ஜூன் 25, 2012

காயகல்ப நெல்லிக்காயின் ( INDIYAN GOOSEBERRY ) மருத்துவ குணங்கள்

       
si

      பழமைவாய்ந்த  தமிழர்களின்  மெய்யறிவு  வியக்க வைக்கும்  தன்மை கொண்டது  அறிவியலை  அடிப்படையாக  கொண்டது . இந்த  பேரண்டமே  பின்பற்றக் கூடியது . உலக  நலனை ஒட்டியது .
அதே மாதிரித்தான் இந்த  நெல்லிக்காயும் . எந்த  தீங்குமில்லாத  நல்லதை மட்டுமே  அதன்  தன்மைகளாக கொண்டது .  பெற்றதாயை  விட  நம்மை பேணிக்காத்து  நோயின்றி  வாழவைக்கிறது.நெல்லிக்காய் வந்த  நோவை நீக்கும் . நோய் வராமல்  காக்கும் முறைப்படி உண்டுவர  உடலை  கல்ப மாக்கும் போதாது ? இன்றைய மாந்த குலத்தின் நோய்களை  நீக்கி விடுவிக்கும் .

     எமது முந்தய  பதிவில்  அலங்கரித்த கடுக்காயின் தனிக்குணம் சூடு  என்றால் , நெல்லியின் மருத்துவக் குணம்  சீதம் . அதனால் தான் இதை  இரவில் உண்ணக்கூடாது. கடுக்காயும் நெல்லியும் கல்பம் என குறிப்பிடுவதின் நோக்கம் இது அகவையை (வயதை ) நிலை நிறுத்தும்  தன்மை  கொண்டதாகும். எனவேதான்  இது கல்ப மா  மருந்தாகிறது.

கல்ப  நெல்லியின் மருத்துவக் குணம்  எண்ணிலடங்கதவை  சில  பார்ப்போமா ?


தலைவலி
இரத்தக் கொதிப்பில்  உண்டாகும் தலைவலி
கண்களின் நோயை நீக்கும்.
கிறுகிறுப்பு
மூக்கு  நோய்கள் (தடுமன் &சளி )
மண்டைசளி
கக்குவான்
பல்  வலிகள்
மலசிக்கல்
செரியாமை
பித்தம்
கக்கல் (வாந்தி )
குமட்டல்
நீரிழிவு
சிறுநீர் எரிச்சல்
சிறுநீர்  தடை
விந்து  கெட்டிப் படும்
இரத்தம் வெளியேறுதலை தடுக்கும்
பலம் உண்டாக்க .
மது தீமை நீங்க .
கட்டழகு பெற
சீதக் கழிச்சல்
இரத்தக் கழிச்சல்
பசி இன்மை
இதய நோய்
தோல் நோய்கள்
புண்கள்
வேட்டை நோய் ...
ஆண்குறிப் புண்
காமாலை
பீனிசம்
வாய் நீர்சுரப்பு
தலை சுற்றல்
உடம்பு எரிவு

                 நெல்லிக் காய்க்குப்  பித்தம் நீங்கும்அதன் புலிப்பால்
                 கொல்லுமேவாதம்  அதிர்  சேர்த்துவரல்   - கொல்லுமையம்
                  ஓடும் இதைச்  சித்தத்தில்  உண்ண அனலுடனே
                  சூடு பிற மேகமும்போங்  கூறு        (  தேரையர்  குணபாடம் )

      இப்படி  பல நோய்களை நீக்கி  நம்மை நோவில் இருந்து காக்கிறது அதுமட்டும் இன்றி நோயில் இருந்து விடுவிக்கிறது. எப்போதும்  புத்துணர்ச்சியை  உண்டாக்கி  நோவற்ற  நிலையை  உண்டாக்கி தருகிறது .இவ்வளவு  சிறப்பு வாய்ந்த  மருத்துவத்தை  நாம்  ஏன் பயன்படுத்த  தயங்கு கிறோம் .சிந்திப்போம்  .


