பழங்காலங்களில் தமிழகத்தில் ஓர் உயரிய பண்பாடு இருந்ததை வரலாற்று சான்றுகள் வழி அறியலாகிறது . என்னவென்றால் மொழி மீதும் மக்கள் மீதும் அளவற்ற மதிப்பும் பற்றும் கொண்டிருந்தனர் அக்கால மக்கள் . ஆனால் இன்று அப்படி எல்லாம் இருக்கவில்லை என்பது வேறு செய்தி . அதே போல் முன்பெல்லாம் அர்பணிப்பும் நேர்மையும் அதிகம் கடைபிடிக்கபட்டன போலும் . அதனால் தான் எல்லா கலைகளையும் கண்ணை போல் பாதுகாக்கபட்டு நம்மக்கு கொடையாக வழங்க பட்டுள்ளது . இவற்றை பழுதற அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகபடுத்தி காப்பாற்ற வேண்டியது நம் உள்ள கடமை எனலாம் .
தமிழக கலைகள் எல்லாமே அறிவியலை உள்ளடக்கி அறிவியளாகவே விருந்து இருதன எனலாம் . பதினேழாம் நூற்றாண்டில்தான் தொலை நோக்கி கருவிகள் கண்டறிய பட்டதாக இன்றிய அறிவியலாளர்கள் கூறுகின்றனர் . கலிலியோ என்பவர் பதினாராம் நூற்றாண்டில் லென்சை கண்டறிந்தார் என்கிறது இன்றைய அறிவியல் .ஆனால் சித்தர்களின் காலங்களிலேயே கி.மு . 3 ஆம் நூற்றாண்டில் திருமூலர் என்ற சித்தரால் "சூரிய காந்தமும்சூழ்பஞ்சும் போலவாம்" என்று பாடப்பட்டு உள்ளது . அதாவது லென்சை சூரிய காந்தக்கல் என்ற பெயரில் பாடிஉள்ளார். அதே போல மயிரை குழல் என்றனர் பழந்தமிழர் . இன்றோ அதையே மெய்ப்பிக்கும் வகையில் மயிர் உருண்டை வடிவில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது .
பழந்தமிழ் இல்லகியங்களில் செவ்வாய் கோளினை பாடியுள்ளனர் . இது செம்மை நிறத்தில் உள்ளது என்பதை எப்படி கண்டறியப்பட்டு செவ்வைக்கோள் என காரணத்தோடு பெயரிட்டனர் என்பது வியப்புக்குரியது .
இந்த பூமி கோளத்தை பழந்தமிழர் பருண்மையாக ஆய்வு செய்துஉள்ளனர் . இன்றைய அறிவியல் உலகம் தான் இந்த பூமி உருண்டையானது என கண்டறிந்ததாக மார் தட்டி கொள்ளுகிறது . ஆனால் முன்பே அறிவியல் பார்வையோடு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பூமியை உருண்டையானது என நம் முன்னோர் கண்டறிந்து உள்ளனர் .
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்.
என்று கூறி இந்த பூமிபந்து உருண்டையானது .அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது என கண்டறிந்து பதிவு செய்தவர்களும் நம் முன்னோர்களே . சான்று ஞால் -ஞாலம் - ஞாலுதல் - தொங்குதல் . அதேபோல மனித வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியம்
மண்டிலம் குட்டம் என்றிவை இரண்டும்
செந்தூக்கு இயல என்மனார் புலவர்
என கோள்களின் பாதையையும்(மண்டிலம்) குட்டம் என்று அழைக்கும் புள்ளியும் வான் உச்சியை குறிப்தாகஉள்ள செந்தூக்கு என்ற புள்ளியையும் குறிப்பதை அறியலாம் . இது வானியலை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்ந்து தேர்ந்து இருந்ததை காட்டுகிறது .
சித்தர்கள் மருத்துவத்தை பருண்மையான அடிப்படையிலேயே அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்று ஒப்புமை படுத்தினர் . அண்டமானது "பரவெளி நீர், நிலம், காற்று, தீ ,விண் ஆகியவற்றினை உள்ளடக்கியது என்று அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்று சட்டை முனி சித்தர் பதிவு செய்கிறார் .இவற்றையே
நிலம்தீ நீர்வளி விசும்பொ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
என தொல்காப்பியமும் பதிவு செய்து உள்ளதை ஒப்பு நோக்க தக்கதே .
இதையே
மண்டி ணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
என்று புறநானூற்று இரண்டாம் பாடல் சுட்டி காட்டுகிறது. அறிவியலை மட்டுமின்றி மனித வாழ்வியலையும் உயிர்களின் தோற்றத்தையும் கூறும் தொல்காப்பியம் ஓர் அறிவு உயிரில் இருந்து ஆறு அறிவு மனிதன் வரை ஆய்வு செய்து உலகுக்கு அறிவிக்கிறது .
