ஜூலை 18, 2011

உங்கள் உடலை அறிய.......உங்களுக்கு வரும் நோய்களை அறிய ...தேர்ந்த சித்த மருத்துவர் நோய்கண்டவர்களின் நாடியை முறைப்படி கண்டறிந்து என்ன நோய் வந்திருக்கிறது என சொல்லிவிடுவார்கள் அவர்கள் நோயாளிகளிடம் என்ன நோய் என கேட்டு கொண்டு இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு சித்த மருத்துவத்தின் நாடியரிதல் துல்லியமாக கணக்கிட பட்டு உள்ளது சித்தமருத்துவத்தின் என்வகைதேர்வு மனிதனின் நோய்களை அறிந்து முறைப்படி பட்டியலிடுகிறது .

மனித உடல்வகை

மனிதர்களின் உடல்வகை சித்தமருத்துவம் துல்லியமாக ஒன்பது (9 ) என கணக்கிட்டு உள்ளது .அவை வளி ,அழல் , ஐ , எனப்படும் இவற்றோடு தொந்தம் எனவும் உண்டு அதாவது வதமும் பித்தமும் கலங்கி நடந்தால் அதாவது வாதத்தின் பங்கும் பித்தத்தின் பங்கும் ஒன்றி இருப்பின் இது வாத பித்த தொந்தம் எனப்படும்

வாத உடல்வகை .

வாத உடல்வகை குளிர்ந்தும் மூக்கு ,விழி,பல், நாக்கு, ஈற்றுணவு (மலம் ) எல்லாமே கருத்து காணப்படும் .கண்ணில் நீர்வடியும் .நாக்கு கருப்பாக வறண்டு இருக்கும் . சிறுநீர் பொருமி கருமையாக இருக்கும் . ஈற்றுணவு வெளியேறுவதில் சிக்கல் காணப்படும்.
இவர்கள் தீனி மேல் மிகையான நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . தவறான செயல்கள் நடத்தைகள் இருக்கலாம் .வளமான உடல் மற்றும் வலிமை மிகுந்த உடலை பெற்று இருப்பார்கள் . இவர்கள் காற்று பிடிப்பு நோய் களால் அவதிப்படுவர்கள்.


பித்த உடல்வகை
இவர்கள் உடல் நெருப்பாக கொதிக்கும் . மூஞ்சி ,நாக்கு ,பல், ஈற்றுணவு , எல்லாமே மஞ்சளாக இருக்கும் . வியர்வை மஞ்சளாக இருக்கும் .அதோடு இவர்களின் வியர்வை வாடை அடிக்கும் என்னதான் குளித்தாலும் இந்த சிக்கல் தீராது . இவை நீங்க கடுமையான உணவு, உள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும் . இவர்கள் அறிவில் சிறந்து விளங்குவார்கள் . ஒருதடவை படித்தாலே இவர்களின் நினைவாற்றல் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். இவர்களிடம் நேர்மை இருக்கும் இளமையில் /இளைய அகவையில் மயிர் நரைக்க தொடங்கும் . எப்போதும் இவர்கள் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள் . இவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் , உளம் தொடர்பான நோய்கள், வரலாம்.

கப உடல்வகை

இவர்கள் உடல் மிகையாக வியர்க்கும் மூஞ்சி ,பல்,நாக்கு, சிறுநீர், ஈற்றுணவு,(மலம் )எல்லாமே வெண்மையாக இருக்கும்.கண்ணில் பீளை கட்டும்.இவர்களின் உடல் செழுமையாக அழகாக இருக்கும். எதையும் நிதானமாக செய்வார்கள். பாலுறவில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . இவர்களின் அகவை நீண்டதாக இருக்கும் . இவர்களுக்கு தடுமன் ,( சளி )மூச்சிறைப்பு கபம் திட்ர்பன பிணிகள் தோன்றும் என சித்தமருத்துவம் பகுக்கிறது .
இது தொடர்பான விரிவான தகவல் பின்னர் விரிவாக எழுதப்படும்

சித்தமருத்துவம் காப்போம் நோய்வெல்வோம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...