நவம்பர் 25, 2010

இயற்கையாக ஒரு அழகு கலை





அழகை விரும்பாதார் யார் ? அதுவும் இயற்கையான அழகு என்றால் ?
நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்குகிறது பார்ப்போமே

முதலில் பெண்களின் கூந்தல் பற்றியது . கூந்தல் என்றல் பேன்தொல்லை இருக்கத்தானே செய்யும்
அவற்றை எப்படி சமாளிப்பது ?
துளசி மூலிகையே சிறந்தது இம் மூலிகையை அரைத்து தலையெல்ல்லாம் பூசி சற்று நேரம் விட்டு குளிக்க பேன்தொல்லை தீரும் .
சிறிதளவு படிகாரத்தை (நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ) பொறித்து தூளாக்கி நீரில் கலக்கி தலையில் பூசி இரண்டு மணிநேரம் விட்டு குளிக்க பேன் தொல்லை போயே போச்சு .

செம்பட்டை நிறம் மாற (மயிர் )

தமரைபூ குடிநீராக்கி நாளும் குடிக்க வேண்டும் .

கரிசாலை நூறு கிராம் , கொட்டை கரந்தை மூலிகை நூறு கிராம் , நன்கு உலர்த்தி காலை மாலை அரை
தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட நல்ல பலன் .

மயிர் நன்கு செழிக்க

வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலயில் பூசி குளிக்க நல்ல பலன் .
சடாமஞ்சில் கொண்டுவந்து தேவையான எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுக நல்ல பலன் .

பருக்கள்

மூஞ்சில் பரு இருந்தால் எவர்தான் விரும்புவர் ? அதை நீக்க முடியுமா ? நீக்க முடியும் உறுதியாக சொல்லலாம் . என்ன செய்ய வேண்டும் என்பதுதானே வினா?
தலையில் பொடுகு இருந்தால் மூஞ்சியில் பருவுக்கு கொண்டாட்டம்தான் . அதை முதலில் நீக்குக . அதற்க்கான தீர்வு நம் பதிவில் உள்ளது காண்க .
வேம்பு நல்ல மருந்து வேம்பின் துளிரை கொண்டுவந்து அரைத்து மூஞ்சியில் பூசி குளிர்ந்த நீரில் கழுவுக . நாளும் செய்ய வேண்டும் .

படிகாரம் கொண்டு தேய்க்கலாம் . நல்ல பலன் . பருவிர்க்கு மலசிக்கல் முகமையான காரணம் அதை நீக்குக .
நாளும் இயற்க்கை உணவுகளை காலையில் எடுக்கலாம் . இதனால் மூஞ்சி அழகாகும்.

மூஞ்சிப் பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் வீங்குவதலும் , நாளங்கள் அடைபடுவதலும் பரு உண்டாகிறது . பதின் பருவத்தில்
(டீன் ஏஜ் )பாலுணர்வு கூடுவதாலும் இந்த காரணங்களினால் எண்ணெய் சுரப்பிகள் தூண்டப்பட்டு சீபம் என்ற எண்ணெய் சுரப்பை அதிகமாக்குகிறது . அளவிற்கதிகமான கொழுப்பு உணவுகளும் நோவை தூண்டுகிறது .காபி , தேநீர் , புகைப்பழக்கம் ,செரியாமை , போன்றவைகள் நோயை தூண்டும் .

உணவு கட்டுப்பாடு தேவை .
இயற்க்கை உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும் .
பப்பாளி பழம் அடிக்கடி எடுக்கலாம் .
எலுமிச்சை சாரு எடுத்து மூஞ்சிஇல் பூசி குளிர்ந்த நீரில் கழுவலாம் .
பருக்களினால் ஏற்ப்படும் கரும் புள்ளி நீங்க படிகாரம் நல்ல பலனை
தரும் .
உருளை கிழங்கின் சாரு எடுத்து பூசி கழுவலாம் .
உளவியல் போராட்டங்களை நீக்குவதும் அவசியம் .

நரை காரணங்கள்
அடிப்படை காரணம் மாறுபாடான உணவு பழக்கம் , அளவுகடந்த உள சிக்கல் .
வைட்டமின் B குறைபாடு , இரும்பு சத்தின்மை , செம்பு சத்து குறைவு ,இவைகள்தான் அடிப்படை கரணங்கள் .
இந்த சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கவும் வண்டும் .
கவலை தலையில் இருக்கிற மயிர் கால்களின் அனைத்து பகுதி களையும் ஒரு இறுக்கத்தை உண்டாக்குகிறது . எனவே கவலையை நீக்க வேண்டும் ,
நரைத்தபின் அவற்றை நீக்க நல்ல மருந்துப்பொருட்கள் மூலிகைகள் உண்டு அவற்றை கொண்டு நரையை நீக்கி மகிழ்வுடன் வாழலாம் .

நூறு அகவைவரை பல்லை பதுகப்பதெப்படி.?
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...