செப்டம்பர் 03, 2012

சுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்      இன்றைய  விரைவு  உலகத்தில் இளசுகள்  பாடு மிகவும்  போரட்டமானதே    காரணம்  அவன் கெட்டுப் போவதற்கு  எண்ணற்ற  வாய்ப்புகளை  வாரிவழங்கி  விடுகிறது  இன்றைய உலகம்  இவற்றை மீறி  ஒருவன்  நேர்மையாக  இருப்பது  சிக்கலானதாக  இருக்கிறது . காரணம்   இன்றைய சூழல்  என்பதை நாம் அறிவோம் . இப்படிப்பட்ட சூழலில்  தன்னையும்  பாதுகாத்துக் கொண்டு இந்த குமுகத்தை  பற்றி  சிந்திக்கிறார்கள்  எனறால்  அவர்களை வணங்கி  வரவேற்க வேண்டும்  ஆனால் அப்படி எல்லாம்  இந்த  போலியுலகம்  செய்வதில்லை  மாறாக  அவனை கேவலப்படுத்தவே  செய்கிறது .
      இன்றைய  முறைதவறிய  உலகம்  எல்லோருக்கும் எல்லாமும்  கிடைக்க செய்வதில்லை. போராட்டமான  உலகத்தில் இருந்து  தன்னுடைய   வாழ்நாளை  ஓட்ட  வேண்டி இருகிறது வேண்டிய  கல்வி , வேலைவாய்ப்பு  பொருளாதார சூழல்  இவற்றிற்கு  இடையே  இந்த  சமூகம்  கொட்டும்  போலித்தனத்திக்கும்,  திரைப்பட , தொலைகாட்சி , பாலுறவு கட்சி  போன்றவற்றின்  தாக்கத்தினால் தானாய்  அவற்றில்  கரைத்துக் கொள்ளுகிறான்  அல்லது  அவற்றில் இருந்து விலகி இருபவனை  கண்டு கொள்வதில்லை  அல்லது கேவலப்படுத்துகிறது என்பது உண்மையே . இல்லை என்பவர்கள் வரலாம் சான்று  கட்டுகிறேன் .
       இப்படிப்பட்ட  சூழலில்  பலவிதமான  உளவியல்  ரீதியான  போராட்டங்களுக்கு  ஆளாகிறான் இதன் தாக்கத்தினால்  உணவு பிடிக்காமை அல்லது முறைதவறிய உணவு  தூக்கமின்மை  அல்லது முறைமீறிய  இரவு பகல் என பாராது  தூங்குவது  என  உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொண்டு  தன்னுடைய  வாழ்நாளை  கடத்துகிறான் . இது போராட்டம் மிகுந்த  வாழ்வியலை  அடிப்படையாக  கொண்டு  இயங்கு கிறவர் களின்  நடைமுறையாக இருக்கிறது .
         இப்படி பட்ட  சூழலில் இளசுகள் பலவிதமான  போரட்டங்களுக்கு  ஆளாகிறார்கள்  அவர்களை  கண்டு கொள்வதுமில்லை  வழிகட்டுவதுமில்லை  இந்த சூழலில்  இயற்க்கை  அவனை பாலுறவிற்கு  தூண்டுகிறது  இந்த சூழலில்  பல  இளைஞ்சர்கள்  சுய  இன்பத்தில் ஈடுபடுவாதாக  கூறுகிறார்கள் . இதற்க்கு விடிவு ? சுய  இன்பம் தவறில்லை  நன்மையே  என தவறன  வழி  காட்டும் நல்லவர்களும்  உள்ளார்கள்  சுய இன்பத்தால்  உடலின் சக்தியெல்லாம்  வீணாகிவிட்டது  பலமிழந்து விட்டேன்  உடலே   பலமின்மையல்  அவதிப்படுயறேன் . கண்கள்  குழிவிழுந்து  பலவீனப் பட்டுவிட்டேன்  என கூறிவருகிறார்கள் .
        இளமை  நீர்மேல் எழுத்தாம் என்பார்கள்  இந்த அகவையில்  கல்வியும்  பொருள் தேடலும்  அதற்க்கு பின்னலான  கலவியும்  தேவை  இதை  நிறைவு  செய்து கொள்ளாமையால்  தவறான பாதைக்கு பயனமாகிரார்கள்  

 என்ன  செய்யலாம் ?
உங்களின் இலக்குகளை  தீர்மானியுங்கள் .
தவறான  வழிகாட்டலை  தீர்கமாக  நிராகரியுங்கள்
முறையன  எதிர்காலத்தை  திட்டமிடுங்கள்
சுய  இன்பம் தவறானது  என  கருத்தில் கொள்ளுங்கள்
இந்த  எண்ணம்  வரும்  போது  ஒக (யோகாசனம் )இருக்கை கடைபிடியுங்கள் .
இரவில்  தூக்கமின் மையால்  பல இளஞ்சர்கள்  சுய இன்பம் பழகுவதா தெரிவிக்கின்றானர்
தூக்க மின்மைக்கு காரணங்களை  கண்டறிந்து  விடை தேடுங்கள் .
 தூக்க மின்மைக்கு  கனவுகளும்  ஏக்கங்களும்  காரணகிறது  அவற்றை  நீக்கி  மூச்சு பயிற்சி  பழகி  நீண்ட  உறக்கத்திற்கு  வித்திடுக .
சிக்கல் கள் எனின்  சிக்கலின்  அளவு நீளத்தை  நீண்ட  பட்டியலிடுக . பின்னர்  தியானம்  செய்து  உறங்க செல்க .

சிக்கல்  எனின் அந்த  சிக்கலின் தன்மையை முழுமையான பட்டியல்  இடுக  அதற்கான தீர்வுகள்  உண்மையில் பின்னர் கிடைக்கும்  என முழு நிறைவோடு  உறங்க செல்க .
 வாழ்கை  உங்களுக்கானது  உங்களின் இந்த   பட்டறிவு  இந்த குமுகத்திற்க்கனது  உணர்ந்து வாழுங்கள் .
வாழ்க்கை  உங்களுக்கானதே


சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் 
 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...