சித்தமருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் 

     

More than a Blog Aggregator

ஜூன் 18, 2012

காயகல்ப கடுக்காய் மற்றும் கடுக்காயின் மருத்துவ குணங்கள்

 

        இன்று சித்த மருத்துவம் உலகின் உன்னதமான  சிறந்த மருத்துவ முறையாக இருப்பதற்கு  காரணம் அதன் மருத்துவ குணங்கள்  நிறைந்த  எளிமையான  உணவுப்  பொருளே மருந்தாக  இருப்பதுதான் மற்ற மருத்துவ முறைகள் இங்கனம்  இருக்கவில்லை . எந்த பின்விளைவையும் தராத இந்த மருத்துவ மூலப் பொருட்கள்  எளிமையாக  கிடைப்பதுடன்  நோவை விரைந்து  நீக்குகிறது  உடலை  உரமாக்குகிறது  இந்த  சொல்லுக்கு இலக்கண மானது   கடுக்காயும் ஒன்று காரணம் எண்ணிலடங்கா  அதன்  மருத்துவ  குணங்களும் அதன் தன்மையும்தான் . இந்த  கடுக்காய் காய கல்ப  வகையை  சேர்ந்தது  என்பது நாம் அறியாத  ஒன்றல்ல .

கடுக்காய்  என்ன என்ன  நோய்களை நீக்கும் ? சற்று  சிந்திப்போமா?
நீரிழிவு
இதயநோய்
இரத்த  பித்தம்
இடிபட்ட புண் 
காசம்
அபசுமரம்
உதாவர்த்த வாதம்
வாதம்
உதட்டு நோய்
கிரகினி
ஊருச்தம்பம்
கண்நோய்கள்
காமாலை
குண்மம்
குட்டம்
கைகால் எரிச்சல்
கோழை உர்த்தல்
சலக்கட்டு
சித்த பிரமை
தலைநோய்கள்
சுவாசம்
சோபை
மூச்சு வாங்கல்
நாவறட்சி
பல்நோய்கள்
தொண்டைக்கம்மல்
பெருவயிறு
பாண்டு . இரத்தமின்மை
மார்பு நோய்
நீரிழிவு
மலபந்தம் 

வயிற்றுப்  பொருமல்
வயிற்றுவலி
வாதரத்தம்
வாய் நீர்ச்சுரத்தல்
வாந்தி
விக்கல்
காயம் படல்
விதைவாதம்
வெண்குட்டம்
விடசுரம்
நீண்டநாள் சுரம்
சூலை நோய்
விந்து தடைபடல்
 செரியாமை
உழலை
நினைவு மறதி
இருமல்
இளைப்பு
உள்ளங்கால் எரிவு
உட்சூடு
மண்டைப் புற்று
மண்டைக் கிரந்தி
 என  பல நோய்களை  நீக்குகிறது .  தாயானவள்  அறுசுவை  ஊட்டி சேயைத் தேற்றுவாள் .கடுக்காய் உடற் பிணிகளை  நீக்கி உடலைத் தேற்றும் . பிணிகள் நீங்கினால் தான்  உடல்உட்கொள்ளும் உணவி னை பயன் பாட்டுக்கு கொண்டுவந்து  உடலைத் தேற்றும் .எனவேதாம்  கடுக்காய் தாயினும்  சிறந்தது  என சித்த  மருத்துவம் கூறுகிறது.

இதன்  மருத்துவ  குணங்கள்  மருத்துவரின் துணையுன்  முறைய கொள்ளும் போதுதான்  நல்ல பலனைத்  தந்து  நோயை விடுவிக்கும் .

கடுக்கயுந்  தாயுந்  கருதிலோன்றான்  தானும்
கடுக்கேத்  தாய்கங் காண்நீ - கடுக்காய் நோய்
ஒட்டி உடற்றேட்டும்  உற்ற  அன்னை யேசுவைகள்
ஊட்டிஉடற்  றேற்று  முவந்து .
 என  பதிவு  செய்கிறார்கள் நம்  அறிவு  சித்தர்கள் .


சித்த மருத்துவத்தை பயன்  படுத்தி நோய் வெல்வோம்  சித்த மருத்துவத்தை காப்போம் . 
 
