மனிதஉடல் ஏற்றுக் கொள்ளாத உணவினால்லும் அரை வேக்கடுள்ள உண்வுகளினாலும் மாவுப் பொருள்களினாலும் அளவுக்கு மீறிய எண்ணெய் வேக்கடுகளினாலும் , செரிக்காத நிலையியல் மீண்டும் மீண்டும் உண்பதாலும் மந்தம்
உண்டாகிறது என்பது சித்தர்களின் கோட்பாடு . மந்தம் என்பது செரிமானக்குறைவு
மட்டும் அல்ல நோய்வளர்ந்த நிலை எனலாம் இதைத்தான் மந்தம் இலாதுசுரமும் வராது என்பார்கள் சித்தர்கள் . மந்தம் தோன்றினால் அதோடு பலநோய்கள் தோற்றம் கொள்ளுகிறது .இவற்றில் இருந்து வாய்வு உண்டாகிறது . ஒன்றில் இருந்து மற்றொன்றுமாக நோய் தோன்றுகிறது .
உயிர்கள் பல்வேறு வகையில் தோன்றுவதுபோல நோய்களும் பல்வேறு வகையில் தோன்றுகிறது . மந்தம் , வாய்வு இரண்டின் சேர்க்கையால் கடுமையான
சுரம் தோன்றுகிறது . மந்தம் , வாய்வு , சுரம் இந்த மூன்றின் காரணமாக திரிதோடம்
தோன்றுகிறது . அதனாலதான் மருத்துவர்கள் கடுமையான உணவுக் கட்டுப் பாட்டை
சொல்வார்கள் . சுரம் கண்டபின் அதன்பின் வாய்வும் மந்தமும் பாதித்துவிடுகிறது .நோய் கண்டவர் சுரத்தை மட்டும் காண்கிறார் . சிறிது காய்ச்சல் குறைந்ததும் நல்ல
பசி உண்டாகி உணவு அதிகம் உண்ணும் வேட்கை உண்டாகிறது .
மனிதன் அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று சுற்றுப்புற சூழல் தட்பவெப்ப நிலை போன்றவறில் இருந்து ஐ என்ற கபம் தோன்றுகிறது . உணவில் இருந்தும் மன இயல்பு களில் இருந்தும் பித்தம் தோன்றுகிறது . இங்கனம் பித்தத்தில் கபம் சேர்ந்தால் இந்த இரண்டின் சேர்க்கைதான் வாய்வு . இந்த அழல் குற்றம் ,ஐ குற்றம் , வளி இன் குற்றம் எல்லாம் சேர்ந்து உடலில் சூட்டினை உண்டாக்குகிறது . இதை மனிதனால் நேரடியாக உணர்ந்து கொள்ள முடியம் .
உள்புறம் தோன்றும் சுரம் , வெளிப்புறத்தில் கன்னத்தில் கட்டியாக கூட வெடிக்கிறது
. வெளிப்புறத்தில் தோன்றும் சூடு மற்றும் கட்டிகளை அறிந்து கொள்ளுகிறான் . உள் புறத்தில் தோன்றும் பல்வேறு நோய்களை அறிந்து கொள்வதில்லை . இவைகளை தான் சித்தமருத்துவர்கள் அறிந்து உணவுக்கட்டுப் பாட்டை போதிகிறனர் . வலி (ளி) இன் மிகுதியால் உடலில் கழிவுகள் தடை தோன்றுகிறது . அழலின் அதிகரிப்பால் ,
உடல் சூடு அடைகிறது . ஐ அதிகரிப்பால் உடல்பருக்கிறது . உள்ளுறுப்பு களில்
அதிகவளர்சி தோன்றுகிறது. வளி.ஐ , இரண்டும் சேரும் போது மாரடைப்பை உண்டாக்குகிறது . இதைத்தான் சித்தர்கள்
ரோகம் காப்பதில் நுழைந் தேறி வாயுதான்
வாகுற்ற நெஞ்சில் வலித்தே மயக்கிடும்
போகுற்ற பித்தத்தை போகாமல் றம்பித்து
பகுற்று பேசையில் பதையாமல்கொள்ளுமே .
என்றனர் ஆக நோய்களை முறைப்படி கண்டறிந்து முறையான சித்த மருத்துவம் மேற்கொண்டு நோய் நீங்கி நீடு வாழ்வோம் .
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய
பதிலளிநீக்குஅருமையான தகவல்களுடன் கூடிய பதிவு
மிக மிக அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
விளக்கமாய் தெளிவாய் இருக்கிறது உங்கள் அறிவுரை !
பதிலளிநீக்குநல்ல பகிர்வு,மேலும் தொடற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனைவரின் வருகைக்கும் சிறந்த பினூட்டங் களுக்கும் பாராட்டுகளும் நன்றியும் நல்ல செய்திகளை தேடி தேடி படிக்கும் மச்சவல்லவன் அவர்களுக்கு நமது பாராட்டுகள்
பதிலளிநீக்கு