அந்தமாதிரி படங்களை பார்க்கலாமா ?
பழமைவாய்ந்த தமிழ அறிவர்கள் எல்லாவற்றிலும் தேர்ந்தும் சிறந்தும் விளங்கினார்கள் இந்த குமுகத்திற்கு தம்மை முழுமையாக அற்பனித்துகொண்டு பல கலைகளையும் அதன் கூறிய நுட்பங்களையும் நமக்கு கொடையாக வழங்கினார்கள் . பாலியல் தொடர்பாக பலநிலைகளில் சிந்தித்து செழுமைபடுத்தி இந்த குமுக அமைப்பிற்கு எந்த தீய விளைவுகளையும் அது உண்டக்கிவிடகூடது என்ற எண்ணம் கொண்டு நேர்த்தியாக கட்டமித்தர்கள் .
இன்று பெண் என்பவள் வெறும் பாலியல் இன்பத்திற்காக படைக்கப்பட்டவள் என்ற தவறான கற்பிதம் கற்பிக்கப்பட்டு வருகிறது . இந்த சீரழிவு பண்பாடு எங்கிருந்து தேற்றம் கொண்டது ? குடும்ப உறவுகளையும் கணவன் மனைவி உறவுகளையும் சிக்கலாகி சீக்களியகி கொண்டிருக்கிறது இந்த குமுக அமைப்பு .மனிதமே நோயாளியாகி கொண்டிருக்கிறதே ஏன்? இன்றைய வாழ்க்கைமுறை இனிமையாக பயணிக்கிறதா? என்றால் இல்லை என்று கூறலாம் .இன்று வெறித்தனமான பாலியல் சிந்தனைகள் எங்கிருந்து ஊற்றெடுத்தன ? இத்தகு சீரழிவு பண்பாடு எங்கிருந்து தோற்றம் கொண்டது? இலைமறை காயாக இருந்த இந்த பாலியல் தொடர்பான செய்திகள் சிக்கலாகி வருவது பரிணாம வளர்ச்சியா ? மனித இனத்தின் சீரழிவுகளின் தொடர்ச்சியா? கதைப்போமா?
நம் நாடுகளை போன்ற கிழ்திசை நாடுகளில் இத்தகு சீரழிவுகள் எல்லாம் இருக்கவில்லை பின் எங்கிருந்து வரத்தொடங்கியது ? எல்லாம் இந்த பாழாய் போன ஆங்கிலேயர்களினால் தான் . ஆங்கிலேயர்களின் வருகையை போற்றும் மேட்டடிமைத் தனங் கொண்டவர்கள் ஒன்றை சிந்திப்பதில்லை சாலைவசதிகளும் தொடர்வண்டி (இரயில் )அஞ்சல் சேவையும் ஆங்கிலேயர்களின் வருகையினால் வந்தது என வாய்கிழிய பேசுவார்கள் . இவைகள் எல்லாம் நம் நாட்டில் இருந்த அளவற்ற்ற செல்வங்களை கொள்ளையடித்து செல்லவேயன்றி வேறல்ல . வந்தவன் நம் உயர்ந்த மொழியையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் சீரழித்துவிட்டு நம் செல்வங்களை கொள்ளையடித்து சென்றான் என்பது உண்மை .
ஆபாச படங்களோ புத்தகங்களோ உளவியல் ரீதியில் தனிமனிதன் மனமாற்றத்தை உண்டாக்கவில்லை என்பதுதான் அறிவியல் உண்மை . பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இதை உண்மையாக்குகிறது . பாலியல் படங்களையும் , கட்சிகளையும் பார்ப்பதால் அது குமுக நேரடியான சிக்கலை உண்டாக்கவில்லை என்பது தெளிவாக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது ?.
பாலியல் தொடர்பான தொடர்சிந்தனை ? நம் முன்னவர்கள் காட்டிய பட்டறிவு (அனுபவம் )என்பது அறிவு நிறைந்தது . அறிவைமட்டுமே அடிப்படையாக கொண்டது அனால் இன்று எந்தப்பொருளையும் ஆய்வு முடிவுகளையும் மேலை நாட்டவர்களை ஒப்பிட்டு உயர்த்தி காட்டவே செய்கின்றனர் பாவம் அவர்களின் அறியாமையை எனவென்பது? மறுப்பது உளநோய் மருந்தென சாலும் ... என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியலை படம் பிடிக்கிறார் திருமுலர் .அனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்வந்த சிக்மண்ட் பிராய்டு பெரிதாக தெரிவார் நம் புல்தடுக்கி பயில்வான்களுக்கு. உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டு என கொஞ்சம் கூட நானப்படாமல் சொல்லுவார்கள் . அதேபோல பாலியலையும் அழகாக படம்பிடித்து கட்டியவர்கள் நம்மவர்களே என்பது உண்மை .