ஒன்றறி அதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யவற்றோடு நாவே
.
.
.
ஆறுஅறி வதுவே அவற்றோடு மனனே
நேரிதி உணர்ந்தோர் நெறிபடுத்தினரே
தொல்காப்பியம் மரபியல் 532
என டார்வின் உயிர்களின் தோற்றம் குறித்து கூறியதற்கு முன்பே தமிழகத்தில் உயிர்களின் தோற்றம் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது .
கோள்களில் மிகவும் பரந்தது(அகன்றது) என்ற பொருளுடன் வியாழன் கோளை காரணத்தோடு அழைகின்றனர் . வியல் +ஆழம் =வியாழன். வியல் என்பது அகன்றது என்ற பொருளை குறிப்பதாகும். இன்று உள்ளதை போல நுண்ணிய ஆய்வுக்கருவிகள் இல்லாதது அறபழங்காலம் . அப்படிப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அறிவியல் உலகு வியக்கும் படியான ஆய்வு மூலங்களை எப்படி கண்டறிந்தனர் . கோள்களில் அகன்றது வியாழன் என்பதை தமிழ் கணியர்களால் எப்படி கணிக்கபட்டது. இந்த பூமி பந்து உருண்டையானது . பரவெளியில் தொங்கி கொண்டு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிந்தனர் . வியப்பன்றோ ...!
இந்த பூமி முறையாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு ஆதாரமாக இருப்பது நீர் இதை
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்றி அமையாது ஒழுக்கு - குறள் 20
என வள்ளுவர் பதிவு செய்கிறார் . இது அறிவியல் பார்வைதானே ..?
அதேபோல உயரிய தத்துவ விளக்கங்களோடு சித்தமருத்துவம் செழுமை பெற்றது சித்தர்களின் காலங்களில் தான் .அந்த காலங்களில்தான் மனிதர்களின் மூப்பை உண்டாக்கும் செல்களை கண்டறிந்து அவற்றை முதிர்ச்சியடையாமல் காக்கும் முறைகளை கண்டறிந்தவர்களுமாக சித்தர்கள் இருந்தனர் என்பது தெளிவாகிறது .அதைத்தான்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று -குறள் ௮௨
அதாவது விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்க தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய கற்ப மருந்தாக இருந்தாலும் உண்பது விரும்பத்தக்கது அல்ல என பதிவு செய்கிறார் . ஆக சாவா மருந்து இருந்ததை இது காட்டுகிறது .
"சித்தியும் ஆகுந் தேகம் அழியாது"
"கூற்றை உதைக்கும் குரியது ஆமே "
"காலத்தை வெல்லும் கருத்துஅது தானே "
" புறப்பட்டு போகான் புரிசடையானே "
" மறுப்பது சாவை மருந்து எனலாமே " என்ற திரு மந்திர பாடல் வரிகள் எல்லாம் உடலை கல்பமாக்கும் வழியை போதிக்கிறது. இவற்றை விட
" சாற்றினேன் முப்புவின் மர்கந்தன்னை "
என அகத்தியரின் முப்பு சூத்திரம் விளக்குவதும் கல்ப மருந்துகள் செய்யும் வழியை தான் .மூலிகைகளில் கல்ப மருந்து உண்டு என்பதை சங்க கால மன்னர்களும் அறிந்து இருந்தனர் . கரு நெல்லி என்பது மலை பகுதிகளில் விளையும் ஒரு கல்ப மருந்து .இது அரிதாக கிடைப்பது .இதை அதியமான் என்ற மன்னர் தமிழ் வளர்க்கும் பொருட்டு அவ்வைக்கு வழங்கியதை நாம் அறிவோம் .
நோய்களை பற்றியும் உளவியல் பற்றியும் பழங்காலங்களிலேயே தெளிவான பார்வையும் அறிவும் இருந்ததை காண முடிகிறது .
இன்றைய அறிவியலாளர்கள் உளவியலின் தந்தை சிக்மன்ட் பிரைட் என குறிப்பர் .இவருக்கு முன்பே தொல்காப்பியமும் திருவள்ளுவமும் உளவியலை பருண்மையாக ஆய்ந்து இருக்கிறது .
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்ப
அப்பால் எட்டே மெய் பாடென்ப
மனிதர்களின் என் குணத்தை தொல்காப்பியம் ஆய்வு செய்கிறது .
நோய்க்கு அடிப்படை இரண்டு வகையான காரணிகள் ஒன்று மனவியல் அடிப்படை இரண்டாவது மருந்தியல் அடிப்படை .