More than a Blog Aggregator

ஜூன் 11, 2012

பாலுறவு காட்சிகளும் சில ஆய்வுகளும்       இன்று  எல்லா இடங்களிலும்  நீக்கமற  நிறைந்து கிடக்கறது இந்த  பாலுறவுக் காட்சிகள் . இன்றைய  அறிவியல் எல்லோரது கைகளிலும்   தொழில் நுட்பத்தினால் கைப்பேசிகளில்  தொடங்கி பல்வேறு  தளங்களில்  இந்த அறிவியல் அற்ப்புதங்கள் நிகழுகிறது . வெறுமனே  இந்த பாலுறவுப் படங்களைப்  பார்ப்பதினால் என்ன நேர்ந்துவிடப் போகிறது? சிலருக்கு இந்த எண்ணம் எழலாம்  எழுவது இயல்புதான் . அனால் இதன் கொடுமைகள்  பல்வேறனது .
      மனிதத்தின் சக்திகளை  செலவு செய்வதில் கண்கள் பெரும் பங்கு  வகிக்கிறது என்பது நமக்கு தெரியாத  ஒன்றல்ல . இந்த கண்களின் மூலம்  பெறப்பட்டு  உடலில்  பல்வேறு மாற்றங்களை இந்த பாலுறவுக் காட்சிகள்  அரங்கேற்றுகிறது .அளவிற்கு  மிகையாக பார்க்கப் படும் இந்த  பாலுறவுக் காட்சிகள்  நேரடியான பாலுறவு கொள்வதைவிட  பெரும் தீங்கானது  என்ன பாலுறவு தீங்கானதா? ஆம்  முறைதவறிய பாலுறவு கொடுமையானதே தவறா னதே. .
      இதற்க்கு பல சான்றுகளை  அடுக்கலாம்  இருப்பினும் நாம் அதற்க்கு சான்று தேடி அலையவில்லை.இருப்பினும்  இந்த முறைதவறிய  பாலுறவு வேட்கை  அல்லது பாலுறவு  காட்சி உடலை சூடேற்று கிறது  உடலில் பல்வேறு இரசாயன மாற்றத்தை   நிகழுத்துகிறது  . முறைதவறிய இந்த பெருந்தீங்கு  நீடிக்கிறபோது உடலில் நோயாக பரிமாணம் அடைகிறது . உடலில் சக்தியிழப்பும் ... மிகையனா சூடேற்றமும்  உளவியல் ரீதியான  தடுமாற்றங்களும்  உண்டாக்குகிறது .
        கடந்த  பல  ஆண்டுகளுக்கு  முன்பாக  ஈழத்தில்  நமது கையாலாகாத  நடுவணரசு பாலுறவு  காட்சிகளை  கொண்ட  மேன்தகடுகளை இளஞ் சிறார்களும்  சிறுமிகளும்  இளைஞ்சர்களும்   உள்ள  இடங்களில் வீசி  எரிந்து விட்டு  வந்தது  அதனைக்கண்ட  உண்மையான இளசுகள்  தலைமைக்கு  தகவல் சொல்ல  கடைசி  மேன்தகடுவரை கொண்டுவந்து  அழிக்கப் பட்டது  அனைவரும் அறிந்ததே  காரணம் இந்த குமுகம்  எதற்கும்  பயன் படாமல்  நாடு மொழி  இனம்  என்ற  பற்று இல்லாமல்  இந்த  பாலுறவு  எண்ணத்துடன்  எல்லா நேரங்களிலும்  சுற்றி  திரிந்தால் தானே  கொள்ளையடிப்பவர்கள்  கொள்ளையடித்துக் கொண்டே  இருக்க  இயலும்?
     உண்மையில்  இந்த பாலுறவுக் காட்சிகள்  ஒழுக்கக்  கேடானது மட்டுமல்ல உடலுக்கும் கேடானதே  வேறு எந்த  பணியிலும்  நிலைக்க  செய்யாது.  பாலுறவு  என்பது ஒரு நாளில்  எல்லாவற்றையும் சேர்த்து   முப்பது  நிமிடங்களில்  முடிந்து போகிற செய்தி  ஆனால்  இதையே  வீணாக  நாள் முழுவதும்  இந்த எண்ணத்துடன்  இருப்பது  இந்த குமுகத்தை சீரழிப்பதாக அமையாதா? உழைப்பை செலுத்தி  முறையாக நமது வீணாக கடக்கும் நிலத்தைக் கொத்தினால் நல்ல விளைச்சல்  கிட்டும் தானே ? தனிமனித  வாழ்வில் நேரத்தை முறையாக செலவிட்டால்  இந்த பேரண்டமே மகிழ்ச்சியில்  இருக்கும் தானே மகத்தான  மனித  சக்தியை  உற்பத்தில் செலவிடுவோம்  உலகினில் உயர்ந்து நிற்ப்போம்.
சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator

