கடந்த இடுகையில் ஒரு விமர்சனம்
பெயரில்லா சரவணா கூறியது...
என்ன சார் ! புரியாத பேரெல்லாம் சொல்றிங்க ? சுலபமாக கிடைக்க கூடிய உணவுகளை சொல்ல கூடாதா ? இதையெல்லாம் எங்க போய் தேடறது ? தப்பி தவறி பக்கத்துல இருக்குற சித்த மருத்துவர்கிட்ட போனாலும் , காசை கரந்துடுவன்களே ?
வணக்கம் உறவுகளே எமது கடந்த இடுகையில் யாரோ சரவணன் என்ற நபர் விட்டுசென்ற வினாவுடன் கூடிய விமர்சனம்தான் இது இதை இங்கு பதிவு செய்ய காரணம் அவரை நாம் உளபூர்வமாக வரவேற்கிறேன் வணங்குகிறேன் . ஏனெனில் எமக்கு பாராட்டுகளைவிட விமர்சனங்களே பிடித்தமானவை கேள்வி கேட்கும் நிலைக்கு எல்லோரும் வரவேண்டும் என எண்ணுகிறேன். ஒருவகையில் பாராட்டுகளை வெறுக்கிறேன் ஏனெனில் அது மயக்கத்தை தரும் என்பதால்.
சேதிக்கு வருவோம் நம்மை வினா கேட்ட அந்த நபர் சித்த்மருத்துவர்கள் எல்லோருமே காசை கறக்கும் நபராக பார்க்கிறார் . இது முற்றிலும் பிழையான ஒன்று உண்மையில் சேவை நோக்குடன் மருத்துவத்தை செய்யும் வணங்க தாக்க பலர் இருக்கத்தான் செய்கின்றனர் . இருந்தாலும் சிலர் வணிக நோக்கத்தோடு இருக்கலாம் அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பதாகவும் இருக்கலாம் அவர்களையும் நாம் நடவடிக்கையினால் முறைப்படுத்தயியலும் தானே . இருக்கட்டும் .
நாம் இந்த பதிவு செய்வதின் நோக்கம் ஒருமருத்துவம் பழமைவாய்ந்த நமது அழிவின் விளிம்பில் இருக்கும் மருத்துவம் செய்கிறவர்கள் எத்தனை பேர் கோடிகளில் புரள்கிறார்கள்? மிகவும் சொற்பமே மீதமுள்ளோர் வறுமையில் வாழுகின்றனர் .நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி இது தனி மனிதரை வாழ வைக்கிறது என பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழினத்தின் உயர்ந்த கலை இதை காப்பது என்பதும் இந்த சித்த மருத்துவ தொழில் செய்கிறவர்களை ஆதரிக்கிறது என்பதும் ஒன்றே . ஆக இந்த உயர்ந்த கலை இந்த மண்ணின் போற்ற வேண்டிய கலை இது எல்லோருக்கும் போய் சேரவேண்டுமானால் சித்த மருத்துவ தொழில் செய்கிறவர்கள் வளமுடன் வாழ வைக்க வேண்டும் இல்லை எனின் இந்த கலை அழியும் அதேவேளை மக்கள் நோயில் விழுந்து கிடப்பார்கள் .
அதுமட்டும் இல்லாமல் இந்த நிலப்பந்து முழுமைக்கும் நோயற்ற ஒரு நிலையை உண்டாக்க முடியும் தூய வாழ்க்கை நோயற்ற வாழ்க்கை எவ்வளவு இன்பம் பாருங்கள் ? ஆனால் இந்த பாழாய் போன த்மிழ் சமூகம் இந்த உயர்ந்த கலைகளைபாது காக்கிறதா ? என்றால் இல்லை என கூறுவேன் ஏன் இந்த இழிவான நிலை? தமிழகத்து தலைவர்கள் அப்படி பட்டவர்களாக இருக்கிறார்கள் .
எம்மைபற்றி ......
உண்மையில் தமிழர்களின் உயர்ந்த மொழியும் பண்பாடும் , இசையும் மற்ற கலைகளும் அவற்றோடு சித்தமருத்துவமும் முறைப்படி பாதுகாக்க வேண்டும் என எண்ணுகிறோம் நாம் வளமோடும் இல்லை வசதியோடும் இல்லை . ஆனாலும் நமது கலைகளை காக்க வேண்டும் என்பது நமது விருப்பம் விருப்பமாக இருக்கறது இதை இந்த மருத்துவத்தை முறையாக பயன் படுத்தி கொள்ளும் போதுதான் இந்த சமூகம் அடுத்தகட்ட சமூகத்திற்கு இந்த உர்யர்ந்த கலையை இட்டு செல்ல முடியும் .நம்மைபோலவே எல்லோரையும் எதிர் பார்க்க முடியாது அவர்களுக்கு குடும்பம் உண்டு குழந்தை குட்டிகளுண்டு நமக்கு அதெல்லாம் இன்னும் அமைய வில்லை என்பதால் நாம் சேவை செய்கிறோம் அவ்வளவே ?
சித்தமருத்துவம் மனிதத்தை நோயில் இருந்து விடுவிக்கும் மருத்துவம் இந்த உலகம் முழுமைக்கும் நோயில் இருந்து விடுவிக்கும் மருத்துவம் எனவே காப்போம் பின் பற்றுவோம்
//இந்த உயர்ந்த கலை இந்த மண்ணின் போற்ற வேண்டிய கலை இது எல்லோருக்கும் போய் சேரவேண்டுமானால் சித்த மருத்துவ தொழில் செய்கிறவர்கள் வளமுடன் வாழ வைக்க வேண்டும் இல்லை எனின் இந்த கலை அழியும் அதேவேளை மக்கள் நோயில் விழுந்து கிடப்பார்கள் //
பதிலளிநீக்குஉண்மைதான். நமது மக்கள் இன்னமும் அலோபதியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லையென்றே நினைக்கிறேன். இதற்கு காரணம் போதுமான விழிப்புணர்வு இல்லாமையும் சிறந்த சித்த மருத்துவம் பேணுவோர் இல்லாமையும்தான் என்பது என் கருத்து.
சித்த மருத்துவம் வளர வேண்டும் என்பதே எனது விருப்பமும்....
பதிலளிநீக்குஉங்களின் இந்த சிறந்தப் பணி தொடரட்டும் . உண்மையாகவே சித்த மருத்துவத்தின் மகிமை தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் மிகவும் உயர்ந்த நிலையில் இந்த மருத்துவ முறையை பாதுகாப்பார்கள் என்பது மட்டும் திண்ணம் .
பதிலளிநீக்குநல்வ பணி தொடர இறை அருளட்டும்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.