ஏப்ரல் 16, 2012

கோடை நமக்கு கொடை summer
             கோடைக்காலம் என்றாலே எல்லோருக்கும் எரிச்சல்தான் வரும் . கரணம் ஆதவனின் வெம்மை மட்டும் அல்லாமல் அதன் தொடர்ச்சியாக  பல்வேறு  நோய்கள் நம்மைவந்து தாக்குவதால்தான் . அதையும் மீறி கோடை நமக்கு பல  நன்மைகளையும் செய்கிறது .

      கோடைக்காலத்தில் ஆதவன் வடக்கு நோக்கி செல்வதால் வெப்பம் மிகையாக இருக்கும். குளிர்காலத்தில் உறைந்து இருந்த ஐ (கபம் ) கதிரவனின்  ஆளுமையினால் உருகி சீற்றம் அடைந்து செரிமானத்தை மந்தப்படுத்தும். இந்த செரிமானம் மந்தமாவதால் பல்வேறு நோய்கள் நம்மை வந்து தாக்கத்  தொடங்கும். உதாரணமாக இக்காலத்தில் கபம் மிகுந்து அதன்  தொடர்பான பிணிகள் வரத்தொடங்கும் .தடுமன் (சளி ), இருமல் ,சுரம்  போன்ற  மூச்சுக்குழல் தொடர்பான பிணிகள் வந்துதாக்கத் தொடங்கும் .

        எனவே இந்த காலங்களில்  உணவு  பழக்கவழக்கங்கள்  எல்லாம் கபத்தை குறைப்பதாக இருக்க வேண்டும் . அதோடு  வயிற்றுத்தீயை வளர்ப்பதாக  இருத்தல் வேண்டும்  வாய் கொப்பளித்தல்,  நசிய  மிடல் (மூக்குவழி  மருந்து ) பயன் படுத்த வேண்டும்
      உடற்பயிற்சி  செய்தல்  உடல் பிட்டித்துவிடல் (மசாஜ் )இது மிகவும் தேவையானது. மேலும் தேன் மருந்து  பொருட்கள்  சேர்த்துக் காய்ச்சிய  குடிநீர்  போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
                               

     கோரைக்கிழங்கு , சுக்கு, போன்றவற்றை சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் அல்லது சந்தனம், கருங்காலி  இவைகள் சேர்த்துக் காய்ச்சிய  குடிநீர்  தேன் கலந்த குடிநீர்   இவற்றைப் பருக வேண்டும்.  எளிதில் செரிக்க கூடிய  உணவுகளை எடுக்க வேண்டும்.  குளிர்ந்த பொருட்கள்  பகல் தூக்கம்  எண்ணெய் பசை கொண்ட  உணவுகள் உப்பு மிகையாக  உள்ள  உணவுகள்  புளிப்பு  இனிப்பு கலந்த உணவுகள் தவிர்க்க வேண்டும்.  

      புதிய மண் பாண்டத்தில் ஊற்றப்பட்ட நறுமணம் கொண்ட  குடிநீர் எடுக்க  வேண்டும் நெய் கலந்த அரிசி  கஞ்சி  திரவமான  குளிர்ந்த காடி அன்னம் , பால் நெய்  திராட்ச்சை  போன்றவை எடுக்க வேண்டும்  உடல் மீது சந்தானம் தேய்த்துக் குளிக்க வேண்டும்  இரவில் திறந்த  வெளியில் (வீட்டை பூட்டி விட்டுத்தான் ) தூங்க வேண்டூம் . வெட்டி வேர் ,சந்தனம் கருங்காலி  சேர்ந்த உணவுகள் மிகவும் நல்லது  .    இயற்கையின் கொடையான  இளநீர், தர்பூசணி  முலாம் பழம்  போன்றவற்றை  மிகயாகப்பயன்படுத்துவது       மிகவும் தேவைஎனலாம் .
   சுக்கு, தனியா, போன்றவற்றை  தட்டிப் போட்டு வெதுவெதுப்பாக  அருந்தலாம்.
மோரில் வெல்லம்  கலந்து அருந்தலாம். இதனால் மூக்கடைப்பு தும்மல்,மார்புச் சளி  போன்றவை வராமல் தடுக்கலாம்.
    மிகையாக வேர் குறு  தோன்றினால் அரிசி   கஞ்சியை உடல் முழுவதும்  பூசி குளிக்க நல்ல பலன் .
    கால்களில்  எப்போதும் செருப்பு அணிதல்  கண்களுக்கு பாதுகாப்பைத்தரும் .
சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் .

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...