பிப்ரவரி 15, 2011

நகர மயமாதலும் பெருகும் உளவியல் நோய்களும்

Indli -   Tamil
நகர மயமாதலும் பெருகும் உளவியல் நோய்களும்

இன்றைய வாழ்க்கைமுறை பணத்தை மட்டுமே பெரிதென எண்ணுகிறது . வெறுமனே குறியீடாகி போன பணம் மனிதத்தை சிதைத்து சின்னாபின்னமாகி விடுகிறது . ஒரு மனிதனைப்பற்றிய கருத்தாக்கம் அவனின் மரபுவழிப்பட்ட அறிவைவிட அவன் சேர்த்து வைத்துள்ளபொருளின் அடிப்படையிலேயே இப்போது மதிப்பிடப்படுகிறது .இது மனிதன் நோயாளி ஆகி விட்டத்தின் காரணமாக எனலாம் . பணம் மட்டுமே எப்படி வாழ்க்கை ஆகிவிடமுடியும் ? பணம் மட்டுமே வாழ்க்கை என்பது அந்த கோட்டையின் நுழையும் முன்னம் மனித தன்மையை இழக்க செய்து மனிதத்தை பொறி (இயந்திரம் ) ஆக்கிவிடுகிறது . அதுமட்டும் அல்லாமல் மனிதநேயம் ,நேர்மை,இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தல் என்பன வெல்லாம்
கேள்விக்குறியதாகவும்,கேலிக்குரியதகவும் ஆக்கிவிடுகிறது

இன்றைய உற்பத்திமுறை

இன்றைய உற்பத்திமுறை தேவைக்கானதாக இல்லாமல் சந்தைக்கனதாக இருப்பதால் அது மனிதனை பேயாட்டம் ஆடவைக்கிறது .

முதலில் வருகின்றவர்களுக்கே கிடக்கும் வாய்ப்புகள் அடிமையாக இருத்தல் கேள்விகேட்காமை போன்ற காரணங்களினால் பணி வாய்ப்பு நிலைக்கும் என்பதால் இவற்றின் தாக்கங்களினால் மனிதம் பொறியாகி கடுமையான உள தாக்கங்களினால் பொறி சீக்களியாகிறது . அதனால் தான் செயலாற்றும் திறனை இழந்து நீரிழிவு (சக்கரைநோய் ), இதய கோளாறுகள் ,சிறுநீரக செயலிழப்புகள் ,மூச்சிறைப்பு (ஆஸ்துமா ) போன்ற அந்த இயந்திரத்தின் கட்டமைப்பையே கெடுத்து வனாள் முழுவதும் அந்த பொறியை பழுது பார்க்கவே தன் முழு
திறனையும் செலவிடவேண்டிய தேவையை உருவாக்கிவிடுகிறது . இது அடுத்தகட்ட
மனிதத்தை சிதைக்கும் காலம் எனலாம்.

கல்விமுறை


இன்றைய கல்விமுறை
வாழ்க்கைக்கான கல்விமுறையாக இல்லாமல் அடிமையை உருவாக்குகிற கல்விமுறையாக இருப்பதனால் மனிதம், மனிதநேயம், என்ற அடித்தளத்தை ஆட்டம் கொள்ள செய்து மனித உறவுகளையே கேள்விக்குறியாக்குகிறது .
இந்த கல்விமுறை இளமையில் எல்லா உறவுகளும் ஆறாவது விரலாக மாறிவிட்டது . இதனால் வழிகாட்டிய தாத்தா,பாட்டி உறவுகள் சிதைந்து உறவுகள் குறித்த சிக்கலை இன்றைய இளைய தலைமுறை சந்தித்து வருகிறது . நம் பண்பாடு , உலகே வியந்து பார்க்கும் கூட்டு குடும்ப உறவுகள் வினாக்குறியாகிவிட்டது . இது நகரமயமாதல் என்ற போலித்தன வாழ்க்கையினால் ஆனதன்றி வேறல்ல

சுற்று சூழல் கேடு .

