வாழைப்பழம்
பொதுவாக எந்தப் பழங்களையும் உணவுக்கு முன்தான் உண்ணவேண்டும்
அப்படி எடுத்துக் கொண்டால்தான் அதில் உள்ள முழுமையான சத்துகள் நமக்கு கிடைக்கும் .. மேலும் வாழைப்பழம் உடல் சூட்டை தணிக்கும் . மலசிக்கலை தீர்க்கும் .
குருதியை உண்டாக்கும் ஆற்றலும் உண்டு . இது உடலை வளர்க்கும் தன்மையும் உண்டு . இதில் " எ " சத்து நிறைந்து உள்ளதை நாம் அறிவோம் . இதனால் பல், கண் ,
போன்ற உறுப்புகளுக்கு சக்தியை தரும் . நேந்திரம் பழம் நல்ல பசியுண்டக்கி என்பதால் பசி குறைந்தவர்கள் நாளும் மேற்கண்ட்ட பழத்தை உண்டுவர நல்ல பலனை காணலாம் . வாழை பழத்தை பொறுத்தவரை கோழையை உண்டாக்கும்
என்பதால் கோழை நிறைந்தவர்கள் உண்பதை குறைக்கலாம் .
வாழை பழத்தில் அடங்கிய சத்துகள் .
ஈரம் 61 .4 % , புரதம் 1 .3 % கொழுப்பு 0 .2 % தாது 0 .7 % சர்க்கரை பொருட்கள் 36 .4 %
சுண்ணாம்பு 0 . 01 % என கண்டறியப்பட்டுள்ளது .
வாழைப்பூ
பழத்தை போலவே பூவிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது . வெப்பம்
நீங்கும் , காசம், கைகள் எரிச்சல் மூலநோய் , நீரிழிவு , வயிட்ற்று கடுப்பு , வெட்டைநோய் , போன்றவைகள் நீங்கும் , ஆண்மை பெருகும் .சீதக் கழிச்சல் காலங்களில் பிட்டை போல் அவித்து சாரை கறிவேப்பிலை சேர்த்து எருமை தயிரில்
கொடுக்க நல்ல பலனை காணலாம் .
பெண்களுக்கு வாழைப்பூ மிகவும் நல்லது பெரும்பாடு காலங்களில் அதிகமாக பயன் படுத்த நல்ல பலனை காணலாம் .
வாழைப்பிஞ்சு
துவர்ப்பு சுவை உடைய வாழை பிஞ்சு வயிற்று புண்ணை நீக்கும் .குருதி கடுப்பு
உள்ள மூல நோய் நீரிழிவு போன்றவை குணமாகும் .
வாழைக்காய் .
நீரிழிவு உள்ளவர்கள் அதிகம் சேர்க்கலாம் . நோய் கட்டுப்படும் வாயு தொந்தரவு
உள்ளவர்கள் குறைத்து உண்ணலாம் . பூப்பெய்திய பெண்கள் வாழை காய் தோல் நீக்கி உண்ண குருதி பெருக்கு கட்டுப்படும் .
வாழைஇலை
வாழைஇலையில் உண்பதை அனைவரும் விரும்புவர் இதனால் மென்மை உணர்வுகள் மிகும் உடல் சூட்டை தனிக்கும் . கோப குணம் கொண்டவர்கள் தொடர்ந்து இலையில் உண்ண கோபம் குறையும் . தீசுட்ட புண்ணில் இலையை வதக்கி கட்டலாம் வாழை இலையில் படுக்கவைக்கலம் .
வாழைத்தண்டு
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் வாழைத்தண்டை ஒன்று விட்டு ஒருநாள் உண்ண நல்லபலனை காணலாம் . நீரடைப்பு , நீர் எரிச்சல் சிறுநீரககள்
போன்றவை நீங்கும் . ஆக எளிதில் கிடைக்கும் வாழையை பயன்படுத்தி நோய் வெல்வோம் . சித்தமருத்துவம் காப்போம் .