நவம்பர் 28, 2011

சித்த மருத்துவ கோட்பாடுகள் வரிசை 3
தூய தமிழ அறிவர்களின் (சித்தர்கள் )கோட்பாடுகளை எழுத நினைத்தால் கோடிகணக்கான பக்கங் களில் எழுதிக் கொண்டே போகலாம் அனால் தமிழர்கள்தான் வழமைபோல படிக்கவும் கடைபிடிக்கவும் செய்ய மாட்டார்கள் . அந்த அளவிற்கு மெய்மங்களையும் மருத்துவக் கோட்பாடுகளையும் இந்த பேரண்டத்திற்கே கொடையாக வழங்கியுள்ளனர் நமது அறிவர்கள் . இதற்காகவே உலகத் தமிழர் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம் .

நோய்களுக்கு காரணம் கிருமிகளின் தொற்று என இன்றைய மேலைநாட்டு ஆங்கில மருத்துவம் பசப்புகிறது .கைக்குழந்தையான இந்த மருத்துவம் கீழை நாடு மக்களை எலிகளாகவும், முயல் களாகவும் பாவிக்கிறது தன்னுடைய உயரிய கலைகளைகளை முறையாக காக்காத / பின்பற்றாத தமிழன் தன்னையும் ஆய்வுகூடத்தில் உட்படுத்த துடிக்கிறான் . ஒருபக்கம் காட்டிக் கொடுக்கும் கீழை எண்ணமுடையோர் கூலிக்காக பாவம் இதையும் கட்டிக் கொடுக்கிறனர் . இதை கண்டு விழி பிதுங்கி நிற்க்கவேண்டியவர்கள் ஆகிறோம் .

மேனாட்டார் கிருமிகளை நோய்க்கு காரணமென்கிறனர்.ஆனால் தமிழ அறிவர்கள் வளி , அழல், ஐ என்ற உயிர்தாத்துக் களின் பணியே மனிதத்தை ஆக்குகிற அல்லது அழிக்கிற வேலையை செவ்வனே செய்கிறது என முன் பதிவில் எழுதி இருந்தேன் . அதற்கும் முன்பாக சித்த மருத்துவ கண்ணோட்டத்தில் இருந்துதான் மனித ஆய்வுகளை தொடங்க வேண்டும் என பதிவு செய்து இருந்தேன் .காரணம் வளி , அழல் , ஐ ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களினால்தான் நோய் தோற்றங் கொள்ளுகிறது என சித்தர்கள் பருண்மையாக பதிவு செய்கின்றனர் .

இப்போது கொடிய நோயாக கருதப் படுகிற புற்று நோய் (இது பற்றி பின்னர் விரிவாக எழுதப்படும் ) வளி , அழல் ஆகியவை பழுதடைந்த நிலையில் உள் மாறுபட்டால் தோற்றங் கொள்ளுகிறது. ஆக்கம் தரும் ( anablic force ) வளி பழுதடைந்து தன்னளவில் செயல்படும் வேகம் (Activity ) உடல் முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட உடற்கட்டிலோ Tissue பரவுவதால் அது செயல்படும் தாத்துக்களும் உறுப்புகளும் பாதிக்கப் படுகின்றன . வளியின் வளர்ச்சி இப்பகுதியில் மிகுந்து இயங்க்குவதால் பாதிப்படைந்த உடற்கட்டுகள் கட்டுப் பாடு இல்லமால் வளருகிறது .

இப்படி கட்டுப் பாடட்று வளரும் உடற்கூடுகளின் மீது ஐயின் தாக்கமான அழிக்கும் ஆற்றலை இயங்கி நல்ல கட்டுகளை அழித்தும் பதிக்கப் பட்ட கட்டுகள் வளர்வதற்கும் துணை செய்கிறது . இவற்றால் நன்னிலையில் உள்ள தாதுக்கள் அழிக்கப் படுகிறன . இங்ஙனம் வளியின் கூறும் ஐ யின் கூறும் புற்று நோயின் வளர்ச்சிக்கு விடுதளையளிக்கிறது . மேனாட்டு மருத்துவம் குறிப்பிடும் புற்று நோயின் பின் வளர்ச்சிக்கும் anaplasiya விடுதலைக்கும் Autonomy of the tumour பிறழ் நிலைப் பட்ட வளியும் ஐ யும் காரணங் களாகிறது.

இந்நிலையி தேர்ந்த தமிழ மருத்துவர் வளி , அழல் , ஐ ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களை துல்லியமாக கணித்து வள்ளுவரின் குறள் நெறி வழிகாட்டலின் படி

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று .

என்ற நாடிகளைமனிதனின் உயிர்த்தாதுக் கலையும் ஏழு உடல் தத்துக் களையும் இனம் கண்டு மாந்தனுக்கு வரும் நோய்களை விடுவித்து நலமடைய வைக்கிறார் .

நோய் வெல்வோம் சித்த மருத்துவங் காப்போம்More than a Blog Aggregator

நவம்பர் 21, 2011

சில சித்த மருத்துவ கோட்பாடுகள் வரிசை 2
        மனிதஉடல்    ஏற்றுக்    கொள்ளாத         உணவினால்லும் அரை  வேக்கடுள்ள  உண்வுகளினாலும் மாவுப் பொருள்களினாலும்  அளவுக்கு  மீறிய எண்ணெய்  வேக்கடுகளினாலும் , செரிக்காத  நிலையியல்      மீண்டும்  மீண்டும்  உண்பதாலும்  மந்தம்
 

உண்டாகிறது என்பது  சித்தர்களின்  கோட்பாடு . மந்தம்  என்பது  செரிமானக்குறைவு
மட்டும்  அல்ல  நோய்வளர்ந்த  நிலை   எனலாம் இதைத்தான்  மந்தம்  இலாதுசுரமும்  வராது என்பார்கள்  சித்தர்கள் .  மந்தம்  தோன்றினால்  அதோடு  பலநோய்கள்   தோற்றம்  கொள்ளுகிறது .இவற்றில்  இருந்து  வாய்வு  உண்டாகிறது . ஒன்றில்  இருந்து  மற்றொன்றுமாக நோய்  தோன்றுகிறது .
             உயிர்கள்  பல்வேறு  வகையில் தோன்றுவதுபோல  நோய்களும்  பல்வேறு வகையில்     தோன்றுகிறது . மந்தம் , வாய்வு  இரண்டின்  சேர்க்கையால்  கடுமையான
 சுரம்  தோன்றுகிறது . மந்தம் , வாய்வு , சுரம்  இந்த மூன்றின்  காரணமாக  திரிதோடம்
தோன்றுகிறது .  அதனாலதான்    மருத்துவர்கள்  கடுமையான  உணவுக்  கட்டுப்  பாட்டை
சொல்வார்கள் . சுரம் கண்டபின்  அதன்பின்  வாய்வும் மந்தமும்  பாதித்துவிடுகிறது  .நோய்  கண்டவர்  சுரத்தை  மட்டும்  காண்கிறார் . சிறிது காய்ச்சல்  குறைந்ததும் நல்ல
பசி  உண்டாகி உணவு அதிகம்  உண்ணும்  வேட்கை  உண்டாகிறது .
   மனிதன் அருந்தும்  நீர்  சுவாசிக்கும்  காற்று சுற்றுப்புற  சூழல் தட்பவெப்ப  நிலை  போன்றவறில்  இருந்து  ஐ  என்ற கபம்  தோன்றுகிறது . உணவில்  இருந்தும்  மன  இயல்பு  களில்  இருந்தும்  பித்தம்  தோன்றுகிறது . இங்கனம்  பித்தத்தில்  கபம்  சேர்ந்தால்   இந்த   இரண்டின்  சேர்க்கைதான்  வாய்வு .  இந்த அழல்   குற்றம் ,ஐ குற்றம் , வளி  இன்  குற்றம்   எல்லாம்  சேர்ந்து  உடலில்  சூட்டினை உண்டாக்குகிறது .  இதை மனிதனால்   நேரடியாக  உணர்ந்து  கொள்ள  முடியம் .
        உள்புறம்  தோன்றும்  சுரம் , வெளிப்புறத்தில் கன்னத்தில்  கட்டியாக  கூட  வெடிக்கிறது
. வெளிப்புறத்தில்  தோன்றும்  சூடு மற்றும்   கட்டிகளை  அறிந்து  கொள்ளுகிறான் . உள் புறத்தில்  தோன்றும்  பல்வேறு நோய்களை  அறிந்து கொள்வதில்லை . இவைகளை தான்  சித்தமருத்துவர்கள்  அறிந்து  உணவுக்கட்டுப்  பாட்டை  போதிகிறனர் .  வலி (ளி) இன்   மிகுதியால்  உடலில்  கழிவுகள்  தடை  தோன்றுகிறது . அழலின்  அதிகரிப்பால் ,
 உடல் சூடு     அடைகிறது . ஐ  அதிகரிப்பால்  உடல்பருக்கிறது .  உள்ளுறுப்பு  களில்
அதிகவளர்சி  தோன்றுகிறது. வளி.ஐ , இரண்டும்  சேரும் போது  மாரடைப்பை  உண்டாக்குகிறது . இதைத்தான்  சித்தர்கள்
             ரோகம்  காப்பதில்  நுழைந் தேறி  வாயுதான்
              வாகுற்ற  நெஞ்சில்  வலித்தே  மயக்கிடும்
                போகுற்ற  பித்தத்தை  போகாமல்  றம்பித்து
               பகுற்று  பேசையில்  பதையாமல்கொள்ளுமே .
என்றனர் ஆக  நோய்களை  முறைப்படி  கண்டறிந்து  முறையான  சித்த  மருத்துவம்  மேற்கொண்டு  நோய்  நீங்கி  நீடு  வாழ்வோம் .More than a Blog Aggregator

நவம்பர் 14, 2011

சில சித்த மருத்துவ கோட்பாடுகள்
சித்த மருத்துவ கோட்பாடுகளை கொஞ்சமேனும் உள் வாங்கிக் கொண்டால்தான் அதனுடைய சிறப்புகள் புரியவரும் ஏனெனில் படித்தவர்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் வருவதில்லை முறையான பழமையையும் நமது பண்பாட்டையும் பேணிக் காப்பது படிக்காத வர்களினாலே செய்யப் பட்டு வருகிறது பெரும்பாலும் படிக்காதவர்கள் வறட்டுத்தனமான கோட்பாடுகளை வெறித்தனமாக பின்பற்றுவதில்லை

கோட்பாடுகள்

சித்தமருத்துவத்தில் வாதம் Anabolic forle ஆக்கும் ஆற்றல். ,பித்தம் காக்கும் ஆற்றல் Metablolic force ,கபம் அழிக்கும் ஆற்றல் Catabolic force . என்பவை முப்பெரும் உயிர்தாத்துக்கள் ஆகும் .
இந்த மூன்றும் உடலில் வளர் , சிதை மாற்றங்களை உண்டாக்குபவை . இவை முறையே (4 : 2 : 1 ) என்ற விகிதத்தில் இருக்கும் இவற்றின் இயக்கம் மனித உடலுக்கு மிகவும் தேவையானது .

மனித உடலுக்கு மிகவும் தேவையான ஏழு தாதுக்களின் கண்ணரைகளிலும் (cells ) தொழிற்படும் . மூன்று தாத்துக்களும் அளவோடு தொழிற்படும் போது கண்ணறைகளும் பிற தாதுக் களும் முறையாக பிழையின்றி இயங்கும் . அங்ஙனம் பழுதின்றி இயங்கும் போதுதான் உடல் நன்னிலையில் இயங்கும் . மாறாக மூன்று தாதுக்கள் தம்மளவில் மாறி செயல்படும் போது பிற தாதுக்களின் செயல்களும் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கண்னறைகளின் இயக்கமும் உட் சூழலும் internal environment மாறுபடுகிறது இவைகள் பழுதடைந்த சூழலே நோய் எனப்படுகிறது . இவற்றை சமநிலைக்கு கொண்டு வருதலே மருந்து எனப்படுகிறது . இந்த மூன்று தாதுக்களின் மாற்றமே நோய் என்பதை வள்ளுவமே ஈராயிரம் ஆண்டு களுக்கு முன் பதிவு செய்கிறது
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று திருக்குறள் .
சித்த மருத்துவத்தின் பின்னணியைக் கொண்டுதான் மேலை நட்டு மருத்துவ முறைகள் கடன் பெற்று இன்று மருத்துவத்தில் கொடி கட்டி பறக்கிறது ஆனால் இதை உணராத தமிழன் நோயில் வீழ்ந்து கிடக்கிறான் . நோயில் இருந்து விடுவிப்போம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator

நவம்பர் 06, 2011

குளிர்கால நோய்கள் வரிசை தலைப் பொடுகு .
குளிர்காலம் என்றாலே சில நோய்களுக்கு கொண்டாட்டம் என முன் இடுகையில் எழுதி இருந்தேன் இப்போது பல இளசுகள் பதின் பருவத்தினர் (டீன் ஏஜ் ) இந்த பொடுகு தொந்தரவோடு வருகிறார்கள் . இந்த நோய்க்கு காரணம் முதலில் முறையில்லாத உணவுப் பழக்கம்தான் என நாம் அறிந்து கொள்ள வேண்டும் பழங்காலங் களில் முறையான உணவுகளை எடுத்தனர் அல்லது இந்த இதளிய(இரசாயன ) உணவுகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை இந்த தலைப் போடுகுதான் பின்னாளில் சொரியாசிசு என்ற நோயை உண்டாக்கு கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அதுமட்டும் அல்லாமல் தலையில் இருந்து வரும் செதில் போன்றவை கண்ணில் பட்டால் கண்ணை அது பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

கடுமையான உள சிக்கலில் இருப்பவர்களுக்கு முதலில் தலையில் இருக்கும் மயிரை வறட்சியடைய செய்கிறது இது மட்டும் அல்லாமால் முறையில்லாத உணவுகள் எண்ணையில் பொறிக்கப் பட்ட உணவுகள் இரத்தத்தில் கடுமையான நச்சு கலப்பினை உண்டாக்குகிறது இவர்கள் முதலில் ஈற்றுணவு (மலம் )கழிப்பில் சிக்கலுக்கு உரியவர்களாக இருப்பார்கள் இது தலைபோடுகை மிகையாக்கும் என்பதில் மற்று கருத்து இருக்காது . எப்போதும் பதற்றமாக இருப்பார்கள் தலையை நாளும் கழுவ மாட்டார்கள் .

அப்படி கழுவினாலும் அவர்கள் பயன்படுத்தும் இதளியம் (இரசாயணம் ) மயிரை உத்திர செய்கிறது எல்லாவற்றிக்கும் முதன்மையாக இரும்பு சத்து பற்றாக்குறை இருக்கும் . இந்த இரும்பு சத்து கீரைகள் , காய்கள் , உலர் பழங்கள் குறிப்பாக பேரிட்சை போன்றவைகள் இரும்பு சத்தை அளிக்க கூடியன இவற்றை நாளும் எடுக்க இரும்பு சத்து கூடும்.