நகர்புறத்திலேயே எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதால் ஊர்ப்புறங்களை விட்டு பேருரை நோக்கி படைஎடுக்கின்றனர் .
பேரூர் தொழிற்சாலைகளின் கழிவைமட்டுமே தாங்கி நிற்ப்பதால்
நோய்களுக்கும் பஞ்சம் இல்லாமல் போய்விடுகிறது . இடநெருக்கடி காரணமாகவும் தொழிற்சாலைகள் , ஆலைபுகை,வாகனங்கள் புகை என சுற்று சூழல் கேடு அடைந்து
வளி(காற்று ) மண்டலம் மாசு அடைந்து தூய்மையான காற்று ,நீர்
என்பது எல்லாம் எட்டாத இடத்தில் சென்றுவிட்டது
தூய்மை இல்லாத நீர் சிறுநீரகம் மற்றும் பல்வேறு குடல் சம்ந்தமான நோய் களுக்கு காரணமாகிறது . மாசு அடைந்த வளி மூச்சு மண்டலம் நுரையீரல் கேடு அடைகிறது . முறையில்லாத உணவுகள் கட்டுப்பாடு இல்லாத உணவுகள்பதற்றம் ,பரபரப்பு போன்ற வற்றினால்
மனிதனின் உன்னதமான உடல் உறுப்புகள் கெடுகிறது
.
ஒளி ஒலி மாசுஅடைதல்

வளி ,வளிமண்டலம் க்டுவதினால் பல்வேறு நோய்கள் தோற்றம் கொள்ளுவது போலவே ஒலி ,மற்றும் ஓளி மாசு செய்யும் சேட்டைகள் எண்ணிலடங்கா .செவி மண்டல கோளாறுகள் பதற்றம் , எரிச்சல் , சினம் , போன்றகண்ணுக்கு தெரியாத உளவியல் நோய்கள் தோன்றி மனிதத்தை சிதைக்கியது .

இட நெருக்கடி

இட நெருக்கடி, இட பற்றாக்குறை போன்றவை பல்வேறு நோய்களை உண்டாக்கு கிறது .புதிய புதிய நோய்களை தோற்றம் கொள்ள செய்கிறது . பரிணாம வளர்சியடைய வைக்கிறது . குறிப்பாக மனிதம் இயற்கையாக வெளிப்படுத்த வேண்டிய ஈட்ருணவு(மலம் )சிறுநீர் ,குடல் காற்று , கண்ணீர் , போன்ற வற்றை வலிந்து அடக்குவதலும் , உடலில் தேங்குவதாலும் , அரச உறுப்புகள் எல்லாம் கெடுகிறது. பெண்கள் இவற்றான் அடையும் துன்பங்கள் எண்ணிலடகா
பலர் இதனால் விலை மதிப்பில்லாத வாழ்க்கையை மடித்து கொள்ளுகிறனர் . பூப்பு கால சிக்கல் அவர்களை படாத பாடு படுத்துகிறது .

புவி வெப்பம் அடைதல்

இது குறித்த எமது தனியான இடுகை உள்ளது காண்க .

புவி வெப்பம் அடைதல் முறையில்லாத உணவுகள் எப்போதும் கிளர்ச்சி யூட்டகூடிய சூழல் ,பாலியல் தொடர்பான சிந்தனை பாலியல் தொடர்பான காட்சிகளை பார்த்தல் போன்ற காரணங்களினால் பாலியல் தொடர்பான சிக்கல் களுக்கு ஆளாகின்றனர் .
இன்றைய புவி வெப்பம் அடைதல் காரணங்களினாலும் பாலியல் சிக்கல் தோன்றுகிறது .

பேருரை விரிவு படுத்த நீர் நிலைகள் கால்வாய்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டதாலும் மழை நீர் தேங்க வழி இன்மையாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாலும் கடல் நீர் நிலத்தினுள் புகுந்து நிலத்தையும் நீரையும் கெடுத்து விடுகிறது . மண்வளத்தை கேடு அடைய வைக்கிறது . ஆக மனித இனம் நகர மயமாக்கல் என்ற வறட்டு தனமான கொள்கையினால் இந்த புவிப்பந்தே வாழ இயலாத கோலமாகி வருகிறது .

அறிவுலகமே , ஆற்றல் மிகுந்தோரே, உலகினுக்கொல்லம் அறிவையும் ,வானியலையும் , அறிவியலையும் , மெய்மங்களையும் மருத்துவத்தையும் , மனித வாழ்வுக்கான இலக்கணத்தையும் கட்றுத் தந்த இனம் என்ற வகையில் மூத்த மொழிக்கு உரியவர்கள் என்பதாலும் இந்த குமுக மாற்றத்திற்கு திறவுகோலாக செய்க இயலவில்லை யாயின் செய்கிறவர்களை செய்ய விடுக்க . நல்லதை செய்ய வழிசமைப்போம் வருக .
பின்னர் விரிவாக ஆய்வு செய்வோம்
மனித இனத்தை நோயிலிருந்து காப்போம் .

இந்த இடுகை எம்மை இந்த வலையுலகிற்கு அறிமுகப்படுத்திய நண்பர் சுகுமாரன் கேட்டு கொண்டமைக்கிணங்க பதிவு செய்ய படுகிறது

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...