காலத்தின் சூழளிக்கு ஏற்ப அறிஞர்கள் தோற்றம் கொள்ளுவது இயல்பே அதுபோல தமிழகத்தில் சித்தர்களின் தோற்றம் நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச்சென்றது எனலாம் .சித்தர்களின் காலங்களில் அவர்களுக்கு அரசோ மக்களோ எந்த உதவியும் செய்ய வில்லைஎனலாம் . சித்தர்களே கடுமையான அர்ப்பணிப்போடு மருத்துவத்தையும் மொழியையும் , பொன்னேபோல் காத்தனர் . உலகம் முழுவதும் சித்தர்கள் தோன்றினாலும் , தமிழகத்து சித்தர்கள் தான் நம் சித்த மருத்துவத்தை கண்டனர் .
பல்லாயிர கணக்கில் சித்தர்கள் இருந்தாலும் பதினெட்டு சித்தர் களையே முதன்மை சித்தர்களாக இனம்கண்டு , முதன்மை படுத்தினர் .
பதினெட்டு சித்தர்கள் .
1 . திருமூலர் 2 .போகர் 3 .அகத்தியர் 4 .காலாங்கனி
5 .அழுகண்ணார் 6 .கொங்கணர் 7 .கருவூரர் 8 .புலிப்பாணி
9 .சட்டைநாதர் 10 .மச்சமுனி 11 .கமலமுனி 12 .நந்தி
13 இடைக்காடர் 14 .புலத்தியர் 15.பாம்பாட்டி 16 .கோரக்கர்
17 புண்ணாக்கீசர் 18 .இராமதேவர்
என்பவர்கள் தான் அவர்கள் .சித்தர்கள் எல்லோருமே தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வந்தனர்
.
பொன்வள்ளி செய்கின்றவன் பெரியோன் அல்ல ,
புகழான அட்ட சித்தி பெரியோன் அல்ல
முன்னின்ற வைத்தியனும் பெரியோன் அல்ல
மூச்சடக்கி எழும்பினவன் பெரியோன் அல்ல
சின்னமுள்ள குழி இருப்பான் பெரியோன் அல்ல
திறமுடனே கேவனமிட்டோன் பெரியோன் அல்ல
தன் நிலையை அறிந்தவனே பெரியோனாவான்
தனையறியான் வகைகெட்ட சண்டி மாடே .
என்கிறார்கள் சிதர்கள் . தேர்ந்த வாதி கணப்போதில் பொன் வெள்ளி செய்வான் வாத வித்தைகள் தெரிந்தால் பெரியோன் ஆகிவிடமாட்டான் .தேர்ந்த வைத்தியராகஇருந்தால் பெரியவன் ஆகிவிடுவதில்லை .மூச்சடக்கி ஆகாயத்தில் எழும்பி நிற்கும் அடயோகியும் பெரியவனாகி விடமாட்டன் .சமாதியில் இறங்கிப் பத்தாண்டுகள் இருபது ஆண்டுகள் கழித்து வந்தாலும் . விண்ணில் நடந்தாலும் பெரியவன் ஆகிவிடுவதில்லை . தன் யார் என்பதை அறிந்தவனே , உணர்ந்தவனே பெரியவன் ஆகிறான் என்பது சித்தர்கள் கோட்பாடு .
நல்லொழுக்கத்தை பாடும்போது...
கோபம் பொறமை கொடுஞ்சொல் வன் கோள் இவை
பாபத்துக் கேதுவடி - குதம்பாய்
பாபத்துக் கேதுவடி
.
கள்ளங்கள் கபடங்கள் கொலைகள் கபடங்கள்
பள்ளத்தில் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்தில் தள்ளுமடி.
பொருளாசை உள்ள்விப் புவியிளுல்லோற்கு
இருளாம் நரகமடி - குதம்பாய்
இருளாம் நரகமடி . எனபாடுகின்றனர்
அறிவு பெரும் வழியை ஒரு சித்தர் விளையாட்டாக சொல்ல அவரை விளையாட்டு சித்தர் என்று அழைத்தனர் .
செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே சுடலை
சேரும்வரை யழுவதும் விளையாட்டே
மெத்த அறிவை பேசுவதும் விளையாட்டே -குளித்து
வீடு வந்து மறப்பதும் விளையாட்டே
நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே -பின்பு
நட்டாற்றில் கைவிடுதல் விளையாட்டே
கும்பிகிறை தேடுதல் விளையாட்டே - கடன்
சாதிகளை பற்றி
ஆண்சாதி பெண்சாதி யாரும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் - குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம் .
பார்பனர்கள் மேல் என்றும் பறையர்கள் கிழஎன்றும்
தீர்ப்பாக சொல்வதென்ன - குதம்பாய்
தீர்ப்பாக சொல்வதென்ன .
நீதி மனேன்றே நெறியா இருப்போனே
சாதிமானா வனடி -குதம்பாய்
சதிமானா வனடி.
சதியோன்றில்லை சமயமொன்றில்லை யென்
றோதி உணர்ந்தறிவாய் -குதம்பாய்
றோதி உணர்ந்தறிவாய் .
செங்கோல் செலுத்திய செல்வமமும் ஓர் கலாம்
தங்கா தழியுமடி -குதம்பாய்
தங்கா தழியுமடி .
எந்த சமுகம் மக்களை ஏற்றதழ்வோடு பார்க்க வைக்கிறதோ அந்த சமுகத்தை சாடுகின்றனர் . இவர்கள் சமுக மாற்றத்திற்கான பணியை திறம்பட செய்து முடித்தனர் .
எளிமையான சொல்லாடல்கள் , எளிமையான சந்தங்கள் , மக்களிடத்தே வாழ்ந்து படைக்கப்பட்ட மாபெரும் மறுமலர்ச்சி பாடல்கள் இவைகள் .
சித்தர்கள் பற்றி வரும் கட்டுக் கதைகளையும் அறிவியலுக்கு அப்பார்பட்ட
செய்தி களையும் நீக்கிவிட்டு பார்த்தால் தனியான சித்தர் களின் மருத்துவரீதியான பங்களிப்பு என்பது நம்மை வியக்கவைக்கிறது . போகர் என்ற சித்தர் அவரின் மருத்துவப்பணி இரசாயன மருந்துகள் செய் முறைகளையும் இன்றைய உலகினர் செய்த ஆய்வுகளை விட அதிகமாக செய்துள்ளார் .
போகர் 7000 என்ற பெருநூல் அந்த மருத்துவ நூலை செய்ய அவரால் எங்ஙனம் முடிந்தது . அந் நூலில் கண்டுள்ள மருத்துவ முறைகள் இந்த உலகில் உள்ள அனைவரையும் நோயில் இருந்து வென்று விடுவிக்குமே .
வேதியல் துறையில் உலகம் முழுவதும் செய்த ஆய்வுகளைவிட தனிப்பட்ட போகரின் ஆய்வு மேன்மையானது. மனித உடலையும் , இயற்க்கை மூலங்களையும் வேர் , தண்டு , பட்டை, மூலிகை , பூ , கனி , காய் , ஆகியவற்றை நுணுகி நுணுகி ஆய்ந்து மூலிகை களில் உள்ள மருத்துவக் குணங்களை எந்த நுண்ணிய ஆய்வுக்கருவி களும் இல்லாமல் எப்படி கணிக்க முடிந்தது ? ஆய்வுக்குரியதுதனே ? உயரிய மருத்துவத்தை மீட்டெடுப்போம் . நோய் வென்று நீடு வாழ்வோம் .