1 . மனவியல் அடிப்படை
வாழ்கையின் ஏற்ற தாழ்வுகளினால் மனிதன் துயர் அடையும் போது உடலும் உணர்வும் சோர்வடைந்து செயல்படாமல் நிற்கும் .அப்போது இயல்பாகவே உடல் இயக்கம் சரியாக இருக்காது .உள்ளம் முறையாக இயங்காதவிடதே உடல் பாதிப்படைந்தால் அவற்றிற்கு உளவியல் காரணிகளை கண்டறிந்து ஆற்றுபடுத்துவதே நோய் நீக்கும் வழியாகும் .
2 . மருந்தியல் அடிப்படை
உளவியல் கரணம் இல்லாமல் பிற காரணங்களினால் நோய் கண்டு இருந்தால் அவற்றை மருந்துகள் மூலம் குணப்படுதுவதே மருந்தியல் அடிப்படையாம் .
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே
தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 254
உவகாண்டும் காதலர் செல்வார் இவக்காண்
என்மேனி பசுப்பூர் வது குறள் 1185
பொருள் : அதோ பார் எம்முடிய காதலர் பிரிந்து செல்கின்றார் !இதோ பார் எனுடைய மேனியில் பசலை நிறம் படர்கிறது என உளவியலை அழகாக படம் பிடிக்கிறார் . ஆக நோய்களுக்கு உளவியலும் ஒரு கரணம் என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கண்டு இருந்தனர் .
மருந்துகளையும் இரண்டு வகையாக வகைபடுத்தி இருந்தனர் .
1 . அக மருந்து
2 . புற மருந்து
1 . அக மருந்து
இது உள்ளுக்கு ஆனமருந்து இது 32 வகை எனலாம் அதேபோல புறமருந்தும் 32 வகைள் அடக்கலாம்
புறமருந்து களைமேனாட்டார் குறிப்பிட்டதைப்போல (surgery )அவர்களுக்கு ஆய்வு மூலங்கள் ஆக்கியதும் நம் தமிழ மருத்துவம்தான் என அறிந்துகொள்ள வேண்டும் .இன்றையஆங்கில மருத்துவத்திற்கு இணையாக
கீறல் - incission
குருதிவாங்கள் - blood letting
ஒற்றடம் - fomentation
வர்த்தி வைத்தல் - suppositors
ஊதல் - blowings
பீய்ச்சல் - syringing and emenata
தொக்கணம் - pyhsiotherepy
கட்டுதல் - bandaging
கலிக்கம் - eye drops
நாசி காபரணம் - snuffing
சட்டிகை - cauterisation
பொட்டணம் - medico thermal application
புகை - medicina fumigation
சீலை - gauze
பொடி திமிர்தல் - bathing pounders
மை - eye application
பற்று - poultice
வேது - vapourisation
களிம்பு - ointment
இவைகள் இன்றைய ஆங்கில மருத்துவ முறைகளுக்கு இணையான பழங்காலங்களில் பயன் படுத்தப்பட்ட முறைகள் .இன்றைய முறைகளுக்கு முன்னோடியாக பழங்கால முறைகள் இருந்து உள்ளது என்பதை அறிய முடிகிறது.அறுவை சிகிச்சை கருவிகள்(surgical instrument ) 26 இருந்ததை அகத்தியரின் சத்ராயுத விதி என்ற நூலில் விவரிகின்றார் .
அறுவை சிகிச்சை செய்ய கத்தி, சத்திரம் ,குரும்பிவாங்கி ,முள்வாங்கி ,கதரிகோல் ,ஊசி,வெண்கல குழல் ,போன்ற கருவிகள் பயன் படுத்தி உள்ளனர் .இவ்வற்றை போலவே சிறு நீரை ஆய்வு செய்து நோயை கணித்து உள்ளனர் .
"சிறக்க வெண்ணையோர் சிறுதுளி நடுவிடுத்து"
சிறு நீரை சோதித்து நோய் தீரும் நிலை ,தீராத நிலை, மருந்து முறைகள் போன்றவற்றை கணித்து உள்ளனர் .
சித்த மருத்துவ அறிவியல் என்பது ஒவ்வொருவரையும் பகுத்து ஆய்ந்து மனித குலத்திற்கு கொடையாக வழங்கபட்டனவாகும் .
தமிழகத்தின் அறிவியல் பள்ளியில் தோன்றிய அறிவு முறை என்றாலும், இந்த பூமிபந்தின் மீது வாழும் அனைவர்க்கும் எல்லா காலத்திற்கும் ஏற்ற அறிவியல் அடிப்படையிலான மருத்துவம் என்பதை உணர வேண்டும் . இந்த மருத்துவ முறை அறிவில் தோன்றி அறிவியலாக மலர்ந்து உயர்ந்து நிற்கிறது என்பது உண்மைதானே ..........
சித்த மருத்துவம் காப்போம்
நோய் வென்று நீடு வாழ்வோம் .....!