு பேய்புடல்  கோரைகிழங்கு ,அனைத்தையும் வகைக்கு 7 .5  கிராம் அளவிற்க்கு தட்டிப் போட்டு  எடுத்து  இரண்டு லிட்டர்   நீர்விட்டு  காய்ச்சி நாலில் ஒன்றாய்  குறுக்கி  வடிகட்டி     குடிக்க லாம் . நோய விலகும்  உலக அளவில்  உயர வேண்டிய தமிழன் கூனிக் குறுகி நிற்க வேண்டாம்  தமிழன்  விழிப்பனா?தன் கலைகளை  மீட்ப்பானா?   காப்பானா?


  சித்தமருத்துவம்  காப்போம்  நொய் வெல்வோம் .   
More than a Blog Aggregator

ஏப்ரல் 02, 2012

செய்யக் கூடியதும் கூடாததும் ...உண்டதும்  தூங்கலாமா?
கூடாது .

உண்டதும் பாலுறவு  கொள்ளலாமா?
கூடவே கூடாது .

உண்டபின்  குளிக்கலாமா?
கூடாது

உண்டபின் குளிர்ந்த நீர்   அருந்தலாமா?
கூடாது .

உண்டபின்  இனிப்பும் , பழவகைகளும்  எடுக்கலாமா?
கூடாது .

பால் அருந்தி  அறுசுவை உணவு உண்ணலாமா?
 கூடவே கூடாது

பகலில் தூங்கலாமா ?
கூடாது .

எண்ணெய் குளியல் செய்யாமல்  வெந்நீரில்  குளிக்கலாமா?
கூடவே கூடாது .

நண்பகலில்  தேன் அருந்தலாமா?
கூடவே கூடாது .

மீன் பொருட்கள் உண்டபின்  பால்  பொருட்கள் எடுக்கலாமா?
கூடவே கூடாது .

கோடையில்  மிக குளிர்ந்த நீரும் பனி காலத்தில்  வெந்நீரும்  அருந்தலாம?
கூடாது .

முதல் நாள் செய்த உணவை அமுதாக  இருந்தாலும்  உண்ணலாமா?
கூடவே கூடாது

பாலுக்குப் பின்  பழம் அருந்தலாம?
கூடவே கூடாது .(விதிவிலக்கு  பேரிட்சை )

இயற்க்கை  (சமைக்காத)  உணவையும்  சமத்த உணவையும்  எடுக்கலாமா?
கூடாது.

இரண்டுவகை  பழங்களை  ஒரே நேரத்தில் எடுக்கலாமா?
கூடாது.

இரண்டுவகை  கீரைகள் ஒருசேர  எடுக்காலாமா?
கூடாது.

அலுமினிய  ஏனத்தில் சமைத்து உண்ணலாமா?
கூடாது .

விலையில்லா(இலவச  ) மது அருந்தலாமா ?
கூடவே கூடாது .

மூன்று  வேலைக்கு மேல்  உண்ணலாமா?
கூடவே கூடாது .

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...