நவம்பர் 26, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் வரிசை 3

     இது தொடராக வரப்போகிறதா இல்லையா என புரிய வில்லை எனக்கு எங்களின் உறவுகளுக்கு சொல்வதற்கு நெறைய இருக்கறது காலச்சூழல்தான் . இல்லைஇன்றைய நிலையில் திருமண வாழ்வை முறையாக அணுகி வாழ்ந்து கட்டுகிறவர்கள் மிகசிலரே . வாழ்கை என்பது கணவனும் மனைவியும் குடும்பமும் சேர்ந்து வாழ்வது எத்தகைய இன்பம் நிறைந்தது .? இதை இந்த மூடத்தனம் நிறைந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை . கூட்டுக் குடும்ப வாழ்கை முறை நமக்கே யுரிது இன்று ஐரோப்பிய நாடுகளில் இது காணமல் போய் விட்டது சில நாள் களுக்கு முன் ஒரு நீதியரசர் (நீதிபதி இப்படி சொன்னதன புரியும் !) ஒருவர் எரிவளி நிறுவனம் ஒரே குடும்பத்தில் பல இனைப்புகள் உள்ளது எனவே தனியாக அடுப்புகள் இல்லை எனவே ஒன்றுக்கு மேற்ப்பட்ட எரிவளி இணைப்பை துண்டிக்கிறோம் என அறிவித்தமைக்கு கடுமையாக சாடி இன்றைய நிலையில் குடும்பங்கள் சிதறிக்கொண்டு இருக்கிறது இந்த்த சூழலில் ஒற்றுமையாக ஒரு குடும்பம் இருக்கிறது என்றல் பாராட்டாமல் இனைப்பை துண்டிப்பதா என கேட்டு மீண்டும் எரிவளி இனைப்பு கொடுக்க ஆணை பிறப்பித்தது உண்மையில் பாராட்டும் படி இருந்தது .

        இப்படிதத்தானே ஊக்குவிக்க வேண்டும் . உண்மையில் இன்றைய இளசுகள் எதையும் பொறுமையுடன் அணுகுவதில்லை நாம் சொல்லுவது இருபாலரையும்தான். எதிலும் விரைவு விரைவு ... எனவே வாழ்வும் விரைந்து கசந்து விடுகிறது பின்னர் மணமுறிவை நாடி போய் சீரழிகின்றனர் . இதற்கான காரணங்களை கண்டறிந்து சிக்கல்களை தீர்த்துக் கொள்ளுவதில்லை தீர்வு இருக்கிறது என புரிந்து கொள்ளுவதும் இல்லை . குடும்பம் வாழ்க்கை என்பது ஒரு கலையாக எண்ணப் பட வேண்டும் அதைவிடுத்து வரட்டுத் தனமாக வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விட்டில் பூச்சிகளாகி மடிந்து போகின்றனர் ஏன் இப்படி நிகழுகிறது என்பதை சிந்திக்க மறுக்கின்றனர் . இந்த்த வரட்டுத் தனம்தான் மனிதனை சீரழிக்கிறது . இல்வாழ்வை எடுத்துக் கொள்ளுவோம் தாம்பத்திய உறவை வள்ளுவர் மலரினும் மெல்லிது காதல் ... என்கிறார் இன்று கண்மூடித்தனமான பாலுறவுக் காட்ச்சிகளை பார்த்து விட்டு அதை அப்படியே நடைமுறைப் படுத்தத் தொடங்கி விடுகிறார்கள் இதனால் நிலை குலைந்து போன ஆணோ அல்லது பெண்ணோ பாலுறைவே வெறுக்கிறார் அல்லது இல் வாழ்கைகை முறித்துக் கொள்ளவிழைகிறார் . இதுதான் நடைமுறையா என தெரிந்து கொள்ளுவதில்லை இன்று இவர்களின் வழிகாட்டி மட்டரகமான செய்தி ஊடகங்களும் தொலைகாட்சிகளும் தான். காதலை அறிந்து கொள்ள இலக்கியங்களை கற்க வேண்டும் அகநானூறையும் , குருந்தொகையையும் அணு அணுவாக கற்க வேண்டும் குறிப்பாக வள்ளுவத்தை இன்பத்துப் பாலில் கூறியுள்ள எல்லோ பாடல் களையும் இருவரும் சேர்ந்தே வாசிக்க வேண்டும் . அப்போதுதான் காதல் புரியவரும்.

        இல்வாழ்க்கைப் பற்றி ஒரு புரிதல் கிடக்கும் இன்று முதல் இரவிலேயே எல்லாவற்றையும் நுகர்ந்து விட வேண்டும் என எண்ணுகிறார்கள் பழங்காலத்தில் திருமண விழாவே பதினைந்து நாள் களுக்கு மேல் நடக்கும் காரணம் இருவரையும் முறையாக புரிந்து கொள்ள வேண்டும் எனற உயரிய நோக்கம்தான் அன்றி வேறல்ல. சில நண்பர்கள் தங்களது ஆண்மையை நிலை நாட்ட பொது மகளீரை நாடுவதுண்டு இது பணத்திற்கான நடத்தப் படும் ஒரு அழிவு விளையாட்டு அப்படி அவள் நடக்க வில்லை என்றால் அவளுக்கு வருவாய் கிடைக்காது வீட்டில் உள்ளவள் விலை மகளீர் அல்லவே வேண்டும் பொது முறையாக பாலுறவு துய்த்துக் கொள்ளலாமே என் இதை புரிந்து கொள்ளுவதில்லை இது குறித்தான விரிந்த விமர்சனங்கள் வரவேற்க்கப் படுகிறது விமர்சனங்கள் இல்லை எனின் கருத்துகள் இல்லை என இந்த தொடர் நிறைவு அடையும் .

 சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .           தமிழீழ  போராட்டத்தில்  ஈகா  சாவடைந்த  போராளிகளுக்கு
எமது  இதயம்  கனிந்த  கண்ணீர் அஞ்சலி .
 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...