டிசம்பர் 02, 2010

பார்த்தீனியம் என்ற நச்சுசெடி


உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் மிகசிறந்த தட்ப வெப்ப சூழலை கொண்டது எனக் கண்டறிந்து உள்ளனர் .இங்கு வளரும் நிலத்திணைகள் (தாவரங்கள் ) மருத்துவ குணம் நிறைந்ததென கண்டிருக்கின்றனர் .சீனம்கூட நமக்கு அடுத்த இடம்தான் . இங்கு வளரும் மூலிகைகள் மருத்துவ குணம் நிறைந்தவை என ஆய்வு செய்து அறிவிக்கிறனர் . அனால் நம்மை பற்றி மேலைநாட்டினர் ஆய்வு செய்து சொன்ன பிறகு கூட நாம் மொழியையும் , மருத்துவத்தையும் , பிற கலைகளையும் பின்பற்ற தொடங்க மாட்டோம் எனது வேருசெய்தி .

நஞ்சுசெடிகள்

ஒருநாட்டை ஆள்கிறவர்களை விட ஆளப்படுகிரவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் இது தேவையும் அவசியமானதுமாகும் . இப்போது எங்குபார்த்தாலும் மனித இனத்திற்கோ , வேறு எதாவது
வுயிரிகளுக்கோ பயன்படாத தீங்கை மட்டுமே விளைவிக்க கூடிய நச்சு செடிகள் நிறைந்து காணப்படுகிறது . இதில் யார் குற்றவாளி ? வினா எழலாம் அதை புறந்தள்ளுவோம் தெரிந்து விட்டதல்லவா ? நாளையில் இருந்து நச்சு செடிகளை நீக்க முயற்சி செய்வோம் .

சுற்றுச் சூழல் கேடு

மனிதன் தன் தேவைகளுக்காக பேராசை கொண்டு வலிந்து பலவற்றை கைப்பற்றுகிறான் . அவற்றான் பல சுற்று சூழல் கேடுகளும் அரங்கேறுகிறது . காட்டை அழிக்கிறான் , இயற்க்கை வளங்களை கொள்ளையடிக்கிறான் , தூய காற்றை நாசப்படுத்துகிறான் ,நீரையும் கெடுக்கிறான்
பின்னர் மனித இனம் வாழ்வதே கேள்விக்குறியாகிறது .

நீரையும் உறிஞ்சுகிறது

நாம் வாழும் இந்த பேரண்டத்தை நாசப்படுத்த யாருக்கும் வுரிமையில்லை . அனால் நாசப்படுத்துகின்றனர்.அதுதான் உங்கள் பார்வைக்கு படம் பிடிக்கிறேன் தனிமனிதன் அழுது புலம்பி என்னபலன் . நீங்களும் இணைதல் காலத்தின் கட்டாயம் வாருங்கள் கைகோர்ப்போம் நம் புவியை காப்போம் .
இயற்கையான செடிகளும் மரங்களும் நமது கொடைகள் எனலாம் அனால் அவைகளே நமக்கு
பெருந்தீங்கிழைகுமா? ஆம் தீங்கிழைக்கிறது

தைலமரம் என்றழைக்கப்படும் யூகலிபட்ஸ்.

வேலிக்கத்தன் எனப்படும் மரம் வேலன் மரம்(பல்துலக்க பயன்படுத்துவது ) அல்ல .

சவுக்கு மரம்
இம் மரங்களெல்லாம் நம் மண்ணில் இருந்து நீரை வுறிஞ்சி நம் மண்ணை பழாக்குபவைகள் அவற்றால் எந்த பலனுமில்லை . அவற்றை வெட்டி வீழ்த்துவதே நல்லது .


விசமே செடியாய் பார்த்தீனியம் செடி

எல்லாவற்றையும் விட பார்த்தீனியம் என்ற விசசெடி நம் மண்ணில் நீக்க மற கானலாகிறது இந்த பார்த்தீனியம் செடி மண்வளத்தை கெடுக்கிறது . காற்றில் பரவி பல்கி பெருகுகிறது .சுற்று சூழலை கெடுக்கிறது . நிலத்தில் இருக்கிற ஈர பதத்தை உறிஞ்சி நிலத்தை மலடாக்குகிறது இது வளருமிடத்தில் வேறு எந்த செடியும் வளர்வதில்லை . எதற்கும் பயன்படாத நிலமாக்குகிறது . மனித இனத்திற்கு பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது . குறிப்பாக தோல் நோய் வருகிறது . நம் உணவுப் பொருளில் கலப்படம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது .

உலகத்தீரே இந்த பார்த்தீனியம் என்ற நச்சு செடி நம் மனித இனத்திற்கே எதிரானது எப்பாடுபட்டேனும் இதை அழிப்போம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...