குறிப்பாக குளியல்கள் அதிகாலையில் செய்வது சிறப்பானது ( வைகறைத் துயில் ) எழுதல் என்பது மிகவும் சிறப்பான ஒன்று என நமக்கு தெரியும் . இந்த வைகறை துயில் எழுதல் ஒரு மனிதனுக்கு வழமையான பணியாக இருந்தால் அவன் வாழ நாளில் நீண்ட நோயற்ற வாழ்வை வாழ இயலும் காரணம் அதிகாலையில் உயிர்வளி தூய்மையாக இருக்கும் . இந்த உயிர்வளிதான் மனிதன் வாழ்வை நிர்ணயிக்கிறது.
அதுபோல இந்த குளியல் களும் பெரும்பாலும் அதிகாலையில் இருக்கும் ஆனால் இந்த மருத்துவ ரீதியான குளியல்களைப் பொறுத்தவரை ஆதவ உதயத்திற்கு பிறகும் நீண்ட நேரம் கழித்தும் எடுக்க வேண்டி வரலாம்.
இதனை காலை பத்து மணிக்குள்ளும் மாலை நான்கு மணிக்கு மேலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆதவக் குளியலில் தலையும் மூஞ்சியும் வயிலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . குளியலில் வேண்டிய அளவு ஆடையை குறைத்து கொள்ளலாம் . இந்த நேரத்தில் தூய்மையான நல்ல எண்ணையை லேசாக தடவி பின்னர் ஆதவக் கதிர்கள் உடலில் படும்படி குளிக்கலாம். பெரும்பாலும் என்னதான் உணவில் எல்லா சத்துகளும் இருக்கும் படி பார்த்துக் கொண்டாலும் நமக்குத் தேவையான வைட்டமின் டி ஆதவ ஒளியின் மூலமே கிடைக்கிறது என்பதை நாம் உளம் கொள்ளல் வேண்டும்.
காற்றுக் குளியல் (Air Bath )
பெரும்பாலும் இந்த காற்றுக் குளியலுக்கு உரிய மதிப்பளிப்பதில்லை . காரணம் சில் என்ற கற்று உடலில் நீண்ட நேரம் உடலில் பட்டுக் கொண்டே இருந்தால் உடலில் வளிக்குற்றம் மிகும் என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு எனவே இயன்றவரை இந்த முறைக்கு நாம் மதிப்பளிப்பதில்லை .ஆனால் தூய உயிர்வளி வேண்டிய நிலையில் நாம் வைகறைத் துயில் எழுந்து நாளும் மூச்சு பயிற்சி செய்ய உடலில் மிகையான உயிர்வளி மிகுந்து நோயில்லாத நிலையினைத்தரும் . இந்த நிலையில் தான் நாம் அதற்க்கு மூகமையான காரணங்களை முன்னுக்குக்குத்தாளி உடல் தூய உயிர்வளியை பெற நாம் வழி செய்வோம் .
இந்த காற்றுக்குளியலைகூட நாம் தூய உயிர்வளியைத்தரும் வேம்பு புங்கன் மாமரம் , துளசி போன்றவை மிகையாக இருக்கும் இடங்களில் இந்த குளியல் களைசெய்யலாம் .
சுடுநீர் ஒத்தடம் தருதால்.(Hot Fomentation )
வெந்நீரை கண்ணாடி குவளையில் ஊற்றி உடல் முழுவது ஒற்றி எடுக்கலாம். மார்பு, வயிறு, முதுகு போன்ற இடங்களில் ஒத்தடம் கொடுக்க வலியை எடுக்கும். குறிப்பாக அடிபட்டு இரத்தக் கட்டு உடலில் வலி யுள்ள நிலையில் நாளும் குளிக்க இயலா நிலையில் இதை செய்யலாம். மேலும் பாதிக்கப் பட்ட இடத்தில் ஈரத்துணியை உடலில் சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம் . வலியுள்ள இடத்தில் புற்று மண்ணை போட நல்ல வலி நிவாரணியாக விளங்கும் .
இயற்க்கை குளியல்கள் முற்று பெற்றது .
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்