ஜூன் 04, 2012

மூப்பை தவிற்க்கலாமே வரிசை 4



      மனித  வாழ்க்கை  என்பது  உலக  உயிரிகளின்  வரிசையில் முதன்மையானது  போற்றளுக்குரியது இப்படிப்பட்ட  சிறந்த  மனித வாழ்வை உணர்ந்து  வாழத்  தொடங்கும்போது  சிறந்த  உன்னதமான  வாழ்க்கையை  வாழ்ந்து  காட்டலாம். ஆனால்  இன்றைய  விரவு  வுலகம் வெறுமனே  பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு  ஓடி ஓடி ஓடி சிக்கி  சீரழிந்து  விரைந்து மூப்பைத் தழுவி  மரித்துப் போகிறது .  இன்று  பொருள்  போதவில்லை என கூறி  இருபாலினரும்  பணிதேடி  இளமையிலேயே  ஓய்ந்து  விடுகிறனர் . இதற்க்கு சிறந்த மாற்று உள்ளது என கூவி  கூவி  சொன்னாலும்  விரைந்து  மூப்பெய்தி  மரித்துப்  போகின்றார்களே  அன்றி  விடியலைத்  தேடித்தந்தாலும்  அதைக்  கண்டு  கொள்வதில்லை .
      இன்றைய  விரைவு  உலகத்தில்  எல்லாமே  இரசாயனம்  கலந்த  உணவாகிப் போனது  குறிப்பாக  அட்டை (பேக்கிங்  ).இடப்பட உணவுகளே  விரைவு க்கு  ஏற்றார்போல  விற்கப் படுகிறது  அதில் என்ன இருக்கிறது  எப்படி  ஆயத்தம் செய்யப் பட்டது  யாரால்  செய்யப்பட்டது  எதானால் செய்யப்பட்டது  என்ற சிறு  துளி  வினாவுமின்றி மரித்துப் போவதற்கு ஓடுகிறான் . இவார்களை  எப்படி சொல்லி  திருத்துவது  என புரியவில்லை . உணவு  நோயின்றி  வாழ்வதற்கு  தானேயன்றி  வயிற்றை  நிரப்பிக் கொண்டு விரைந்து  மூப்பெய்த்து  வதற்க்கல்ல  என்பதை  அருள் கூர்ந்து  இப்படிப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .  ஏதோ  ஒரு  சிறந்த  இயற்கையுடன்  கூடிய  உணவு , எளிமயான வாழ்க்கை உணர்ந்து வாழ்தல் விரும்பிய  ஆண் அல்லது  பெண்ணுடன்  பிணக்கின்றி  நீடு வாழ்வது  என்ற  குறிக்கோள்  எத்தனைபேர்  கடைபிடிக்கிறார்கள்  ?
        மூப்பை  தவிர்த்து  வாழ்வதற்கு  இங்கு  ஆயிரம் வழ்கள்  உண்டு  சித்த மருத்துவம்  அதை  தேடித்  தேடி  தருகிறது  அதை கேட்பதற்குத்தான்  எவரும்  இல்லையே .

மூட்டது சாமம் முகில்போல செந்தூரம்

காட்டே ஒருநூறு கனக நவலோகம்
தீட்டவே குன்றி நாளும்  திண்ண மண்டலம்
ஊட்டவே சித்தியாம் உயர்ந்த முறைபாடே .


 ஒரு  குறிப்பிட்ட மருந்தை ஒரு  சாமம்  எரித்து எடுத்தால் முகிலைபோல  செந்தூரமாகும் இதை முறைப்படி  உண் காயம்  சித்தி  யாகும்  என்கிறார்  திருமூலர் . இந்த  மருந்தை  முறைப்படி  செய்துத்  தர நாம் ஆயத்தமாக  இருக்கிறோம் என வைத்து  கொள்வோம்  காட்டடிதனமான  வாழ்க்கை  குடி  , புகை , எல்லா  தீய  வழக்கத்தையும்  செய்து கொண்டு  இந்த மருந்துகளை  தின்றுவிட்டால்  பலன்  கிடைத்து  விடுமா  என்ன ?
     மனித வாழ்வு  உன்னதமானது  இதை உணர்ந்து  வாழ வேண்டும் . இயற்கையுடன் கூடிய  வாழ்வை  கடைபிடிக்க வேண்டும் . இரசாயன கலந்த  உணவுகளைத்  தவிர்த்து  வாழ  எண்ணினால்  நமக்கு சிறந்த  வாழ்வு உண்டு  நோயற்ற மூப்ற்ற வாழ்வை  வாழலாம்  உங்களுக்கு  அப்படிப்  பட்ட  வாழ்வு  வேண்டுமா  தேடுவோம்  வாருங்கள் .
சித்த  மருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம்

போளூர்  தயாநிதி

பேச ; 91 94429 53140

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...