ஜூன் 04, 2012

மூப்பை தவிற்க்கலாமே வரிசை 4      மனித  வாழ்க்கை  என்பது  உலக  உயிரிகளின்  வரிசையில் முதன்மையானது  போற்றளுக்குரியது இப்படிப்பட்ட  சிறந்த  மனித வாழ்வை உணர்ந்து  வாழத்  தொடங்கும்போது  சிறந்த  உன்னதமான  வாழ்க்கையை  வாழ்ந்து  காட்டலாம். ஆனால்  இன்றைய  விரவு  வுலகம் வெறுமனே  பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு  ஓடி ஓடி ஓடி சிக்கி  சீரழிந்து  விரைந்து மூப்பைத் தழுவி  மரித்துப் போகிறது .  இன்று  பொருள்  போதவில்லை என கூறி  இருபாலினரும்  பணிதேடி  இளமையிலேயே  ஓய்ந்து  விடுகிறனர் . இதற்க்கு சிறந்த மாற்று உள்ளது என கூவி  கூவி  சொன்னாலும்  விரைந்து  மூப்பெய்தி  மரித்துப்  போகின்றார்களே  அன்றி  விடியலைத்  தேடித்தந்தாலும்  அதைக்  கண்டு  கொள்வதில்லை .
      இன்றைய  விரைவு  உலகத்தில்  எல்லாமே  இரசாயனம்  கலந்த  உணவாகிப் போனது  குறிப்பாக  அட்டை (பேக்கிங்  ).இடப்பட உணவுகளே  விரைவு க்கு  ஏற்றார்போல  விற்கப் படுகிறது  அதில் என்ன இருக்கிறது  எப்படி  ஆயத்தம் செய்யப் பட்டது  யாரால்  செய்யப்பட்டது  எதானால் செய்யப்பட்டது  என்ற சிறு  துளி  வினாவுமின்றி மரித்துப் போவதற்கு ஓடுகிறான் . இவார்களை  எப்படி சொல்லி  திருத்துவது  என புரியவில்லை . உணவு  நோயின்றி  வாழ்வதற்கு  தானேயன்றி  வயிற்றை  நிரப்பிக் கொண்டு விரைந்து  மூப்பெய்த்து  வதற்க்கல்ல  என்பதை  அருள் கூர்ந்து  இப்படிப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .  ஏதோ  ஒரு  சிறந்த  இயற்கையுடன்  கூடிய  உணவு , எளிமயான வாழ்க்கை உணர்ந்து வாழ்தல் விரும்பிய  ஆண் அல்லது  பெண்ணுடன்  பிணக்கின்றி  நீடு வாழ்வது  என்ற  குறிக்கோள்  எத்தனைபேர்  கடைபிடிக்கிறார்கள்  ?
        மூப்பை  தவிர்த்து  வாழ்வதற்கு  இங்கு  ஆயிரம் வழ்கள்  உண்டு  சித்த மருத்துவம்  அதை  தேடித்  தேடி  தருகிறது  அதை கேட்பதற்குத்தான்  எவரும்  இல்லையே .

மூட்டது சாமம் முகில்போல செந்தூரம்

காட்டே ஒருநூறு கனக நவலோகம்
தீட்டவே குன்றி நாளும்  திண்ண மண்டலம்
ஊட்டவே சித்தியாம் உயர்ந்த முறைபாடே .


 ஒரு  குறிப்பிட்ட மருந்தை ஒரு  சாமம்  எரித்து எடுத்தால் முகிலைபோல  செந்தூரமாகும் இதை முறைப்படி  உண் காயம்  சித்தி  யாகும்  என்கிறார்  திருமூலர் . இந்த  மருந்தை  முறைப்படி  செய்துத்  தர நாம் ஆயத்தமாக  இருக்கிறோம் என வைத்து  கொள்வோம்  காட்டடிதனமான  வாழ்க்கை  குடி  , புகை , எல்லா  தீய  வழக்கத்தையும்  செய்து கொண்டு  இந்த மருந்துகளை  தின்றுவிட்டால்  பலன்  கிடைத்து  விடுமா  என்ன ?
     மனித வாழ்வு  உன்னதமானது  இதை உணர்ந்து  வாழ வேண்டும் . இயற்கையுடன் கூடிய  வாழ்வை  கடைபிடிக்க வேண்டும் . இரசாயன கலந்த  உணவுகளைத்  தவிர்த்து  வாழ  எண்ணினால்  நமக்கு சிறந்த  வாழ்வு உண்டு  நோயற்ற மூப்ற்ற வாழ்வை  வாழலாம்  உங்களுக்கு  அப்படிப்  பட்ட  வாழ்வு  வேண்டுமா  தேடுவோம்  வாருங்கள் .
சித்த  மருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம்

போளூர்  தயாநிதி

பேச ; 91 94429 53140

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...