மேலைநாடுகளின் அறிவியலுக்கும் . கலைகளுக்கும் தய்போன்றது தமிழ் மொழி என்பதை மேலைநாட்டவர்கள் அறிவர் நம்மவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே நம் அவா .தமிழ அறிவு மரபு என்பது மனித இனக்குழுக்களின் அறிவு மரபுகளுக்கு முன்னேடியானது என்பதை புரிந்து கொண்டால்தான் எல்லாம் விளங்கும் என்பதற்குதான் நீண்டவிளக்கம்.
இந்த பாலியல் தொடர்பான எண்ணங்களும் அது குறித்தான வேட்கைகளும் பல்வேருதரப்பிலும் இன்று கண்மூடித்தனமாக பெருகிவருவது நோயின் அறிகுறியே எனலாம் . பாலுறவு என்பது உணவு உண்ணுதல் . உறங்குதல் , நீரருந்துத்தல் . போன்ற இயல்பான செயல்களே ஆனால் இதை அதாவது உணவு உண்ணுதலை நாள்முழுக்க சிந்தித்து கொண்டிருப்பதில்லை . சுவைமிகுந்த உணவு உண்ணுதலை எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பதில்லை அனால் பாலியல் இன்பத்தை .இந்த சிந்தனையில் நாள் கணக்கில் ஈடு பாடு கொண்டு சிந்தித்து கொண்டு இருப்பது ஏன் சிந்தித்தோமா ?
இப்படி எப்போது வேண்டுமானாலும் ஒரு மனிதன் தின்று கொண்டிருக்கிறான் எனவைத்து கொள்வோம் அவன் நோயாளியாவான்.இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் கழி பெரிரையான் கண் நோய் எனவிளக்குவார்.
ஒருவர் கணக்கில்லாமல் நாள் கணக்கில் பாலியல் தொடர்பான காட்சிகள்.படங்கள் , பார்த்துகொண்டு இருப்பதால் அவரின் நரம்பு மண்டலம் மேலும் மேலும் தூண்டப்பட்டு உணர்வு கிளர்ந்து எழுந்து குறிப்பிட்ட அந்த நரம்பு மண்டலமும் உடலும் தூண்டப்பட்டு தளர்ச்சி அடைந்து நோயாளி ஆகும்தானே .வலுகட்டாயமாக இப்படி மனித உணர்வுகளை தூண்டிவிட்டு விரைந்து நோயை பெற்று கொள்வதை விட தான் அளப்பரிய நேரத்தை முறையாக செலவழிக்கலாமே ?
அளவற்ற மனித இனத்தின் நேரத்தை உயர்ந்த மணித்துளிகளை முறையான நேரத்தை உற்பத்தி நடவடிக்கை , வேலைவாய்புகள் ,கல்வி, பொருளாதரத்தை உயர்த்துதல் கலைகளை கற்றுகொள்ளுதல் போன்றவற்றில் செலவிடலாம் இல்லையா ? திணைக்களம் (துறை )தோறும் புதிய
கண்டுபிடிப்புகளை செய்யலாம் இல்லையா நிலத்தை செப்பனிட்டு உற்பத்தியை விரிவு படுத்தி வேலை வாய்ப்புகளை உண்டாக்கலாம் இல்லையா? பாலியல் தொடர்பான எண்ணங்களில் வலுகட்டாயமாக செலவிடுவதால் மனிதன் நோயாளியகிவிடுவான் தானே . இது தானே அறிவியல் விதி
இப்படி உடலையும் உள்ளத்தையும் கெடுத்து கொண்டு மனித வாழ்வின் பொன்னான நேரத்தை மணித்துளிகளை இந்த குமுகத்திர்க்காக செலவிடலாம் தானே . இந்த குமுகம் தான் பயணத்தை தடையின்றி தொடரவும் ஆக்கப்பணிகளை செய்து நாடும் உயர்ந்து இந்த புடவியையும் நோயற்ற குமுகமாக தோற்றங்கொள்ள செய்வோம் .
சித்த மருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .