ஆண்மைக் குறைவு என்ற வெற்றுச் செல்லாடலும் இப்படியே...! இன்றைய புதிய அறிவியலும் ஆண்குறிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆண்குறி எழுச்சி இருப்பதில்லை என்கிறது . தூய தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் ஏழு தாதுக்களும் பலம் குன்றுவதால் பாலியல் குறைபாடு உண்டாகிறது என்று தெளிவாக கூறுகிறது. சித்தர்கள் உடலின் ஏழு தாதுக்களும் பலமடைய முறையான தீர்வினை மரங்களின்வேர்கள் , பட்டைகள் , இலைகள் ஆகியவற்றின் மூலமாக வழங்குகிறார்கள் . மருந்துப் பொருட்களை முறையாக முழுத் தூய்மை செய்தல் சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும்.
இன்றைய ஆண்மைத் தளர்ச்சிக்கு (Male Impotence)முகாமையான காரணம் இரத்த ஓட்டக் குறைபாடு என்கிறது புதிய ஆய்வு முடிவுகள் . உடனே ஆண்குறிக்குச் செல்லும் இரத்த குழாயில் உண்டாகும் குறைபாடுதானே இது முன்னமே தெரியும் என்கிறீர்களா ? அதுதான் இல்லை . ஒருசிலர் உளவியல் குறைபாடு என்கிறார்கள் இதுவும் இல்லை .தமனி (artery ) குழாய் களில் உண்டாகும் இரத்த ஓட்டத் தடையே ஆண்மைத்திறனை குறைத்து விடுகிறதாம்.ஆண்களின் பாலுணர்வு கிளர்ந்து எழுவதற்கு நைட்ரிக் ஆக்சைடு பேருதவி செய்கிறதாம். எப்படி...? என்றால் ஆண்களின் உள்ளம் பாலுணர்வில் திளைக்கும் போது அந்த உணர்வை உடலின் மெல்லிய உறுப்புகள் உணர்ச்சியாக மாற்றி ஆணுறுப்பு விரைத்தெழ காரணமாக இருப்பது இந்த நைட்ரிக் ஆக்சைடுதான் . இதை மேலை நாடுகளில் ஜிங்கோ என மரப்பட்டையில் இருந்துதான் எடுக்கிறார்கள் .... இது தமிழர்களின் அறிவு சார் சொத்துரிமையின் ஒரு பகுதிதான் என நான் சொல்ல வேண்டுமா என்ன ? தமிழர்கள் விழிப்படைய வேண்டும் என்பது தான் நமது எண்ணமெல்லாம் .