மார்ச் 13, 2011

நினைவாற்றல் மேம்பட ...(Maind Power)


நினைவாற்றல் மேம்பட ...(Mind Power)

நமது தனிப்பட்ட எண்ணம் நம் தமிழ் குமுகம் மட்டுமல்லாமல் இந்த உலகே நோய் வென்று நீடுவழவேண்டும் என்பதுதான் , அந்த அடிப்படையில் நினைவாற்றல் குறைபாடு ஒரு நோயேயன்றி வேறல்ல . எப்படி இது நோயாகும் ? இதை எப்படி நாம் அணுகவேண்டும் உண்மையில் இதுவெல்லாம் தீர்வாகுமா? கதைப்போமா ?

நினைவாற்றல் குறைபாடு நோயா?

இயற்க்கை அன்னையின் இயல்பிற்கு மாறாக இருப்பின் எல்லாமே நோயே பழங்கால தமிழ அறிவர்கள் எல்லாவற்றையும் நுணுகி நுணுகி ஆய்வு செய்து உடலை பாதுகாத்தனர் .உணவுகளை தேடி எல்லா சத்துகளும் தனக்கு கிடைக்கும்படி பார்த்து கொண்டார்கள்.அனால் முடைநாற்றம் வீசும் மேற்கத்திய நாகரீகத்தையும் மருத்துவமுறைகளையும் கண்மூடித்தனமாக பின்பற்றியதன் விளைவு இன்று நம் பண்பாடு ,உயரிய மருத்துவ அறிவு எல்லாவற்றையும் மறந்து போயினர் ?

பழமையே அறிவுடைமை

பழங் காலங்களில் காலங்களுக்கு ஏற்ற உணவுகளை உண்டு நோய்வென்றனர்.அதனால் நோய்களுக்காக விண்ணைமுட்டும் கட்டிடங்களை நோக்கி ( மருத்துவத்திற்காக) ஓட வில்லை .குதர்க்கம் பேசுவோர் ஒருவினா தொடுக்கலாம் அப்போது புதியபுதிய நோய்கள் எல்லாம் கண்டுபிடிக்கவில்லை .அதேபோன்று கட்டிடங்களும் இல்லை எனலாம் .குறிப்பாக கூறுவது என்றால் அப்படி ஒருதேவையும் இருக்கவில்லை அதாவது முறையான உணவுபழக்கத்தில் நோய் என்ற பேச்சு இருக்க வாய்ப்பு இல்லை .சிறிய நோய்கள் இருக்கலாம் .மருத்துவ துறையில் நம்மவர்கள் மிகவும் முன்னேறியே இருந்தார்கள் .


உடல் என்ற பேராலயம்

மனித உடல் கோடானு கோடி உயிர் அணுக்களை கொண்டது .திசுக்களையும் கொண்டது . இந்த அணுக்களும் திசுக்களும் ஊட்டமுடன் செயல்பட மாசற்ற உணவுத்தேவை .தூய்மையான உயிர்வளி (ஆக்சிஜன் )தேவை . தாதுக்கள் அடங்கிய நீர்த்தேவை .இவற்றில் இன்று கலப்படங்களும் மாசுக்களும் ஒன்றாகி கலந்து விட்டபடியால் மனித உடல் என்ற பொறி (இயந்திரம் ) விரைந்து பழுதாகிறது எனலாம் .அன்று மாடு புல்தின்று பால் கறந்தது இன்று சுவர் ஒட்டி தின்று பால் கறக்கிறது . சுவரொட்டியில் உள்ள நச்சு நம்மையும் நம் குழந்தைகளையும் என்ன பாடுபடுத்தும் .உயிப்பாற்றலை கெடுக்கும் தானே ?

டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்

எழுபத்தைந்து விழுக் காட்டிற்கு மேல் வறுமையில் வாழும் நம் கீழ் திசை நாடுகளின் புரத /சத்து தேவைகளுக்கு உலகின் பணக்கார நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபடுகிற டப்பாவில் அடைபட்டு கிடக்கும் உணவே தீர்வாக இருக்கிறது இதுபோன்று பதப்படுத்தப்பட்டு டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் அவைகளின் சுவைக் காகவும் நீண்டநாட்கள் கெடாமல் இருக்கவும் இதளியம் (இரசாயன ) கலப்பிற்கு ஆளாகிறது இவைகள் நோயன்றி வேறல்ல .இவற்றால் மனித உயிர் செல்கள் கேடு அடைகிறது . இயற்கையான உணவுகள் அரத்ததையும் (இரத்தம் )செல்களையும் புத்துயிர் ஊட்டத்துடன் வைத்திருக்க உதவுகிறது .


தீர்வுகள்

முறையான தவச (தாணிய)உணவுகளை முளைகட்டி எடுக்கவேண்டும் .அதேபோல தரமான கொட்டைகள் முளைகட்டியது எடுக்கவேண்டும் . தரமான காய்கள் கீரைகள் எடுக்கவேண்டும் . புரத உணவே நமக்கு விரைந்த சக்தியையும் உயிர் ஆற்றலையும் தருகிறது என்கிறனர் எனவே தரமான தாவர புரதம் தேவை .இரசாயன கலப்பில்லாத பழவகைகள் எடுக்கவேண்டும் .இனிப்புக்காக தேன்,வெல்லம் சேர்க்கவேண்டும் . தூய்மையான நெய் ,பால் எடுக்கலாம் வல்லாரை தேன், நெய் இவற்றுடன் சேரும்போது மூளைக்கு நல்ல ஊடமகிறது என்கிறனர் .
குழந்தைகளின் உணவில் சரிவிகித உணவு தேவை . பிள்ளை வளர்த்தி என்று அழைக்கப்படும் வசம்பு மருந்தாக எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு நினைவு சம்பந்தமான குறைபாடுகள் இருப்பதில்லை . அதயும் விட முறையான உணவுபழக்கம் இன்மையால் மனித மூளை அதனின் செல்கள் காரணம் இன்றி தேவையில்லாத உணவுகளை தேடுகிறது . எனவே சரிவிகித முறையான உணவுகள் எடுத்துக்கொண்டால் கண்டதைஎல்லாம் உண்ணவேண்டும் என்ற வேட்கை தோன்றுவதற்கு வாய்பில்லை .அதுமட்டும் அல்லாமல் தவறு செய்யும் எண்ணம் தோன்றவும் செய்யாது முறையான உணவுகளை எடுப்போம் .

நினைவாற்றல் ....

நாளும் எரியோம்பல் (யோகாசனம் )செய்க .
தலைகீழ் (சிரசாசன் )செய்க .
ஊழ்கத்தில் (தியானம் )நாளும் பயிற்சி செய்க .
அச்சம் ,எரிச்சல் , சினம், பதற்றம் ,... நீக்குக .
இவைகளினால் பெரும்பான்மை நினைவு மறதி தோன்றுவதாக கூறுகின்றனர் .

பழமைவாய்ந்த தமிழ பண்பாட்டை காப்போம் .
நோய் வெல்வோம் .

.
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...