இந்த தலைப் பொடுகிற்கு தூய்மையான உணவுப் பழக்கம் வேண்டும் இயற்க்கை உணவுகள் சிறந்ததது இரசாயணம் கலந்த வழலைக்கட்டிகள் (சோப்பு ) சாம்புகள் சீயக்கய்கள் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது இதனால் நோய் தீவிரம் அடையும் எனவே இவற்றை நீக்குக . தூய்மையான எள்நெய் எடுத்து கொஞ்சம் சூடாக்கி வெதுவெதுப்பாக மயிர்க்கால்களில் தேய்க்கலாம் இதற்க்கு பொடுதலை என்ற மூலிகை நல்ல பலனைத் தரும் இதை அரைத்து பூசலாம் .இயற்க்கை உணவுகள் எடுக்கலாம் நல்ல குணத்தை எதிர்பார்க்கலாம் .

நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம்

அடுத்த இடுகையில் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்போம் அதுவரை விடைபெறுவோம் .More than a Blog Aggregator

நவம்பர் 01, 2011

மழைக்கால நோய்கள்
மழைகாலம் என்றாலே சிலநோய்களுக்கு கொண்டாட்டம் தான் அந்த வகையில் கண் நோயையைப் பற்றி குறிப்பிடலாம் குறிப்பாக இந்தகாலத்தில் கொஞ்சம் மழையும் சேர்ந்து கொண்டால இந்த நோய் பரவத் தொடங்கும் .கண்நோய் அழகாக ஒட்டிக் கொள்ளும் இதற்க்கு முன்னமே நாம் எச்சரிக்கையுடன் இருந்துவிட்டால் இது நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் இதற்க்கு பெரிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை .

தூய்மையான விளக்கெண்ணை இரண்டு சொட்டு கண்ணில் விட்டுக் கொண்டு இறவில் தூங்கப் போகலாம் .
தூய்மையான தண்ணீரில் கண்களைக் கழுவலாம் .
நாட்டு மருந்து கடைகளில் விற்கப் படும் இளநீர்க் குழம்பு என்ற மருந்தை நாளும் பயன் படுத்தலாம் (இது இளநீரும் தேத்தான் கோட்டை என்ற மருந்துப் பொருளும் சேர்ந்த்தது )

மூச்சிறைப்பு (ஆஸ்த்துமா )

இந்த நோய் எல்லாகாலத்திலும் சிரமத்தை தரும் என்றாலும் மாரிக்காலம்,பனிக்காலம் என்றாலும் கூடுதல் வேதனை தரும் இந்நோய் குறித்து பின்னர் விரிவாக எழுதப்படும் இந்த நோய் கண்டவர்கள் குளிர்ச்சியைத் தரும் உணவுகளை நீக்கவேண்டும் .தக்காளி . சில குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை கண்டிப்பாக நீக்கவேண்டும் இவர்கள் நாட்டு கத்தரி ,சுண்டைக்காய் , அவரைகாய்,முருங்கை காய் போன்ற நாட்டுவகை காய்களை எடுக்கலாம்
தூதுவலை , கண்டங் கத்தரி , நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகள் இவர்களுக்கு நல்ல விடிவைத் தரும் .
இனிப்பும் ,புளிப்பும், உப்பும் கபத்தை வளர்க்கும் ஆகையால் இந்த உணவுகளை நீக்கவேண்டும் .

குளிர்கால காய்ச்சல்

இப்போது காய்ச்சல் எல்லோரையும் ஒய்வு எடுக்கவைக்கும் கொஞ்சம் அச்சப்பட்டால் ஆளையே படுக்கவைத்துவிடும் காய்ச்சல் வந்த உடனே உணவு திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது உணவு மறுத்தல் செய்யலாம் .இந்நேரங்களில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டிய நீரையே பயன்படுத்த வேண்டும் உணவுப் பிரியர்கள் எனின் காரம் இல்லாமல் மிளகு பொட்டு காய்ச்சிய அரிசி கஞ்சி எடுக்கலாம் அப்படி இரண்டு நாளைக்கு எடுக்க காய்ச்சல் போயே போச்சு
இந்த காய்ச்சலுக்கு பின் எளிமையான உணவுத் திட்டம் தேவை காரத்தையும் புளியையும் குறைக்க வேண்டும் .

அடுத்த பதிவில் புதிய செய்திகளுடன் சிந்திப்போம்

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...